மொழியறிவுக்கும் மூளையின் இயங்கு முறைக்கும் இடையே உள்ள தொடர்பினைப் பற்றி ஆய்வு செய்த உளவியலறிஞர். எரிக்கு இலெம்பர்கு (Eirc, H. Lanberg) மருத்துவம், நரம்பியல் ஆகிய துறைகளைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக இருந்தார். அக்காலத்தில் இவர் உளமொழியியலில் (Psycholinguistics) ஆர்வம் கொண்டு பல மொழியியல் ஆய்வுகளைச் செய்தார். ‘மொழியின் உயிரியல் அடிப்படைகள்’ (Biological Foundation of Language) என்னும் நூலை இயற்றினார், இந்நூல் மொழியியல் ஆய்வாளர்களுக்கு மிக்க பயனுடையதாக அமைந்தது. இலென்பர்கு மானிடவியல், உளவியல், நரம்பியல், மொழியியல், பரம்பரையியல், உடலியல் போன்ற துறைகளில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள கருத்துகளைப் புலத்திடை ஆய்வு செய்தவர்களுள் சிறந்தவராகக் கருதப்படுகிறார். உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மொழியியல் வல்லுநர்கள் இலென்பர்கின் ஆய்வுகளையும் கட்டுரைகளையும் ஆர்வத்துடன் படிக்கின்றனர். மூளையில் பேச்சுத் திறனுக்குரிய பகுதி, பேச்சுக் கோளாறுகள், குழந்தைகளின் மொழியறிவு முதிர்ச்சி போன்ற துறைகளிலும் இலென்பர்கு பல ஆய்வுகளைச் செய்துள்ளார்.