விமானத்தினை செயற்கை வானத்துடன் ஒப்பு நோக்கும் போது, விமானி இருக்கும் உயர அளவைக் காட்டும் கருவி ஒன்றுள்ளது. தானியங்கு அல்லது செயற்கை வானம் இவற்றில் செங்குத்துத் தொடு வான முள், நிலையான விமானத்தின் குறியெண்ணுக்குத் தக்கவாறு அசைகிறது. விமானத்தின் உருளும் தன்மைக்கு ஏற்ப, கருவியின் முள் அசைவு இருக்கிறது. பலகணி வழியாக நோக்கினால், கிடைக்கும் தோற்றத்தை விமானி, உயரங் காட்டியைப் பார்த்து, அறிந்து கொள்ளலாம். செங்குத்துச் சுழல் வேகம் அக்கருவியின் மூலமாகவோ, விமானப் பரப்புக் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாகவோ அமைந்திருக்கும். சுழல் வேகக் கருவி காற்றினாலோ, மின்சாரத்தாலோ ஓடக் கூடியது. கருவியின் முள் நீல வண்ணத்திலும், அதன் பின்புறம் உள்ள பரப்பு, கறுப்பு, பச்சை, காவி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிலும் அமைந்திருந்தால், அளவுகளைப் பார்ப்பது எளிமையாக இருக்கும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964.