தொழில் துறை எந்திர மனிதன்
toḻil tuṟai entira maṉitaṉ
பொருள்கள் · Senses
1.
புதிய நிரல் தொகுப்புக்கு இடமளிக்கிற. பலபணிகளைச் செய்யக்கூடியது. பொருள்களை, கருவிகளை, சிறப்பான கருவிகளை திட்டமிடப்பட்ட இயக்கங்கள் மூலம் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடியது. மற்ற வகையான தானியக்கங்களைப் போல அல்லாமல் எந்திரன்கள் பல்வேறு வகையான பணிகளைச் செய்யும்படி நிரல் தொகுப்பை அளிக்கலாம். அதன் மூலம் அவற்றை இலகுவான தயாரிப்புக் கருவிகளாக மாற்றலாம். ரோபோக்களுக்கான நிரல் தொகுப்புகளை மாற்ற முடியுமாதலால் பல சாதகமான பயன்கள் உண்டு. மிகக்குறைந்த துவக்கச் செலவு மற்றும், குறைந்த மாசு நீக்கும் செலவுகள் காரணமாக எண் பிக்கப்பட்ட வடிவமைப்பும், ஒட்டுமொத்த தயாரிப்புச் செலவைக் குறைக்கும் பண்பையும் எந்திரன் கொண்டிருப்பதால் ஒரு நிறுவனம் அதன் இலாபத்தை அதிகரித்துக்கொள்ள முடிகிறது. மோட்டார் வாகனத் தொழில், விமானத் தொழில், வீட்டு உபயோக மின் அணுவியல் சாதனத் தயாரிப்பு, நுகர்வுப் பொருள்கள், சாலையில் செல்லாத வாகனங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் பெரிய தொழில் நிறுவனங்கள் தொழில் துறை எந்திரன்களைப் பயன்படுத்துகின்றன. அண்மைக்கால வளர்ச்சி காரணமாக எந்திரன்கள் கூடுதல் அறிவுடன் இயங்குகின்றன. எந்திரப்பார்வை, தொடுஉணர்வு, நகரும் திறன் காரணமாக பல வகையான தொழில்களுக்கு எந்திரன்கள் (ரோபோக்கள்) பொருத்தமானவை. ஜவுளித் தொழில், உணவு பதப்படுத்துதல், மருந்துப் பொருள் தயாரிப்பு, மேஜை நாற்காலி வகைகள் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றில் மிகவிரைவில் எந்திரன்கள் பெருமளவு பயன்படுத்தப்படும். உற்பத்தி, உற்பத்தித்திறன் தொகுப்புகளில் எந்திரன்கள் பெருமளவு லாபம் தருவனவாக உள்ளன. அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களில் எந்திரன்களைப் பயன்படுத்துவதால் 20 முதல் 30 சதவீதம் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது என்பதை அமெரிக்க வரலாறு காட்டுகிறது. எந்திரன்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தற்பொழுது பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கான நிலுவையைச் செலுத்துவதைத் துரிதப்படுத்த இயலும். அதேசமயம் எந்திர முதலீட்டுத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளமுடிகிறது. எடுத்துக்காட்டாக கூடுதலாக அழுத்த அச்சு எந்திரங்களையும் அல்லது எந்திரக் கருவிகளையும் வாங்குவதைவிட எந்திரன்களை வாங்குவது 20 முதல் 30 சதவீத கூடுதல் உற்பத்தி தருவதாக உள்ளது. சமமான செலவில் அல்லது கூடுதலான செலவில் குறைவான உற்பத்தித் திறன் உள்ள ஒரு எந்திரத்தை வாங்குவதை விட எந்திரன்களை வாங்குவதால் 20 முதல் 30 சதவீதம் உற்பத்தி திறன் உயர்கிறது.
— Industrial robot
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bwje9scs/
தமிழ்“தொழில் துறை எந்திர மனிதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bwje9scs/APA
Oliyon Research. (2026). தொழில் துறை எந்திர மனிதன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bwje9scs/MLA
"தொழில் துறை எந்திர மனிதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bwje9scs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment