கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; பாண்டிச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளையைப் பாடிப் பரிசில் பெற்றவர். இவர் திருவாய்ப் பாடிப் புராணம், சாரப் பிரபந்தம் ஆகிய நூல்களையும் பல தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் எழுதிய இராமகவி பதங்கள் என்னும் நூல் கி.பி. 1886–ஆம் ஆண்டில் விசயரங்க முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது.