ஆங்கிலேய மருத்துவர்; கீழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்; பாரசீக மொழி வல்லுநர். இவர் கி.பி. 1780-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9-ஆம் நாள் பிறந்தார். பண்டைய பாரசீக இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அவற்றில் பல கவிதை வடிவில் அமைந்துள்ளன. சாநாமா என்னும் நூலின் ஒரு பகுதியைக் கவிதை வடிவில் மொழி பெயர்த்ததுடன், அந்நூலின் சுருக்கத்தையும் வெளியிட்டார். ‘அதீம் தாய்’ என்னும் நூலைப் பாரசீக மொழியில் தொகுத்தார். கி.பி. 1842–ஆம் ஆண்டில் ஆப்கானித்தானத்தின் மீது நடைபெற்ற படையெடுப்பைப் படவிளக்கத்துடன் எழுதினார், இவர் புகழ் மிக்க ஓவியரும் ஆவர். ‘ஆப்கானித்தானம் பற்றிய வரைபடங்கள்’ என்னும் தலைப்பில் இவர் ஓவியங்களைத் தீட்டினார். கி.பி. 1852 - ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 7–ஆம் நாள் காலமானார்.