திண்டுக்கல்லைச் சார்ந்த நாகல் நகர் என்னும் ஊரினர். இவர் வாழ்ந்த காலத்து வந்த விகாரி ஆண்டு தீய பலன்களைத் தரும் என்று பலரும் கூறிவந்ததாகத் தெரிகிறது. அக்கூற்றினை இவர் ஏற்கவில்லை. பலரும் கூறிய அக்கூற்றினை மறுத்து ‘விகாரி வருடத்திற்குரிய விநோதக் கும்மி’ என்ற ஒரு நூலினை எழுதியுள்ளார். இது கி.பி. 1900–ஆம் ஆண்டில் வெளிவந்த கும்மி நூலாகும். இச்செய்தியினால் இவர், கவிஞராகவும், காலத்தைக் கணித்துக் கூறும் அறிஞராகவும் விளங்கியமையை அறிய முடிகிறது.மு.த.