அட்கின்சன் சேம்சு
aṭkiṉcaṉ cēmcu
ஆங்கிலேய மருத்துவர்; கீழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்; பாரசீக மொழி வல்லுநர்.
ஆங்கிலேய மருத்துவர்; கீழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்; பாரசீக மொழி வல்லுநர். இவர் கி.பி. 1780-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9-ஆம் நாள் பிறந்தார். பண்டைய பாரசீக இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அவற்றில் பல கவிதை வடிவில் அமைந்துள்ளன. சாநாமா என்னும் நூலின் ஒரு பகுதியைக் கவிதை வடிவில் மொழி பெயர்த்ததுடன், அந்நூலின் சுருக்கத்தையும் வெளியிட்டார். ‘அதீம் தாய்’ என்னும் நூலைப் பாரசீக மொழியில் தொகுத்தார். கி.பி. 1842–ஆம் ஆண்டில் ஆப்கானித்தானத்தின் மீது நடைபெற்ற படையெடுப்பைப் படவிளக்கத்துடன் எழுதினார், இவர் புகழ் மிக்க ஓவியரும் ஆவர். ‘ஆப்கானித்தானம் பற்றிய வரைபடங்கள்’ என்னும் தலைப்பில் இவர் ஓவியங்களைத் தீட்டினார். கி.பி. 1852 - ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 7–ஆம் நாள் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 202)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bavr23xy/
தமிழ்“அட்கின்சன் சேம்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bavr23xy/APA
Oliyon Research. (2026). அட்கின்சன் சேம்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bavr23xy/MLA
"அட்கின்சன் சேம்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bavr23xy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment