அரக்கேனிய இந்தியர்
arakkēṉiya intiyar
தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மரபைச் சார்ந்தவர்கள்.
தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள் பல குழுவினராகப் பிரிந்திருந்தனர். சிலி நாட்டின் மத்திய மேட்டு நிலப்பகுதிகளில் ஆண்டீசு (Andes) மலைத் தொடரின் கிழக்கில் வாழ்ந்தவர்கள். இவர்கள் வாழ்க்கை பல வகையாக அமைந்திருந்தது. இவர்களில் பெரும்பாலோர் மரக்கறி உண்பவராவர். இவர்கள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தொடக்கத்தில் அரக்கேனியர்கள் சிலி கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தனர். கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இசுபானியரிடமிருந்து குதிரைகளைப் பெற்று ஆர்சென்டீனாவிற்குப் (Argentina) புறப்பட்டுச் சென்றனர். சிலி நாட்டிற்கு வந்த இசுபானியருடன் இவர்கள் போராடி, மனைப்பகுதிகளுக்குப் புகலிடம் தேடி ஓடினார்கள். கி.பி. 1879–ஆம் ஆண்டில் ஆர்சென்டீனாப் படைவீரர்கள் இவர்களைத் தோற்கடித்தனர். கி.பி. 1883–ஆம் ஆண்டளவில் சிலிநாட்டுப் படைவீரர்கள் ஏனைய பழங்குடி மக்களையும் வெற்றி கண்டனர். இக்காலத்தில் சற்றேறக்குறைய 3 இலட்சம் அரக்கேனியர்கள் வாழ்ந்து வருகின்றனர்; பெரும்பாலோர் குடியானவர்கள். அவர்களை அரக்கேனிய இந்தியர்கள் என்று அழைப்பதற்கான காரணம் தெரியவில்லை.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 614)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cenvbrvr/
தமிழ்“அரக்கேனிய இந்தியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cenvbrvr/APA
Oliyon Research. (2026). அரக்கேனிய இந்தியர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cenvbrvr/MLA
"அரக்கேனிய இந்தியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cenvbrvr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment