சூ சூட்டிளக்க இணைப்பு சூடுபடுத்துவதன் மூலமாகவும், 427°C ஐ விடக் குறைந்த உருகு நிலை உள்ள ஏதேனும் ஓர் உலோகத்தை இணைப்பு (coalescence) நிரப்புதற்குப் (fill) பயன்படுத்தியும், இணைப்பை உருவாக்குகிற பல்வேறு முறைகள் சூட்டிளக்க இணைப்பு (soldering) எனும் பெயரில் வழங்கப்படுகின்றன. சூட்டிளக்க இணைப்பு முறையின் கட்டங்கள். இணைக்கப்பட வேண்டிய உலோகங்களின் தேர்வு, தகுந்த தளை (bond) உருவாகும் விதமாக இணைப்பை வடிவமைத்தல், இணைப்பு உலோகம் நன்றாக நனைக்கும்படி இணைக்கப்பட வேண்டிய உலோகத்தின் பரப்பை நன்கு தூய்மையாக்கல், இணைக்கப்படும் பரப்பில் ஆக்சைடுகள் உருவாகாமல் காக்கும் பொருட்டு, இளக்கிச் (flux) சேர்த்தல், இணைப்பிற்குப் பிறகு தேவைப்படும் தன்மைகளுக்குத் தக்கவாறு சரியான இணைப்புலோகத்தைத் தேர்ந்தெடுத்தல், சூடுபடுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்தல், இணக்கப்பட வேண்டிய உலோகங்கள் சூடு படுத்தப்படும் போது, விலகி விடாதபடி ஒன்றோடு ஒன்று சரியாகப் பொருந்தும் வண்ணம் பொருத்துதல் ஆகியன இம்முறையின் படி நிலைகளாகும். சூட்டிளக்க இணைப்பின் உலோகவியல் தன்மைகள். இம்முறையில் பயன்படும் இணைப்புலோகக் கலவை, இணைக்கப்பட வேண்டிய உலோகப் பரப்புகளை நனைத்து, பரவி இணையும் பகுதிகளை அடைகிறது. இணைப்பில் தந்துகிச் (capillary) செயல்பாட்டால் உள்ளிழுக்கப்படுகிறது. நன்றாகப் பற்றிப் படர்ந்தபடியே இறுகி விடுகிறது. நனைத்தலும் பரவலும். இணைப்புலோகக் கலவை, பரப்பில் நன்கு படர்ந்தால் முழுமையான நனைத்தல் எனலாம். முழுமையாகப் படரும் முன்பே உறைந்து விடுமேயானால், பகுதி நனைத்தல் எனலாம். பரப்பை நனைக்காமல், உலோகத் துளியாகவே இருக்குமாயின் நனையாத் தன்மை எனலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பொதுவாக, நீர்ம நிலையில் உள்ள இணைப்புலோகக் கலவைகள் மிகத் தூய்மையான உலோகப் பரப்புகளை நனைப்பதில்லை. எடுத்துக் காட்டாக, ஈயம்—வெள்ளீயம் உலோகக் கலவை எஃகின் பரப்பை முழுமையாக நனைப்பதில்லை. ஆனால், தகரம் எஃகுடன் சேர்ந்து உலோகக் கலவையாக மாறி விடுமேயானால், பரப்பை முழுமையாக நனைக்கும். எனவே, இணைப்புலோகத்திற்கும், இணைக்கப்படும் பரப்புக்கும் இடையே உலோகக் கலவை உருவானால், இணைப்பு மிகுதியாகும். முழுமையான நனைத்தல் நிகழ வேண்டுமேயானால், இணைப்புலோகம் இணைக்கப்படும் பரப்போடு, ஏதேனும் ஓர் உலோகத்திற்கு இடைப்பட்ட பொருளை உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும் அல்லது இணைப்பு உலோகம் பரப்பில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும். பரவும் தன்மை, இணைக்கப்படும் பரப்புகளின் தன்மை, வெப்ப நிலை, இளக்கியின் சேர்க்கை, பரப்பு ஆக்சிஜனேற்றமடையும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகிறது. பரப்பில் இருக்கும் ஆக்சைடுகள் நனைத்தலையும், பரவலையும் பாதிப்பதால், இவற்றை நீக்க இளக்கிகளைச் சேர்க்க வேண்டியுள்ளது. அம்மோனியம் குளோரைடும், துத்தநாகக் குளாரைடும் இணைந்த கலவை போன்றவை பெரிதும் பயனுறும் இளக்கிகளாகும். இணைப்பை நிரப்பும் செயல் தந்துகி ஈர்ப்பால் ஏற்படுகிறது. இத்தன்மை, இணைமுகங்களுக்கு இடையேயான தொலைவு, வெப்ப நிலை, சூடேற்றும் முறை, சீரான சூடேற்றம் போன்றவற்றிற்கு ஏற்ப வேறுபடுகிறது. பரப்பின் மேல் உலோகக் கரைசல் மூலம், ஓர் உலோகவியல் தளை உண்டாகிறது. இணைப்புலோகம் பரப்பின் உலோகத்தில் சிறிதளவைக் கரைத்து, உலோகங்களுக்கு இடைப்பட்ட பொருளை உருவாக்குகிறது. இச்செயல் எவ்வளவு எளிதாக நிகழ்கிறதோ, அதே அளவு எளிதாகப் பரவுதலும், நனைத்தலும் நிகழ்கின்றன. இக்கரைசல் கெட்டியாகித் திண்ம நிலையை அடையும் நேரத்தில், மூலக் கூறுகளுக்கு இடையேயான அதே பற்று விசையின் மூலம் இணைப்பின் இரு பகுதிகளும் ஈர்க்கப் படுகின்றன. பற்றவைப்பு, பற்றாசிடல், சூட்டிளக்க இணைப்பு—வேறுபாடுகள். பற்றவைப்பில் இணைக்கப்பட வேண்டிய உலோகங்கள் உருக்கியே இணைக்கப்படுகின்றன, ஏனைய இரு முறைகளிலும் உருக்குதல் நிகழ்வதில்லை. மாறாக, இணைக்கப் பயன்படுத்தப் படும் உலோகக் கலவை, தான் உருகி இணைக்கப்பட வேண்டிய இரு பரப்புகளின் மீதுமாகப் பரவி இறுகுகிறது. சூட்டிளக்க இணைப்பில், இந்த இணைப்புலோகக் கலவை 427”Cக்கும் கீழ் உருகு நிலை உடையதாகவும், பற்ற வைத்தலில் (welding) 427°Cக்கு மேல் உருகு நிலை உடையதாகவும் இருக்கும். சூட்டிளக்க இணைப்பு வடிவமைப்பு. இவ்வகை இணைப்புகள் வலிவற்றவை. எனவே பாரம் முழுதும் இணைக்கப்படும் உலோகங்களில் மட்டும் வருமாறும், இணைப்பில் வாராதவாறும் வடிவமைக்க வேண்டும். இணைமுகங்கள் ஒன்றையொன்று கொக்கி போல் பற்றும்படியாக வடிவமைப்பதன் மூலம் இணைப்பின் வலிமையை உயர்த்தலாம். இத்தகைய இணைப்புகளில் இணைப்புலோகக் கலவை, இணைப்பை நிரப்பி அடைக்க மட்டுமே தேவைப்படுகிறது. எளிய முட்டு இணைப்பு, மூலை இணைப்பு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும், தவிர்க்க இயலா விடில், அடித் தகடிட்ட முட்டு இணைப்பை வடிவமைக்கவாம். இதற்கு, படிவு இணைப்பு பெரிதும் பயன்படுகிறது. படிவுத் தொலைவை உயர்த்துவதன் மூலம் இணைப்பின் வலிமையை உயர்த்தலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இணைப்பு உலோகக் கலவைகள். வெள்ளீயம்—ஈயம் கலவையில் நல்ல அரிப்பு எதிர்ப்புத் தன்மை உள்ளது. வெள்ளீயம்—ஆன்ட்டிமனி—ஈயம் உலோகக் கலவையில் ஆன்ட்டிமனியால் இணைப்புலோகக் கலவையின் வலிமை கூடுகிறது. வெள்ளீயம்—துத்தநாக இணைப்புலோகக் கலவை அலுமினியத்தை இணைக்கப் பயன்படுகிறது. ஈயம்—வெள்ளி இணைப்பு உலோகக் கலவை தாமிரப் பரப்பையும், எஃகுப் பரப்பையும் நன்றாக நனைக்க வல்லது, கேட்மியம்—வெள்ளி கலவை அலுமினியத்தை, அலுமினியத்துடனும், பிற உலோகங்களுடனும் இணைக்கப் பயன்படுகிறது. துத்தநாக—அலுமினிய உலோகக் கலவை, இளக்கிகளின் உதவியின்றித் தானாகவே அலுமினியப் பரப்பை நனைக்க வல்லது. 50% இண்டியம், 50% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை கண்ணாடியைக் கண்ணாடியுடனும், பிற உலோகங்களுடனும் இணைக்க வல்லது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இணைப்பு உலோகக் கலவை, பின் வரும் குறிப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவை நனைக்கும் தன்மை, பரவும் தன்மை, இணையும் உலோகங்களின் வலிவோடு ஒப்புடைய உலோகக் கலவைத் தன்மை, இணையும் உலோகங்களோடு ஒப்புடைய மின் தன்மை ஆகியன. இளக்கிகள். சூடாக்கப்படும் போது, உலோகப் பரப்புகளின் மேல் இடப்பட்ட இணைப்புலோகக் கலவையின் நனைக்கும் தன்மையை உயர்த்த வல்ல பொருள், இளக்கி (flux) எனப்படும். இளக்கிகள் திண்ம, நீர்ம, வளிம நிலைகளில் இருக்கலாம். சூட்டிளக்க இணைப்பு நிகழ்கையில் பரப்பின் மீது உண்டாகும் ஆக்சைடுகளை நீக்கி மீண்டும் ஆக்சிஜனேற்றம் நிகழாமல் தடுப்பதே, இளக்கிகளின் இன்றியமையாப் பண்பாகும். இளக்கிகள் பொதுவாக, அரிப்புத் தன்மை உள்ளவை, மிதமானவை, அரிப்புத் தன்மையற்றவை என மூவகைப்படுகின்றன. அரிப்புத் தன்மையுள்ள இணைப்புலோகக் கலவைகள் துத்தநாகக் குளோரைடும், அம்மோனியம் குளோரைடும் உடையவை. சில வகைகளில் சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு ஆகியவை இருப்பதுண்டு. இவ்வகைக் கலவைகள் ஆக்சைடுகளை முழுமையாகக் கரைப்பதன் மூலமோ, ஆக்சைடுகளின் ஒரு பகுதியைப் பரப்பிலிருந்து விடுவித்து, இளக்கியில் மிதக்கச் செய்வதன் மூலமோ செயல்படும். இணைப்புக்குப் பிறகு, பரப்பில் எஞ்சியிருக்கும் இளக்கியை அகற்றி விடவேண்டும். இல்லையேல், அரிப்புத் தன்மையுடைய இந்த இளக்கி இணைப்பையே அரித்து வலிமையைக் குறைத்து விடும். இது இவ்வகை இளக்கிகளின் பெருங்குறைபாடாகும். மிதமான இளக்கிகள் லாக்டிக் அமிலம், பென்சோயிக் அமிலம், ஸ்டியரிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இளக்கிகளின் அளவைக் கட்டுப் படுத்தவும், எஞ்சியுள்ள இளக்கியை வெப்பத்தின் மூலம் ஆவியாக்கவும் வாய்ப்புள்ள முறைகளில் இவ்வகை இளக்கிகள் பெரிதும் பயன்படுகின்றன. புரோமைடு உப்புகளை உடைய ஹைட்ரசைன் இளக்கிகள் இணைப்புலோகத்தின் நனைக்கும் திறனைப் பன்மடங்கு உயர்த்தச் செய்கின்றன. சூடு படுத்தும் போது, பயனற்றுப் போகும் எஞ்சிய இளக்கி ஆவியாகி விடுகிறது. சிறிதளவு இளக்கி எஞ்சினாலும், அரிக்கும் தன்மையற்றுள்ளமையால், இணைப்பிற்குக் கேடு விளைவதில்லை. அரிப்புத் தன்மையற்ற இளக்கிகள் பெரும்பாலும் பைன் மரங்களின் பிசினைக் கொண்டவை. இவற்றின் மின் பண்புகள் மிகச் சிறப்பாக உள்ளமையால், மின் இணைப்புகளில் மிகுதியாகப் பயன்படுகின்றன. இவை செம்பு, செம்பு உலோகக் கலவைகளின் இணைப்பிற்கும் பயன்படுகின்றன. இணைப்பு உலோகக் கலவையின் தன்மை, இணைப்பு வடிவமைப்பு, இணைக்கப்படும் பரப்புகளின் தூய்மை நிலை, இணைப்பு முறை, இணைப்புக்குப் பிறகு எஞ்சியுள்ள இளக்கியை எளிதில் நீக்க இயலும் தன்மை, இளக்கியின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் இளக்கி தேர்ந்தெடுக்கப்படும். இணைக்கப்படும் உலோகங்களின் பரப்புத் தூய்மை. இணைக்கப்படும் உலோகங்களின் பரப்பு, ஆக்சைடு, தூசி, எண்ணெய்ப் பசை போன்றவை ஏதுமின்றித் தூய்மையாக இருத்தல் வேண்டும். இவை நீக்கப்படா விட்டால், இணைப்புலோகத்தின் நனைக்கும் தன்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மட்டை கொண்டு தேய்த்தல், சாணை பிடித்தல் முதலிய எந்திரவியல் முறைகளாலும், கார முறை எண்ணெய்ப் பிரிப்பு, அமில முறை ஆக்சைடு நீக்கம் முதலிய வேதி முறைகளாலும் பரப்பு, தூய்மையாக்கப்படும். சூட்டிளக்க இணைப்பு முறைகள். இவை சூட்டுக் கோல் முறை, வளிமக் கற்றை முறை, முழுக்கு மற்றும் அலை முறை, மின் தூண்டல் முறை, மின் தடை முறை, உலை முறை, தெளிப்பு முறை, வெப்பம் நீக்கு முறை எனப் பல வகைப்படும். சூட்டுக் கோல் முறை. இம்முறையில் இரும்பாலான ஒரு கோலின் நுனியில் செம்பு முனை பொருத்தப்பட்டிருக்கும். இக்கோலை மின்சாரம், கரி, எண்ணெய், வளிமம் போன்ற ஏதேனும் ஒன்றால் சூடேற்ற முடிகிறது. இக்கோலின் முனைப் பகுதி சூட்டைத் தேக்கி வைத்து, இணைப்பில் வெப்பத்தை வெளியிடுகிறது. அத்துடன் இளக்கியையும் வைத்திருந்து, இணைப்பில் இடுகிறது. நேரடியான தீச்சுடர் முறைச் சூடேற்றத்தில் பயன்படும் இளக்கி தெறித்துச் சிதறும் தீமை உள்ள சூழ்நிலைகளில் சூட்டுக் கோல் முறை பின்பற்றப்படுகிறது. வளிமக்கற்றை முறை. ஒரு குழாயின் வழியே செலுத்தப்படும் வளிமம், குழாயின் முனையில் எரியூட்டப்பட்டு, வெப்பம் பெறப்படும், எரி வளிமம், ஆக்சிஜன், காற்று ஆகியவை பயன்படும் வளிமங்களின் கலவை விகிதத்தை மாற்றுவதன் மூலம், அவற்றின் வெப்ப நிலை மாற்றப்படுகிறது. சூட்டுக் கோல் முறை பயன்படாத மிகப் பெரிய பரப்புகளுக்கு இம்முறை ஏற்றது. முழுக்கு மற்றும் அலை முறை. இம்முறையில் இளக்கி இடப்பட்ட இணைக்கப்பட வேண்டிய பரப்புகள் ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்ட நிலையில், பெரிய தொட்டியிலுள்ள உருகிய நிலை இணைப்பு உலோகக் கலவையில் முழுகுமாறு அமிழ்த்தப்படும். கலவை உருகிய நிலையில் உள்ளமையால், இணைப்பிற்குத் தேவையான வெப்பமும், இணைப்பு உலோகக் கலவையிலிருந்தே கிடைக்கிறது. இம்முறையில், பல இணைப்புகளை ஓரே நேரத்தில் உருவாக்க முடிவதால், நேரம் வீணாவதில்லை. இரு பகுதிகளையும் பொருத்திப் பிடிக்கப் பொருத்திகள் தேவைப்படுகின்றன. இம்முறையில், உருகிய நிலையில் உள்ள இணைப்பு உலோகக் கலவைக்குள் பரப்புகள் முழுகுவதால், தேவைக்கதிகமான வெப்பம் தாக்கி இணைப்பு வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, இணைக்கப்படும் பரப்புகள் ஒரு நகரும் வார்ப்பட்டை மேல் வைக்கப்பட்டு, நகர்த்தப்படுகின்றன. ஒரு சிறிய துளை வழியே ஏற்றப்படும் உருகிய நிலை இணைப்பு உலோகக் கலவையில் உருவாகும் அலைகள், இணைப்பின் மீது படும்படியாக நகரும் வார்ப்பட்டை அமைக்கப்படுகிறது. இதுவே, அலை முறை இணைப்பு எனப்படுகிறது. அலை வேகம் நொடிக்கு ஏறத்தாழ 30 செ.மீ. ஆகும். மின் தூண்டல் முறை. இணைக்கப்பட வேண்டிய பரப்புகள் பொருத்தப்பட்டு இளக்கி, இணைப்பு உலோகக் கலவை அனைத்தும் இடப்பட்டு, ஆயத்த நிலையில் நகரும் வார்ப்பட்டையின் மீதோ, சுழலும் மேசை மீதோ அடுக்கப்படும். பிறகு, ஒன்றன் பின் ஒன்றாக, மின் தூண்டல் சுருளின் மூலம் சூடாக்கப் பட்டு இணைக்கப்படும். இது மிகவும் தூய்மையான, விரைவான முறையாகும். மின் தடை முறை. இளக்கியும், இணைப்பு உலோகக் கலவையும் இடப்பட்ட இணைக்கப்பட வேண்டிய பரப்புகள், இரண்டு மின் முனைகளுக்கு இடையே அழுத்திப் பிடிக்கப்படுகின்றன. குறைந்த அழுத்தமுள்ள உயர் மின்சாரம் பாய்ச்சப்படும் போது, இணைப்பு நிகழத் தேவையான வெப்பம் மின் தடையால் உருவாகிறது. உலை முறை. இளக்கியும், இணைப்புலோகக் கலவையும் இடப்பட்ட, இணைக்கப்பட வேண்டிய பரப்புகள் பொருத்தப்பட்டு, உலைகளில் இணைப்பு உலோகக் கலவையின் உருகு நிலையை விட 50°C உயர் வெப்ப நிலை வரை சூடாக்கப்படுகின்றன. இணைப்பு உருவானதும், உலோகக் கலவை திண்ம நிலையை அடையும் வரை குளிர்விக்கப்படும். தெளிப்பு முறை. இம்முறையில் இணைப்பு உலோகக் கலவை தெளிப்பான் மூலம் தெளிக்கப் படுகிறது. வெப்பம் நீக்கு முறை. இம்முறையில் கொதிக்கும் பாத்திரத்தில் உள்ள தெவிட்டிய வளிமத்தில், இணைப்புப் பரப்பு வைக்கப்படும் போது, வளிமம் வெப்பம் நீங்கி, நீர்ம நிலையை அடையும். அப்போது வெளியிடப்படும் உள்ளுறை வெப்பம் இணைப்புக்குத் தேவையான வெப்பமாகப் பயன்படுகிறது. பல்வேறு உலோகங்களின் சூட்டிளக்க இணைப்பு. செம்பும், செம்பு உலோகக் கலவைகளும், இம்முறையில் எளிதில் இணைக்கப்படக் கூடியவை. 30–40% வரை வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவையே இணைப்புலோகக் கலவையாக மிகுதியாகப் பயன்படுகிறது. அலுமினியம் மற்றும் அதன் உலோகக் கலவைகளின் இணைப்பில், உயர் வெப்பம் கடத்தும் தன்மை, ஆக்சைடு படலத்தை நீக்குவதில் கடினம், அரிப்பை எதிர்க்க இயலாத் தன்மை போன்றவை ஏற்படுகின்றன. 60–70% வரை வெள்ளீயமும், எஞ்சியது துத்தநாகமும் உடைய கலவையே இதற்கு மிகவும் ஏற்ற இணைப்பு உலோகக் கலவையாகும். அனைத்து வகைக் கரியடங்கிய எஃகும், சூட்டிளக்க இணைப்பில் இணைகின்றன. கரியின் அளவு உயர உயர, நனைக்கும் தன்மை குறையத் தொடங்குகிறது. இதற்கான இணைப்புஉலோகக் கலவை. வெள்ளீயமும், ஈயமும் கொண்டது. வார்ப்பு இரும்பைச் சூட்டிளக்க முறையில் இணைத்தல் கடினம். வார்ப்பிரும்பில் உள்ள கிராஃபைட் எனும் கரிப் படலம் நனைக்கும் தன்மையை அழித்து விடுகிறது. எனவே, இவற்றை முதலில் உருகிய நிலையிலுள்ள உப்புகளோடு செயல்படுத்தி, சிலிக்கான், கரியைக் கரைத்துப் பிரிக்க வேண்டும். பின்பு, வெள்ளீயம், ஈயம் கொண்ட. இணைப்பு உலோகக் கலவையைப் பயன்படுத்தி இணைக்கலாம், எஃகில். உள்ள குரோமியம் ஆக்சைடின் காரணமாக, நனைக்கும் தன்மை குறைவதால், எஃகைச் சூட்டிளக்க முறையில் இணைத்தல் கடினமாகிறது. எனவே, எஃடின் மேற்பரப்பு முதலில், எந்திரவியல் முறைப்படி தூய்மையாக்கப்பட்டு, 50% மிகுதியான வெள்ளீயம் உள்ள இணைப்புஉலோகக் கலவை பூசப்பட்டு, துத்த நாக குளோரைடு, அம்மோனியம் குளோரைடு போன்றவை அடங்கிய இளக்கிகள் இடப்பட்டு, இணைக்கப்படுன்றன. இணைப்பிற்கான வெப்பம் 370°­­C ஐத் தாண்டக் கூடாது. 370°C க்கு மேலானால், எஃகு தெறிக்கும் தன்மையை எய்துகிறது. இணைப்பிற்குப் பின், எஞ்சியுள்ள இளக்கி நீக்கப்படா விடில், அரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. —வயி. அண்ணாமலை நூலோதி. M.M.Schwartz, Metals Joining Manual, McGraw-Hill Book Company, London, 1979. சூட்டுக் கோலால் அழித்தல் மரு வளர்ச்சி போன்ற வேண்டாத திசுக்களையும் சில நோய் நிலைகளையும், மின்சாரத்தால் சூடேற்றப்பட்ட கம்பியைக் கொண்டு அழிக்கும் முறை, சூட்டுக் கோலால் அழித்தல் (cauterization) எனப்படும். அறுவை மருத்துவத்தின் போது, (குறிப்பாக, மூளைப் பகுதியில்) குருதிக் குழாய்களிலிருந்து ஏற்படும் குருதி ஒழுக்கைத் தடுக்கவும், சூட்டுக் கோலால் அழிக்கும் முறையைப் பயன்படுத்தலாம். சூட்டுக் கோல் வெளியிடும் வெப்பம், திசுக்களின் புரதத்தை மாற்றமடையச் செய்கிறது; திசுக்களின் பெரும் பகுதியைக் குருதி உறைவு அடையச் செய்றது; இதனால் குருதி ஒழுக்கு நிறுத்தப்படுகிறது. சூட்டுக் கோல் அழிப்பு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் சில அறுவை மருத்துவத்தைத் தவிர்க்க முடிகிறது என்றாலும், இம்முறை சில விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தும். அவை, சூட்டுக் கோலால் அழித்த பகுதியில் சில சமயம் குருதி ஒழுக்கு ஏற்படக் கூடும், சில பொது உணர்விழப்பு மருந்துகளைச் செலுத்தும் போது, இம்முறையைப் பயன்படுத்தினால், உணர்விழப்பு மருந்துகள் தீப்பற்றி எரியக் கூடும், சூட்டுக்கோல் அழிப்பு பயன்படும் சில நோய் நிலைகள் கருப்பைக் கழுத்து நெடு அழற்சி (Chronic cervicitis) இந்நோய் நிலையில் சூட்டுக் கோல் அழிப்பு சிறந்த பயனளிக்கிறது. சூட்டுக் கோலின் முனையைச் சிவப்பாகும் வரை சூடாக்கிய பின்னா், கருப்பையின் கழுத்துப் பகுதியைச் சுற்றி 5–6 முறை வைக்க வேண்டும், இதனால், பாதிக்கப்பட்ட கருப்பையின் கழுத்துத் திசுக்கள் இரு வாரங்களில் நார்த் திசுவாக்கம் (cicatrization) அடைந்து விடுகின்றன. அப்பகுதிகளில் சில சமயம் குருதி ஒழுக்கு ஏற்படக் கூடும். ஆயினும், குருதி ஒழுக்கு கடுமையாக இருப்பதில்லை. சில மணி நேரத்திற்குப் பின் நின்று விடும். எனவே, சூட்டுக் கோல் அழிப்புக்குப் பின் குருதி ஒழுக்கு ஏற்பட்டால், அது பற்றிய அச்சத்தை நோயாளியிடமிருந்து நீக்க வேண்டும். தோல் நோய்கள். தோலில் சூட்டுக் கோலைப் பயன்படுத்தும் போது, தோலை அதிகமாக அழுத்தக் கூடாது. ஏனெனில், அப்பகுதியில் நிலையான தழும்பு ஏற்பட்டு விடக் கூடும். கீழ்க் காணும் தோல் நோய்களில் சூட்டுக் கோல் அழிப்பு மருத்துவம் பயனுள்ளதாக உள்ளது. மருக்கள். தலை, கன்னம், சிலேட்டுமப் படலத் தோல் சந்தி (mucocutaneous junction) ஆகிய பகுதிகளில் தோன்றும் பல மருக்களை (multiple warts) அகற்ற சூட்டுக் கோல் அழிப்பு மருத்துவம் பயன் படுகிறது. ஸ்பைடர் நேவி (spider naevi). தோல் மீது சிலந்தி வடிவில் ஏற்படும் இவ்வளர்ச்சியின் மையத்தில், சூட்டுக் கோலை ஒரு நொடி மட்டும் செலுத்தினாலே, சிறந்த பயனளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நிறமற்ற விழி முன் படலப் புண் (corneal ulcer). பொதுவாக இந்நோய்க்கு சல்ஃபனமைடு, அட்ரோப்பின் கண் சொட்டு மருந்து பெரும் பயன் தரும். ஆயினும், விழி முன் படலப் புண் கடுமையாக இருந்தால், சூட்டுக் கோல் அழிப்பு மருத்துவம் தேவைப்படலாம். விழி இமை விளிம்பு வெளியிழப்பு (ectropion). இந்நோய் நிலையில், கண் இமையின் விளிம்பு, கண் குழியிலிருந்து வெளிப் பக்கமாக இழுக்கப்பட்டுக் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டேயிருக்கும். இதற்கு, சூட்டுக் கோல் அழிப்பு மருத்துவம் பயன்படும். பெண் இனப் பெருக்க வெளி உறுப்புப் பகுதியில் ஏற்படும் தண்டுக் கழலை (pappilomata) என்னும் மருக்களை அகற்ற, தாது எண்ணெயில் கரைந்த போடோஃபைலின் மருந்தை 25% கரைசலாக ஒரே முறை தடவினாலே பெரும்பான்மையோரிடம் இம்மருக்கள் 2–3 நாளில் மறைந்து விடுகின்றன. போடாஃபைலினால் அழிக்க முடியாத மருக்களைச் சூட்டுக் கோல் மூலம் அகற்றலாம். —மு. துளசிமணி நூலோதி. Schwartz, et.al., Principles of Surgery, Fourth Edition, McGraw Hill International Book Co., Singapore, 1984. சூப்பர் அமிலங்கள் புரோட்டான் வழங்கும் திறனை மிக உயர்ந்த அளவில் கொண்ட அமிலத்திற்குச் சூப்பர் அமிலம் (super acid) என்று பெயர். நீரற்ற 100% சல்ஃப்யூரிக் அமிலத்தை விட அதிகமான அல்லது அதற்குச் சமமான புரோட்டான் வழங்கும் திறனைக் கொண்ட அமிலம் என்றும், இதனை வரையறுக்கலாம். சூப்பர் அமிலங்கள் யாவும் புரோட்டான் அமிலம் அல்லது பிரான்ஸ்டெட் அமில வகையைச் சேர்ந்தவை. புரோட்டான் அமிலம் என்பது தகுந்ததொரு காரத்தைப் புரோட்டான் ஏற்றம் (protonation) செய்ய உதவும் புரோட்டான் வழங்கி (proton donor) என்று பொருள்படும். காட்டாக, பின்வரும் வினையில், HA என்பது புரோட்டானை ( H+) B என்னும் காரத்திற்கு வழங்கியிருப்பதால், அது புரோட்டான் அமிலமாகும். நீரில் அமிலங்கள் எவ்விதம் அயனிகளாகின்றன என்பதைப் பொறுத்து, அவற்றின் வலிமைகள் ஒப்பிடப்படுகின்றன. அதாவது நீருடன் H+ சேர்ந்து, H₃O+ அயனிகளாகும் திறனைப் பொறுத்து. அமிலங்களின் வலிமைகள் ஒப்பிடப்படுகின்றன. அனைத்து அமிலங்களும், நீர்க் கரைசலில் முற்றிலும் அயனியாவதால், அவை ஒரே அளவு வலிமையைக் கொண்டிருப்பது போலத் தோன்றும். ஏனெனில், அவ்வமிலங்களின் வெவ்வேறு வலிமை நீரில் இருக்கும் மிக அதிக அமிலத் தன்மை வாய்ந்த ஹைட்ரோனியம் அயனியின் (H₃O+) வலிமைக்குச் சமமாகக் குறைக்கப்படுகிறது. மேலும், நீருடன் வினை புரியும் போது, பல சூப்பர் அமிலங்கள் அழிந்து விடுகின்றன. இக்காரணங்களால், அவற்றின் நீர்க் கரைசலிலிருந்து, சூப்பர் அமிலங்களின் வலிமையைக் கணக்கிட முடிவதில்லை. எல்.பி. ஹாம்மெட் என்பார், சற்று வேறுபட்ட முறையின் மூலம் சூப்பர் அமிலங்களின் அமிலத்துவத்தைக் (acidity) கணக்கிட்டார். ஹாம்மெட் அமிலத்துவச் சார்பு. ஒரு காரத்துடன் புரோட்டான் சேரும் போது, உறிஞ்சுதல் நிற மாலையில் (absorption spectrum) ஏற்படும் மாற்றம் கண்டறியப் பட்டது. இதிலிருந்து, தகுந்த வீரியம் குறைந்த காரங்கள் அல்லது காட்டிகளின் (indicators) அயனியாக்கல் விகிதம் (ionisation ratio) கணக்கிடப் பட்டது. இவ்வினையை அடிப்படையாகக் கொண்டே, அமிலங்களின் அமிலத்துவம் அளக்கப் படுகிறது. ஹாம்மெட் அமிலத்துவச் சார்பை (acidity function) H₀ என்று குறிக்கின்றனர், இதைப் பின் வரும் சமன்பாடு விளக்குகிறது. Н₀ ⇆ pKBH+ ↦ log KBH+ என்பது அமில வகை நிலைகாட்டிச் சேர்மத்தின் பிரிகை மாறிலியையும் (dissociation constant), [BH+]/[B] என்பது காட்டியின் அயனியாதல் விகிதத்தையும் குறிக்கும். இம்முறை 1930ஆம் ஆண்டில் ஹாம்மெட் என்பாரால் சுழியில் (0) இருந்து 100% வரை நீர் சேர்ந்திருக்கும் சல்ஃப்யூரிக் அமிலத்தின் அமிலத்துவத்தை ஆராயும் போது பயன்படுத்தப்பட்டது. நீர்த்த அமிலக் கரைசலில் முன்னமே pKBH+ மதிப்புத் தெரிந்த காரங்களைக் கொண்டு, பல வீரியம் குறைந்த காட்டிகளின் pKBH+ மதிப்புகளைக் கண்டறிந்தார். அவற்றிற்கு ஒரே மாதிரியான அயனியாக்கல் மதிப்பு இருந்தது. இம்முறையில் சுழியிலிருந்து 100% வரை செறிவு உள்ள சல்ஃப்யூரிக் அமிலத்திற்கு H₀ மதிப்பு கணக்கிடுகையில், 100% சல்ஃப்யூரிக் அமிலத்திற்கு H₀ மதிப்பு –11.9 எனத் தெரிய வந்தது. H₀ அளவீட்டை குறைந்த அமிலச் செறிவில் pH அளவீட்டுடன் தொடர்பு உண்டாக்கினர். எந்த எல்லைக்குப் பிறகு pH மதிப்பு முக்கியத்துவம் இழக்கிறதோ, அந்த எல்லையிலிருந்து H₀ அளவீடு pH அளவீட்டின் நீட்டம் (extension) எனக் கொள்ளப் பட்டது. நீர்க் கரைசலில் உள்ள 0.1 N சல்ஃப்யூரிக் அமிலத்தின் ஹைட்ரஜன் அயனிச் (H+) செறிவை விட, 100% சல்ஃப்யூரிக் அமிலத்தின் ஹைட்ரஜன் அயனிச் செறிவு 1013 மடங்கு மிகையாகும் (pH = H₀ = 1). H₂O+100% அயனியை விட 100% சல்ஃப்யூரிக் அமிலத்தின் புரோட்டான் வழங்கும் திறன் மிக அதிகமாகும். அட்டவணையில் பல சூப்பர் அமிலங்களின் ஹாம்மெட் அமிலத்துவச் சார்புகள் தரப்பட்டுள்ளன. இவ்வட்டவணையில் காணப்படும் H₀ மதிப்புகள் 100% செறிவுள்ள அமிலங்களின் மதிப்புகளாகும். இவ்வமிலங்கள் யாவும் அறை வெப்பநிலையில் நீர்ம நிலையில் உள்ளன. அட்டவணை <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சல்ஃப்யூரிக் அமிலமும், ஃபுளுரோ சல்ஃப்யூரிக் அமிலமும். நீரைப் போலவே, சல்ஃப்யூரிக் அமிலமும் தன் ஒரே இன மூலக்கூறுகளுக்கிடையே புரோட்டானைக் கொடுத்து, வாங்கிக் கொள்ளும் (amprotic) இயல்புடையது. சல்ஃப்யூரிக் அமிலத்துடன் தகுந்ததொரு HA அமிலத்தைச் சேர்ப்பதால், அதன் அமிலத் தன்மை உயருகிறது. HA அமிலம், சல்ஃப்யூரிக் அமிலத்தில் புரோட்டான் ஏற்றம் செய்து, H₂SO+ அயனியை உண்டாக்குவதுடன், அவ்வயனிகளின் செறிவையும் அதிகப்படுத்துகிறது. சல்ஃப்யூரிக் அமிலக் கரைப்பானில் சில அமிலங்களைக் கரைத்து, அவற்றின் H₀ மதிப்புகள் கணக்கிடப்பட்டன (படம் 1). ஃபுளுரோ சல்ஃப்யூரிக் அமிலமும், சல்ஃப்யூரிக் அமிலத்தைப் போன்றே, புரோட்டான் பகுப்பு (protolysis) வினைக்குட்படுகிறது. தத்துவ முறையில், இவ்வமிலத்தின் HA அமிலத்தைச் சேர்த்து, அதன் அமிலத் தன்மையை உயர்த்தலாம். HA அமிலம், HSO₃F அமிலத்தை H₂SO₃F+ அயனியாகப் புரோட்டான் ஏற்றம் செய்கிறது. H₃SOF அமிலத்தைப் புரோட்டான் ஏற்றம் செய்யும் அளவிற்குத் தகுந்த HA கிடைக்கவில்லை. இருப்பினும், சில பென்டாஃபுளுரைடுகளையும், அதன் பெறுதிகளையும் (derivatives) HSO₃F அமிலத்துடன் சேர்ப்பதன் மூலம் அமிலத் தன்மையை உயர்த்தலாம். ஆன்ட்டிமனி பென்டாஃபுளுரைடு (SbF₅) இதற்குச் சிறந்த சான்றாகும். இதை ஃபுளுரோ சல்ஃப்யூரிக் அமிலத்துடன் சேர்க்கையில் பின்வருமாறு அயனியாதல் நிகழ்கிறது. SbF என்பது வலி மிகு லூயிஸ் அமிலம். இது HSO₃F அமிலக் கரைப்பானிலிருந்து ஃபுளுரோ சல்ஃபேட் அயனியைக் கவர்ந்து, SbF₃ (SO₃F)– என்னும் அயனியை உண்டாக்கும். அப்போது, மிகையளவு புரோட்டான்கள் வெளிப்பட்டு H₂SO₃F+ அயனிகள் விளையும். ஆர்செனிக் பென்டாஃபுளுரைடு (A₃F₅), SbF₂ (SO₃F)₃ ஐச் சேர்ப்பதாலும், ஃபுளுரோ சல்ஃப்யூரிக் அமிலத்தின் அமிலத்துவம் உயர்கிறது என்பதைப் படம் 2இன் மூலம் அறியலாம். இத்தகைய ஊடகங்கள் மிக உயர்ந்த அமிலத் தன்மை கொண்டவை. உண்மையில், இவையே சூப்பர் அமிலம் என்னும் பெயர் பெறும் தகுதி கொண்டவை. இவற்றின் அமிலத்துவம் 0.1 NH₂SO₃ இன் நீர்க் கரைசலை விட 1020 மடங்கு மிகுதி. ஹைட்ரஜன் ஃபுளுரைடு. ஹைட்ரஜன் ஃபுளுரைடு அதிக அமிலத் தன்மை கொண்ட ஊடகமாக இருந்த போதிலும், அதைக் கையாளுவதில் ஏற்படும் கடினத்தாலும், நீரற்ற HF அமிலத்தைத் தயாரிக்கையில் ஏற்படும் சிக்கலாலும், அதன் துல்லியமான அமிலத்துவத்தைக் கணக்கிட முடிவதில்லை. தொடக்கத்தில் அதன் H₀ மதிப்பு -11 எனக் கருதப்பட்டது. பின்னர், அதுவும் குறைந்த அளவில் நீரைக் கொண்ட HF அமிலத்தின் மதிப்பெனக் கண்டறியப்பட்டது. நீரற்ற 100% HF அமிலத்தின் -H₀ மதிப்பு 15 ஆகும். இதனுடன் பென்டாஃபுளுரைடை, குறிப்பாக, ஆன்ட்டிமனி பெண்டாஃபுளுரைடைச் சேர்ப்பதால், அமிலத்துவ மதிப்பு உயருகிறது. இதை, படம் 3 தெளிவாக்குகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஆன்ட்டிமனி பென்டாஃபுளுரைடு, ஃபுளுரோ சல்ஃப்யூரிக் அமிலத்தில் அயனிகளை உண்டாக்குவது போன்றே ஹைட்ரஜன் ஃபுளுரைடு அமிலத்திலும், அயனிகளை உண்டாக்குகிறது. நீரற்ற HF அமிலத்தில் SbF₅ இன் 1% கரைசலின் H₀ மதிப்பு 21 ஆகும். இது வரை கண்டறியப்பட்ட அமிலத்துவ மதிப்புகளில் இதுவே மிக உயர்ந்ததாகும். SbF₅ இன் செறிவு இதை விட அதிகமாக உள்ள கரைசலில் -H₀ இன் மதிப்பு மேலும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், தகுந்த வீரியம் குறை கார காட்டி கிடைக்காமையால், அவற்றின் -H₀ மதிப்புகளைக் கணக்கிட முடிவதில்லை. சூப்பர் அமிலங்களின் பயன்கள். கரிம, கனிம வேதியியலில் சூப்பர் அமிலங்கள் பெரும் பயன் தருகின்றன. ஏனைய சூப்பர் அமிலங்களை விட, ஃபுளுரோ சல்ஃப்யூரிக் அமிலம் பல துறைகளில் பயன் படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இது -89 -163°C வரை நீர்ம நிலையில் இருக்கிறது. தாழ்ந்த உறை நிலையும், குறைந்த பாகுத் தன்மையும் (viscosity) கொண்டது. அணுக் கருக் காந்த ஒத்ததிர்வு (Nuclear Magnetic Resonance-NMR) ஆய்வுகளிலும் கரைப்பானாகச் செயல்படுகிறது. இதன் அமிலத் தன்மை மிக அதிகம். இவ்வமிலத்துடன் SbF₅ ஐச் சேர்த்தால், அமிலத் தன்மை மேலும் உயரும். இது வீரிய மிக்க அமிலமாக இருப்பினும், இதைக் கையாளுவது எளிது. சாதாரண கண்ணாடிக் குழாயிலும் எடுத்துக் கொள்ளலாம். ஃபுளுரோ சல்ஃப்யூரிக் அமிலத்துடன் பல பண்புகளில் ஒத்திருக்கும் நீரற்ற HF அமிலத்தை எளிதாசுக் கண்ணாடிக் குழாயில் எடுத்துக் கையாள முடிவதில்லை. புரோட்டான் ஏற்ற வினைகள். சூப்பர் அமிலங்களால் வீரியம் மிகக் குறைந்த காரங்களையும், புரோட்டான் ஏற்றம் செய்யலாம். கீட்டோன், கார்பாக்சிலிக் அமிலம், ஆல்கஹால், ஈதர், அமைடு, புரதம் நைட்ரோ சேர்மம் முதலிய கரிமச் சேர்மங்களையும் புரோட்டான் ஏற்றம் செய்யலாம். சான்றாக –80°C இல் அசெட்டமைடு சேர்மத்தை ஃபுளுரோ சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைத்துக் கிடைக்கும் அணுக் கருக் காந்த உடனிசைவு நிரலை ஆய்வு செய்தால், அது பின் வரும் இணை அமிலத்தைத் (cojugate acid) தருவதை அறியலாம். ஃபுளுரோ சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைத்த SbF₅ கரைசலில் (HSO₃F– SbF₅) அசெட்டிக் அமிலத்தைச் சேர்த்தால், புரோட்டான் ஏற்றம் நிகழ்கிறது. அப்போது இணை அமிலத்தின் இரண்டு கன்ஃபார்மெர்கள் (conformers) உள்ள கலவை கிடைக்கிறது. இக்கலவையில் I அமைப்புடைய சேர்மம் 95% செறிவும், II அமைப்புடைய சேர்மம் 5% செறிவும் கொண்டுள்ளன. C12 NMR ஆய்வுப்படி–80°C வெப்ப நிலையில் HSO₃F-SbF₅ கரைசலில் கரைத்த கனிம கார்பனேட் C(OH)₃+ என்னும் இணை அமிலத்தைத் தருவதை அறியலாம். 0°C இல் இது சிதைந்து, கார்பன் டைஆக்சைடு, H₃O+ ஆகியவற்றைத் தருகிறது. சூப்பர் அமிலங்களில் பல அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன் சேர்மங்கள் புரோட்டான் ஏற்றம் அடைந்து, அரீனியம் அயனிகளைத் தருகின்றன. சான்றாக, ஃபுளுரோ பென்சீன் பின் வரும் அயனியைத் தருகிறது. கார்போஹைட்ரேட், புரதம், குளோரோஃபில், வைட்டமின் ஆகியவை நீரற்ற ஹைட்ரஜன் ஃபுளுரைடில் கரைந்து, புரோட்டான் ஏற்றம் அடைந்து, நிலையான கரைசலைத் தருகின்றன. ஒரு சில சேர்மங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளில் புரோட்டான் ஏற்றம் அடைகின்றன. CH₄, DSO₃–SbF₅ இவற்றிடையே ஹைட்ரஜன் பரிமாற்றம் நிகழ்ந்து, நிலையற்ற இடைநிலைச் சேர்மமாக CH₅+ என்னும் கார்போனியம் அயனி உண்டாகிறது. எலெக்ட்ரான் கவர் நேரயனிகள் உண்டாதல். நைட்ரிக் அமிலத்துடன் நீரற்ற சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்ப்பின், நைட்ரோனியம் அயனி உண்டாகிறது. நைட்ரோனியம் அயனி சூப்பர் அமிலமான சல்ஃப்யூரிக் அமிலத்தால் உண்டாக்கப்பட்டதாகும். இது அரோமாட்டிக் நைட்ரோ ஏற்ற வினையில் பயன்படுகிறது. பல எலெக்ட்ரான் கவர் நேர் அயனிகள் குறைந்த நிலைப்புத் தன்மைக் கொண்டவை. நீர் காரத்துவம் மிகுந்துள்ளமையால், நீர்க் கரைசலில் எலெக்ட்ரான் கவர் நேர் அயனிகள் அழிந்து விடுகின்றன. ஆனால். சூப்பர் அமிலங்கள் மிகக் குறைவான காரத்துவம் கொண்டுள்ளமையால், சூப்பர் அமிலக் கரைசலில் அவ்வயனிகள் நிலையான கரைசலைத் தருகின்றன. சூப்பர் அமிலங்களைப் பயன்படுத்தி, பல ஹாலோஜன் நேர் அயனிகளை உண்டாக்கலாம். சான்றாக I₂+, I₃+, Br₂+, Br₃+ முதலிய அயனிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இவ்வகை அயனிகளைக் கொண்ட நிலையான படிகங்களையும் தயாரிக்கலாம். எ-டு: I₂+ SbF. இப்படிக உப்புகள் நிலையாக இருக்க வேண்டுமெனில், எதிர் அயனிகள் சூப்பர் அமிலத்திலிருந்து பெறப் பட்டவையாக இருக்க வேண்டும். சான்றாக, SbF₅ஐ ஹைட்ரஜன் ஃபுளுரைடில் கரைப்பதால் கிடைக்கும் கரைசலில் நிலையான Sb₂F அயனிகள் உண்டாகின்றன. சூப்பர் அமிலங்களைப் பயன்படுத்தி S , S , Se , Se , Te , போன்ற நான்காம் தொகுதித் தனிமங்களின் நேர் அயனிகளைத் தயாரிக்கலாம். அல்க்கைல் கார்பீனியம் அயனிகள் தயாரிக்கவும், சூப்பர் அமிலங்கள் பயன்படுகின்றன. மூவிணைய பியூட்டனால் (tertiary butanol) சேர்மத்தை HSO₃F- SbF₅ கரைசலில் கரைத்தால், அது புரோட்டான் ஏற்றம் அடைந்து, பின்னர் நீர் நீக்கம் அடைந்து, டிரைமெத்தில் கார்பீனியம் அயனியைத் தருகிறது. ஈரிணைய புரோப்பனால் சேர்மத்தை மேற்காணும் முறையில் புரோட்டான் ஏற்றம் செய்தால் டைமெத்தில் கார்பீனியம் அயனியைத் தருகிறது. ஓரிணைய ஆல்கஹால் –60°C இல் HSO₃F–SbF₅ கரைசலில் புரோட்டான் ஏற்றம் அடைந்து, பின்னர், மெதுவாக நீர் நீக்கம் அடைந்து, இறுதியில் மாற்றியமாதல் (isomerisation) வினைக்குட்பட்டு நிலையான மூவிணைய அயனியாக மாற்றமடைகிறது. தாழ் வெப்ப நிலையில் அலிஃபாட்டிக் ஈதர்கள் புரோட்டான் ஏற்றமடைகின்றன. பின்பு, வெப்ப நிலையை உயர்த்தும் போது, அல்க்கைல் கார்பீனியம் அயனிகளாகப் பிளவுபடுகின்றன. HSO₃F – SbF₅ போன்ற சூப்பர் அமிலங்கள் ஹைட்ரஜனைப் பிரிக்க வல்ல வினைப் பொருள்களாகும். இவை நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்களிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்து, கார்பீனியம் அயனிகளை உண்டாக்குகின்றன. சூப்பர் அமிலங்களின் மூலம் கார்பீனியம் அயனி தயாரிக்கும் முறைகளின் உதவியால், கார்பீனியம் அயனிகளின் பல வகைப் பண்புகளை அறிய முடிகிறது. காட்டாக, ஹைட்ரோ கார்பன்களின் அல்க்கைல் ஏற்ற வினை (alkyltation), மாற்றியமாதல் வினை ஆகியவை கார்பீனியம் அயனியின் வழியாகவே நிகழ்கின்றன. சூப்பர் அமிலங்களை வினை வேக மாற்றிகளாகக் கொண்டும் இவ்வினைகளை நிகழ்த்தலாம். —கே.ஆர். கங்காதரன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> சூப்பர் பாஸ்ஃபேட் தாவரங்களுக்கு இன்றியமையாத ஊடடச் சத்துகளில் பாஸ்ஃபரசும் ஒன்றாகும். இச்சத்து, பாறை பாஸ்ஃபேட்டுகளில் கால்சியம் பாஸ்பேட்டாக அமைந்துள்ளது. இது நீரில் கரையாமையால், தாவரங்களுக்குப் பயன்படுவதில்லை. எனவே, நீரில் கரைய வல்லதும், தாவரங்களில் வேர்களின் மூலம் உட்கவரப்படக் கூடிய வகையில் மாற்றப்பட்டதுமான கால்சியம் டைஹைட்ரஜன் பாஸ்ஃபேட், கால்சியம் சூப்பர் பாஸ்ஃபேட் எனப்படும். பாஸ்ஃபரஸ் தாவரத்தின் வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும், பழ உற்பத்திக்கும் இன்றியமையாதது. மேலும், வேர்கள் நன்கு வளரவும், நோய்த் தடுப்பு ஆற்றலைப் பெருக்கவும் இன்றியமையாதது. அமெரிக்க ஒன்றியக் குடியரசு, ஆஸ்திரேலியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் மிகுதியாகக் கிடைக்கும் பாஸ்ஃபேட் பாறைகளை உடைத்து எடுத்துக் கனிமப் பொருளைத் தூய்மை செய்து, நன்கு பொடியாக்கி, வெப்ப வினைக்கு உட்படுத்துவர். இம்முறையினால் Ca10 (PO₄)₈F₂ என்னும் வாய்ப்பாடு உள்ள ஃபுளூரின் வளிமம் நீக்கப்பட்ட டிரைகால்சியம் பாஸ்ஃபேட் கிடைக்கிறது. இத்துடன், அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்து, வேதி வினையுறச் செய்யும் போது, கால்சியம் டை ஹைட்ரஜன் பாஸ்ஃபேட் கிடைக்கிறது. மேலும், இத்துடன் தாவரங்களுக்குப் பயன்படாத ஜிப்சமும் கலந்துள்ளது. இந்தக் கலவைக்குக் கால்சியம் சூப்பர் பாஸ்ஃபேட் என்று பெயர். சூப்பர் பாஸ்ஃபேட் உண்டாகும் வேதி வினை வருமாறு: இந்தச் சாதாரண சூப்பர் பாஸ்ஃபேட்டில் ஜிப்சமும் கலந்துள்ளமையால், பாஸ்ஃபரஸ் விகிதம் குறைந்துள்ளது (24%க்கும். குறைவாகவே, P₂O₅ உள்ளது). எனவே, பாறை பாஸ்ஃபேட்டுடன் பாஸ்ஃபோரிக் அமிலத்தைச் சேர்த்து, வேதி வினையுறச் செய்து, பாஸ்ஃபரஸ் மிகுந்துள்ள டிரிபிள் சூப்பர் பாஸ்ஃபேட் தயாரிக்கப்படுகிறது. இவ்வுப்பில் 48–52% வரை பாஸ்ஃபரஸ் பென்டாக்சைடு உள்ளது. இது சேமித்து வைப்பதற்கும், கையாள்வதற்கும் மிகவும் எளிது. மேலும், இதை ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் செலவும் குறைவு. —கே. சுந்தரம் நூலோதி. Samuel. L. Tisdale and Werner L. Nelson, Soil Fertility and Fertilisers, Third Edition, Collier Macmillan International Edition, London, 1979. சூயஸ் கால்வாய் மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் கால்வாய், சூயஸ் கால்வாய் ஆகும். இக்கால்வாய் 1869ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டுப் போக்கு வரத்துக்குத் திறந்து விடப்பட்டது. இக்கால்வாயின் நீளம் ஏறத்தாழ 170 கி.மீ. ஆகும். ஐரோப்பாவுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையேயான தொலைவைக் கடக்க, சூயஸ் கால்வாய் தொலைவற்ற எளிதான வழியாகும். உலகின் முக்கியமான கடல் வழிகளில் ஒன்றான சூயஸ் கால்வாய், எகிப்திலுள்ள சூயஸ் சந்திக்குக் குறுக்கே சூயெஸ், செய்ட் ஆகிய நகரங்களுக்கிடையே கட்டப்பட்டுள்ள கடல் மட்டத்திலுள்ள நீர் வழியாகும். பிரான்ஸ் நாட்டுப் பொறியாளரான பெர்டினான்டு டிலெசப்ஸ் என்பாரின் மேற்பார்வையில் இக்கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. அடைப்புகளற்ற இக்கால்வாயின் பெரும் பகுதி நேராக இருப்பினும், எட்டு முக்கிய வளைவுகள் காணப்படுகின்றன. மென்சாலா, டிம்சே, பெரும் பிட்டர், சிறிய பிட்டர் ஏரிகள் வழியாக இக்கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இக்கால்வாய் கட்டி முடிக்கப்படுவதற்கு முன், சூயஸ் நகரப் பகுதியில் மட்டுமே மக்கள் குடியேற்றம் காணப்பட்டது. இப்பகுதி பண்டைக் காலத்தில் கிளிஸ்மா எனப்பட்டது. இக்கால்வாய் கட்டி முடிப்பதில் தொழில் நுட்பச் சிக்கல்கள் இருந்தன. மேலும், பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளுக்கிடையே அரசியல் சிக்கல்களும் இருந்தன. கால்வாய் கட்டுவதில், பொருளாதாரச் சிக்கல்களும் பெருமளவில் இருந்தன. இக்கால்வாய் கட்டி முடிக்க 41,860,000 டாலர் செலவாகலாம் என்று திட்டமிடப்பட்டது; ஆனால் 92,414,000 டாலர் செலவாயிற்று. போக்குவரத்துக்கென்று முதலில் இக்கால்வாய் திறக்கப்பட்ட போது, 8மீ. ஆழத்தையும் 22 மீ. ஆழப் பகுதி அகலத்தையும், 58மீ. மேற்பரப்பு அகலத்தையும் கொண்டிருந்தது. இக்கால்வாய் மிகக் குறுகியதாக இருந்தமையால், 25 கி.மீ. இடைவெளியில் ஏறத்தாழ 300–400மீ. நீளத்தையும், 5 மீ. அகலத்தையும் கொண்ட சிறிய விரிகுடாக்கள் கட்டப்பட்டிருந்தன. எனினும், 1870-1884ஆம் ஆண்டு வரை 3000 கப்பல்கள் கரை கடந்தன. பின்னர், கால்வாயை ஆழப் படுத்தும் முயற்சி 1876ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக, இக்கால்வாய் ஆழப்படுத்தப்பட்டமையால், 1967ஆம் ஆண்டில் இக்கால்வாய் குறைந்த அளவு அகலம் ஏறத்தாழ 50 மீட்டராகவும், ஆழம் 12 மீட்டராகவும் ஆக்கப் பட்டது. அரேபியருக்கும், இஸ்ரேலியருக்கும் இடையில் ஏற்பட்ட போரின் விளைவாக, இக்கால்வாய் 1967 ஜுன்–1975 ஜூன் வரை மூடப்பட்டிருந்தது. 1870ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு இரு கப்பல்கள் என நடை பெற்ற இக்கால்வாய்ப் போக்கு வரத்து 1966–67 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 56 ஆக அதிகரித்தது. அல்ஜீரியா, லிபியா, நைஜிரியா, வட கடல், மெக்சிகோ ஆகிய பகுதிகளில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, இக்கால்வாயின் கப்பல் போக்குவரத்துப் பெருமளவில் குறைந்தது. இக்கால்வாய் வழியாக வடக்கே எடுத்துச் செல்லப் பட்ட எண்ணெய் அளவு 1913ஆம் ஆண்டில் 291,000 டன் ஆகவும், 1966இல் 166,000,000 டன் ஆகவும் இருந்தது. எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப் பட்ட நாடுகள், இக்கால்வாய்ப் பகுதியிலிருந்து நீண்ட தொலைவில் உள்ளமையாலும், சூயஸிலிருந்து அலெக்சாண்டிரியா வரை எண்ணெய் கடத்தும் குழாய்கள் அமைக்கப்பட்டமையாலும், 1978ஆம் ஆண்டில் இக்கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட எண்ணெய் அளவு 28,000,000 டன் ஆகக் குறைந்து விட்டது. 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பயணிக் கப்பல்களின் எண்ணிக்கையும், விமானப் போக்குவரத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மேலும், ஆஸ்திரேலிய, ஆசிய வணிகத்தை, ஐரோப்பாவிலிருந்து ஜப்பான். கிழக்கு ஆசியாவுக்கு மாற்றியதாலும், இக்கால்வாய்ப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியக் குடியரசு மற்றும் கிரீஸிலிருந்து இந்தியாவிற்கு இக்கால்வாய் மூலம் எண்ணெய், தாதுப் பொருள்கள், உலோகம் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்குக் கப்பல் போக்குவரத்துச் சற்று அதிகரித்தது. அரபு நாட்டுத் துறைமுகங்களுக்கும், இக்கால்வாய் வழியாகக் கப்பல்கள் பெருமளவில் செல்லத் தொடங்கின. இன்றும், வட அமெரிக்காவிலிருந்து கோதுமை, மக்காச் சோளம், அரிசி போன்றவை இக்கால்வாய் வழியாகவே ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. 1960ஆம் ஆண்டில், இக்கால்வாய்ப் போக்கு வரத்தில் 80% வடக்கு நோக்கியதாகும். இதில் 70% எண்ணெய்க் கலங்களின் போக்கு வரத்தாகும். எகிப்தையும், சினாயையும் (Senai) இணைப்பதற்காக 1980ஆம் ஆண்டில் ஒரு சுரங்கச் சாலை கட்டப்பட்டது. ஏறத் தாழ 5 கி.மீ நீளமுள்ள அகமத் அம்டி (Ahmed Hamdi) என்னும் இந்தச் சுரங்கச் சாலையின் ஒரு பகுதி சூயஸ் கால்வாயின் அடியில் அமைக்கப் பட்டுள்ளது. —ம.அ. மோகன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்தபக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> சூரிய அண்மை புவி, கோள்கள் போன்ற விண் பொருள்கள் நீள் வட்டப் (elliptic) பாதைகளில் சூரியனைச் சுற்றுகின்றன என்று கெப்ளர் நிறுவினார். வால் விண் மீன்களில் பரவளையப் பாதைகளிலும் செல்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒரு குவி மையத்தில் சூரியன் இருக்கும். சுழற்சிப் பாதையில், விண் பொருள்கள் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிலை, சூரிய அண்மை நிலை (perihelion) எனப்படும். புவியும், சூரியனும் அண்மை நிலையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 3ஆம் நாள் இருக்கும். மைய அகற்சி ‘e’ (eccentricity) மிக, மிகக் குறைவாக உள்ளமையால், நீள் வட்டப் பாதைகள், வட்டப் பாதைகளாகவே தோற்றமளிக்கும். நீள் வட்டத்தின் பேரச்சு (major axis) 2a எனவும், சிற்றச்சு 2b எனவும் கொண்டால், e இன் மதிப்பு \!\sqrt{1 - \frac{b^2}{a^2க்குச் சமமாகும். சூரியனிடமிருந்து அண்மைப் புள்ளியின் தொலைவு a (1-e) ஆகும். —பங்கஜம் கணேசன் சூரிய ஆற்றல் புவியில் உள்ள அனைத்து உயிரினங்களும் சூரியனிலிருந்து வரும் ஆற்றலைப் பயன்படுத்திச் செயற்படுகின்றன. சூரியனின் மையப் பகுதி 10,00,000°C வெப்ப நிலையிலும், புறப் பகுதி ஏறத்தாழ 6000°C வெப்ப நிலையிலும் உள்ளன. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் ஒளியாற்றலாகவும், வெப்ப ஆற்றலாகவும், பருவ காலங்களைத் தரும் இயற்கையாற்றலாகவும், வளரும் தாவரங்களில் ஒளிச் சேர்க்கை ஆற்றலாகவும் கிடைக்கிறது. சூரியக் கதிர் வீச்சு புவியின் மீது பெரும் பரப்பளவிலும், தொடர்ச்சியாக முடிவற்ற கால அளவிலும் ஆற்றலைத் தருகிறது. எரி பொருள்களாகிய நிலக்கரி, எண்ணெய், நில வளிமம் ஆகியவை குறிப்பிட்ட காலம் வரையே ஆற்றலைக் கொடுக்கும். எனவே, உலகில் பெருகி வரும் ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யச் சூரிய ஆற்றல் (solar energy) ஒன்றே நிலையான தீர்வாகும். சூரிய ஆற்றலை மாற்றும் வழிகள். சூரிய ஆற்றல் மின் காந்தக் கதிர் வீச்சாகப் பெறப்படுகிறது. சூரிய ஆற்றலின் மிகச் சிறிய பகுதியையே புவி பெறுகிறது. இச்சிறிய அளவே ஆண்டிற்கு 7,50,000 டிரில்லியன் கிலோ வாட் மணியாகும். நடுப்பகலில் 1 ச.மீ. பரப்பளவில் படும் ஆற்றல் அடர்த்தி 1 கிலோ வாட் அளவுடையது. இதைப் பயன்படுத்தக் கூடிய ஆற்றலாக மாற்றுவது மிகவும் இன்றியமையாதது. சூரிய ஆற்றலை மாற்றும் பல வழிகள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. சூரிய ஏற்பிகள். சூரிய ஏற்பிகள் சூரிய ஆற்றலை நேரடியாக ஏற்று, வெப்ப ஆற்றலைத் தருகின்றன. ஏற்பியின் திறன், ஏற்பியின் பரப்பு ஆகியன உட்கவர் திறன், வெளி விடு திறன், கடத்தல், கதிர் வீச்சு, சலன முறை, வெப்ப இழப்பு இவற்றைப் பொறுத்தது. ஒரு திறனுள்ள தட்டைத் தகடு ஏற்பி படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் கருமையாக்கப்பட்ட உலோகத் தட்டைப் பரப்பு, காற்று, கண்ணாடிப் படலங்கள் மாறி அமைந்துள்ள தகட்டடுக்கால் மூடப்பட்டிருக்கும். இத்தகட்டடுக்கு, சூரியக் கதிர் வீச்சை உள்ளே ஏற்று, வெப்பத்தை வெளியேற விடாது. சூரிய ஆற்றல் கருந்தகட்டால் உட்கவரப்பட்டு, வெப்ப ஆற்றலாக மாறும். இவ்வெப்பம் நீர் அல்லது காற்றால் வெளியேற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. 100°C வரை வெப்ப நிலையுள்ள சூரிய ஏற்பிகள் வீடு, தொழிற்சாலை, நீச்சல் குளம் ஆகியவற்றில் நீரை வெப்பப்படுத்தவும், சமைக்கவும், விண்வெளியில் வெப்பத்தைத் தரவும் குளிர் பதனேற்றியில் நீரைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய வோல்ட்டா கலங்கள். சூரிய வோல்ட்டா கலங்களில் ஒரு P–வகை N–வகைக் குறை கடத்திச் சந்தி பயன்படுகிறது. சூரிய ஒளி படும் போது, இச்சந்தியிலிருந்து மின் துளை எலெக்ட்ரான் துகள்கள் இரட்டையை உருவாக்குகின்றன. இத்துகள்கள் மின்னோட்டத்தைத் தருகின்றன. சூரியனிலிருந்து வரும் பெரும ஆற்றலாகிய 100 வாட் ச.மீ. என்னும் திறனுக்குக் கிடைக்கும் மின்னழுத்தம் 0.45 வோல்ட் ஆகும். பல ஆயிரக்கணக்கான மின் கலங்களைப் பயன்படுத்தித் திறனை அதிகரிக்கலாம். இவை சூரியக் கல அடுக்கு (solar battery) எனப்படும். இவற்றில் பல கலங்கள் தொடரிணைப்பிலும், பக்க இணைப்பிலும் இணைக்கப்பட்டிருக்கும். இத்தகைய சூரியக் கல அடுக்கு விண்கலங்களில் பயன்படுகிறது. சிலிக்கான் கலங்களும், கேட்மியம் சல்ஃபைடு, கேலியம் ஆர்செனைடு, கேட்மியம் டெல்லுரைடு போன்ற குறை கடத்திகளால் ஆன கலங்களும் பயன் படுகின்றன. இவற்றைத் தவிர மூன்று முக்கியமான மறைமுகச் சூரிய ஆற்றல் மூலங்கள் உள்ளன. அவை காற்று ஆற்றல், கடல் ஆற்றல், தாவர ஆற்றல் என்பன. சூரிய ஆற்றல் புவியின் பரப்பில் சீரற்று உள்ளேற்கப் படுவதால், சுற்றுப் புறத்தின் வெப்ப நிலை மாறுகிறது. சுற்றுப்புற அழுத்த மாறுபாடும், அதனால், காற்றோட்டமும் ஏற்படும். இக்காற்று ஆற்றலைக் காற்று எந்திரங்கள் மூலமாக, மின்னாற்றலாக மாற்றிப் பயன்படுத்தலாம். கடல் பரப்பில் உள்ள நீர், சூரிய ஆற்றலை உட்கவர்கிறது. நில நடுக் கோட்டுப் பகுதியில் சூரிய ஆற்றல் மிகுதியாகவும், துருவப் பகுதியில் குறைவாகவும் உட்கவரப்படுவதால், நில நடுக் கோட்டுப் பகுதியில் வெப்பமான கடல் நீரும், துருவப் பகுதியில் குளிர்ந்த நீரும் இருக்கும். குளிர்ந்த நீர் கீழே மூழ்கி நில நடுக் கோட்டுப் பகுதியில் செல்வதால், குளிர், வெப்பப் பகுதிகள் வெப்ப எந்திரங்கள் போன்று செயற்பட்டு எந்திர ஆற்றலும், மின்னாற்றலும் பெறப் படுகின்றன. இதுவே வெப்ப மாற்றம் எனப் படும். வேளாண்மை, தொழில் மற்றும் நகர்ப்புறக் கழிவுப் பொருள்களையும், தாவரப் பொருள்களையும் பயன்படுத்தித் திண்ம, நீர்ம, வளிம எரி பொருள்களைப் பெறும் முறை தாவர ஆற்றல் எனப்படும். சூரிய ஆற்றல் சேமிப்பு சூரிய ஆற்றல் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டும் மிகுதியாகக் கிடைப்பதால், அதைச் சேமித்து வைப்பதற்குப் பல வழிகள் உள்ளன. வெப்பச் சேமிப்பு. சூரிய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றிப் பொருள்களை உருக்கியோ, ஆவியாக்கியோ சேகரிக்கலாம். மின் சேமிப்பு. சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி, மின் தேக்கிகளில் சேமிக்கலாம். வேதியியல் சேமிப்பு. மின்கலங்களில் ஒளி வேதியல் முறையால் மின்னாற்றலாகச் சேமிக்கலாம். நீர்ச் சேமிப்பு. சூரிய ஆற்றல் உதவியால் நீரை அதிக உயரத்திற்கு ஏற்றி, நிலையாற்றலாகச் சேகரித்து வைக்கலாம். சூரிய ஆற்றலைச் சூரியத் தொட்டியிலும் சேகரிக்கலாம். உப்புக் கரைந்துள்ள நீர் ஏரிகளில் சூரிய ஒளி படும் போது, மிகு வெப்பநிலையுள்ள தாழ் நிலைப் பகுதிகளுள் நீர் சேர்வதால், ஆற்றல் சேமித்து வைக்கப்படுகிறது. வெப்ப வேதியியல் முறையிலும், சூரிய ஆற்றலைச் சேமிக்கலாம். சூரிய வெப்ப ஆற்றலால், நீரை ஹைட்ரஜன், ஆக்சிஜன் அணுக்களாகப் பிரிக்கலாம். இதற்கு 400-500°C வரை வெப்ப நிலை தேவைப்படுகிறது. 800-1400°C வரை வெப்ப நிலையில் செயற்படும் வெப்ப வேதி வினைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காந்த நீர்ம இயக்கவியல் (magneto hydrodynamics) முறையில் நீர்ம உலோகம் அல்லது வளிமக் கலவையின் இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. சூரிய ஆற்றலின் பயன்களைப் பெறும் முறைகளைப் பின் வருமாறு கூறலாம். அவை: கட்டடங்களை வெப்பப்படுத்துதல், கட்டடங்களைக் குளிரூட்டுதல், நீர் வெப்பப்படுத்துதல், கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுத்தல், சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கடல் நீரிலிருந்து தூய நீரைப் பெறுதல், வேளாண் பொருள்களை உலர்த்துதல், சூரிய அடுப்பு, நீர் ஏற்றும் சூரியக் குழாய்கள், சூரியக் குளிர் பதனேற்றி, ஒளி-வோல்ட்டா மின்கலம், சூரிய உலைகள், சூரிய மின் உற்பத்தி என்பன. —வெ. ராதாகிருஷ்ணன் சூரிய ஒளி மறைப்பு காண்க: ஒளி மறைப்புகள் சூரியக் கடிகை ஆதி காலத்தில் இந்துக்களும், கிரேக்கர்களும் சூரிய நேரத்தைக் காணப் பயன்படுத்திய கருவி சூரியக் கடிகை (sundial) ஆகும். தகுந்த முறையில் பதிய வைக்கப்பட்ட ஒரு கோலின் நிழல் ஒரு கிடை தளத்தின் மேல் விழும் போது, அத்தளத்தில் நிழல் காட்டும் அளவு அந்நேரத்தின் சூரிய நேரமாகும். சூரியக் கடிகையின் அடிப்படைத் தத்துவம் பின் வருமாறு விளக்கப்படுகிறது. S, N தெற்கு வடக்குத் திசைக் கோட்டில் உள்ளது. O தட்டின் மையம் உச்சி வட்டத் தளத்தில் அவ்விடத்தின் அகலங்கான Φ அளவு, சாய்வான OA என்னும் ஒரு கோல் பதிக்கப் பட்டுள்ளது. எனவே, OA என்பது வான கோள வட துருவம் Pஐ நோக்கியுள்ளது. உச்சியைச் சூரியன் கடக்கும் சமயத்தில், கோலின் நிழல் ONஇன் மேல் விழும். சூரியன் உச்சி கடந்து Oa, Ob எனும் இடங்களுக்கு வரும் போது, கோலின் நிழல் வலஞ் சுழியாகச் சுழன்று வட்டத்தில் விழும். ZPOa = h = சூரியனின் நேரக் கோணம் {சூரியன் Oaஇல் உள்ள போது) சூரியன் Oaஇல் உள்ள போது OaP என்னும் நடு வரை விலக்க வட்டம் (declination circle) தொடு வானத்தை aஇல் வெட்டும் போது, சூரியன் Oaஇல் இருக்கும். கோலின் நிழல் Oaஇன் மேல் விழும். NOaஐ θ எனக் கொள்ளலாம். NPa எனும் செங்கோண முக்கோணத்தில் NPa = h ஆகும். ஆகவே Sin = tan θ Cot h எனும் தொடர்பு கிடைக்கிறது. இதை tanθ = SinΦ tan h என எழுதலாம். இதில் θ, Φ ஆகிய மதிப்புகள் தெரியுமாதலால், h இன் மதிப்பை எளிதாகக் கணிக்கலாம். இதுவே, சூரியக் கடிகையின் கொள்கையாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மேற்காணும் கொள்கையைப் பயன்படுத்தி h = 15°, 30° எனும் பொழுது, சூரியன் உச்சி கடந்து 1 மணி நேரம், 2 மணி நேரம்… என அளவிட இயலுகிறது. மணிப் பகுதிகளையும் துல்லியமாக அளந்தறிய இயலும். —எம். அரவாண்டி சூரியக் கதிர் வீச்சு சூரிய வளி மண்டலத்தின் மேற்பகுதியிலிருந்து இடையறாது ஆரத் திசைகளில், ஒலியை விஞ்சும் திசை வேகத்துடன் பிளாஸ்மாக் கதிர்கள் வெளியே பாய்ந்து கொண்டுள்ளன. இங்ஙனம் பாயும் கதிர் வீச்சைச் சூரியக் காற்று எனலாம். சூரியக் கதிர்கள் புவியையும் தாண்டிச் சூரிய மண்டலத்தின் வெளி விளிம்பு வரை பாய்கின்றன. புவியின் ஓடு பாதையில் இக்கதிர்களில் முக்கியமாக, புரோட்டான்களும், எலெக்ட்ரான்களுமே அடங்கியுள்ளன. அவற்றின் சராசரி இயக்க வெப்ப நிலை ஏறத் தாழ 1,00,000K என்ற அளவில் உள்ளது. அவற்றின் சராசரி ஆரத் திசை வேகம் நொடிக்குப் பல நூறு கிலோ மீட்டர் ஆகும். ஆரத் திசையிலிருந்து, அவை மிகச் சிறிய ஒழுங்கற்ற அளவுகளிலேயே பிறழ்கின்றன. அவற்றின் குறுக்குத் திசை வேகம் நொடிக்கு ஏறக் குறைய 10 கி.மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. பிளாஸ்மாவில் சராசரி மோதலிடைத் தொலைவுகள் மிகப் பெரும் அளவில் உள்ளமையால், அதில் மோதல்களே இல்லை எனக் கொள்ளலாம். சூரியக் காற்று ஒரு சீரான தன்மையில்லாமல், குழப்பங்கள் நிறைந்துள்ளது. அதன் நிகழ்வு மாறிலிகள் (parameters), பல விதமான நீள மற்றும் கால அளவுகளில் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளன. சூரிய ஒளி மண்டலத்தின் ஏறத் தாழ 10°K அளவிலான மாபெரும் வெப்ப நிலையே இந்த ஒலியை விஞ்சும் பாய்வின் ஆற்றலுக்குக் காரணம். சூரியனின் நிறையீர்ப்புப் புலம், சூரிய மண்டலத்தை அசையாச் சம நிலையில் பிடித்து வைத்துக் கொள்ளும் வலிவற்றது. அதற்கேற்ற, பாய்மச் சமன்பாடுகளிலிருந்து ஒளி மகுடம், ஒலியை விஞ்சும் வேகத்தில் விரிவடைந்து, சூரியக் காற்றை உருவாக்குவதாகத் தெரிய வருகிறது என 1957 ஆம் ஆண்டில் பார்க்கர் என்பார் குறிப்பிட்டார். அந்தச் சமன்பாடுகள் நேர் போக்குத் தன்மையற்றவை. கணிப்பொறிகள் மூலமாகவே இயல் தன்மையுள்ள தீர்வுகளைப் பெற முடியும். சூரியனுக்கு அருகில் பாய்வு, ஒலியை விடக் குறைந்த திசை வேகத்துடன் புறப்பட்டுச் சூரியனின் ஆரத்தைப் போல 10–20 மடங்கான தொலைவுகளில், ஒலியின் திசை வேகத்தை விஞ்சி, அதன் பிறகு, நொடிக்கு 350–450 கி.மீ. வரையான சீரான திசை வேகத்துடன் பெரும் தொலைவுகளைக் கடக்கிறது. 50–100 வானியல் அலகு தொலைவில் (ஒரு வானியல் அலகு = 1,495×108 கி.மீ ) இந்தப் பாய்வின் திசை வேகம், விண் மீனிடை ஊடகத்தின் தடை காரணமாகக் குறைய வேண்டும். இந்த நிலை மாற்றம் நிகழ்கிற விதத்தைப் பற்றிப் பல வகையான ஊகங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தொலைலில் உள்ள ஒரு நிலையான அதிர்ச்சி அலை காரணமாகச் சூரியக் காற்றின் திசை வேகம் ஒலியின் திசை வேகத்தைவிடக் குறைகிறது என்றும், அதன் காரணமாகச் சூரியப் பிளாஸ்மாவின் வெப்ப நிலை உயர்கிறது என்றும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சில கருத்துகளுண்டு. இந்த இடத்தைத் தாண்டியதும், சூரியப் பிளாஸ்மா மெல்ல, மெல்ல விண் மீனிடை வளிமத்துடன் கலந்து விடுகிறது. சூரியனிலிருந்து வெளி நோக்கிப் பாயும் வளிமம், கூடவே சூரியனின் காந்த விசைக் கோடுகளையும் இழுத்துச் செல்கிறது. காந்தப் புலக் கோடுகள் பாய்மத்திற்குள் உறைந்து விடுவதற்கான நிபந்தனைகளைப் பிளாஸ்மாப் பாய்வு நிறைவு செய்கிறது. பாய்வின் இயக்க ஆற்றல் அடர்த்தியான ½pυ² காந்தப் புல ஆற்றல் அடர்த்தியான B²/8π ஐவிட மிகுதியாக உள்ளமையால், காந்தப் புலத் தகைவு விசைகள் பாய்வை ஓரளவு பாதிப்பதில்லை. காந்தப் புலக் கோடுகள் சூரியனின் சுழற்சி காரணமாகச் சுருள் வடிவமுள்ளவையாக அமைகின்றன. புவிக்கு அருகில், சூரியக் காந்தப் புலம் ஏறத் தாழ, 5×10-6 காஸ் வலிவுள்ளதாகவும், ஆரத் திசைக்கு ஏறத் தாழ 45°இல் சாய்ந்திருப்பதாகவும் காணப் படும். ஒரு குறிப்பிட்ட புள்ளியில், புலத் திசை பல நாளுக்கு மாறாமல், சூரியனிலிருந்து விலகிச் செல்வதாகவோ, சூரியனை நோக்கிச் செல்வதாகவோ அமைந்துள்ளது. ஆனால், அதன் திசையில் மாற்றம் ஏற்படும் போது, அது மிகு விரைவாக நிகழ்கிறது. சூரியனின் காந்தப் புல அமைப்பு, சூரியன் கூடவே சுழலுகிறது. சூரிய காற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். மிகப் பெரும் கால அளவிலும், தொலைவிலும் சூரியக் காற்றின் முழுத் தன்மை காலத்துடன் மாறுவதாகக் கொள்ளலாம். சூரியனின் சுழற்சியைச் சார்ந்த 11 ஆண்டு ஏற்ற இறக்கங்களை இவ்வகையில் சேர்க்கலாம். சற்றுச் சிறிய ஒரு கால அளவில் சூரியக் காற்றில் வேகமான ஓட்டமும், மெதுவான ஓட்டமும் காணப்படும். அவை சூரியனின் சுழற்சி காரணமாக ஒன்றோடொன்று இடை வினை செய்யும். இரண்டாம் வகையில் சிறு நேரக் குழப்பங்கள் அடங்கும். அவை சூரியனில் தோன்றிச் சூரியக் காற்றில் பரவுகின்றன. சூரியக் கொழுந்தால் (solar flare) உண்டாக்கப்படும் வெடிப்பு அலை இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். அது சூரியனிலிருந்து வெளிப்பட்டுச் சூரிய மண்டலம் முழுதும் பல வகையான சிறு நேர விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இத்தகைய சூரியக் கொழுந்து அதிர்ச்சியால் பரப்பப் படும் ஆற்றலின் அளவு ஏறத் தாழ 1032 எர்க் வரை இருக்கும். மூன்றாம் வகை ஏற்ற இறக்கங்கள் குறுகிய கால அளவுகளிலும், சிறு தொலைவுகளிலும் நிகழ்கின்றன. அவை சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்து விடும். இவற்றைச் சூரியக் காற்றில் உள்ள அலைகளோடும், குழப்பங்களோடும் தொடர்புடையவையாகக் கருதலாம். ஆனால், சூரியக் காற்றில் உள்ள அலை வகைகளைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆல்ஃப் வென் அலைகள் இந்த இறக்கங்களுக்குப் பெரும் பங்களிப்புச் செய்கின்றன எனத் தெரிய வந்துள்ளது. சூரியக் காற்றின் உதவியால், பல சிக்கலான விண் மீன் இயற்பியல் நிகழ்வுகளை விண்வெளி ஆய்வுக் கோள்களின் மூலம் ஆய்வு செய்ய முடிகிறது. சூரியனில் ஏற்படும் பல விளைவுகள் சூரியக் காற்றின் மூலமாகவே புவியை வந்தடைகின்றன. சூரியக் கொழுந்துகளின் அதிர்ச்சி அலைகள் புவிக்கு வந்து காந்தப் புயல்கள், சிற்றலை ஒலி பரப்பு, மங்கல் துருவ ஒளிகள் ஆகியவற்றுக்குக் காரணமாகின்றன. சூரியனின் காந்தப் புலப் பகுதிகள் புவியின் தட்ப வெப்ப நிலைகளைப் பாதிப்பதும் தெரிய வந்துள்ளது. சூரியக் காற்றுக்கும், சூரிய மண்டலத்திலுள்ள பிற பொருள்களுக்கும் இடையில் நிகழ்கிற வினைகளைப் பற்றிய ஆய்வுகள், கோள் இயற்பியலில் ஒரு புதிய துறையாக விளங்குகின்றன. —கே. என். ராமச்சந்திரன் நூலோதி. M.P. Agarwal, Solar Energy, S.Chand and Co., New Delhi, 1983. சூரியக் கரும்புள்ளி கருமையாக்கப்பட்ட கண்ணாடி வழியாகச் சூரியனைப் பார்க்கும் போதோ, ஒளிப் படத்தைப் பார்க்கும் போதோ, அதன் பரப்பில் தெரியும் கரும் புள்ளி. சூரியக் கரும் புள்ளி (sun spot) எனப்படும். சூரியனின் மிக இருளான மையப் பகுதி அக நிழல் எனவும், இருள் சற்றுக் குறைந்த விளிம்புப் பகுதி புற நிழல் எனவும் பெயர் பெறும். சூரியனின் ஒளி மண்டலத்தில் உள்ள குளிர்வான பகுதிகளே இப்புள்ளிகள். சூரியக் காந்தப் புலத்தின் வட, தென் துருவங்களில் 5-40° வரையான குறுக்குக் கோட்டுக் கோணத்தில் ஏற்படும் மாறுபாடுகளால் இவை ஏற்படுகின்றன. சூரியக் கரும் புள்ளிகள் 150-1000000 கி. மீ. விட்டம் கொண்டவை. இவை ஒரு குறிப்பிட்ட சுழற்சியில் தோன்றுகின்றன. இவற்றின் சுழற்சிக் காலம் 11.2 ஆண்டுகளாகும். இதனுடன் வட, தென் துருவ மாற்றத்தையும் எடுத்துக் கொண்டால், முழுச் சூரியப் புள்ளியின் சுழற்சிக் காலம் 22.5 ஆண்டு ஆகும். சூரியப் புள்ளிகளின் சராசரி வாழ் காலம் நாளாக இருப்பினும், அவற்றில் சில 18 மாதங்கள் வரை நிலைத்திருக்கும். ஒரு சுழற்சியில் உண்டாகும் சூரியப் புள்ளிகளின் எண்ணிக்கை, படத்தில் காட்டியவாறு வேறுபடும். சிறும மதிப்பிலிருந்து பெரும மதிப்பிற்குச் சூரியப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க எடுத்துக் கொள்ளும் காலம், பெரும மதிப்பிலிருந்து சிறும மதிப்பிற்குக் குறைய எடுத்துக் கொள்ளும் காலத்தை விட மிகக் குறைவு. சூரியப் புள்ளிகளின் சுழற்சி, நீண்ட வாழ் நாள் கொண்ட மாறு விண் மீன் ஒளிச் செறிவின் மாறுபாட்டுச் சுழற்சியைப் போன்றதாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரியக் கரும் புள்ளிகள் இரட்டையாகத் தோன்றுகின்றன. ஒரு குறிப்பிட்ட சுழற்சியில், முதன்மையாக உள்ள புள்ளிகள் ஒரே துருவத் தன்மையுடன் இருக்கும். முதலில் உள்ள புள்ளி, வட துருவம் நோக்கியும், பின்னர் உள்ள புள்ளி தென் துருவம் நோக்கியும் இருக்கும். வட அரைக் கோளத்தில் உள்ள அனைத்துச் சுழற்சி இரட்டைகளுக்கும் இது பொருந்தும். தென் அரைக் கோளத்தில் இது எதிராக இருக்கும். ஒரு சுழற்சி முடியும் போது, புதிய சுழற்சி தோன்றும்.வட, தென் அரைக் கோளங்களில் புதிய சுழற்சியின் துருவம், முந்தைய சுழற்சிக்கு எதிராக இருக்கும். சூரியப் பரப்பிலுள்ள குறைந்த காந்தப் புலத்தை ஒப்பிடும் போது, இப்புள்ளிகளில் காந்தப் புல வலிமை 2000 காஸ் மிகுதியாக இருக்கும். சூரியக் கரும் புள்ளிச் சுழற்சியில் சூரியப் புள்ளிகளின் உருவாக்கம், வளர்ச்சி, சிதைவு பற்றிய கொள்கை முழுமையாக இல்லாவிடினும், கடந்த ஆண்டுகளில் இவ்வாய்வு நன்கு முன்னேறியுள்ளது. வலிமை குறைந்த சூரியக் காந்தப் புலம் சிறிது சிறிதாகப் பெருக்கமடைந்து, சூரியப் பிளாஸ்மாவிற்குக் காந்தச் சம நிலை தரும் மாறு நிலை மதிப்பை அடையும் போது, இப்புள்ளிகள் உண்டாகும் என்று தற்காலக் கொள்கை கூறுகிறது. மாறு நிலைப் புள்ளியின் நிலைப்பாடின்மையால், சூரியனில் உள்ள பொருள்கள் பெருகி, விரிவடைந்து குளிர்வடைவதால், சூரியப் புள்ளிகளில் வெப்ப நிலை குறைகிறது. இக்கொள்கை இரு துருவப் புலங்களை விளக்குவதுடன், சூரியப் புள்ளிப் பெருமத்திலிருந்து சிறுமத்திற்கு மாறும் போது, ஏற்படும் துருவ மாறுபாட்டையும் விளக்குகிறது. —வெ. ராதாகிருஷ்ணன் சூரியக் கருவிகள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி இயங்கும் சூரிய அடுப்பு, சூரிய உலை போன்றவை சூரியக் கருவிகள் (solar devices) ஆகும். பொறியடுப்பு. சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலில் 35% நீர் கொதிப்பதற்கும், 20% சமையல் பண்டங்களை வேக வைப்பதற்கும், 45% வெப்பச் சலனத்தைக் கட்டுப் படுத்துவதற்கும் தேவைப்படும். ஒரு வகைப் பொறியடுப்பில் 12 செ.மீ விட்டமுள்ள வட்டமான பர வளைய எதிரொளிக்கும் ஆடி பொருத்தப்பட்டுள்ளது (படம் 1). ஏறக் குறைய 20 செ.மீ. விட்டமுள்ள கொதி கெண்டி (kettle) ஒன்றின் அடிப் பகுதியில் ஆடி, சூரிய வெப்பத்தைக் குவியச் செய்கிறது. இதனால் 500 வாட் மின்னாற்றலுக்குச் சமமான வெப்பம் உண்டாகிறது. இவ்வெப்பத்தால் 1 லி. நீரை 15 நிமிடங்களில் கொதிக்க வைக்கலாம். இவ்வகைப் பொறியடுப்பு தயாரிக்க ஒரு வகை அலுமினியமும், இரும்புச் சட்டமும் பயன்படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய உலை. சீனக் களி மண், மண் பாண்டங்களுக்குப் பயன்படும் கலவை ஆகியவற்றை உயர் வெப்ப நிலையில் உருகச் செய்து அவற்றின் தனித் தன்மைகள் பற்றி ஆராயச் சூரிய உலைகள் உதவுகின்றன. மிக உயர் வெப்ப நிலையில் உருகக் கூடிய உலோகங்களை உருக்கவும், காய்ச்சிப் பிணைக்கவும், தொழில் துறை ஆய்வுக்கும் சூரிய உலைகள் பயன் படுகின்றன. நீர் சூடாக்கி. இவற்றில் பலவகை உண்டு. அனைத்திலும் கறுப்பு நிறமுள்ள பெரும் பரப்பில் சூரிய வெப்பம் தாக்குவதால், நீர் சூடாகிறது. பெரும்பாலும் நீர் சூடாக்கி (water heater) கறுப்புச் சாயம் பூசிய தொட்டியாக இருக்கும் அல்லது ஒரு நீண்ட கம்பிச் சுருள் பொருத்திய குழாயாக இருக்கும். நீர் சூடாக்கிகளிலிருந்து, வெப்பம் வெளியேறாதபடி கண்ணாடி அல்லது நெகிழி (plastic) மூடி உண்டு (படம் 2). மூடியின் மேல் பகுதி வழியாக எளிதில் சூரியக் கதிர்கள் உள்ளே புக முடியும். ஆனால், உள்ளிருந்து வெப்பம் வெளியேறி விடாதபடி பாதுகாக்கப்படும். இதற்காகச் சூரிய வெப்பத்தை ஈர்க்கும் கருவி காப்பிடப்பட்ட பெட்டியொன்றில் வைக்கப் படும். மிகவும் எளிய முறையில் அமைந்த நீர் சூடாக்கி ஒன்றில், நீரைச் சூடாக்குவதற்கு வரிசையாக செம்பினாலான குழாய்கள் உண்டு (படம் 3). இவற்றின் இரு முனைகளும் பற்று வைக்கப்பட்டு, ஒன்றோடொன்று சேர்க்கப்படும். கீழுள்ள குழாய்கள் வழியாக நீர் வரும். மேலுள்ள குழாய்கள் நீரை எடுத்துச் செல்லும். சூரிய எக்கிகள். சூரிய வெப்பத்தை ஈர்க்க, கறுப்புச் சாயம் பூசிய உலோகத் தகடுகள் பயன்படுகின்றன. இத்தகடுகளை ஒட்டினாற் போல், அடியில் உலோகக் குழாய்கள் இருக்கும். சூரியனின் கதிர்கள் குழாய்களிலுள்ள நீரைச் சூடாக்கும். இதன் வெப்பம் 70°–80°C வரை உயரும். சூடேறிய நீர், நீர்ம வடிவிலுள்ள எரி வளிமத்தை விரிவடையச் செய்கிறது. இதனால், எரி வளிமத்தின் அழுத்தம் அதிகரித்துப் பொறி இயங்குகிறது. எக்கியும் வேலை செய்யத் தொடங்குகிறது. வளிமம், சுருக்கி (condenser) வழியாகச் செல்லும் போது, குளிர்ச்சியடைந்து நீர்மமாகிறது. இவ்வாறு, மீண்டும், மீண்டும் இந்த எரி வளிமம் பயன்படுகிறது. இவ்வகை எக்கிகள் பிரான்சில் தயாரிக்கப்படுகின்றன. காண்க: சூரியச் சூடாக்கம். நூலோதி. எஸ்.எஸ். இராமசாமி, சூரிய ஒளி மூலம் சக்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், நியூ செஞ்சுரி பிரிண்டர்ஸ், சென்னை, 1982. சூரியக் காந்தப் புலம் சூரியனிலுள்ள அயனியாக்கப்படும் மீ கடத்தும் வளிமங்களால் ஏற்படும் காந்தப் புலம் சூரியக் காந்தப் புலம் (solar magnetic field) எனப்படும். இக்காந்தப் புலத்தின் தன்மை, சூரியனின் மேற்பரப்பு ஒளியைக் கொண்டு பெறப் படுகிறது. காந்தப் பாய்ம இயக்கவியல் கொள்கையிலிருந்தும், சூரியப் புள்ளிப் பண்புகளிலிருந்தும், துணைப் பரப்புப் புலத்தை உணர முடியும். சூரியப் பிதுக்கம் (solar prominence), தீக்கொழுந்துகள் (flares), ஒளி வட்டப் பாயல்கள் (coronal streamers), சூரியக் காற்று, பிளாஸ்மா வெளியீடு ஆகியவற்றிலிருந்து சூரியனின் புறக் காந்த விளைவைக் காண முடியும். சூரியக் காந்தப் புலத்தின் சிக்கலான பட்டைகளின் வலிமையையும், தன்மையையும் அளவிடச் சூரியக் காந்த வரைவி (solar magnetograph) பயன் படுகிறது. இது சீமென் விளைவை அடிப்படையாகக் கொண்டது. இதில், சூரியனின் அமைப்பைக் காணத் தொலை நோக்கியும், சுழல் முனைவாக்கத்திற்கான வகையீட்டுப் பகுப்பியும் (differential analyzer) உள்ளன. காந்தப் புலத்தால் ஏற்படும் நுட்பமான நிரல்களின் சீமென் பிளவை (zeeman splitting) அறிய, நிற மாலை வரைவியும் (spectrograph) குறை புலத்தை (10-4 டெஸ்லா) அறிய ஒளி மின் அளவியும் பயன்படுகின்றன. சிறு அளவீட்டு முறையில், சூரியனின் ஒளி அடுக்குகளின் கொந்தளிப்பு, சலனம் இவற்றால் சூரியக் காந்தப் பட்டைகள் அடிக்கடி மாறிக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் இட அமைவு மற்றும் பல பண்புகளால் அவை பெரிய அளவீட்டுப் பாய்மக் காந்தச் சுற்றாக எதிரொளிக்கின்றன. இக்காந்தச் சுற்று. மாறுபடும் அதிர்வெண்களைக் கொண்ட சூரியப் புள்ளிகளுக்கும், அவற்றின் சூரிய எதிரொளிப்பின் கிடைக்கைக் குறைவிற்கும், தக்க சான்றாக அமைகிறது. அவற்றின் சிறப்புக் காந்த முனைவுத் தன்மையின் (ஹேல் விதி) காலம் 22 ஆண்டு ஆகும். சூரியப் புள்ளியில், காந்தப் புலச் செறிவு 0.1–0.3 டெஸ்லாவாக இருக்கும் போது, காந்தப் புல வரிகள் (magnetic field lines) நெருக்கமாக அமைகின்றன. இந்தப் புலம் மிகுதியாக இருக்கும் போது, கொந்தளிப்பைத் தடை செய்யும். மேலும், பரப்பின் வெளியீட்டு ஆற்றலையும் குறைக்கிறது. புள்ளிகள் கருமையாக அமைந்துள்ளன. சூரியனின் இரு துருவங்களும்வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளன. முடிவிலாச் சுருள் பட்டைகளின் உள்ளீட்டுக் காந்தப் புலப் பெருக்கத்தால், சூரியப் புள்ளித் தொகுதிகள் உண்டாகின்றன. சூரியனின் வேறுபாட்டு இயக்கத்தால், இந்த உள்ளீட்டுப் பெருக்கம் நிகழ்கிறது. புறப் பரப்பில் உள்ள காந்தப் பாய வளையங்கள். இரு முனைச் சூரியப் புள்ளித் தொகுதிகளைத் தோற்றுவிக்கின்றன. காந்தப் புலம் குறையும் போது, இந்தப் புள்ளித் தொகுதிகள் மறைகின்றன. சூரியக் காந்தப் புலத்தின் சிதைவு காலம், சூரிய மண்டலம் தோன்றிய காலத்துடன் ஒப்பிடும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கொரு முறை சூரியனின் துருவங்களின் காந்தப் புலத் தன்மை ஒன்றையொன்று மாற்றிக் கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே சூரியக் காந்தச் சுற்று எனப்படுகிறது. —பெ. துரைசாமி நூலோதி. M.P. Agarwal, Solar Energy, S. Chand and Co, New Delhi, 1983. சூரியக் காற்று சூரிய மண்டல உச்சியிலிருந்து ஒலியின் வேகத்தை விட, மிகு வேகத்தில் வெளிப்படும் தொடர்ச்சியான பிளாஸ்மா வெளியீடே சூரியக் காற்று (solar wind) எனப்படும். புவிக்கு அப்பால் உள்ள சூரிய மண்டலப் பகுதிகளையும் இக்காற்று ஊடுருவிச் செல்லும். புவியின் சுற்றுப் பாதையில் சூரியக் காற்று புரோட்டான்களையும், எலெக்ட்ரான்களையும் கொண்டுள்ளது. அத்துகள்களின் சராசரி இயக்க வெப்ப நிலை 100000K ஆகும். அவை, ஒரு சதுர செ.மீ. பரப்பில் 10 துகள் என்னும் சராசரி அடர்த்தியையும், நொடிக்குப் பல நூறு கிலோ மீட்டர் வேகத்தையும் கொண்டிருக்கும். ஆர வழிக்குக் குறுக்குத் திசையில், திசை வேகம் 110 கி.மீ. நொடிக்கும் குறைவாக இருக்கும். பிளாஸ்மா துகள்களின் மோதலிடைத் தொலைவு மிகுதியாக இருப்பதால், அவற்றில் மோதல் இல்லை எனக் கொள்ளலாம். அவற்றின் நீள மற்றும் காலப் பரிமாணங்களில் பெரும் மாறுதல்களை உண்டாக்குவதால், சூரியக் காற்று சீரற்ற குழப்ப நிலையில் இருக்கும். சூரிய ஒளி வட்டத்திலுள்ள 10'K வரை உள்ள மிக அதிக வெப்ப நிலையே இவற்றின் அதிகமான திசை வேகத்திற்குக் காரணமாகும். ஒளி வட்டத்தை நிலையான சம நிலையில் வைத்திருக்க, சூரிய ஈர்ப்புப் புலம் போதுமானதாக இல்லை. 1957இல் ஈ.என்.பார்கர், பாய்மச் சமன்பாடுகளைப் பயன்படுத்தி, சூரிய ஒளி வட்டம் மிகு வேகத்துடன் விரிவடையும். போது சூரியக் காற்று உருவாகிறது எனக் காட்டினார். இச்சமன்பாடுகளைக் கணிப்பொறி உதவியால்தான் தீர்வு செய்ய இயலும். இச்சமன்பாடுகளின் தீர்விலிருந்து, சூரியக் காற்றின் ஓட்டம் சூரியனிலிருந்து குறை வேகத்துடன் முடுக்கமடைந்து, 10–20 மடங்கு சூரிய ஆரத் தொலைவில் ஒலியின் வேகத்தைக் கடந்து, குரியனிலிருந்து மிகு தொலைவில் நொடிக்கு 350–450 கி.மீ வேகத்தில் மாறாமல் செல்கிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> 50–100 A.U. தொலைவில் (1A.U. தொலைவு = 1,495 × 10⁸ கி.மீ) விண் மீன்களுக்கு இடைப்பட்ட ஊடகத்தின் தடையுறு விசையால் வேகம் குறைகிறது. தற்போது கிடைத்த கருத்துகளின்படி, சூரியக் காற்றின் ஓட்டம் ஒலியின் வேகத்தை விடக் குறையும் போது, ஒரு நிலையான அதிர்ச்சி அலை உருவாகிப் பின்னர், பிளாஸ்மாவை வெப்பப் படுத்துகிறது. இதன் பின், சூரியக் காற்றுத் துகள்கள் விண் மீன்களுக்கு இடைப்பட்ட வளிமத்துடன் இணைந்து விடும். சூரியனிலிருந்து வெளிவரும் சூரியக் காற்று, தன்னுடன் சூரியக் காந்தப் புலக் கோடுகளையும் இழுத்து வருகிறது. அதன் இயக்க ஆற்றல் அடர்த்தி ½PV², காந்தப்புல ஆற்றல் அடர்த்தி B²/8πஐ விட மிகுதியாதலால், காந்தப் புல விசைகள் சூரியக் காற்று ஓட்டத்தைப் பாதிப்பதில்லை. V₀ மதிப்புள்ள சீரான வேகத்துடன் இயங்கும் சூரியக் காற்றின் புல அமைப்பைக் கணக்கிட்டால். அப்புலம் சூரியனுக்குப் பக்கத்தில் r₀ ஆரமுள்ள ஆர வடிவமாகக் காணப்படும். புல விசைக் கோடுகள் சுருள் கோடுகளாக உள்ளன. அச்சுருள் கோடுகளின் முறுக்கு, சூரியச் சுழற்சியால் ஏற்படுவதாகும். புவியின் சுற்றுப் பாதை அருகில், சராசரிப் புலம் 5×10-5G அளவிலும், ஆர வழித் திசையுடன் -45° சுருள் கோணத்திலும் இருக்கும். இப்புலத்தின் திசை பல நாள் மாறாமல் இருக்கும். சூரியனின் நடு வரைத் தளத்தில் சூரியக் காற்றின் வரைபடம் தரப்பட்டுள்ளது. இப்படம் புவியில் காணப்படும் சூரியக் காற்றுப் பண்புகளை விளக்கும். ஆயினும், புவியில் அளக்கப்பட்ட சூரியக் காற்று குழப்ப நிலையிலும், காலம் மற்றும் அளவில் மாறுபட்ட நிலையிலும் உள்ளது. சூரியக் காற்றில் ஏற்படும் மாறுபாடுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, 11 ஆண்டு சூரியச் சுழற்சியுடன் இணைந்த மாறுபாடு. சூரியக் காற்று வேகமான, மெதுவான கற்றைகளால் வெளி விடப்பட்டுச் சூரியச் சுழற்சியால் அவை ஒன்றோடொன்று இடையீட்டு நிகழ்வை உண்டாக்குகின்றன. இரண்டாம் வகையில், நிலையற்ற மாறுபாடுகள் சூரியனில் தொடங்கி, பாய்மத்தின் வழியே பரவுகின்றன. சூரிய வெடிப்பால் ஏற்படும் அலை சூரியனில் தொடங்கி. சூரிய மண்டலத்தில் பல நிலையற்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் ஏற்படும் ஆற்றல் ஏறத்தாழ 1032 எர்க் ஆகும். மூன்றாம் வகையில் பாய்மத்தில் உண்டாகும் குழப்ப அலைகளில், சில மணித் துளி அளவு குறைந்த காலத்தில் உண்டாகும் மாறுபாடு ஏற்படும். சூரியனிவிருந்து வெளிச் செல்லும் ஆல்ஃபன் அலைகளால் இம்மாறுபாடு ஏற்படுகிறது. விண்வெளி ஆய்வுக் கலங்களைப் பயன்படுத்தி, கடினமான விண்வெளி நிகழ்வுகளை ஆராயப் பயன் படும் ஆய்வுக் கூடமாகச் சூரியக் காற்று பயன்படுகிறது. இதுவே சூரியனில் நடைபெறும் நிகழ்வுகளைப் புவிக்குக் கொண்டு வரும் ஊடகமாகவும் செயல்படுகிறது. அதிர்வு அலைகளால் உண்டாக்கப் படும் வெடிப்பு, புவிக்குக் கடத்தப்பட்டுக் காந்தப் புயல்களையும், துருவ ஒலியையும் (aurorae) உண்டாக்கும். —வெ. ராதாகிருஷ்ணன் சூரியக் காற்றின் திசை வேகம் (velocity) 500 கி.மீ./நொடி; அடர்த்தி 5 அயன்கள்/க.செ.மீ. ஆகும். இக்காற்றினால், சூரிய மண்டலத்தில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. புவியைச் சுற்றியுள்ள காந்தப் புல மண்டலம், சூரியக் காற்றினால் மிகவும் சிறு பகுதியாக மாற்றமடைந்தாலும், இந்தக் காற்று புவியை அடையாதவாறு தடுக்கிறது. ஆனால், சந்திரனுக்குக் காந்த வெளி இல்லாமையால், சூரியக் காற்றுத் துகள்கள் அதன் பரப்பின் மேல் படிகின்றன. அப்பலோ 11, 12இல் சென்ற விண்வெளி வீரர்கள் சந்திரப் பரப்பில் பெரிய அளவுகளில் உலோகத் தடுப்புகளை வைத்து, காற்றுத் துகள்களைச் சேகரித்துப் புவிக்கு கொண்டு வந்திருக்கின்றனர். வால் விண் மீன்களில் கூட, சூரியக் காற்றின் விளைவுகளால் நீளமான, நேரான வால் போன்ற பகுதிகள் ஏற்படுகின்றன. இதை அயன் வால் எனக் குறிப்பிடுகின்றனர். விண் மீன்களிலிருந்து கூட வளிமங்கள் வெப்பமாக வெளி வருவதாகக் கண்டு பிடித்துள்ளனர். இதனை விண் மீன் காற்று (stellar wind) என்று குறிப்பிடுகின்றனர். —பங்கஜம் கணேசன் சூரியகாந்தி இது ஹீலியாந்தஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்ததாகும். சூரிய காந்தி இனத்தில் 110 சிற்றினங்கள் உண்டு. ஹீலியாந்தஸ் அன்னுஸ் (Helianthus annus) என்பது சூரிய காந்தியின் தாவரவியல் பெயராகும். சூரிய காந்தி, அஸட்டரேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காகப் பயிரிடப்படும் ஒரு பருவ அல்லது பல பருவ இனமான இது நெடுங்காலமாகப் பயிரிடப் பட்டுள்ளது. மஞ்சரியில் மஞ்சட் பூக்களைத் தவிர, பொன் மற்றும் சிவப்பு வண்ணச் சிறு மலர்களும் காணப்படும். தோற்றம். தற்சமயம் சூரிய காந்தியைத் தன்னிச்சையாக வளரும் நிலையில் காண முடியாது. இது மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து பிற நாடுகளுக்குப் புகுத்தப்பட்டது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஹீ. லெண்டிகுலேரிஸ் (H. Lenticularis) என்ற காட்டு இனத்திலிருந்து சூரிய காந்தி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விதை எண்ணெய்க்காக 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், இது சோவியத் ஒன்றியக் குடியரசில் முதன் முதலாகப் பெருவாரியாகப் பயிரிடப்பட்டது. இரண்டாம் உலகப் போரில், உணவு எண்ணெய்ப் பற்றாக் குறையை ஈடு செய்ய, இதன் சாகுபடி மிகுதியாக்கப்பட்டது. உலகச் சாகுபடியில் 66% சோவியத் ஒன்றியக் குடியரசின் பங்காகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வளரியல்பு. சூரிய காந்தி நேராக வளரக் கூடிய ஒரு பருவச் செடியாகும். தண்டு, இலைத் தூவிகளோடு கூடியது. செடி 5 மீ. வரை வளரும். இலைகள் தனித்தவை; மாற்றிலையடுக்கமைப்பு; இலையடிச் செதில்கள் இல்லை. இலைக் காம்பு 10–30 செ.மீ. நீளமிருக்கும். இலைப் பரப்பு முட்டை வடிவம் கொண்டது. விளிம்பு பற்கள் போன்றது. மஞ்சரி, தலை (capitulan–head) எனப்படும் ரெசீம் வகையைச் சேர்ந்ததாகும். மஞ்சரியின் குறுக்களவு 8–15 செ.மீ. இருக்கும். ஆனால், பயிரிடப்படும் வகைகளில் 30 செ. மீ. வளர்ச்சியடைவதுண்டு. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பொதுவாக, சூரிய காந்திப் பூ என்பது மஞ்சரியையே குறிக்கும். அதில், நூற்றுக் கணக்கான சிறு மலர்களுண்டு. அவை, தட்டுச் சிறு மலர் (disc floret) கதிர்ச் சிறு மலர் (ray floret) என இரு வகைப்படும். தட்டுச் சிறு மலர்கள் இரு பால், ஒழுங்கானவை, விதை கொடுப்பவை; மஞ்சரி விளிம்பில் காணப்படும் கதிர்ச் சிறு மலர்கள் ஒரு பால் பெண் பூக்களாகவும் ஒழுங்- கற்றவையாகவும் காணப்படும். பெரும்பாலும் இவை மலட்டுப் பூக்களாகவே இருக்கும். ஆனால், இச்சிறு மலர்களாலேயே மஞ்சரி பகட்டாகக் காணப்படுகிறது. அதனால், மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. பூவடிச் செதில்களுண்டு. புல்லி வட்டம் 2 அல்லது 3 மெல்லிய சவ்வு போன்ற உறுப்புகளாகக் காணப்படும். அல்லி வட்டத்தில் 5 அல்லிகள் இணைந்திருக்கும். ஒழுங்கான குழல் அல்லது ஒழுங்கற்ற நாக்குப் போன்று இருக்கும். மகரந்தத் தாள்கள் 5, அல்லி ஒட்டியவை. மேலும், மகரந்தப் பைகள் இணைந்து, குழல் போல் இருக்கும். மகரந்தக் காம்புகள் தனித்திருக்கும். சூலகம், ஈரிலை, ஓரறை கொண்டது. கீழ் மட்டம் ஒரேயொரு சூல் அடி ஒட்டு முறை; சூலகத் தண்டு நீண்டு, மகரந்தப் பைகள் குழல் மூலம் செல்லும். சூலக முடி இரண்டு; சிப்செலா (cypsela) என்னும் உலர் கனியைப் பொதுவாக விதை என்று கூறுவர். சூரிய காந்தி மலர்கள் தன்மலடானவை; எனவே, பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கைக்குட்பட்டு, இனப் பெருக்கம் நடைபெறும். கிழக்கு ஆஃப்ரிக்காவில், மகரந்தச் சேர்க்கை நடத்தும் பூச்சிகள் அரிதாகையால், அங்கு விதைகள் பெரும்பாலும் பதர்களாகவே இருக்கும். வட்டத் தட்டுப் போன்ற ஆனால், தோட்டப் பயிர்களில் இரட்டை அல்லது உருளை வடிவ மஞ்சரிகளுமுண்டு. வகைப்பாடு. சூரிய காந்தியின் வகைப்பாடு செடியின் உயரம், மஞ்சரியின் குறுக்களவு, வண்ணம், உருவமைப்பு, விதையின் அளவு, எண்ணெய்ச் சத்து முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, இது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மிகப் பெரியவை, நடு நிலையானவை, குட்டை என்பனவாகும். மிகப் பெரியவற்றில் 2–5 மீ. உயரமும், 30–50 செ.மீ. மஞ்சரிக் குறுக்களவும், பெரிய பின் பருவ விதையும், கறுப்பு நிற நீர்க் கோடுகளும் காணப்படும். எண்ணெய்ச் சத்துக் குறைவு. நடு நிலை வகை 1.5–2.மீ. உயரமுடையது. மஞ்சரியின் குறுக்களவு 15–20 செ.மீ; விதைகள் சிறியவை; கறுப்பு அல்லது பழுப்பு நிறம் கொண்டவை. எண்ணெய் மிகுதி; குட்டை வகையின் உயரம் 0.75–1.5 மீ. மஞ்சரி 7–15 செ.மீ. குறுக்களவுடையது. முன் பருவ வகையில் எண்ணெய்ச் சத்து மிகுதி. ரஷிய பூதாகாரம் (Russian giant), பூதாகார வெள்ளை, நடு நிலை வகை, துருவ நட்சத்திரம், தென் சிலுவை, வியாழன், செவ்வாய், குட்டை, உதய சூரியன், மென்னோனைட் (mennonite), அம்பு நுனி முதலியன தற்போது சாகுபடியாகின்றன. அண்மை ஆராய்ச்சி மூலம் தமிழ்நாட்டில் கோ.2 என்னும் புதிய வகை வெளியாகியுள்ளது. இது வெளிநாடுகளைச் சேர்ந்த 7 வீரிய வகைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 87 நாளில் பயனும், உயர் விளைச்சலும் தர வல்லது. ஆய்வுத் திடல்களில், ஹெக்டேருக்கு ஏறத்தாழ 550 கி.கி. வரை விளைகிறது. இவ்வகை 37.4% எண்ணெய்ச் சத்துக் கொண்டுள்ளது. சூழ்நிலை. உலக நடுக் கோட்டிலிருந்து வடக்கே 55° வரையுள்ள அனைத்து நாடுகளிலும் வளருந் தன்மை பெற்றது. மேலும், வெப்ப மண்டல நாடுகளிலும், உயரமான மலைப் பகுதிகளிலும் வளரக்கூடியது. நன்கு வளர மித வெப்பமும், மிக மழையும் தேவை. இதன் வேர் 4 மீ. ஆழமாகவும், பரவலாகவும் வளரக் கூடியதால், வறண்ட நிலங்களிலும் இதைப் பயிரிட முடியும். எந்த மண்ணிலும், வளருந் தன்மையுடைய இதற்குத் தனியாக உரமிடத் தேவையில்லை. அமிலத் தன்மை, அதிக நீர்த் தேக்கம் கொண்ட சரிவு நிலங்களில் சரியாக வளர்வதில்லை. இச்சூழ்நிலைகளில் வளரும் செடிகள் உயரமாக வளர்ந்தாலும், சரி வரப் பயன் தருவதில்லை. பெரும்பாலான விதைகள் பதராகவே காணப்படுகின்றன. பயிரின் தொடக்க நிலையில், மிகு மழையும், ஈரம், குளிர் ஆகிய சூழ்நிலையும், பூஞ்சைகளின் தாக்கத்திற்குக் காரணமாகலாம். சாகுபடி. ஒரு பருவ விதைகளை எண்ணெய்க்காக விதைக்கும் போது, ஹெக்டேருக்கு 15 கி.கி. தெளிக்க வேண்டும். வயலைத் தயார் செய்யும் போது, குறுகிய வகைகளுக்குச் சாலுக்கு சால் 30–60 செ.மீ. பயிருக்குப் பயிர் 15 செ.மீ. இருக்குமாறு இடைவெளி தர வேண்டும். விதைத்த 15–20 நாளுக்குள் நன்றாக வளர்ந்த ஒரு செடியை விட்டு விட்டு, மற்றவற்றைக் கலைத்து விட வேண்டும். விதைத்த 45 நாள் வரை, களைகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். மானாவாரிப் பயிருக்கு அடியுரமாக நைட்ரஜன் (N), பொட்டாசியம் (P), பாஸ்ஃபரஸ் (K) ஆகியவை முறையே 16:8:8 கிலோ எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இறைவைப் பயிருக்கு அடியுரமாக ஹெக்டேருக்கு NPK முறையே 8:8:8 கிலோ அளவும், மேலுரமாக விதைத்து, 25 அல்லது 30 ஆம் நாள் 8 கிலோ நைட்ரஜன் சத்தும் இட வேண்டும். மொட்டுகள் உருவாகும் போதும், செடியில் மலர்கள் தோன்றும் போதும், மணிகள் முற்றும் போதும், மண்ணில் போதிய ஈரம் இருக்குமாறு, நீர் பாய்ச்சுவது விளைச்சலைப் பெருக்கும். பூ மலர்ந்த பிறகு, காலை 9–11 மணி வரை தொடர்ந்து, 10 நாளுக்குப் பூக்களை மெல்லிய துணியால் தடவி, அயல் மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்துதல், சூரிய காந்தி உற்பத்தியைப் பெருக்கும். செடிகள் 2–2.5 மீ. வளர்ந்து, மலர் மொட்டுகள் தோன்றியவுடன், தரம் குறைந்த மஞ்சரிகளை நீக்கி விடுவர். அறுவடை. கோ.1 போன்ற உயர் விளைச்சல் வகை 65 நாளில் விளைச்சலைத் தரும். மஞ்சரியின் பிற்பகுதி மஞ்சள் நிறமாக மாறியதும், அறுவடை செய்யலாம். அந்நிலையில், விதைகள் ஒன்றை விட்டு ஒன்று தனித்து விடும். அவை மஞ்சரியிலிருந்து உதிர்வதற்கு முன்பு, மஞ்சரியை அறுவடை செய்ய வேண்டும். சில இடங்களில், முழுச் செடியையும் பிடுங்கியெடுப்பதுண்டு. பொதுவாக, மஞ்சரிகள் வெட்டுச் சால்களின் இடைப் பகுதியில் விதைப் பகுதி மேல் நோக்கி இருக்கும் வண்ணம் தரையில் உலர்த்தப் படும். மஞ்சரி நன்கு காய்ந்த பின், களத்து மேட்டில் மஞ்சரிகளைத் தலை கீழாக வைத்துக் குச்சி மூலம் அடித்தோ, கம்பி வலை கொண்ட பலகையில் தேய்த்தோ, விதைகள் பிரித்தெடுக்கப்படும். பயன்கள். அமெரிக்காவில் செவ்விந்தியர்களின் முக்கிய உணவாகக் காட்டுச் சூரிய காந்திச் செடியும், மக்காச் சோளமும் பயன்பட்டன. சோவியத் ஒன்றியக் குடியரசு, அர்ஜென்டினா, கனடா ஆகிய நாடுகளில் இது முக்கிய எண்ணெய் வித்துப் பயிராகப் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ரொடீஷியா, கனடா ஆகிய நாடுகளில், கால்நடைத் தீவனமாகப் பச்சையாகவோ, உலர்த்தியோ பயன் படுத்தப் படுகிறது. எண்ணெய்க்குப் பயன்படுத்தினாலும் பச்சையாகவோ, வறுத்தோ, உப்பிட்டோ உண்ணலாம். அமெரிக்காவில் வறுத்து உப்பிட்ட விதைகளைப் பொட்டலங்களாக விற்பதுண்டு. இதற்காகப் பெரிய விதைகளைத் தேர்ந்தெடுப்பர். எண்ணெய் அல்லது கால்நடைத் தீவனத்தைப் பொறுத்து வகையைத் தேர்வு செய்ய வேண்டும். உண்ணும் வகையைத் தேர்வு செய்து உமி நீக்கி வறுப்பர். உமி நீக்கிய பருப்பை மாவு செய்து, ரொட்டி தயாரிக்கலாம். வறுத்த விதைகளைப் பொடி செய்து, காஃபிப் பொடிக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இது கால் நடை வளர்ப்புப் பறவைகளுக்கு நல்ல சத்துள்ள உணவாகும். விதையெண்ணெய். விதையின் எண்ணெய் அளவு 22–36% இருக்க, உமி நீககிய பருப்பின் எண்ணெய் அளவு 45–55% ஆகும். குளிர் அழுத்தமும், வெப்ப அழுத்தமும் கொடுத்து, விதையிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பர். தூய சூரிய காந்தி எண்ணெய், இளம் மஞ்சள் வண்ணமும், நறுமணமும் கொண்டது. இந்த எண்ணெயில் வைட்டமின் A,B, E ஆகியவை காணப் படுகின்றன. இதன் ஊட்டப் பொருள், ஆலிவ் எண்ணெய்க்குச் சமமாகவும், மலிவானதாகவும் உள்ளமையால், இதை ஆலிவ் எண்ணெயில் கலப்படம் செய்வதுண்டு. எண்ணெய் சமையலுக்கு மட்டுமின்றி, எண்ணெய் தொடர்புடைய பிற தொழில்களிலும் பயன்படும். எண்ணெயில் லினோலிக் அமிலம் குறைவாக உள்ளமையால், ரொட்டி தயாரிப்பில் பயனாகிறது. மேலும், இது பகுதி–உலர் (semidrying) எண்ணெய் வகையைச் சேர்ந்தது. இதனால், வண்ணப் பூச்சுத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. டீ.சல் ஊர்திகளில் எரி பொருளாகவும் பயன்படுகிறது. எண்ணெய் நீக்கிய பிண்ணாக்கு அதிக புரதச் சத்துக் கொண்டதால், நல்ல தரமுள்ள கால் நடைத் தீவனமாகிறது. கால்சியம், தயாமின், நியாசின் போன்ற வேதிப் பொருள்களைப் பெருமளவில் தயாரிக்க, இதை மூலப் பொருளாகப் பயன்படுத்துவர். மேலும், இதைப் பொடி செய்து ரொட்டி தயாரிக்கவும் செய்யலாம். சூரிய காந்தி உமி எரி பொருளாகவும், எரித்த சாம்பல் அதிக பொட்டாசியம் கொண்டுள்ளமையால், சிறந்த உரமாகவும் பயன்படும். உமியைப் பயன்படுத்தி, வெப்பத் தடுப்பு அட்டைகள், பலகைகள் தயாரிக்கலாம். விதைகள் நீக்கிய மஞ்சரித் தட்டு கால் நடைத் தீவனமாகும். அது ஊட்டச் சத்தில், கோதுமைத் தவிட்டிற்குச் சமம் ஆகும். இதில், பெக்டின் ஜெல்லி தயாரிக்கின்றனர். மேலும், மஞ்சரிக் காம்பை எரிபொருளாகவும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துகின்றனர். இதில் மிகுந்துள்ள (35%) செல்லுலோஸ், காகிதம், நெகிழி தயாரிப்பில் பயன்படுகிறது. சூரிய காந்தி இலைகள் பிற தீவனங்களோடு கால் நடைகளுக்குத் தரப் படுகின்றன. மக்காச் சோளத்திற்கு ஈடாக, ஊட்டச் சத்துப் பெற்றுள்ளமையால், இதைக் கறவை மாடுகளுக்குத் தரும் போது, பாலும், வெண்ணையும் மிகுதியாகக் கிடைக்கும். சூரிய காந்தி மருத்துவத்திலும் பயன்படுகிறது. சூரிய காந்தி எண்ணெய்க்குப் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் பண்புள்ளமையால், இதைக் கொண்டு பூச்சிக் கொல்லி நீர்மங்களைத் தயாரிக்கின்றனர். இலைக்குப் பாக்டீரியாவைக் கொல்லும் ஆற்றல் உண்டு என்று கண்டறிந்துள்ளனர். அதனால், காகசன் பகுதியில் மலேரியாக் காய்ச்சலைக் குணப்படுத்த, இலைகள் பயன்படுகின்றன. மேலும் சுவாச நோயைத் தீர்க்கும் பண்புடையது. சீனாவில், வயிற்றுப் போக்கைத் தடுப்பதற்கு விதைகளைப் பயன் படுத்துகின்றனர். மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்தும். சிறு பூக்களில் தேன் மிகுந்துள்ளமையால், தேனீப் பண்ணைக்குத் தகுந்த தாவரமாகும். மேலும், மலர்களிலிருந்து மஞ்சள் சாயப் பொருள் எடுக்கின்றனர். நோய். பாட்ரிடிஸ் சினீரா (Botrytis cinerea). என்னும் பூசணம் இளம் தண்டு, இலை, இளம் மஞ்சரிகளை ஈரச் சூழ்நிலையில் தாக்கும். பக்சினியா ஹீலியான்தி என்னும் பூசணம் துரு நோயைத் தோற்றுவிக்கும். தண்டு அழுகல் நோய்க்கு ஸ்க்லிரோடினியா ஸ்க்லீரோஷியோரம் என்னும் பூசணம் காரணமாகிறது. இவற்றைத் தவிர, வெட்டுப் புழு, அசுவிணி, இராப் பூச்சி, வண்டு ஆகியவை சூரிய காந்தியைத் தாக்கி அழிக்கும். ஒரபேங்கி (orobanche) என்னும் வேர் ஒட்டுண்ணி சூரிய காந்திச் செடியைத் தாக்கி அழிக்கலாம். பயிர்ப் பெருக்கம். வேரைத் தவிர ஏனைய பகுதிகளும் பயன்படக் கூடிய சூரிய காந்தி வகைகளை மேம்படுத்தப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. குட்டையான வகைகள், அறுவடை செய்ய மிகவும் ஏற்றவை ஆகையால், அந்த வகைகளைத் தேர்வு மூலம் அறிமுகப்படுத்தியுள்ளனர். உண்பதற்கு ஏற்ப மென் தோலும் அடர்த்தியான பருப்பும் கொண்ட வகைகளைக் காட்டு இனத்தோடு கலப்புச் செய்வதால், விதைகள் கவசத் தோல் பெற்று இராப் பூச்சித் தாக்காத வகைகளாக வெளி வருகின்றன. கொக்கி போன்ற வளைந்த மஞ்சரிக் காம்பு உள்ள வகைகள் மூலம் பறவைகள் ஏற்படுத்தும் அழிவைத் தடுக்கின்றனர். அண்மையில் ஜெருசலம் ஆர்டிசோக் என்ற சிற்றினத்துடன் சூரிய காந்தியை ஒட்டுச் செய்து வீரிய வகைகளைத் தோற்றுவித்துள்ளனர். இந்த வகைகள் கூடிய வளர்ச்சி, குறைந்த உமியளவு, அதிக எண்ணெய்ச் சத்துக் கொண்டவையாக இருக்கும். மேலும், இவற்றில் ஆர்டிசோக்கின் தீவிர வளர்ச்சியும், சூரிய காந்தியின் முன் பருவம், மஞ்சரியைக் கொடுக்கும் தன்மையும் சேர்ந்துள்ளமையைக் காணலாம். ஆனால், ஆர்டிசோக் போன்று வேரில் கிழங்குகள் தோன்றுவதில்லை. மேலும், சூரிய காந்தியை டாலியாவுடன் கலப்பினம் செய்து, புது வகையை அறிமுகப்படுத்தியுள்ளனர். —தி. ஸ்ரீகணேசன் நூலோதி. J.W. Purseglove, Tropical Crops, Dicotyledons, ELBS, London, 1969. சூரிய காந்தியில் மகரந்தச் சேர்க்கை. சூரிய காந்தி பெரும்பாலும் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் கருவுறும் தன்மை உடையது. வேறு செடியிலிருந்து, மகரந்தம் கிடைக்கவில்லையென்றால், கருவுறுதல் சரி வர நடைபெறாது. தன் மகரந்தச் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றுக் கருவுற நேர்ந்தால், செடியின் வீரியம் குறைந்து, விளைச்சல் பாதிக்கப்படும். ஆனால், இயற்கையாகவே சூரிய காந்தியில் தன் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதைத் தடுக்க, தன் இயலாச் சேர்க்கை (self incompatibility) மூலம், விதை வளர்ச்சி தடுக்கப்பட்டு, பதரான விதைகளே மிகுதியாக உண்டாகின்றன. சூரிய காந்திப் பூவின் அமைப்பு ஒரே வகையாக இல்லாமல், சில பூக்கள் தட்டையாகவும், சில பூக்கள் குழியாகவும், வேறு சில பூக்கள் குவிந்தும் உள்ளமையால், மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு, விதை முதிர்ச்சி அனைத்துப் பூக்களிலும் ஒரே வகையாக இருப்பதில்லை. பூக்கும் காலம் மழைக் காலமாக இருந்தால், மகரந்தத் தூள்கள் கழுவப்பட்டு, கருவுறுதல் பாதிக்கப்பட்டு, விதை முதிர்ச்சி உண்டாவதில்லை. முக்கியமாகப் பூக்களில், மகரந்தச் சேர்க்கை சரி வர நடைபெறாத காரணத்தால், பதரான விதைகள் பெருமளவில் உண்டாக, விளைச்சல் மிகுதியாகப் பாதிக்கப்படுகிறது. இக்குறைகளைப் போக்கி, அதிக அளவில் விதைகளை உண்டாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வு முடிவுகள் மூலம் சூரிய காந்தி பயிரிடப்படும் இடங்களில் ஹெக்டேருக்கு இரண்டு தேன் கூடுகள் வைத்து, தேனீக்கள் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கையை மிகுதிப்படுத்தி, உயர் விளைச்சலைப் பெருக்கலாம். மேலும், கை மகரந்தச் சேர்க்கை (hand pollinatin) எனும் எளிய முறைப்படியும், அயல் மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்தி, விளைச்சலைப் பெருக்கலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய காந்திக் குடும்பத்தில் ஒரு செடியில் மிகுதியான பூக்கள் கொண்ட வகையுண்டு. ஆனால், சாகுபடி செய்ய, பொதுவாக ஒரு பூவுடைய சூரிய காந்தி வகையே ஏற்றது. ஏனெனில், ஒரு பூ கொண்ட வகையில், அனைத்துப் பூக்களும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும். மேலும், கொண்டை பெரியதாக அமைந்து, அதிக அளவில் விதைகளைக் கொண்டிருக்கும். சூரிய காந்திக் கொண்டை 4–50 செ.மீ. வரை குறுக்களவு கொண்டது. பூவின் வெளிப் பகுதியில், பூவைச் சுற்றி மஞ்சள் நிறமான இதழ்களைக் கொண்ட, சிறு சிறு பூக்கள் இருக்கும். இவற்றிற்குக் கதிர்ச் சிறு பூக்கள் (ray florets) என்று பெயர். இவற்றில் ஆண் பகுதியோ, பெண் பகுதியோ இல்லாமல், மலட்டுத் தன்மையுடையனவாக இருக்கும். இவற்றிலிருந்து விதைகள் கிடைப்பதில்லை. ஆனால், இப்பூக்கள் பெரிய பகட்டான இதழ்களைக் கொண்டுள்ளமையால், அவை தேனீ, வண்டு முதலியவற்றைக் கவர்ந்திழுத்து, அயல் மகரந்தச் சேர்கைக்குத் துணை புரிகின்றன. இப்பூக்களுக்கு அடுத்து உட்புறத்தில் ஏறத் தாழ 1000–4000 வட்டத் தட்டுச் சிறு பூக்கள் (disc florets) சூரிய காந்தியின் பஞ்சு போன்ற இடத்தில் அடுக்காக வட்டமாக அமைந்திருக்கும். இப்பூக்களில், ஆண் பகுதியும், பெண் பகுதியும் சேர்ந்து உள்ளமையால், அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் கருச் சேர்க்கை ஏற்பட்டு விதைகள் உருவாகின்றன. இவ்வகையான வட்டத் தட்டுச் சிறு பூக்களில் ஐந்து சுருமை நிற மகரந்தப் பைகள் உள்ளன. இவை ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டாலும், இவற்றின் ஐந்து காம்புகளும் தனித் தனியே இருக்கும். இவையே பூவின் ஆண் பகுதியாகும். சூரிய காந்திப் பூக்களின் மகரந்தப் பை முதிர்ச்சி அடைந்ததும், அதன் மேல் பகுதியில் உள்ள துளை வழியாக மகரந்தத் தூள்களைச் சிந்தும். இவ்வாறு ஆண் பகுதி முதலில் முதிர்ச்சியடைவதால், பூக்களில் 75–100% வரை அயல் மகரந்தச் சேர்க்கை நடை பெறுகிறது. மகரந்தப் பை முதிர்ச்சியடைவதும், மகரந்தத் தூள்கள் சிந்துவதும் சூரிய ஒளியைப் பொறுத்திருக்கும். நல்ல சூரிய ஒளி இருக்கும் போது, காலை 7–11 மணி வரை தொடர்ந்து மகரந்தத் தூள் சிந்திக் கொண்டிருக்கும். காலை வேளையில் சூரிய ஒளி குறைவாக மந்தாரமாகவோ, மழைக் காலமாகவோ இருந்தால், மகரந்தம் தாமதமாக வெளிப்படும். சூரிய ஒளி வந்த பிறகே, மகரந்தத் தூள்கள் விரைவாக வெளிப்படும். சூரிய காந்திப் பூவின் பெண் பகுதியான இளம் சூலகத் தண்டு மகரந்தப் பைக்குள் பதிந்து இருக்கும். இத்தண்டின் நுனியிலுள்ள சூலக முடி இரண்டாகப் பிளவு பட்டிருக்கும். ஆனால், மகரந்தப் பையின் வழியாக வெளி வருவதற்கு முன் இரண்டு சூலக முடிகளும் ஒன்றோடொன்று இணைந்து கை வடிவில் குவிந்து இருக்கும். சிறிது சிறிதாக வளர்ந்து, மகரந்தப் பையைத் துளைத்துக் கொண்டு, காலை 9 மணிக்கு மேல் மகரந்தப் பைக்கு மேலாக இவை வெளி வரத் தொடங்கும். இவ்வாறு வெளி வரும் போது, இரண்டு சூலக முடிகளும் இணைந்துள்ளமையால், மகரந்தத் தூள் சூலக முடியின் உட்புறத்தில் படாமல், தன் மகரந்தச் சேர்க்கை தவிர்க்கப் படுகிறது. சூல் முடி வெளியே வந்து, மெதுவாகப் பிரிந்து மசுரந்தத் தூளைப் பெற முயல்கிறது. இவ்விரு சூலக முடிகளும் வெளிப்புறமாக விரிந்து, கீழ் நோக்கி வளைந்து சுருண்டு கொள்ளும். இந்நிலையில், சூலக முடிகள் 2,3 நாள் வரை மகரந்தத் தூள்களைப் பெறுவதற்கு ஆயத்தமாக இருக்கும். அதற்குப் பின், அவை காய்ந்து லிடும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு, சூலகத் தண்டும் காய்ந்து, கருப்பையிலிருந்து விடுபட்டு விழுந்து விடும். பூவின் வளர்ச்சி. சூரிய காந்தியின் பூ மொட்டுகள் 10 நாளில் பெரிதாகி விடும். பிறகு, இதில் சிறு பூக்கள் விரியத் தொடங்கி, அதன் பின் வட்டத் தட்டுச் சிறு பூக்கள் அனைத்தும் விரிவதற்கு 7–10 நாள் ஆகும். பிறகு, வட்டத் தட்டுச் சிறு பூக்கள் அனைத்தும் கருவுற்று, முதிர்ச்சி அடைய 10–15 நாள் ஆகும். ஆகவே, பூக்கத் தொடங்கி, விதைகள் முற்றுவதற்கு ஏறத் தாழ 30–35 நாள் ஆகும். இயற்கையிலேயே பூ எந்த அளவில் இருந்தாலும், 7–10 நாளுக்குள் இவை விரிய, மகரந்தச் சேர்க்கை முடிந்து விடும். சூரிய காந்தியில் வட்டமாக அடுக்கடுக்காக அமைந்திருக்கும் வட்டத் தட்டுச் சிறு பூக்கள் வரிசை, வரிசையாக விரியத் தொடங்கும். வெளிப் புறத்தி லுள்ள பூக்கள், முதலில் உள் நோக்கி விரியத் தொடங்கும். சிறிய பூவாக இருந்தால், விரியத் தொடங்கிய நாளிலிருந்து, நாள் ஒன்றுக்கு ஓரிரு வரிசைகளே விரியும். பெரிய பூவாக இருந்தால், நாள் ஒன்றுக்கு 3–5 வரிசை வட்டத் தட்டுப் பூக்கள் விரிகின்றன. சூரிய காந்தி வயலில் அனைத்துச் செடிகளும் ஒரே நாளில் பூக்கத் தொடங்கா. முதல் செடி பூக்கத் தொடங்கியதிலிருந்து, இறுதிச் செடி பூப்பதற்கு ஏறத் தாழ 15–20 நாள் ஆகும். பூக்கும் செடிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே சென்று, 10–12 நாளில் அதிக பூக்கள் மலரும். பின்னர், மீண்டும் பூக்கும் செடிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். பூக்கத் தொடங்கிய 15–20 நாளுக்குப் பிறகு பூக்கத் தொடங்கும் தட்டுப் பூக்களுக்கு மகரந்தம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விடுவதால், பதரான விதைகளே மிகுதியாகும். ஆகவே, சூரிய காந்தியில் மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்த, பூக்கள் விரியத் தொடங்கிய நாளிலிருந்து, மகரந்தச் சேர்க்கை செய்ய வேண்டும். இதற்கான பணியாளர்கள், கையில் மெல்லிய வெள்ளைத் துணியைச் சுற்றிக் கொண்டு, சூரிய காந்திப் பூவின் மேல் பகுதியை மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். இதனால், சூலக முடி விரிந்து மகரந்தத்தைப் பெறுவதற்கு ஆயத்தமாகி விடும். இங்ஙனம் காலை 9–11 மணி வரை செய்ய வேண்டும். ஒவ்வொரு பூவும் விரிந்து கருவுறுதலுக்கு 7–10 நாள் ஆவதால், மகரந்தச் சேர்க்கையைத் தொடர்ந்து ஒவ்வொரு பூவிலும் 7–10 நாள் வரை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது, சூலக முடி உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில், பூக்கள் குறைவாக மலர்வதால், ஹெக்டேருக்கு 3 அல்லது 5 பணியாளரே போதும். பின்னர் அதிகமான பூக்கள் மலர்வதால், 15–25 பணியாளர் ஏறத் தாழ, 2 மணி நேரம் நாளும் தேவைப் படுவர். நாளடைவில், தொடர்ந்து மலரும் பூக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையால், பணியாளர் குறைவாகவே தேவைப்படுவர். இங்ஙனம், இறுதியாக மலரும் பூ முற்றிலும் விரிந்து, முழுதுமாக மகரந்தச் சேர்க்கை நடை பெறும் வரை பணியாளரைக் கொண்டு, மகரந்தச் சேர்க்கையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொரு பூவையும் இவ்வாறு மெல்லிய துணி மூலம் கையால் ஒற்றி எடுப்பதால், சூரிய காந்தியில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது. இதனால், பெரும் எண்ணிக்கையில் கருவுறுதல் நடந்து, மிகுதியான விதைப் பிடிப்பு ஏற்பட்டு, ஏறத்தாழ 25–30% உயர் விளைச்சலும் கிடைக்கும். —இராபின்சன் தாமஸ் சூரிய காந்திக் குடும்பம். பூக்கும் தாவரப்பெருங் குடும்பங்களில் ஒன்றான அஸ்ட்டரேசியில் சூரிய காந்திக் குடும்பம் அடங்கும். பொதுவாக, இரு வித்திலைக் குடும்பங்களில் அஸ்ட்டரேசியையும், ஒரு வித்திலைக் குடும்பங்களில் ஆர்கிடேசியையும் பெருங் குடும்பங்கள் என்பர். இக்குடும்பம், இரு வித்திலைப் பிரிவில் கேமோபெட்டேலே (gamopetalae) எனப் படும். துணை வகுப்பில், இன்ஃபெரே (inferae) என்னும் வரிசையில் அமைந்துள்ளது. இக்குடும்பத்தில் 950 பேரினங்களும், 20,000 சிற்றினங்களும் அடங்கியுள்ளன. வளர் சூழ்நிலை. உலகில் எங்கெல்லாம் தாவரங்கள் வளரக் கூடிய சூழ்நிலை உள்ளதோ, அங்கெல்லாம் இக்குடும்ப இனங்களைக் காணலாம். ரவூலியா (Rawolia), ஹேஸ்டியா (Haastia), சின்க்ளேரி (Sinclari) என்னும் நியூஸிலாந்து செடிகளைத் தாவர ஆடுகள் (Vegetable sheep) என்பர். கம்பளி போன்ற மயிருடைய இத்தாவரங்கள், பார்வைக்கு உருண்டையாக, படுத்திருக்கும் ஆடு போலக் காணப்படும். சில சிற்றினங்கள் வறண்ட பாலை நிலங்களிலும், காய்ந்த பாறைகளின் மீதும் வளர்வதுண்டு. படிமலர்ச்சியில் அஸ்ட்டரேசியை மிக உயர்ந்த குடும்பமாகக் கருதுவதற்குக் காரணம், அதிலுள்ள மிகு எண்ணிக்கை கொண்ட சிற்றினங்கள் மட்டுமல்லாமல், அவை எவ்விதத் தட்ப வெப்ப நிலையிலும் வளரும் தக அமைப்பைக் கொண்டுள்ளமையுமாகும். பெரும்பான்மையானவை நில வாழ் செடிகளாகக் காணப்பட்டாலும், எரிஜிரான் (erigeron), பைடென்ஸ் (bidens), கொட்டூலா (cotula) போன்ற இனங்களின் சில சிற்றினங்கள் நீர் வாழ் செடிகளாக உள்ளன. பக்கேரிஸ் (baccharis) என்பது வறள் நிலச் செடியாகும். இது இலையற்றது. தண்டு தட்டையாக இறக்கை போல் பசுமையாக இருக்கும். பிரவுஸ்டியா (proustia) என்னும் வறள் தாவரத்தில் தண்டு, முள்களாக மாறி, நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. வளரியல்பு. இக்குடும்பச் சிற்றினங்கள் பல வகை வளரியல்புகளைக் கொண்டவையாகும். ஒரே இனத்தில் சிறு செடிகள், மரங்கள், கொடிகள் முதலியவற்றைக் காணலாம். சான்றாக, வெர்னோனியா (Vernonia) குடும்பத்தில், மரச் சிற்றினங்கள் மிகக் குறைவு. கிளைனியா (Kleinia), வெர்னோனியா, ட்ரவேன்கோரிகா (V. trivancorica) வெ. ஷேர்வராயன்சிஸ் (V. shervarayansis) என்பவை 10–15 மீ. வளரக் கூடிய மென்மையான தண்டுடைய மரங்களாகும். சில கொடிகள் பற்றுக் கம்பிகள் மூலம் படர்பவை. எ-டு: மடிசியா (Mutisia); சுற்றிப் படரும் கொடிகளுமுண்டு; எ-டு: மைகேனியா (Mikania). சோகோட்ரா தீவைச் சேர்ந்த வெர்னோனியா வீட்டராலிஸ் (Vernonia littoralis) என்பது ஒரு பெரிய காட்டுக் கொடியாகும். உட்புறத் தோற்றம். தண்டுகளில் பால் (latex) குழாய்கள் பொதுவாகக் காணப்படும். பெரும்பாலும், அவற்றில் வண்ணமற்ற நீர்மம் இருக்கும். இலைகள், தனி அல்லது கூட்டிலைகள். இலைப் பரப்பு முழுமையாகவோ, பிளவுபட்டோ இருக்கும். வறள் நிலத் தாவரங்களில் முழு இலையோ, இலையின் நுனியோ, இலையின் விளிம்புகளோ முள்ளாக மாறுவதுண்டு. ஹோப்லோஃபில்லம் (hoplophyllum) என்ற செடியில் முழு இலைகளே முள்களாக மாறி விடுகின்றன. பொதுவாக மாற்றிலையடுக்கு அமைப்பும், சில சிற்றினங்களில் எதிரிலையடுக்கும் காணலாம். லானியா (launiea), டேராக்சகம் (taraxacum) செடிகளில் தண்டு இல்லை. இவற்றின் இலைகள் நில மட்டத்தில் அமைந்திருக்கும். பொதுவாகச் சிறகின் போக்கு வலை நரம்பு (pinnately reticulate) அமைப்பாகக் காணப் படும். காரிம்பியம் (corymbium) என்ற செடியின் இலைகள் இணை நரம்பு அமைப்பைப் பெற்றுள்ளமையால், பார்வைக்கு ஒரு வித்திலைத் தாவரம் போல் காணப்படும். ‘தலை’ என்னும் சிறப்பு வகை மஞ்சரி கொண்டது. ஜவந்தி, டாலியா, ஜினியா மலர்கள் என்று குறிப்பிடப் படுபவை, சூரிய காந்தியின் மஞ்சரிகளாகும். மஞ்சரியின் சிறு மலர்கள் (florets) நெருக்கமாக அமைந்திருக்கும். மஞ்சரிக் காம்பின் நுனி, வட்டமாகத் தட்டுப் போன்றிருக்கும். இதை மஞ்சரித் தளம் (receptacle) என்பர். இத்தளத்தின் அடிப் பகுதியில் பசுமையான இலைகள் போன்ற பல உறுப்புகளைக் காணலாம். ஹெலிக்ரைசம் (helichrysum) என்ற இனத்தின் மஞ்சரி, வெண்மை, ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ணத்துடன் வாடாமல் உள்ளமையால், இதை என்றும் நிலைத்தவை (everlasting) என்பர். மஞ்சரியின் தளத்திலுள்ள சிறு மலர்களை இரு வகையாகக் குறிப்பிடலாம். அவை தளத்தின் நடுவிலுள்ள வட்டத் தட்டுச் (disc) சிறு மலர்களும், ஓரத்திலுள்ள கதிர்ச் (ray) சிறு மலர்களும் ஆகும். மேலும், சிறு மலர்களின் அல்லி வட்டத்தைப் பொறுத்தும், அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம், குழல் சிறு மலர்கள் (tubular) குழல் வடிவ அல்லி வட்டத்தையும், நா வடிவச் சிறு மலர்கள் (ligulate), நா வடிவ அல்லி வட்டத்தையும் கொண்டிருக்கும். மஞ்சரியில் காணப்படும் சிறு மலர்கள் எண்ணிக்கையிலும், அமைப்பிலும் வேறுபட்டவை. பார்த்தீனியம் அர்ஜென்டேடம் (Parthenium argentatum) என்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த செடி, கூட்டு மஞ்சரி உடையது. மஞ்சரியில், பல சிறு மஞ்சரிகளுண்டு. ஒவ்வொரு சிறு மஞ்சரியிலும் 3 சிறு மலர்களுண்டு. இவற்றை அணைத்தவாறு, பூவடிச் செதில் ஒன்றுண்டு. 3 மலர்கள் நடுவில் பெண் மலரும், இரு பக்கத்திலும் ஆண் மலர்களும் இருக்கும் அமைப்பை ‘இரு காதலர்களிடையே ஒரு பெண்மணி’ என்பர். லிகுலேரியா செடியின் மஞ்சரி ஏறத் தாழ 1 மீ. நீளமிருக்கும். இது உருளையாக 300–400 மஞ்சரிகளையும், ஒவ்வொரு சிறு மஞ்சரியிலும் 5 சிறு மலர்களையும் கொண்டிருக்கும். அவற்றில், மூன்று குழல் வடிவ, இரு பால், ஒழுங்கானவை. ஏனைய இரண்டு நா வடிவ, ஒழுங்கற்ற, சிறு மலர்களாகும். எகைனாப்ஸ் (echinops), வெர்னோனியா யூனிஃப்ளோரா (Vernonia uniflora), ஸ்பெராந்தஸ் (Sphaeranthus) போன்ற இனங்களில், மஞ்சரிகள் ஒற்றை மலர் கொண்டவையாகும். இவ்வகை ஒற்றை மலர் மஞ்சரிகள் சேர்ந்து, கூட்டுத் தலை (compound–head) மஞ்சரியைத் தோற்றுவிக்கும். சாந்தியம் என்ற செடியில் ஆண் மஞ்சரியும், பெண் மஞ்சரியும் தனித்துக் காணப்படும். பெண் மஞ்சரி இரு மலர்களை மட்டுமே கொண்டது. அஸ்ட்டரேசி மலர்களின் பால் தன்மையின் அடிப்படையில், மஞ்சரியை இரண்டாகக் கொள்ளலாம். பால் தன்மையைப் பொறுத்து, மலர்களை ஒரு தரப்பட்ட பாலின மஞ்சரி (homogamous head) என்பர். எ-டு: வெர்னோனியா, ஜவந்தி, யூபடோரியம். பெருவாரியான சிற்றினங்களின் மஞ்சரியில், பாலினத்தைப் பொறுத்து, இரு வகை மலர்கள் காணப் படலாம். சூரிய காந்தி ஜினியா மஞ்சரிகளில், வட்டத் தட்டு மலர்கள் இரு பால் மலர்களாகவும், கதிர் மலர்கள், பெண் அல்லது மலட்டு மலர்களாகவும் இருக்கும். இவ்வகை மஞ்சரியைப் பல தரப்பட்ட பாலின (heterogamous) மஞ்சரி என்பர். புல்லி வட்டம், செதில்களாகவோ நீண்ட தூவிகள் போன்றோ உருமாறிக் காணப்படும். இவை நிலைத்தவை: கனிகள் காற்று மூலம் பரவப் பயன்படுகின்றன. அல்லி வட்டம், ஐந்து இதழ்கள் கொண்டது; இணைந்தது; ஒழுங்கானது அல்லது ஒழுங்கற்றது. பல தரப்பட்ட பாலின மஞ்சரிகளில் வட்டத் தட்டுச் சிறு மலர்கள், குழல் வடிவ அல்லி வட்டத்தையும், கதிர்ச் சிறு மலர்கள் ஒழுங்கற்ற நா வடிவ அல்லி வட்டத்தையும் பெற்றிருக்கும், சில இனங்களில் இரண்டு உதட்டு (bilabiate) அல்லியமைப்பையும் காணலாம். மகரந்தத் தாள் வட்டம். ஐந்து மகரந்தத் தாள்களைக் கொண்டது. அல்லி இணைந்தும், அல்லி இதழ்களுடன் மாறி அமைந்துமிருக்கும். மகரந்தக் கம்பிகள் தனித்தும், மகரந்தப் பைகள் ஒன்றோடொன்று இணைந்தும் காணப்படும் (syngenesious). சில சிற்றினங்களில் மகரந்தத் தாள்கள், ஒரு கற்றையமைப்பாகக் காணப்படும். மகரந்தப் பைகளின் அடிப்புறத்தில் வால் போன்ற நீட்சிகளும் உண்டு. மகரந்தப் பை இணைப்புகள் மேல் நோக்கியமைந்து மகரந்தச் சேர்க்கையில் பங்கு கொள்ளும். சூலகம். இரு சூலிலைகள்; ஒரு சூலறை கொண்டது. கீழ் மட்டச் சூல் பை, சூல் ஒன்று, கீழ் ஒட்டு முறையில் இருக்கும். சூலகத் தண்டு நீண்டு மகரந்தப் பைகளின் குழல் மூலம் வெளிப்படும். சூலக முடி இரண்டாகப் பிளவு பட்டிருக்கும். சூலகத் தண்டைச் சுற்றி, அடியில் வளையம் போன்ற தேன் சுரப்பிகள் காணப்படும். கனி. சிப்செல்லா (eypsela) என்னும் உலர் வெடியாக் கனியாகும். கனி மிகச் சிறியதாக உள்ளதால், அதையே விதைகள் என்று குறிப்பிடுவதுண்டு. கனிகளில் பல வித நீட்சிகள், தூவிகள், இறகுகள் போன்ற அமைப்புகள் காணப்படுவதால், அவை காற்று அல்லது விலங்குகள் மூலம் பரவ உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கை. அஸ்ட்டரேசி குடும்பம் அனைத்து இடங்களிலும் பரவிக் காணப்படுவதற்குக் காரணம், அவ்வின மலர்களின் சிறந்த அயல் மகரந்தச் சேர்க்கையும், கனி பரவும் முறையுமேயாகும். மலர்கள் மிகச் சிறியவையாக இருந்த போதும், அவை ஒன்றாகச் சேர்ந்து மஞ்சரியைத் தோற்றுவிப்பதால், பூச்சி ஒரு முறை வரும் போது, அனைத்து மலர்களிலும், மகரந்தச் சேர்க்கை நடக்கும். கதிர்ச் சிறு மலர்கள் பகட்டான அல்லி வட்டத்தாலும், வட்டத் தட்டு மலர்கள் தேன் மூலமாகவும், பூச்சிகளை ஈர்த்து, அவை இனப் பெருக்கத்தில் பங்கு கொள்கின்றன. சூலகத் தண்டின் நுனிக்குச் சற்றுக் கீழே தூவிகள் வட்டமாக அமைந்திருக்கும். அவை மகரந்தத் தூள்களை மேல் நோக்கிக் கொண்டு செல்வதில் பங்கு கொள்கின்றன. சில இனங்களில் காற்று நாட்டம் ஏற்படுவதுண்டு. வகைப்பாடு. அஸ்ட்டரேசி குடும்பம் இரு தொகுப்புகளாகவும், 13 பிரிவுகளாகவும் பிரிக்கப் பட்டுள்ளது. முதல் தொகுப்பை டியூபிஃப்ளோரா (tubiflorae) என்றும், இரண்டாம் தொகுப்பை லிகுலிஃப்ளோரே (liguliflorae) என்றும் பிரித்துள்ளனர். டியூபிஃப்ளோரே தொகுப்பில் 12 பிரிவுகள் உண்டு. இவை பால் குழாய்கள் அற்றவையானாலும், எண்ணெய்க் குழாய்களைக் கொண்டவை. வட்டத் தட்டுச் சிறு மலர்கள் குழல் வடிவ அல்லி கொண்டவை. லிகுலிஃப்ளோரே பிரிவு கொண்ட இவ்வினத்தில் குழாய் உண்டு. அல்லிகள் நா வடிவம் கொண்டவை. இக்குடும்ப இனங்கள் பொருளாதாரச் சிறப்புகளையும் பெற்றுள்ளன. கார்த்தமஸ் டிங்டோரியஸ் (Carthamus tinctorius) இதன் மலர்களிலிருந்து சிவப்பு அல்லது மஞ்சள் சாயம் கிடைக்கிறது. விதைகளிலிருந்து கிடைக்கும் எண்ணெயைக் கொண்டு மெருகுவணம், சவர்க்காரம் போன்றவற்றைத் தயாரிப்பர். சிக்கோரியம் இன்டிபஸ் (Chicorium intypus). இது சமைத்து உண்ணக் கூடிய இலைகளுக்காகவும், வேர்களுக்காகவும் பயிரிடப்படுகிறது. வேரைக் காய வைத்துப் பொடி செய்து, காஃபி பொடியுடன் மணம், சுவைக்காகச் சேர்ப்பர். இதுவே சிக்கரி ஆகும். லாக்டூகா சடைவா (Lactuca sativa). லெட்டூஸ் என்பது வட்டாரப் பெயர். இலைகளில் வைட்டமின், இரும்புச் சத்து ஆகியன மிகுந்து காணப்படுவதால், கீரையைப் போல் சமைத்து உண்ணலாம். கிரைசாந்திமம் சினிரேரிஃபோலியம் (Chrysanthemum cinerarifolium). இது, பைரீத்ரம் என்னும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படும் செடியாகும். இது மலேரியா கொசுக்களைக் கட்டுப் படுத்தும். மஞ்சரிகளைப் பொடி செய்தோ, நீர்மம் தயாரித்தோ பயன்படுத்துவர். இதன் நச்சுத் தன்மை, மூட்டைப் பூச்சி, கரப்பான், கொசு முதலியவற்றை ஒழிக்கப் பயன்படுகிறது. ஜப்பான், செக்கோஸ்லோவாகியா ஆகிய இரு நாடுகளின் சாகுபடியில் இது முதலிடம் பெறுகிறது. சென்ட்ராந்தீரம் ஆந்தெல்மின்டிகம் (Centrantherum anthelminticum). இதை, காட்டுச் சீரகம் என்பர். பூச்சி, புழுக்களை ஒழிக்க வல்லது. அனசைக்ளஸ் பைரீத்ரம்(Anacyclus pyrethrum). இதை அக்கிரகாரம் என்பர். இதன் வேரில், பெல்லிடோரின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இதையே சிலர் பைரீத்ரின் என்பர். பெல்லிடோரின் ஒரு நச்சுப் பொருளாகும். பொதுவாக, மீன், நத்தை முதலியவற்றைப் பாதிக்கும். ஆர்டெமீசியா மேரிடைமா (Artemisia maritima). இது சான்டோனைன் என்ற மருந்து தயாரிக்க உதவும் சிறந்த மணம் கொண்ட செடியாகும். இதைக் கொண்டு வயிற்றிலுள்ள பூச்சிகளை நீக்க முடியும். ஆ. ஆப்சின்தியம் (A. Absinthium). காஷ்மீர், லடாக் பள்ளத்தாக்குகளில் பாதை ஓரங்களில் பெருவாரியாகக் காணப்படும். இப்பாதைகளில் செல்லும் பயணிகளுக்கு நரம்புத் தொடர்பான குறைகள் மற்றும் தலைவலி தோன்றுவதுண்டு. அதற்கு இச்செடியிலிருந்து வரும் எண்ணெயே காரணமாகும். ஆ. வல்கரிஸ் (A.vulgaris). மாசிப் பத்திரி அல்லது மாசிப் பச்சை எனப்படும் இது மருந்தாகப் பயன்படுகிறது. யூபடோரியம் அர்டிசிஃபோலியம் (Eupatorium urticifolium). இந்த அமெரிக்கச் செடியை, பாம்பு வேர்ச் செடி என்பர். இச்செடியை உண்ணும் போது, கால்நடைகளுக்கு நடுக்க நோய் (trembles) தோன்றுவதுண்டு. செடியின் இலைகளை உண்ட கால்நடைகளின் பால் அல்லது இறைச்சியை உட்கொள்ளும் மனிதனுக்கும், பால் நோய் (milk sickness) தோன்றும். இதற்குக் காரணம் பாலிலுள்ள நச்சுப் பொருள்களேயாகும். காய்ச்சினாலும், பாலிலுள்ள நச்சுத் தன்மை மறைவதில்லை. சீனிஷியோ (senicio). இவ்வினச் செடிகள் நச்சுத் தன்மை கொண்டுள்ளமையால், மனிதருக்கும், கால்நடைகளுக்கும் தீமை செய்யும். ஸ்பெரான்தஸ் இண்டிகஸ் (Sphaeronthus indicus) என்ற கொட்டைக் கரந்தை, எக்லிப்டா இண்டிகா (Eclipta indica) என்ற கரிசலாங்கண்ணி, டிரைடாக்ஸ் ப்ரகூம்பன்ஸ் (Tridax procumbens) என்ற நற்றையிலைக் கையாந்தரை. லானியா பின்னேடிஃபிடா (Launiea pinnatifida) என்ற எழுத்தாணிப் பூண்டு, சசூரியா லப்பா (Sussurea lappa) என்ற கோட்டம் முதலியவை சித்த, ஆயுர்வேத, நாட்டு மருத்துவத்தில் பெரிதும் பயன்படும். சாந்தியம் ஸ்ட்ரூமாரியம்(Xanthium strumarium) என்ற மருள் ஊமத்தைச் செடியிலிருந்து மஞ்சள் சாயம் காய்ச்சுவர். இக்குடும்பத்தைச் சேர்ந்த பெருவாரியான இனங்கள் தோட்டங்களில், அழகுக்காக வளர்க்கப் படும். ஹீலியான்தஸ் அனூஸ் (Helianthus annus) என்னும் சூரிய காந்தி, ஆஸ்டர் (aster) என்னும் டெய்சி, டாஜடிஸ் (tegatis) என்னும் மேரி கோல்ட் அல்லது துளுக்காத சாமந்தி, ஜினியா (zinae), செவ்வந்தி (chrysanthemum) முதலியவை தோட்டங்களிலும், பூங்காக்களிலும் வண்ண மலர்களுக்காக வளர்க்கப்படுகின்றன. —தி. ஸ்ரீ கணேசன் நூலோதி. கே.கே. ராமமூர்த்தி, தமிழ்நாட்டுத் தாவரங்கள், தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1979; J. Hutchinson, Evolution and Phylogeny of Flowering Plants, Academic Press, London, 1969; H. M. Lawrence, Taxonomy of Vascular Plants, Oxford, & IBH Publishing Co., New Delhi, 1969. சூரியச் சூடாக்கம் இது சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை, தொழில் நுட்பத் தேவைகளுக்கென, வெப்ப ஆற்றலாக மாற்றும் முறையாகும். சூரியனின் ஆற்றல் மின் காந்த ஆற்றலாக 0.3-3.1 nm என்ற அலை நீளத்தில் கிடைப்பதை, வெப்பத் திரட்டிகளின் மூலம் திரட்டி, ஏறத் தாழ 70–7000°F வெப்ப நிலையைப் பெறலாம். இவ்வுயர் வெப்ப நிலையைப் பல்வேறு எந்திரவியல், நீர்மவியல் இயக்கங்களுக்கு உட்படுத்தலாம். சூரிய ஆற்றல் முதன்மையாகப் பொருள்களை உலர்த்தவும், நேரிடையாக வெப்ப ஆற்றலாக நீரைச் சூடுபடுத்தவும், குளிர் காலத்தில் கனப்பு அளிக்கவும், மிகைப்படுத்தப் பட்டால், உலோகங்களை உருக்கவும் பயன்படுகிறது. சூரிய ஆற்றலை நேரிடையாக மின்னாற்றலாக்கியோ, வெப்பப் பொறிகளுக்கு ஊட்டியோ ஆற்றலைப் பெறலாம். வெப்பத்தினை எளிதில் உட்கவரும் தன்மையுடைய உலோகத்தில் மிகு கருமை நிறம் பூசப்பட்டிருக்கும். ஏனெனில், கருமை நிறத்திற்கு வெப்பத்தினை முழுவதுமாக உட்கவரும் தன்மையுண்டு. கருமை நிறம் பூசப்பட்ட உலோகத் தகடுகளைத் தகுந்த கோணத்தில், சூரியனின் ஒளிக் கதிர்கள் நேரிடையாகப் படுமாறு எதிர் நோக்கி வைக்க வேண்டும். இத்தகடுகள் சூரியனின் வெப்ப ஆற்றலை உட்கவர்ந்து தகடுகள் அமைந்துள்ள கலத்திலிருக்கும் நீரைச் சூடாக்கி நீராவியை உற்பத்தி செய்ய முடியும். சூரிய உப்பாக்கல். இது பழமையான முறையாகும். உப்பளங்களில் கடல் நீரைத் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் நீரை ஆவியாக்கிய பின், உப்பு சேகரிக்கப்படுகிறது. உப்பு நீர்ப் பதனம். பாலைவனங்களிலும், நிலத்தடி நீர் உப்புப் பொருள்களைக் கொண்டிருந்தாலும், அந்நீரைக் குடிநீராக்க உதவும் முறையே உப்பு நீர்ப் பதனம் (salt water treatment) ஆகும். இம்முறையில் சூரியனின் ஆற்றல் இன்றியமையாததாகக் கருதப் படுகிறது. உப்பு நீர்ப் பதன முறையில், ஒரு தொட்டியில் உப்பு நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பகுதியில் மூடியுள்ள ஒளியூடுருவுக் கண்ணாடிகள் வழியே, சூரியனின் கதிர்க் கற்றைகள் உட்புகுந்து, நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கும். இந்நீராவிகள் மேற்சென்று குளிர்ந்து, வடிகுழாய்கள் வழியே சென்று பின், குடி நீர்த் தொட்டியை அடையும். இவ்வகைக் குடி நீர் எவ்வித உப்புக் கலப்புகளும் இன்றி, அருந்தத் தக்க அளவில் இருக்கும். உப்பு நீர் சூரியக் கற்றை மூலம் ஆவியாக்கப்படுகையில், அதில் கரைந்துள்ள உப்புப் படிவங்கள் நீங்கி விடும். உப்பு நீர்ப் பதன முறை கிரேக்கத் தீவுகளிலும், ஆஸ்திரேலியாவின் மையப் பகுதிகளிலும் மையக் கிழக்கு நாடுகளிலும் இந்தியாவிலும் பரவலாகத் தற்போது பயன் படுகிறது. சுடு நீர் ஆக்கிகள் (water heaters). வீடுகளுக்கும், தொழிலகங்களுக்கும் சுடு நீர் இன்றியமையாத் தேவையாக இருப்பதை, சூரிய ஆற்றல் மூலம் பெருமளவில் பெற இயலும், இவ்வகைச் சுடு நீர் ஆக்கிகள் வெப்ப வடி குழாய்த் தத்துவத்தில் (thermosyphon system) இயங்குகின்றன. வெப்ப வடி குழாய்த் தத்துவம், சுடு நீரின் அடர்த்தி குறைவதால், வேறு எந்தப் புற ஏற்று விசையுமின்றி தானே மேலேறி, பின் வடிதலாகும். சுடு நீர் ஆக்கிகளில் பெரும்பாலும், சம தளத் தட்டு வகை வெப்பத் திரட்டிகள் பயன்படுகின்றன. ஏற்புத் தகடு (absorption plate) பெரும்பாலும் தாமிரம், அலுமினியம் போன்ற உலோகங்களால் செய்யப் பட்டு, அதனோடு உட்புறத்தில் மெல்லிய குழாய் வழிகளைக் கொண்டிருக்கும். இக்குழாய் வழிகள் மேல் மற்றும் கீழ்த் தொட்டிகளோடு முறைப்படி இணைக்கப் பட்டிருக்கும். இதன் அமைப்பை வரைபடத்தில் காணலாம். இம்முறையில், நீரின் வெப்ப நிலை கோடைக் காலங்களில் ஏறத் தாழ 180° F கொண்டும், கார் காலங்களில் ஏறத் தாழ 120°F கொண்டுமிருக்கும். வசதியுள்ள சூழ்நிலையில் சராசரி சுடு நீர் உற்பத்தித் திறன் வெப்பத் திரட்டியின் ஒரு சதுர அடிப் பரப்பிற்கு 1 காலன் சுடுநீராகும். இவ்வகைச் சுடு நீராக்கிகள் இஸ்ரேல், வட ஆஃப்ரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் இந்தியாவிலும் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய ஆற்றல் அடுப்பு. மக்களின் அன்றாட வாழ்விற்குச் சூரிய ஆற்றலின் பயனைத் தற்போது நடைமுறையிலுள்ள சூரிய அடுப்பின் உதவியினால் சமையலை விரைவாகவும், சிக்கனமாகவும் நடை பெறச் செய்வதன் மூலம் காணலாம். இவ்வடுப்பு படம் 2 இல் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரண்டு தட்டுகள் (trays) இருக்கும். ஒன்று ஏறத் தாழ 66×66×17 செ.மீ. நீள் சதுரமாகவும் மற்றொன்று ஏறத் தாழ 60×42×12 செ.மீ. அளவுள்ள கோடக வடிவாகவும் (trapezoidal) மென் எஃகில் 1.25 மி.மீ. கனத்திற்குச் செய்யப்பட்டிருக்கும். இரண்டு தகடுகளுக்குமிடையே ஏறத் தாழ 5 செ.மீ. இடைவெளி இருக்கும். இந்த இடைவெளி மரத் தூள், ஒலி வெப்பத் தடைக் காப்பு, சலனப் பொருள் அல்லது கண்ணாடி இழைக் கம்பளி (glass wool) போன்ற வெப்பக் காப்புப் பொருள்களால் நிரப்பப்பட்டிருக்கும். இவ்வமைப்பு பெரும்பாலும், 3 மி.மீ. கனமுள்ள கண்ணாடிக் கூட்டினுள் இறுக்கிப் பொருத்தப்பட்டிருக்கும். கூட்டின் வெளிப்புறமும், உட்புறமும் கரும் பூச்சுப் பூசப்பட்டிருக்கும். வெப்ப நிலை இவ்வமைப்பினால் 60°C அளவிற்கு எளிதில் உயரும். பல பயன்களைத் தர வல்லதாயினும், தட்ப வெப்ப நிலை, எடுத்துக் கையாளுதல், அடுப்பினைப் பொருத்துதல் அல்லது நிலைப்படுத்துதல், இட அமைவு, செயலாக்குவதற்கான கால அளவு ஆகியவை சூரிய அடுப்பைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள். சூரிய ஆற்றல் சூடேற்றிகள் சூரிய ஆற்றலைக் கொண்டு, கட்டடங்களையோ, சில அமைப்புகளையோ சூடான நிலையில் வைத்திருக்கலாம். இதைச் செயல் படுத்தத் தகுந்த, தட்டு அமைப்புடன் கூடிய சூரிய ஆற்றல் சூடேற்றிகள் வழக்கில் உள்ளன. துத்தநாகத்தினாலான நீள் சதுரத் தகடுகளால் உருவாக்கப் பட்ட கலனும் உள்ளது. இதன் அளவீடு ஏறக் குறைய 112x80×10 செ.மீ. இருக்கும். 90 லி. கொள்ளளவு இருக்கக் கூடும். வெப்பத் தொடர்பிலாத நுண்ணிழைகளாலான கண்ணாடித் தகட்டு அமைப்புகள் துத்தநாகத் தகடுகளுக்குக் கீழே பொருத்தப்பட்டிருக்கும். தகட்டின் மேலே, சன்னல் கண்ணாடிகளாலான இரண்டு மூடிகள் 3 மி.மீ. கனத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். இச்சன்னல் கண்ணாடி களின் மேற்பகுதி கரும் பலகை வண்ணப் பூச்சால் பூசப்பட்டிருக்கும். சூடேற்றப்பட்ட நீர், சூரியச் சூடு கலத்தின் மேற்பகுதியிலிருந்து வெளியேறும். குளிர் நீர் புனல் வழியாக ஊற்றப்படலாம். பொதுவாக, இவ்வகை அமைப்புகள் கிடை மட்டத்திற்கு 11° கோணத்திலிருக்கும். நடைமுறையில் காலை 8 மணியளவில் நீர் ஊற்றப் பட்டு, சூரிய ஒளிக் கதிர்கள் தகடுகளில் முழுமையாகப் படும்படி வைக்கப்படும். அவ்வப்போது சுடுநீர் பயன்பாட்டிற்கு எடுக்கப்படலாம். இரவு நேரங்களில், வெப்பப் பாய்வு வெளியேறாத வகையில், வெப்பக் காப்பாக மூடப்பட்டிருக்கும். இவ்வமைப்பில், கணிப்பின் படி மாலை 4 மணியளவில் வெப்ப நிலை ஏறத் தாழ 65°C இருக்கக் கூடும் என்று கண்டறிந்துள்ளனர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய ஆற்றலின் நிறை குறைகள் நிறைகள். எளிய அமைப்பு, எரி பொருள் முதலீடு இல்லாமை, உயவிடல், குளிர்வித்தல், சிக்கலற்ற திட்ட அமைப்பு, இயக்க மாறுதல், வரம்பு மீறிய இயல்புகள் போன்றவற்றால், சூரிய ஆற்றலில் இயங்கும் அமைப்பு நிறுத்தப்படுவதோ, ஆபத்தை விளைவிப்பதோ இல்லை. குறைகள். அமைப்பின் அளவீடு அடக்கமாக இராது. கிடைக்கக் கூடிய ஆற்றல் சீராக இராது. வானிலை மாற்றத்தால், சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றலைத் தொடர்ந்து சீராகச் சேகரிக்க இயலாது; பகல் நேரத்தில் மட்டுமே சூரிய ஆற்றலைச் சேகரிக்க இயலும்; இரவு நேரத்தில் பயன்படுத்த வேண்டுமாயின், பகல் நேரத்தில் சேகரித்து வைத்துப் பின்னர், பயன் படுத்தக் கூடிய சேகரிப்பிகள் (collectors) தேவைப் படும். மேகக் கூட்டங்கள், மந்தமான தட்ப வெப்ப நிலை ஆகியவை சூரிய ஆற்றல் சேகரிப்பைத் தடை செய்யும். ஆற்றல் சேகரிப்பை விட, அதைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் முறை சிக்கலானதும், சற்றே செலவு மிகுதியானதுமாகும். —கே.ஆர். கோவிந்தன் —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Frank Kreith, Principles of Heat Transfer, Third Edition, Harper and Row Publishers, New York, 1973. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> சூரியச் சேய்மை விண் பொருள்கள், சூரியனைச் சுற்றி நீள் வட்டப் பாதைகளில் சூரியனுக்கு மிகு தொலைவில் செல்லும் நிலை சூரியச் சேய்மை (aphelion) எனப்படும். புவி சூரியனின் சேய்மை நிலைக்கு ஜூலை 3ஆம் நாள் வரும் போது, அதன் தொலைவு a (1+e) ஆகும். இங்கு a, நீள் வட்டப் பாதையின் அரைப் பேரச்சையும், e மைய அகற்சியையும் குறிக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —பங்கஜம் கணேசன் சூரியத் திருப்பு நிலை புவியின் சுற்று வழி இயக்கத் தளத்திற்கு அதன் அச்சு சாய்வு நிலையிலிருப்பதால், ஏற்படும் பருவ கால மாறுதல்களைக் கொண்டும், புவி சூரியனைச் சுற்றுவதால் உண்டாகும் இரவு, பகல் நேரங்களில், சூரிய வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களைக் கொண்டும், ஓர் ஆண்டின் பருவ காலம் கோடைக் காலம், குளிர் காலம் மழைக் காலம், இலையுதிர் காலம் என நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மார்ச் திங்கள் 21 ஆம் நாள் வான நடுவரையில் (celestial equator) உள்ள சூரியன் தன் தோற்றப் பாதையில் (ecliptic) வடகோளத்தில் சென்று, ஜூன் 21 அல்லது 22 ஆம் நாள் (லீப் ஆண்டைப் பொறுத்து) நண்பகல் நேரத்தில், நடு வரையிலிருந்து மீப்பெரு உயரத்தை அடைந்து, அந்நிலையிலேயே சில நாள் இருக்கும். கடக ரேகையும் உச்சி வட்டமும் சேரும் இந்நிலை சூரியத் திருப்பு நிலை (solstice) எனப்படும். லத்தீன் மொழியில் சால்ஸ்டிஸ் என்னும் சொல் சூரியனையும், நிற்பதையும் (to stop) குறிக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வட கோளத்தில், இக்காலம் நல்ல கோடைக் காலமாக இருப்பதால், இந்நிலை கோடைத் திருப்பு நிலை (summer solstice) எனக் குறிக்கப்படும். பின்னர், சூரியன் செப்டம்பர்த் திங்கள் 22 அல்லது 23 ஆம் நாள் நடு வரையை அடைந்து, தென்கோளப் பகுதிக்குச் செல்லும். டிசம்பர்த் திங்கள் 22 அல்லது 23 ஆம் நாள் மீப்பெரு மதிப்பை அடைந்து, மகர ரேகையை அடையும். இந்நிலை குளிர் காலத்தில் வருவதால், இதைக் குளிர் திருப்பு நிலை (winter solstice) என்பர். மீண்டும், வடக்கே நகர்ந்து, மார்ச் 21 ஆம் நாள் நடு வரையை அடையும். கோடைத் திருப்பு நிலை, குளிர் திருப்ப நிலை இரண்டும் திருப்புப் புள்ளிகள் (solstitial points) ஆகும். திருப்புப் புள்ளிகளில் இருக்கும் போது, சூரியனின் மீப்பெரு கோணத் தொலைவு (angular distance)ல = 23°5' ஆகும். —பங்கஜம் கணேசன் சூரிய நிற மாலை சூரியனிடமிருந்து பெறப்படும் கதிர்வீச்சு முழுக் கரும் பொருளின் கதிர் வீச்சை ஒத்துள்ளது. சூரிய நிற மாலையில் (solar spectrum), சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை 5750 Kக்கான பெரும ஆற்றலின் அலை நீளம் 5000 A ஆகும். சூரிய நிற மாலை மிகு எண்ணிக்கையான கருங் கோடுகளைக் கொண்டுள்ளது. இவை ஃபிரனோஃபர் வரிகள் (Fraunhofer lines) எனப்படும். இந்தக் கோடுகள் 1802இல் வோல்லாஸ்டன் என்பாரால் முதலில் கண்டு பிடிக்கப்பட்டன. பின்னர், 1814இல் ஃபிரனோஃபர் தெளிவான கருத்தை அளித்தார். இக்கோடுகள் முழு வரிசை நிற மாலையிலும் பெறப்பட்டன (அதாவது புற ஊதா, அகச் சிவப்பு), பல வரிகளின் அலை நீளத்தை நுணுக்கமாக ஃபிரனோஃபர் கணக்கிட்டார். மேலும், ஒரு சில வளிமங்களும், ஆவிகளும் வெளியிடப்படுவதால், உருவாகும் ஒளிர் வரிகளையும் (bright lines) கண்டறிந்தார். கிர்சாஃப்பின் கதிர் வீச்சு விதியின் படி, குறை வெப்ப நிலையில் உள்ள எந்தவொரு பொருளும், எல்லா அலை நீளங்களையும் கொண்ட கதிர் வீச்சை உட்கவரும். அவை மின்னிறக்கம் (electric discharge) பெறும் போது, கதிர் வீச்சை வெளியிடுகின்றன. சூரிய நிற மாலை ஓர் உட்கவர் நிற மாலை (absorption spectrum) ஆகும். புவி வளி மண்டலத்திலுள்ள குளிர் வளிமங்களையும், ஆவிகளையும், சூரியனின் வெளி வளி மண்டலத்தையும் பொறுத்து ஃபிரனோஃபர் வரிகள், உட்கவர் வரிகள் (absorption lines) எனப்படுகின்றன. மிகு வெப்ப நிலையிலுள்ள சூரியனின் மையப் பகுதி ஒளி மண்டலம் (photosphere) எனப் படும். ஒளி மண்டலத்தைச் சூழ்ந்துள்ள பகுதிக்கு, நிற மண்டலம் (chromosphere) என்று பெயர். இது ஒளி மண்டலத்தை விடக் குறைந்த வெப்ப நிலை உடையது. ஃபிரனோஃபர் வரிகளின் அமைப்பைக் கொண்டு, சூரியனின் வளி மண்டலத்திலுள்ள வளிமங்களின் தன்மையை அறியலாம். இந்த வழி முறையில் சூரியனின் வளி மண்டலத்தில், அறுபதுக்கு மேற்பட்ட வளிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தில் ஹீலியத்தைத் தனித்துப் பிரிப்பதற்கு முன்பே, சூரிய நிற மாலையின் ஃபிரனோஃபர் வரிகளின் ஆய்விலிருந்து, முதன் முதலாக ஹீலியம் வளிமம் இருப்பது கண்டறியப்பட்டது. ஃபிரனோஃபர் வரிகள் அகர வரிசையில் குறிக்கப்பட்டுள்ளன. சில வரிகளின் அலை நீளங்களும், அவற்றிற்குக் காரணமான தனிமங்களும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டவணை —பெ. துரைசாமி நூலோதி. Brijlal and N. Subrahmanyan. Heat and Thermodynamics, Eighth Edition, S. Chand and Co., New Delhi, 1982. சூரியப் பாதை <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வானக் கோளமும், புவிக் கோளப் பாதையின் தளமும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் பெருவட்டம் சூரியப் பாதை (ecliptic) எனப்படும். சூரியன் ஓராண்டில் வான கோளத்தில் சுழலும் தோற்றப் பாதை (apparant path) எனவும் கூறலாம். சூரியப் பாதையும், வான நடு வரையும் ஒன்றுக்கொன்று ஏறக் குறைய 23°27' கோண அளவில் வெட்டிக் கொள்கின்றன. புவி, தன் அச்சுடன் உண்டாக்கும் சாய் நிலைக் கோணத்திற்கு இது சமமாகும். இக்கோணம் ω, சூரியனின் தோற்றப் பாதையின் சரிவு (obliquity of the ecliptic) எனப்படும். வான கோள ஆயங்களின் ஒரு பகுதியான வான அகலாங்கு (celestial latitude), வான நெட்டாங்கு (celestial longitue) ஆகியன சூரியப் பாதைத் தளத்திலிருந்தே அளக்கப் படுகின்றன. வான நடு வரையும் சூரியப் பாதையும் வெட்டிக் கொள்ளும் கணுக்கள் (nodes), சம இரவுப் புள்ளிகள் (equinoctial points) எனப்படும். சூரியன் தெற்கிலிருந்து வடக்கே செல்லும் போது, நடு வரையை வெட்டும் புள்ளி மேடமுதற் புள்ளி ‘r’ (first point of Aries) என்றும், வடக்கிலிருந்து தெற்கே செல்லும் போது, வெட்டும் புள்ளி இலையுதிர்புள்ளி (first point of libra) என்றும் குறிக்கப்படுகின்றன. சூரியன், மேட முதற் புள்ளியை மார்ச் திங்கள் 21 ஆம் நாளும், இலையுதிர் புள்ளியைச் செப்டம்பர் திங்கள் 23 ஆம் நாளும் கடக்கும். அயன சலன (precession) மாற்றத்தால், ஆண்டிற்கு r உம் \approx= உம் பின்னோக்கி நகருவதால், r இப்போது மீன ராசியில் உள்ளது. இவ்வாறே, சூரியப் பாதை வான கோளத்தை வெட்டும் புள்ளிகள் சூரியத் திருப்ப நிலைப் புள்ளிகள் (solstitial points) எனப்படும். சூரியன் வட கோளத்தில் மார்ச் 21 ஆம் நாள் முதல் செப்டம்பர் 23 ஆம் நாள் வரை இருக்கும். அப்போது ஜுன் 22 ஆம் நாள், சூரியன் மிக உச்ச நிலையான வான கோளத்தை அடைந்து, மீண்டும் திரும்பும். இந்தப் புள்ளி, கோடைத் திருப்ப நிலைப் புள்ளி (summer solstice) என்று குறிப்பிடப்படும். செப்டம்பர் 23 ஆம் நாள் முதல் மார்ச் 21 ஆம் நாள் வரை சூரியன் தென் கோளத்தில் இருக்கும். டிசம்பர் 22 ஆம் நாள் வான கோளத்தை அடைந்து, திரும்பும் இப்புள்ளிக்கு மாரித் திருப்ப நிலைப் புள்ளி (winter solstice) எனப் பெயர். சூரியப் பாதை மேல் சம இரவுப் புள்ளிகள், திருப்பு நிலைப் புள்ளிகள் என நான்கு புள்ளிகள் உள்ளன. —பங்கஜம் கணேசன் சூரிய மண்டலம் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ எனும் ஒன்பது கோள்களும், ஆயிரக் கணக்கான சிறிய கோள்களும் (asteroids) சூரியனை மையமாகக் கொண்டு, அதைச் சுற்றி வருகின்றன. இது சூரிய மண்டலம் (solar system) எனக் குறிப்பிடப்படுகிறது. இக்கோள்கள் யாவும் சூரியனை விட மிகச் சிறியவை; ஆனால், புவியை விடச் சில கோள்கள் மிகப் பெரியவை. இவை அட்டவணை 1இல் தரப்பட்டுள்ளன. இதைக் கொண்டு, புவியைத் தவிரப் புதன், வெள்ளி ஆகிய கோள்கள் அண்மை அல்லது உட்கோள்கள் (inferior planets) என்றும், ஏனைய கோள்கள் புறக் கோள்கள் (superior planets) என்றும் குறிப்பிடப்படுகின்றன. துணைக் கோள்கள் (satellites), எரி விண் மீன்கள் (meteoroids) வால் விண் மீன்கள் (comets) ஆகியவையும், சூரிய மண்டலத்தில் உள்ளன. சூரிய மண்டலத்திலுள்ள பொருள்களுக்கிடையே செயற்படும் இடையீட்டு விசை ஈர்ப்பு விசையாகும். கோள்களில் ஒன்றுக்கொன்று மிக அருகில் வாரா வண்ணம், அவற்றின் சுற்றுப் பாதைகள் அமைந்துள்ளன. பெரிய ஆறு கோள்களுக்குச் சராசரி வேற்று மைய எண்கள் 0.05ஐ விடக் குறைவு. மொத்தக் கோண உந்த வெக்டருக்குச் செங்குத்தான மாறாத்தாணத்துடன், 2°ஐ விடக் குறைவான சராசரி சாய் கோணத்தையும் உண்டாக்கும். புதன், செவ்வாய், புளூட்டோ ஆகிய மூன்று சிறிய கோள்களும் மோதலுக்கு உட்படுவதில்லை. ஏனெனில், புளூட்டோ, நெப்டியூனுடன் ஒத்திசைவு நிலையில் இருக்கும். கோள்களின் அமைப்பு நிலையாக இருப்பதுடன், 5×109 ஆண்டுகளுக்குப் பின், சூரியன் முடிவாக விரிவடையும் வரை இவ்வாறு தொடர்ந்து இருக்கும். துணைக் கோள் சுற்றுப் பாதைகளும் இவ்வாறு தொடர்ந்து நிலைத் தன்மை பெற்றிருக்கும். ஈர்ப்பு விசையைத் தவிர, சூரியன் 1.4×104 எர்க்/செ.மீ²/நொடி என்ற ஆற்றல் அடர்த்தியுடன், புவியை நோக்கிக் கதிர் வீச்சைத் தருகிறது. இதில் பெரும்பாலான ஆற்றல் 0.4–0.7 மைக்ரோ மீட்டர் வரை அலை நீளப் பார்வைப் புலத்தில் இருக்கும். மேலும், சூரிய மண்டலம் சூரியக் காற்றில் நொடிக்கு 400–500 கி.மீ. வேகத்தில் புரோட்டான்களைக் கொண்ட துகள்களை வெளியிட்டு, நொடிக்கு 1012 கிராம் வீதத்தில் விரிவடையும். இத்தகைய சூரியக் காற்றடர்த்தி, புவிக்கருகில் நொடிக்கு 5 துகள்கள் என்னும் வீதத்தில் இருக்கும். மேலும் 10-4G அளவுள்ள காந்தப் பாயமும் வெளியிடப்படுகிறது. சூரியப் புள்ளிச் செறிவின் மாறுபாட்டைப் பொறுத்துக் காந்தப் புலச் செறிவுகளும் துகள் ஆற்றலும் மாறுபாடு அடைகின்றன. இம்மாறுபாடு, சூரியக் காற்றுக் கோள்களுக்கிடையே இடையீட்டையும் பாதிக்கிறது. இந்த இடையீடு, கோள்களில் காந்த மற்றும் சுற்றுப் புறப் பண்புகளைப் பொறுத்து மாறுபடும். அட்டவணை 1, சூரிய மண்டலத்தில் உள்ள முதன்மைப் பொருள்கள் 1 புவிநிறை = 6.0 X 1077 கிராம்; 1 A.U. = 1.5 X 10⁸ கி.மீ. சூரிய நிற மாலையிலிருந்து, சூரியனின் நிறையில் 74.8% ஹைட்ரஜன், 24% ஹீலியம், நியான், 1% கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், 0.2% கனமான தனிமங்கள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கோள்களின் அடர்த்தி, இறுக்கம், கூட்டமைப்பு இவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. இறுக்கத்திற்கான திருத்தம் செய்யப்பட்ட பின் கோள்களை, அவற்றில் மிகுதியாக உள்ள தனிமங்களைப் பொறுத்து, நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை இரும்பு மிகுதியாக உள்ள புதன், சிலிக்கேட் மிகுந்துள்ள வெள்ளி, புவி மாற்றுச் சனி, பனிக் கட்டி மிகுதியாக உள்ள யுரேனஸ், நெப்டியூன் ஆகும். சிலிக்கேட் தனிமம் மிகுதியாக உள்ள விண் பொருள்கள் சந்திரனும், குருவின் துணைக் கோள்களான இயோ (lo) ஈரோப்பாவும் (europa) ஆகும். பனிக் கட்டி மிகுதியாகக் காணப்படும் பிற துணைக் கோள்கள் ஜோவியன் துணைக் கோள்களின் வெளிப் புறமுள்ள காலிஸ்ட்டோ (callisto) கனிமேடும் (ganymade), சனிக்கோளின் துணைக் கோளாகிய டைட்டேனும் (titan) ஆகும். துணைக் கோள்கள் புவியின் நிறையை விட 0.04 மடங்கு அளவில் குறைவும், மொத்தமாக 0.13 மடங்கு புவி நிறையும் கொண்டுள்ளன. சிலிக்கேட் தனிமம் மிகுதியாக உள்ள விண் பொருள்கள் 3×10-4 மடங்கு புவி நிறை கொண்டு, செவ்வாய், வியாழன் ஆகிய இரு கோள்களுக்கிடையே காணப்படுகின்றன. வால் விண் மீன்கள் (comets) நீள் வட்டப் பாதையில் சுழலும் பனிக் கட்டிப் பொருள்களாகும். 10-7 மடங்கு புவி நிறையுள்ள வால் விண் மீன்கள் மட்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நெப்டியூனுக்கு அப்பால், வால் விண் மீன்கள் மிகுதியாக உள்ளன என்பது கருதுகோளாகும். விண் பொருள்கள் அல்லது வால் விண் மீன்களிலிருந்து புவியை நோக்கி விழும் விண் கற்கள் சூரிய மண்டலத் தோற்றம் பற்றி அறிய உதவுகின்றன. சூரிய மண்டலக் காலக் கணிப்புத் தகவல்கள் சூரிய மண்டலம் (4.6 ± 0.1) 109 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று கூறுகின்றன. விண் மீன்களின் தோற்றம் பற்றிய விண் வெளி ஆய்வுகள், சூரிய மண்டலம் வளிமம் மற்றும் துகள்களால் ஆன மேகக் கூட்டத்திலிருந்து உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன. கோள்களின் அடர்த்தி பற்றிய தகவல்கள், வளிமமும், துகளும் சூரியனின் வெப்பம் சுருங்கியதால், உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. குருவும், சனியும் இவ்விதிக்கு விலக்கானவை. சந்திரன், இயோ. ஈரோப்பா என்னும் மூன்று துணைக் கோள்களும் உயர் வெப்ப நிலைச் சுருக்கத்தால் உருவானவை. தற்போது உள்ளதைப் போன்று 107 மடங்கு அளவுள்ள சூரியக் காற்று, மிகுதியாக உள்ள ஹைட்ரஜன் போன்ற வளிமங்- களைக் கோள்களிலிருந்து வெளியேற்றி விட்டன என்றும் தெரிய வரும். —எம் அரவாண்டி —வெ. ராதாகிருஷ்ணன் சூரிய மாறிலி சூரியன், வெப்பக் கதிர் வீச்சின் மூலமாகும். இது அனைத்துத் திசைகளிலும் வெப்ப ஆற்றலை வெளி விடுகிறது. வளி மண்டலம், முகில், தூசி இவற்றால் உட்கவரப்பட்டும், எதிரொளிக்கப் பட்டும், சிதறடிக்கப் பட்டும் போனது போக வெளியிடப்படும் ஆற்றலின் எஞ்சிய மிகச் சிறு பகுதி மட்டுமே புவிப் பரப்பை அடைகிறது. இவ்வாறு, புவிப் பரப்பை அடையும் கதிர் வீச்சின் அளவைக் கொண்டு சூரியனின் வெப்ப நிலையைக் கணக்கிடலாம். இதற்குச் சூரிய மாறிலியை (solar constant) அறிய வேண்டும். சூரிய மாறிலி என்பது சராசரிச் சூரிய நாளொன்றில் நண்பகல் வேளையில் சூரியனிடமிருந்து, புவியின் சராசரித் தொலைவில் வளி மண்டலத்திற்கு அப்பால் சூரியக் கதிர்களுக்கு நேர் குத்தாக வைக்கப் பட்ட முழுக் கரும் பரப்பு ஒன்றின் ஓரலகு பரப்பில் ஒரு நொடியில் வந்தடையும் சூரியக் கதிர் வீச்சின் அளவாகும். சூரிய மாறிலியைச் சூரியக் கதிர் வீச்சு அளவியால் (pyrheliometer) அளவிடலாம். இந்த அளவிகள், நீர் பாய்ச்சுச் சூரியக் கதிர் வீச்சு அளவி, நீர் கலக்குச் சூரியக் கதிர் வீச்சு அளவி, ஆங்ஸ்ட்ராம் சூரியக் கதிர் வீச்சு அளவி எனப் பல வகைப் படுகின்றன. சூரியக் கதிர் வீச்சு அளவியைக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், தெரிந்த பரப்பால் உட்கவரப்படும் வெப்ப ஆற்றலின் அளவைக் கணக்கிடலாம். வளி மண்டலத்தால் உட்கவரப்படும் விளைவை நீக்க, ஒரே நாளில் மாறாத வளி மண்டல நிலையில் சூரியனின் வெவ்வேறு குத்துயர நிலைகளில் சூரிய மாறிலியைக் கணக்கிட வேண்டும். S என்பது பெறப் பட்ட சூரிய மாறிலி, S₀ மெய் சூரிய மாறிலி, Z சூரியனின் குத்துயர நிலை. எனவே S=S₀aSecZ log S = log S₀ + SecZ.loga இங்கு a மாறிலி ஆகும். Sec Z இன் மதிப்பை X-அச்சிலும், log S இன் மதிப்பை Y-அச்சிலும் கொண்டு ஒரு வரை படம் வரைய வேண்டும். வரை படம் ஒரு நேர் கோடாக அமையும். Y-அச்சை வெட்டும் புள்ளியின் மதிப்பு log S₀ ஆகும். S₀இன் மதிப்பிலிருந்து சூரிய மாறிலியின் மதிப்பைக் கணக்கிட முடியும். ஆங்ஸ்ட்ராம் சூரியக் கதிர் வீச்சு அளவி. இதில் சம அளவிலான இரண்டு கருமையாக்கப்பட்ட A, B என்ற பிளாட்டினத் தகடுகள் உள்ளன. A என்னும் தகடு, சூரிய ஒளி படுமாறு வைக்கப்பட்டுள்ளது. B ஆனது C என்ற உறையால் மூடப்பட்டுள்ளது. AB என்ற இரண்டு சந்திகளும், ஒரு வெப்ப மின்னிரட்டையால் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கால்வனோ அளவி பொருத்தப்பட்டுள்ளது. தகடு B வெப்பப் படுத்தப்படும் வகையில் மின் சுற்றால் இணைக்கப் பட்டுள்ளது. இதன் வெப்ப நிலையைத் தேவைக்கேற்றாற் போல், மாற்றிக் கொள்ளலாம். இரு தகடுகளும் சூரிய ஒளி படாதவாறு வைக்கப் படுகின்றன. இரு சந்திகளும் ஒரே வெப்ப நிலையில் உள்ளமையால், கால்வனோ அளவியில் விலக்கம் இருப்பதில்லை. தற்போது தகடு A சூரிய ஒளி படும் வகையிலும், B ஒளி படாத வகையிலும் வைக்கப் படுகின்றன. சூரிய வெப்பக் கதிர் வீச்சால் Aஇன் வெப்ப நிலை உயர்கிறது. கால்வனோ அளவி விலக்கத்தைக் காட்டுகிறது. B மின் சுற்றைக் கொண்டு, வெப்பப் படுத்தப் படுகிறது. கால்வனோ அளவியில் விலக்கம் சுழி ஆகுமாறு, மின்னோட்டம் சீர் செய்யப் படும். இதிலிருந்து A, B ஆகிய தகடுகள் ஒரே வெப்ப நிலையில் உள்ளமை தெரிகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஒரு நொடியில் ஒரு சதுர செ.மீ. பரப்பில் படும் வெப்பத்தின் அளவு H கலோரி ஆகும். தகட்டின் பரப்பு = A ச.செ.மீ, உட்சுவர் மாறிலி = a, தகடு A, ஒரு நிமிடத்தில் உட்கவரும் வெப்பக் கதிர் வீச்சின் அளவு = HAа கலோரி, தகடு Bஇல், ஒரு நிமிடத்தில் உருவாக்கப்படும் வெப்பத்தின் அளவு = கலோரி. தகடு B இன் மின்னழுத்த வேறுபாடு E வோல்ட், மின்சாரத்தின் அளவு I ஆம்பியர் ஆகும். எனவே, HAa = H = இதிலிருந்து S இன் மதிப்பை எளிதில் மதிப்பிடலாம். நீர் பாய்ச்சுச் சூரியக் கதிர் வீச்சு அளவி. இது எபாட், ஃபோலி ஆகியோரால் வடிவமைக்கப் பட்டது. இதில் உருளை வடிவிலான இரு சுவர்களைக் கொண்ட கலம் (A) ஒன்று உள்ளது. இதன் கீழ்ப் பகுதி, கூம்பு வடிவத்தில் இருக்கும். உட்பகுதி பிளாட்டின முலாம் பூசப்பட்டிருக்கும். சீரான வேகத்தில் நீர் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. T₁, T₂ என்ற இரு பிளாட்டின மின் தடை வெப்ப நிலை அளவிகள் முறையே உட்செல்லும். வெளி வரும் நீரின் வெப்ப நிலையைப் பதிவு செய்கின்றன. D என்பது ஒரு பிரிசுவர்; இது சூரியனிடமிருந்து வரும் வெப்பக் கதிர் வீச்சை, ஒரு குறிப்பிட்ட பரப்பின் மீது படும்படிச் செய்கிறது. வெப்பக் கதிர் வீச்சுக் கலம் Aஇல் படுகிறது; T₁, T₂ இன் வெப்ப நிலைகள் சமமாகும் படி உட்செல்லும் நீரின் வேகம் சரி செய்யப் படுகிறது. (அவை θ₁. θ₂ ஆகும்). சுருள், நீர் கலத்தின் சுவரின் மீது நன்கு படுமாறு செய்கிறது. நிலையான நிலையை அடைந்த பிறகு, சூரிய வெப்பக் கதிர் வீச்சு மறைக்கப் படுகிறது. T₁, T₂ மாறாத வெப்ப நிலையில் இருக்கும். வெப்ப நிலை அளவிகளில் (T₁, T₂) மாறாத சூரியக் கதிர் வீச்சின் போது, இருந்த வெப்ப நிலையை அடையுமாறு மின்சாரம் மாங்கனீன் சுருள் (Manganin coil) வழியாகச் செலுத்தப் படுகிறது. (அவை θ₁. θ₂ ஆகும்) மின்னழுத்த வேறுபாடு E வோல்ட் ஆகும். மாங்கனீன் சுருளின் வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் அளவு I ஆம்பியர் ஆகும். ஒரு நொடியில் உண்டாகும் வெப்பத்தின் அளவு = கலோரி கலம் (A) ஒரு நிமிடத்தில் உட்கவர்ந்த சூரியக் கதிர் வீச்சின் அளவு = கலோரி <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகின்றன.----> நீர் கலக்குச் சூரியக் கதிர் வீச்சு அளவி. இக்கதிர் வீச்சு அளவியில், வெப்பக் கதிர் வீச்சு A என்ற கருமையூட்டப்பட்ட கூம்பு வடிவக் கலத்தால் பெறப் படுகிறது. கலத்தைச் சுற்றி நீர் நிரம்பிய கலோரி அளவி (D) பொருத்தப்பட்டுள்ளது. கலக்கி, நீரின் வேகத்தை விரைவு படுத்தப் பயன்படுகிறது, நீரின் வெப்ப நிலை, பிளாட்டின மின் தடை வெப்ப நிலை அளவியைக் கொண்டு அளவிடப்படுகிறது. சூரியக் சுதிர் வீச்சு, கலத்தின் (A) மீது படுமாறு வைக்கப் படுகிறது. ஒரு நொடியில் உயர்ந்த நீரின் வெப்ப நிலை கணக்கிடப்படுகிறது. வெப்பக் கதிர் வீச்சு நிறுத்தப்பட்டு, மாங்கனீன் சுருளின் வழியாக மின்னோட்டம் செலுத்தப்படுகிறது. ஒரு நொடியில் நீரின் வெப்ப நிலை உயர்வு, சூரியக் கதிர் வீச்சின் வெப்ப நிலை உயர்விற்குச் சமமாக இருக்கும். மின்னழுத்த வேறுபாடு E வோல்ட் ஆகும். மாங்கனீன் சுருளின் வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் அளவு I ஆம்பியர் ஆகும். ஒரு நொடியில் உண்டாகும் வெப்பத்தின் அளவு = கலோரி. ஒரு நிமிடத்தில் கலம் (A) உட்கவர்ந்த சூரியக் கதிர் வீச்சின் அளவு கலோரி. இதிலிருந்து சூரிய மாறிலியை எளிதில் கணக்கிடலாம். சூரியனின் வெப்ப நிலை. சூரியனின் வெப்பமான மையப் பகுதியை ஒளி மண்டலம் (photosphere) சூழ்ந்துள்ளது. அதன் மையப் பகுதியின் வெப்ப நிலை 10⁷K ஆகும். ஒளி மண்டலத்தின் வெப்ப நிலை 6000 K. இந்த வெப்ப நிலை, சூரியனின் செயல் வெப்ப நிலை ஆகும். சூரியன் ஒரு முழுக் கரும் பொருள் கதிர் வீச்சு மூலமாகும். சூரிய மாறிலியின் மதிப்பிலிருந்து சூரியனின் வெப்ப நிலையைப் பின் வருமாறு கணக்கிடலாம். சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை T, ஸ்டீஃபன் மாறிலி σ ஆகும். சூரியனின் ஓரலகு பரப்பினின்றும் ஒரு நொடியில் வெளி விடப்படும் ஆற்றல் σT⁴ ஆகும். சூரியனின் ஆரம் r எனில், அதன் பரப்பளவு 4πr² ஆகும். சூரியனின் முழுப் பரப்பினின்றும் ஒரு நொடியில் வெளி விடப்படும் மொத்த ஆற்றல் E = 4πr²σT⁴ ஆகும். சூரியனுக்கும், புவிக்குமிடையேயான தொலைவு R எனில், சூரியனால் வெளி விடப்படும் ஆற்றல் 4πR² அளவு பரப்பின் மீது விழுகிறது. எனவே, புவியின் ஓரலகு பரப்பில் ஒரு நொடியில் ஏற்கப்படும் வெப்பம் இது சூரிய மாறிலிக்குச் சமமாகும். \begin{align} S & = \frac {r^2 \sigma T^4}{R^2} \\[6pt] T & = \big [ \frac{R^2S}{r^2\sigma}\big ]^{\frac{1}{4\end{align} இதிலிருந்து சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலையைக் கணக்கிடலாம். சூரியனின் ஆரம் r = 6.928 105 கி.மீ. சூரிய மாறிலி S = 1400 Js-1m-2 சூரியனிலிருந்து புவியின் சராசரி தொலைவு R=1.496×105 கி.மீ. ஸ்டீஃபன் மாறிலி σ = 5.75×10-8Js-1m-2K-4 சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை \begin{align}T & = \big [ \frac {(1.496 \times 10^2)^2 \times 1400}{(6.928 \times 10^5) \times 5.75 \times 10^{-5 \big ] ^\frac{1}{4} \\[6pt] T & = 5812K \end{align} எனவே, சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை ஏறத் தாழ 5800K ஆகும். சூரியனின் செயல் வெப்ப நிலை இந்த அளவை விட மிகுதி. கணக்கீடுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் சூரியனின் செயல் வெப்ப நிலை 6000 К. சூரியனின் வெப்ப நிலையை வியன் இடப் பெயர்ச்சி விதியிலிருந்து கணக்கிடலாம். வியன் இடப் பெயர்ச்சி விதி, λபெருமம்T = 0.2892 நிற மாலையின் ஆற்றல் உயர் நிலையில் இருக்கும் போது, சூரியக் கதிர் வீச்சின் அலை நீளம் λபெருமம் 4900 ×10-8 செ.மீ. ஆகும். T = = T = 5902K —பெ.துரைசாமி நூலோதி. Brijlal and N Subrahmanyam, Heat and Thermodynamics, Eighth Edition, S. Chand & Co. Ltd, New Delhi, 1982. சூரிய மின்கலம் ஆற்றலின் வளம் அனைத்து நாடுகளிலும் ஒரே தன்மையதாக இல்லை; புதை படிவ எரி பொருள் போன்ற இயற்கை ஆற்றல் வளங்கள் நாடு தோறும் வேறுபடுகின்றன. இவ்வாறே, சூரிய ஒளி மிகுந்துள்ள நாடுகளில் சூரிய ஆற்றல் மிகுதியாக இருக்கும். எனவே, நாடு தோறும் ஆற்றலுக்கான மதிப்பு வெவ்வேறாகும். புதை படிவ ஆற்றல், வளம் யாவும் தீர்ந்து ஆற்றலே அருகி விடும் நிலை ஏற்படலாம். தொழில் துறை அறிவியலின் படி, ஆற்றலின் தேவை களைச் சூரிய மூலங்களிலிருந்து ஈடு கட்ட முடியும். ஆற்றலைப் பயன்படுத்துவதில் ஆய்வுகள் தற்போது நடை பெற்று வருகின்றன. சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக அளிப்பது சூரிய மின் கலம் (solar battery) ஆகும். பல நூற்றாண்டுகளாக, கதிர் வீச்சு என்பது 2000–3000° A அலை நீளம் கொண்ட தொடர்ச்சியான ஓர் அலை இயக்கம் எனக் கருதப்பட்டு வந்தது. கி.பி. 1900இல் மேக்ஸ் பிளாங்க் என்பார் ஒரு கதிர் வீச்சு அலை இயக்கத்தின் சில பண்புகளைப் பெற்றிருப்பினும், அது தொடர்ச்சியாக இன்றி, ஃபோட்டான்களின் கட்டுத் தொகையாகும் என்றார். இத்தகைய ஃபோட்டான்களின் ஆற்றல் E=hν என்ற சமன்பாட்டால் கொடுக்கப்படுகிறது. இதில் h என்பது பிளாங்க் மாறிலி; ν என்பது கதிர் வீச்சின் அதிர்வெண். எந்த அலை நீளத்திலும், கதிர் வீச்சின் ஆற்றல் மேலே கூறப்பட்ட hν அளவின் முழு பெருக்கற் பலனாகவே அமையும். ஃபோட்டான்களின் ஆற்றலை எலெக்ட்ரான் வோல்ட் (எ.வோ) என்ற அலகாக மாற்றலாம். அதன்படி 3000°A அலை நீளத்தில் உள்ள ஒரு ஃபோட்டானின் ஆற்றல் 4.எ.வோ. ஆகவும், 6000°A அலை நீளத்தில் உள்ள (சிவப்பு நிற) ஃபோட்டானின் ஆற்றல் 2.எ.வோ. ஆகவும் 12000°A இல் உள்ள (புறச் சிவப்பு) ஃபோட்டானின் ஆற்றல் 1 எ.வோ. ஆகவும் அமையும். குறை கடத்திகள் (semiconductors). கதிர் வீச்சு, அலகு ஆற்றல்களின் ஓர் இயக்கம். ஆதலால், ஒவ்வொரு ஃபோட்டான் ஆற்றலையும், ஓர் எலெக்ட்ரானுக்குக் கொடுத்து அதை உட்கவரச் செய்து, மீண்டும் அதை மின் ஆற்றலாக மீட்கக் கூடிய ஓர் எந்திர அமைப்பை உண்டாக்க முடியும். எலெக்ட்ரான் அதன் தாழ் நிலையிலிருந்து உயர் ஆற்றல் நிலைக்கு உயர்த்தப்படுகிறது. இதனால், உட்கவரப் பட்ட ஃபோட்டான் அந்தப் பொருளுக்குள்ளேயே மின்னாற்றலாகத் தோன்றுகிறது. இந்த மின்னாற்றல் ஒரு புற இணைப்பில், பின்பு பயன்படுத்தப் படுகிறது. முதலில், ஒரு திண்மப் பொருளில் ஒரு ஃபோட்டான் மிகு நிலையாக உட்கவரப்படும் நிகழ்வைக் கருதலாம். சிலிக்கான் போன்ற ஒரு குறை கடத்தி மேலே கூறியவாறு ஒரு ஃபோட்டானை உட்கவர்கிறது. இதில் வெப்பம் உண்டாயினும், சிலிக்கான் ஃபோட்டான்களை உட்கவரும் நிகழ்ச்சியால், கதிர் வீச்சு ஆற்றலை மின்னாற்றலாகப் பயன்படுத்த முடியும். தனிம மீள் வரிசை அட்டவணையில் சிலிக்கான் நான்காம் வரிசையில் இடம் பெறுகிறது. அதன் வெளிப் புற எலெக்ட்ரான்கள் கூட்டில், நான்கு எலெக்ட்ரான்கள் உள்ளன. அதனால், அது வைரத்தின் அமைப்பைப் போல் நிலையான நாற்பக்க உருவப் படிக அமைப்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு சிலிக்கான் அணுக் கருவும், தன்னுடைய நான்கு வெளிப் புற எலெக்ட்ரான்களையும், தன்னைச் சுற்றியுள்ள நான்கு அணுக் கருக்களுடன் பகிர்ந்து கொடுத்து விட்டு, அந்த நான்கு அணுக் கருக்களுடன் ஒவ்வோர் எலெக்ட்ரான்களைப் பகிர்ந்து கொள்கிறது. ஆகவே, சிலிக்கானின் இணை திறப் பிணைப்புகள் யாவும் நிறைவடைகின்றன. இதனால், சிலிக்கான் வடிவம் மின் நிலையைப் பெறுகிறது. எனவே, அணுவின் வெப்ப நிலையில் மிகச் சிறு எண்ணிக்கையுள்ள எலெக்ட்ரான்கள் படிகத்துடன் கட்டுண்ட நிலையிலிருந்து, ஒரு மின் கலத்தால் இயக்கப்படுகின்றன. அதனால், சிலிக்கான் ஒரு காப்பான் (insulator) ஆகவே உள்ளது. இந்நிகழ்ச்சியை எலெக்ட்ரான்களின் ஆற்றல் மட்டங்களைக் கருதிக் குவாண்டம் எந்திரவியலின் அடிப்படையில் விளக்கலாம். எலெக்ட்ரான்கள் பெரிதும் தாழ் மட்டத்திலுள்ள நிரப்பப்பட்ட பட்டையில் காணப்படுகின்றன. இந்த மட்டத்திற்கு மேலே எலெக்ட்ரானே காணப்படாத ஆற்றல் மட்டங்களின் நெருக்கம் உள்ளது. இந்தப் பட்டையில் குறிப்பிட வேண்டிய ஆற்றலைப் பெற்றுள்ள ஓர் எலெக்ட்ரான் தன்னிச்சையான இயக்கத்தைப் பெற்றுள்ளது. எனவே, அது மின்னோட்டத்தைக் கடத்தும் தன்மையைப் பெறுகிறது. இதே நிகழ்ச்சியை, எலெக்ட்ரான் படிகப் பின்னல் வலைப் பகுதி (crystal lattice) ஒன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அல்லது போதுமான ஆற்றல் கொடுக்கப் பட்டவுடன் தன்னிச்சையாக இயக்கத்தைப் பெறுவதாகவும் கருதலாம். எலெக்ட்ரான் இந்த இரு நிலைகளுக்கு இடையில் இருக்கவே முடியாது. இங்கே கூறிய தவிர்க்கப்பட்ட பட்டையின் அகலம் ஆற்றல் இடைவெளி (energy gap) எனப்படும். படிகப் பின்னல் வலையில் பிணையுண்ட ஓர் எலெக்ட்ரானை அதிலிருந்து நீக்குவதற்குத் தேவையான சிறும ஆற்றலை இது குறிக்கிறது. சிலிக்கானில் அறை வெப்ப நிலையின் இந்த ஆற்றல் இடைவெளி 1.08 எ.வோ. அளவைப் பெற்றுள்ளது. ஆகவே, 1.08 எ.வோ. அல்லது அதற்கும் அதிகமான ஆற்றலைப் பெற்றுள்ள ஒரு ஃபோட்டானே, சிலிக்கானிலிருந்து எலெக்ட்ரானை வெளிப் படுத்த முடியும். அலை நீளம் 1.15 மைக்ரான் அல்லது அதை விடக் குறைவான அலை நீளம் கொண்ட கதிர் வீச்சுகள் சிலிக்கானிலிருந்து எலெக்ட்ரான்களை வெளிப்படுத்த இயலா. 1.08 எ.வோ ஆற்றலை விட அதிக ஆற்றல் கொண்ட, 1.15 மைக்ரானை விடக் குறைவான அலை நீளம் கொண்ட கதிர் வீச்சுகளின் மிகுதியான ஆற்றல் வெப்பமாகச் செலவழிந்து விடுகிறது. 2 எ.வோ. ஆற்றல் கொண்ட ஃபோட்டான்களும் ஒவ்வோர் எலெக்ட்ரானையே வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட எலெக்ட்ரான், ஒரு மின் புலத்தின் விளைவால் படிகப் பின்னல் வலைப் பகுதியில் தன்னிச்சையான இயக்கத்தைப் பெற்றிருக்கும். இதனால், மின் கடத்தல் ஏற்படும். இயக்கமுறும் எலெக்ட்ரான் விடுபட்ட பிறிதோர் எலெக்ட்ரான் விட்டுச் சென்ற வெற்றிடத்தை அடைந்து, வெற்றிடத்தில் விழுந்து தன் அதிக ஆற்றலை வெப்பமாகவோ, கதிர் வீச்சாகவோ வெளிப்படுத்தி விட்டு, நிலையான தன்மையைப் பெறும் வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும், இந்த வெற்றிடம் துளை (hole) எனப்படும். முதலில் எலெக்ட்ரான் விடுபட்ட படிக அணிக் கோவைப் புள்ளியைக் (lattice point) கருதினால், அப்புள்ளி நேர் குறி மின்னோட்டம் பெற்றதாக இருக்கும். இந்த நேர் குறி மின்னோட்டம் அருகில் உள்ள பிறிதோர் எலெக்ட்ரானை ஈர்க்கும். அப்போது, அந்தப் புள்ளியில் ஒரு நேர் குறி மின்னூட்டம் ஏற்படுகிறது. அது, அதற்கருகில் உள்ள பிறிதோர் எலெக்ட்ரானை ஈர்க்கும். அப்போது, ஒரு நேர் குறி மின்னூட்டம் உண்டாகும். இவ்வாறு, அடுத்தடுத்த எலெக்ட்ரான்கள் நகர்வதால் ஏற்படும் வெறுமையான இடங்கள், அதே நேர் குறித் துளை (positive hole) நகருவது போன்ற விளைவை உண்டாக்கும். இது போல் எலெக்ட்ரான் வெளிப்படுவதாலும், துளை நகருவதாலும் மின் கடத்தல் உண்டாகிறது. எலெக்ட்ரான்களாலும், துளைகளாலும் உண்டாகும் இந்த மின் கடத்தல் சூரிய மின் கலத்தின் அடிப்படைத் தத்துவமாகும். தன்னிச்சையாக நகர்ந்து கொண்டிருக்கும் ஓர் எலெக்ட்ரானை (free electron) ஒரு துளை கவரும் நிலையில், அது 1.08 எ.வோ. ஆற்றலைப் பெற்றிருக்கும். ஓர் எ.வோ. ஆற்றல் எனப்படுவது ஓர் எலெக்ட்ரான் 1 வோல்ட் மின்னழுத்தத்தைக் கடக்கும் போது, அது பெறும் அல்லது இழக்கும் ஆற்றலின் அளவாகும். ஆகவே, இத்தகைய எலெக்ட்ரான் ஒரு வெறுமை இடத்தால் கவரப்படும் போது, வெறுமையான இடத்திற்கு முன்பாக, எலெக்ட்ரானின் ஆற்றலை ஒரு புற மின் சுற்றில் இழக்கும்படிச் செய்தால், அதிலிருந்து 1.08 வோல்ட் மின்னழுத்தம் 1.59 X10-10 கூலூம் மின்னூட்டம் கிடைக்கும். இம்முறையில், சூரிய ஃபோட்டான்களை மின்னாற்றலாக உட்கவரும் ஓர் அமைப்புக் காணப்படுகிறது. சூரிய ஃபோட்டான் வெப்பமாகவோ, மறு கதிர் வீச்சாகவோ வெளிப்படுவதற்கு முன்பாக மின்னாற்றலைப் பெற வேண்டும், இந்த அமைப்பே சூரிய மின் கலமாகும். தூய்மையான சிலிக்கான் படிகம் இருட்டில் நிலையானதாகவும், மின் கடத்தாததாகவும் உள்ளது. ஏறக் குறைய, ஒரு மில்லியன் சிலிக்கான் அணுவில் ஒன்றுக்குப் பதிலாக ஓர் ஆர்செனிக் அணு மாற்றீடு செய்யப்படுவதாகக் கொள்ளலாம். தனிம மீள் வரிசை அட்டவணையில் ஆர்செனிக் ஐந்தாம் வரிசையில் உள்ளது. ஆகவே, அதன் அணுக் கருவில் 5 நேர் மின்னூட்டங்களுக்கு வெளிப் புறக் கூட்டில் ஐந்து இணை திறன் எலெக்ட்ரான்கள் உள்ளன. நான்கு எலெக்ட்ரான்களைக் கொண்ட சிலிக்கான் இடத்தில் ஐந்து எலெக்ட்ரான் கொண்ட ஆர்செனிக் இருப்பதால், ஓர் எலெக்ட்ரான் இப்போது மிகையாக உள்ளது. ஆகவே, இந்த ஐந்தாம் எலெக்ட்ரானை அணுக் கருவின் நேர் மின்னூட்டம் உறுதியாக விளக்க முடிவதில்லை. அது அங்குமிங்கும் எளிதாக அலைந்து, ஃபோட்டானை உட்கவராமல் மின் கடத்தும் எலெக்ட்ரானாகச் செயல் படுகிறது. இத்தகைய கலப்புப் படிகத்திற்கு (doped crystal) வகைக் கடத்தி எனப் பெயர். ஏனெனில், இதில் ஃபோட்டான் உட்கவரப்படாமலேயே, எதிர் மின்னூட்டங்கள் (negative carriers) உள்ளன. இதில் உண்டாகும் மிகு கடத்தல் தூய்மையான சிலிக்கானில் ஃபோட்டான் உட்கவரப் பட்டு, உண்டாகும் வெறுமையான இடம் (hole) நகருவதால் ஏற்படும் மின் கடத்தியிலிருந்து மாறு பட்டதாகும். இங்குள்ள நேர் மின்னூட்டம் அணுக் கருவில் பிணைந்துள்ளமையாலும், படிகப் பின்னல் வலையில் நிறைவுறாத இடம் இல்லாமையாலும், அருகிலுள்ள அணுவின் எலெக்ட்ரான் நகர முடிவதில்லை. ஆகவே ஆர்செனிக் கலந்த சிலிக்கானில் நேர் மின்னூட்டம் கட்டுண்டுள்ளது. ஓர் எலெக்ட்ரான் மட்டும் தன்னிச்சையாக நகரக் கூடிய நிலையில் உள்ளது. மேலும், ஒரு சில எலெக்ட்ரான்கள் படி.கத்தின் இணைப்பு முனையில் விரவல் அடைந்தாலும், படிகம் முழுதும் நகரும் போது, அது மின் நடு நிலைத் தன்மையாக உள்ளது. மேற்காணும் ஆர்செனிக் அணுவிற்குப் பதிலாகத் தனிம மீள் வரிசை அட்டவணையில், மூன்றாம் வரிசையில் உள்ள போரான் போன்ற ஓர் அணுவைச் சிலிக்கானின் ஓர் அணுவின் இடத்தில் மாற்றீடு. செய்வதால், வேறுபட்ட நிகழ்ச்சி நடை பெறுகிறது. போரானின் அணுக் கருவில் மூன்று நேர் மின்னூட்டங்களும் வெளிப் புறக் கூட்டில் மூன்று எலெக்ட்ரான்களும் உள்ளன. நான்கு எலெக்ட்ரான் கொண்ட சிலிக்கான் அணுவின் இடத்தில் மூன்று எலெக்ட்ரான் கொண்ட ஒரு போரான் அணு அமையும் போது, படிகப் பின்னல் வலையில் ஓர் எலெக்ட்ரான் குறைவு ஏற்படுகிறது. அந்தப் பகுதி மின் நடு நிலையாக இருப்பினும், அந்தப் புள்ளியில் ஓர் எலெக்ட்ரான் குறைவாக உள்ளமையால், அது ஓர் உண்மையான வெறுமை இடம் ஆகும். ஆகவே, அருகிலுள்ள எலெக்ட்ரான் வெளியிலிருந்து எந்த ஆற்றலையும் உட்கவராமலேயே, அந்த வெறுமை இடத்திற்குச் செல்லும். அப்போது மின் கடத்தல் நிகழ்கிறது. போரான் அணுக்கருவிற்குச் சென்று, இந்த எலெக்ட்ரான் இப்போது தன்னிச்சையாக நகர முடியாமல், அத்துடன் கட்டுண்டு விடுகிறது. இந்த எலெக்ட்ரான் வெளிப்படும் போது, அதன் அணுவில் நேர் மின்னூட்டம் கொண்ட ஒரு வெறுமையான இடம் ஏற்படுகிறது. இந்த வெறுமையான இடம் தன்னிச்சை எலெக்ட்ரான்களால் (free electron) அழிவுறுவதில்லை. ஏனெனில், போரான் அணுவால் உண்டாக்கப்படும் வெறுமையான இடத்துடன் ஒத்த தன்னிச்சை எலெக்ட்ரான்கள் உண்டாக்கப் படுவதில்லை. எனவே, போரான் அணுக்களுடன் எதிர் மின்னூட்டங்கள் விளைவுற்றிருக்கும் வரை நேர் மின்னூட்டம் கொண்ட துளைகள் தன்னிச்சையாகத் திரிந்து, மின் கடத்தல் உண்டாக்குகின்றன. இது ஒரு p வகைக் கடத்தியாகும். மேற்காணும் p வகைச் சிலிக்கானையும் ஒரே படிகத்தில் சேர்த்து அமைக்கலாம். படத்தில் இரு வகைச் சிலிக்கானின் சந்தியில் (junction) நடைபெறும் நிகழ்ச்சி விளக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதிக்குத் தடுப்பு (barrier) அல்லது p-n சந்தி என்று பெயர். வகைக் கூறினுள் உண்டான எலெக்ட்ரான்களுக்கு ஒத்தவாறு ஏற்பட்ட நேர் மின்னூட்டங்கள் வெறுமையான இடங்களாக இல்லாமல், பிணையுண்ட நேர் மின்னூட்டங்களாதலால், எலெக்ட்ரான்கள் கவரப்பட்டு அழிவுறும் வாய்ப்பு இல்லை. இதே போன்று, வகைக் கூறினுள் உண்டான நேர் மின்னூட்டமுள்ள தன்னிச்சையான துளைகள் எலெக்ட்ரான்களைக் கவர்ந்து அழிவுறும் வாய்ப்பும் இல்லை. ஏனெனில், அக்கூறிலுள்ள எலெக்ட்ரான்கள் பெரும்பான்மையான படிகப் பின்னலில் கட்டுண்ட எலெக்ட்ரான்களாகும். ஆனால், இரு கூறுகளும் இணையும் இடத்தில் விரவலினால் தன்னிச்சையான மின் கடத்தும் எலெக்ட்ரான் மின் கடத்தும் நேர் மின்னூட்ட வெறுமையான இடத்தைச் சந்திக்கிறது. அவை இரண்டும் கலந்து ஒன்றையொன்று ஈடு செய்து கொள்கின்றன. மின் கடத்தல் அல்லது மின் புலம் ஆகியவற்றைப் பொறுத்த வரை, தன்னிச்சையாலான அவை இரண்டும் அழிந்து விடுகின்றன. ஆனால், கட்டுண்ட நேர் மின்னூட்டங்களும், எதிர் மின்னூட்டங்களும் நிலைத்துள்ளன. சந்தியின் விரவல் தொலைவிற்குள்ளாக அவை மின் நடு நிலைத் தன்மையுடையனவாக இரா. சந்தியின் n வகைப் பக்கத்தில் உள்ள நிகர நேர் மின்னூட்டத்தாலும், p வகைப் பக்கத்தில் உள்ள நிகர எதிர் மின்னூட்டத்தாலும் p பகுதியை விட n பகுதி நேர் மின்னூட்டப் பகுதியாக ஆக்கப் படுகிறது. இதனால், சந்தியில் n பகுதியிலிருந்து p பகுதிக்கு ஓர் அக மின்புலம் (built-in-field) உண்டாகிறது. இப்படிகப் பிணைப்பாலும், மின்னூட்ட விரவலினாலும் இந்த அக மின் புலமே சூரிய மின் கலத்தில் சூரிய ஒளியை மின்னோட்டமாக மாற்ற உதவுகிறது. இப்புலமே ஃபோட்டான்களால் வெறுமை இடங்களிலிருந்து விடுவிக்கப் படும் எலெக்ட்ரான்களை மீண்டும், அதே வெறுமை இடங்களில் விழுந்து விடாமல் தடுக்கிறது. விடுவிக்கப் பட்ட எலெக்ட்ரான்கள் இப்புலத்தால் அவற்றின் மின்னூட்ட வெறுமை இடங்களிலிருந்து பிரிக்கப்பட்டு அவை தம் கட்டுண்ட நிலைகளுக்குச் செல்லும் போது, புற இணைப்புச் சுற்றில் இயக்கப்படுகின்றன. இருட்டில் p-n சந்தியிலிருந்து ஆற்றலைப் பெற முடியாது. ஏனெனில், அப்போது விரவல் மற்றும் படிக விசைகளுக்கிடையே ஒரு மின்னழுத்த வேறுபாடு உள்ளது. ஆனால் p மற்றும் n பகுதிகளுக்கு இணைப்பு முனைகளைப் பொருத்தினால், அதே போன்ற விரவல் மின்னழுத்த வேறுபாடுகள் இங்கும் உண்டாகின்றன. இதனால், இருட்டில் நிகர மின்னழுத்த வேறுபாடு சுழியாகிறது. சூரிய மின் கலத்தின் தத்துவத்தை இப்போது விவரிக்கலாம். p-n சந்தியின் அக மின் புலத்தின் விரவல் தொலைவினுக்குள் ஒளியை உட்கவரும் நிகழ்ச்சியை நடை பெறச் செய்தால், எலெக்ட்ரான்கள் நேர் குறி n வகைக் கூறின் பக்கமாகவும், நேர் மின்னூட்ட வெறுமை இடங்கள் p வகைக் கூறின் பக்கமாகவும் கவரப் படுகின்றன. மின் கலத்தின் முனை இணைப்புகள் சேர்க்கப்பட்டால், கூறுகளின் சந்தியின் மேல் ஒளி விழுந்து கொண்டிருக்கும் வரையில், புற மின் சுற்றில் மின்னோட்டம் நடைபெறும். இம்மின்னோட்டம் ஏறத் தாழ சுழி மின்னழுத்த வேறுபாட்டில் நிகழ்வதால், புற மின் சுற்றில் வேலை எதுவும் செய்யப் படுவதில்லை. ஆனால், புற மின் சுற்று, திறந்த சுற்றாக ஆக்கப் பட்டால், வேறு வகையான நிகழ்ச்சி நடைபெறுகிறது. n பகுதிக்கும், p பகுதிக்கும் தள்ளப்பட்ட மின்னூட்ட ஊர்திகள் (carriers) அப்போது n வகைக் கூறின் மின்னழுத்தத்தைக் குறைக்கவும், p வகைக் கூறின் மின்னழுத்தத்தை அதிகரிக்கவும் முயல்கின்றன. அதனால், p முனை n முனையை விட, அதிக நேர் தன்மையைப் பெறுகிறது. இப்போது, மின் கலம் மின்னூட்டமடைகிறது. மின் கலத்தில் ஃபோட்டான்களால் உண்டாகும் மின்னோட்டம் ஈடு செய்யப் படும் அளவுக்குத் தடுப்பில் தேவையான தொலைவுக்கு மின்னூட்ட ஊர்திகளில் விரவல் உண்டாகும் வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரிய மின்கலத்தை அமைத்தல். இந்த மாதிரி அமைப்பை மின் கலக் கூறுகளின் சந்தியாக அமைக்க முடியாது. ஆகவே, ஒளிக் கதிர் தடுப்பை அடைய உருவ அமைப்பில் மாற்றம் தேவைப்படுகிறது. சிலிக்கானின் மெல்லிய பரப்பு அடுக்கு, தகுந்த பொருள்களால் பரப்பில் விரவல் மூலம் மாற்றீடு செய்யும் போது, ஒரு வகைக் கடத்தல் தன்மையிலிருந்து எதிர் வகைக் கடத்தல் தன்மையைப் பெற்றிருப்பது காணப்படுகிறது. காட்டாக, ஆர்செனிக் மாற்றீடு பெற்றுள்ள சிலிக்கான் வகைக் கடத்தியாக இருந்து, மெல்லிய பரப்பு அடுக்காக அமைக்கப்படும் போது, p வகைக் கடத்தியாக மாறுகிறது. இது போல ஒரு p-n சந்தியை ஒரு பரப்பு முழுவதிலும் அப்பரப்பிற்கு மிக அண்மையில் தடுப்பை p அடுக்கு வழியாக ஒளி அடையும் படி அமைக்கலாம். இம்முறையில் தடுப்பு ஒளியில் படும் படியாக வைக்கப் படுகிறது. இதனால், உணர் திறனுள்ள (sensitive) பரப்பை அதிகமான பரப்பில் தூவி ஒளி குவித்தல் செய்யாமலேயே, அதிக அளவு கதிர் வீச்சு மின் கலத்தில் படும் படிச் செய்ய முடியும். படம் 2இல் இந்த அமைப்பு காட்டப்பட்டுள்ளது. உணர் திறனுள்ள பரப்பு அடுக்கு விரவல் முறையில், பின் புறமும் அமையும்படிச் செய்யப்படுகிறது. பின் புறத்தில்தான் இணைப்பு முறைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பில் மேற்பரப்பிற்குத் தடையெதுவுமின்றி p அடுக்குடன் தொடர்பு ஏற்படுகிறது. பின் புறத்தின் ஒரு பகுதியில் p அடுக்கு நீக்கப்பட்டு, அந்த இடத்தில் மின் கலத்தின் n அடுக்குடன் தொடர்பு அமைக்கப் பட்டுள்ளது. தடுப்பை ஒளி அமைவதற்காக p அடுக்கை மெல்லியதாக்கும் போது, மின் தடை பற்றிச் சிக்கல் தோன்றுகிறது. p அடுக்கை மெல்லியதாக்கும் போது, அதனால், மின்னோட்டத்திற்குக் கிடைக்கும் பொருள் குறைவாகிறது. எனவே, மின் தடை அதிகரிக்கிறது. மின் தடையைக் குறைக்க, p அடுக்கின் தடிப்பை அதிகப் படுத்தினால், அதன் மேல் படும் ஒளி முழுவதும் உட்கவரப்பட்டு p–n தடுப்பை அடையாமலேயே நின்று விடும். ஆகவே, p அடுக்கின் தடுப்பு, மின் கலத்தின் ஏனைய பக்கங்களின் அளவுகளுடன் ஒப்பிடப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அளவுள்ளதாக வைக்கப்படுகிறது. சிலிக்கான் மின்கலங்களை உருவாக்குதல். குவார்ட்ஸ் கலந்துள்ள மணலிலிருந்து, தூய சிலிக்கான் பிரித்தெடுக்கப்படுகிறது. சிலிக்கானின் ஒற்றைப் படிகம் தூண்டு உலையில் வார்க்கப்படுகிறது. தூய்மையான சிலிக்கான் படிகத்தில், ஒரு மில்லியன் அணுவிற்கு ஓர் ஆர்செனிக் அணு இருக்கும் படி, ஆர்செனிக் சேர்க்கப் படுகிறது. இதனால், n வகைப் படிகம் உண்டாகிறது. இதன் மின் தடை 0.5 ஓம்/செ.மீ. இதைத் தயாரிக்க குவார்ட்ஸ் கொள் கலத்தில் சிலிக்கான் தூண்டு முறையில் (induction process) சூடாக்கப் பட்டு, அது உருகிய நிலையில் உள்ள போது, ஓர் ஒற்றைப் படிகச் சிலிக்கான் வித்து (seed) அதனுள் மூழ்க வைத்து, மிக மெதுவாகச் சரியான வேகத்தில் வெளியே எடுக்கப் படுகிறது. இவ்வாறு காரட் கிழங்கு உருவத்தில் ஓர் ஒற்றைப் படிகச் சிலிக்கான் படிகம் வளர்கிறது. இப்படிகமே சூரிய மின்கலத்தில் பயன்படுகிறது. இதன் பின், படிகம் மென் தகடுகளாக (wafer), வைரம் பொருந்திய சக்கரத்தைக் கொண்டு, சிறு துண்டுகளாக்கப் படுகிறது. இத்துகள்களிலுள்ள வெட்டுக் குறிகளும், திரிபுற்ற பகுதிகளும் நீக்கப் படுகின்றன. இதற்கு HF₃ HNO₃ அமிலம் பயன் படுகிறது. பிறகு, விரவல் மூலம் போரான் செலுத்தப்படுகிறது. இதைப் பெற BCL₃ஆல் நிரப்பி மூடப்பட்ட குவார்ட்ஸ் குழாய்கள் பயன்படுகின்றன. விரவல் தொலைவு 10-4 செ.மீ. உள்ளது. பின் புறம், எதிர் மின் முனையை n வகைக் கூறுடன் பொருத்துவதற்காகப் பின் புறம் மெழுகு, டெப்ஃலன் போன்ற உறைகளை இட்டுத் தேவையான இடத்தில் மட்டும் HF அல்லது HNO₃ பயன்படுத்தி, வகை அடுக்கு நீக்கப் படுகிறது. நேர் மின் முனைகள் மின் முலாம் பூச்சு முறையில் பொருத்தப் படுகின்றன. இப்போது, சூரிய மின் கலம் ஆயத்தமாக உள்ளது. இவ்வாறு, பல மின் கலங்கள் தொடர் இணைப்பிலும், பக்க இணைப்பிலும் தொகுப்பாகப் பயன்படுகின்றன. முழுச் சூரிய ஒளியில் ஒரு மின் கலம் 0.5 வோல்ட் மின் மூலக் கூறு உற்பத்தி செய்யும். சூரிய ஒளியில் மின் விசையை உற்பத்தி செய்து, இருட்டில் அதைப் பயன்படுத்தவும், இம்மின் கலங்கள் பயன்படுகின்றன. தேவை மிகும் போது, மேலும் ஆய்வுகள் நடத்தி, முன்னேற்றம் பெறலாம். —ப. குட்டியப்பன் —க.அர. பழனிச்சாமி சூரிய மீன் இந்தியக் கடல்களில் காணப்படும் சூரிய மீன்கள் மோலா மோலர் என்னும் இனத்தைச் சார்ந்தவை. தடித்த தோல்களும், முட்டை வடிவும் கொண்டவை. இம்மீன்கள் 3000 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்கின்றன. புதிய இளவுயிரிகள் சிறியனவாகவும், சாதாரண மீன்களைப் போல, நீள் வட்டமாகவும் காணப் படுகின்றன. சூரிய மீனின் வாய் சிறியதாகவும், பற்கள் இணைந்து தாடைக்கு ஒன்றாகவும், காணப்படுகின்றன. அடி வயிற்றெலும்பில் (pelvic fin) துடுப்புகள் காணப்படவில்லை. முதுகுத் துடுப்பும் (dorsal fin), மலவாய்த் துடுப்பும் (anal fin) செங்குத்தாக நீண்டுள்ளன. வால் பக்கத் துடுப்பு (caudal fin) சிறியதாகவும், பின் பக்கம் வளைந்ததாகவும் காணப்படும். பளபளக்கும் தோற்றத்தை உடைய இம்மீன்கள் சாம்பல், ஆலிவ் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. ஏறத் தாழ 1 டன் எடையுள்ள இவை 3 மீ. நீளம் வளரக் கூடியவை. வால் பக்கத் துடுப்பும், முதுகுத் துடுப்பும் இல்லாமல், தலை மட்டும் பெரியதாக உள்ளமையால், இவை தலை மீன் என்றும் பெயர் பெறும். கடல்களின் மேல் பகுதிக்கு வர விரும்பாத இம்மீன்கள் அமைதியான கால நிலையின் போது, சூரிய ஒளியின் தேவைக்காக மேல் நோக்கி வருகின்றன. சிறிய மீன்கள், ஜெல்லி, ஓட்டுடலிகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. அரை வட்ட வடிவ உடலைக் கொண்டுள்ளமையாலும், வால் பக்கத் துடுப்பு இல்லாமையாலும், இது நீரோட்டத்தை எதிர்த்துச் செல்வதில்லை. இம்மீனின் மூளை மிகச் சிறியதாகவே காணப்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இம்மீனின் தோல் 5–7 செ.மீ. வரை தடித்துள்ளது. இம்மீன்கள் ஈட்டி போன்ற கூரிய பொருள்களாலோ, குண்டுகளாலோ துளைக்க முடியாதவாறு கெட்டியான உடலமைப்புடன் காணப்படும். சில சமயங்களில், வலைகளில் பிடிபட்டால், பன்றியின் உறுமல் போல ஒலி எழுப்புகின்றன. —கோவி. இராமசுவாமி சூரிய முகப்புக் காட்டி சூரியனின் உதவி கொண்டு, நேரத்தை அளக்க உதவும் கருவிக்குச் சூரிய முகப்புக் காட்டி (sun dial) என்று பெயர். இதில் ஒரு முகப்புத் தகடு உள்ளது. இத்தகட்டில் மணியைக் குறிக்கும் கோடுகள் (hour line) வரையப்பட்டிருக்கும். இத்தகட்டில் கூர் முனைக் கம்பி (style) ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இக்கம்பியின் நிழல், மணியைக் குறிக்கும் கோடுகளின் மீது விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இக்கூர் முனைக் கம்பி புவியின் அச்சுக்கு இணையாக உள்ளது. சூரியனின் இயக்கம் விண்ணுக்குரிய நடு வட்டக் கோட்டிலேயே (celestial equator) எப்போதும் உள்ளது என்னும் கருது கோள் அடிப்படையிலேயே முகப்புத் தகட்டிலுள்ள மணியைக் குறிக்கும் கோடுகள் வரையப்பட்டுள்ளன. சூரிய முகப்புக்காட்டி எந்தவொரு வடிவத்திலும், எந்தவொரு பரப்பிலும் அமைக்கப்படுகிறது. அது நிலையானதாகவும், பெரியதாகவும் அல்லது சிறியதாகவும், எடுத்துச் செல்லக் கூடியதாகவும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்படலாம். கிடை மட்ட முகப்புக் காட்டியே பெரும்பான்மையாகப் பயன்படும் வகையாகும். இவ்வகை, அவ்விடத்தின் நிலைப்படுத்தப் பெறாத நேரத்தைக் (local apparent time) காட்டும். இது சூரிய நேரம் (sun time) எனப் படும். ஏனைய வகைச் சூரிய முகப்புக் காட்டிகள், அவ்விடத்தின் இடைநேரத்தையும் (mean time) அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட தரப் படியான நேரத்தையும் (standard time) காட்டுகின்றன. உயர் தரமான சூரிய முகப்புக் காட்டிகள் இயல் வண்ண நிழற் படப் பதிவுக் கருவிகளில் (heliochrono meter) அமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் நிலையான நேரத்தை மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன. இக்கருவியின் வடிவமைப்பிற்கு நேரச் சமன்பாடு (equation of time), அக்கருவி பயன்படுத்தப் படும் இடத்தின் நெடுவரைக்கும் (longitude), அவ்விடத்தின் நிலையான நேரத்தின் உச்ச நிலைக்கும் (standard time meridian) உள்ள வேறுபாடு ஆகியவை அடிப்படையாக உள்ளன. இதனால், சூரிய முகப்புக் காட்டி ஒரு கடிகாரம் போன்று செயல்பட முடிகிறது. சூரிய முகப்புக் காட்டி, எவ்வித மாற்றமும் அடையாத, மிகப் பழமையான அறிவியல் கருவியாகும். இக்கருவி, அவற்றின் அமைப்பிற்கு உதவும் அடிப்படை அறிவியல் கொள்கையினால் கல்விப் பணிகளுக்கும், நேரம் காட்டும் அமைப்பிற்கும் பெரிதும் பயன் படுகிறது. —வா. அனுசுயா சூரிய வழி நேரம் தோற்றச் சூரிய வழி நேரம் (apparent solar time), சராசரி சூரிய வழி நேரம் (mean solar time) என்னும் இரு பிரிவுகளையும் சூரிய வழி நேரம் (solar time) குறிக்கும். தோற்றச் சூரியன் ஓரிடத்தின் உச்சி வட்டத்தைக் (meridian) கடக்கும் போது, அடுத்தடுத்த இரண்டு மேலுச்சிக் கடத்தல் நேரங்களுக்கோ (two consecutive upper transits), கீழுச்சிக் கடத்தல் நேரங்களுக்கோ (lower transits) இடைப்பட்ட காலமே தோற்றச் சூரிய வழி நாள் (apparent solar day) எனப்படும். ஆனால், தோற்றச் சூரியன் தன் பாதையில் சீரான கோண வேகத்தில் இயங்காமையாலும், அதன் தோற்றப் பாதை (ecliptic) நடு வரைக்கு (equator) 23°5' சாய்வில் உள்ளமையாலும், வல ஏற்றம் (right ascension) சீரான வேகத்தில் மாறுவதில்லை. இதனால், சீராக இயங்கும் கடிகாரம் தோற்றச் சூரிய வழி நேரத்தைக் காட்டுவதில்லை. சூரியக் கடிகையிலிருந்தே (sun dial) இந்நேரம் குறிக்கப்படும். இது வானியல் ஆய்வுக்குப் பயன்படுமேயன்றி, அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுவதில்லை. இச்சிக்கலைத் தீர்க்க, வான சராசரி சூரியன் (astronomical mean sum) என்னும் ஒரு கற்பனைச் சூரியனை அமைத்து, அதன் சீரான வல ஏற்ற அடிப்படையில், சராசரி சூரிய வழி நேரம் (mean solar time) என ஒரு நேரத்தை வானியலார் கண்டு பிடித்தனர். ஓராண்டில், இக்கற்பனைச் சூரியன் நடு வரையின் மேல் சீரான கோண வேகத்தில், வல ஏற்றம் சீராக இருக்குமாறு ஒரு முழுச் சுற்றுச் சுற்றுகிறது. வான சராசரி சூரியன் உச்சி வட்டத்தைக் கடக்கும் போது, உண்டாகும் இரண்டு அடுத்தடுத்த மேலுச்சிக் கடத்தல் நேரங்கள் அல்லது கீழுச்சிக் கடத்தல் நேரங்களுக்கு இடைப்பட்ட கால அளவே சராசரி சூரிய வழி நாள் (mean solar day) ஆகும். இது குறிப்பிட்ட கால அளவை உடையது. கீழுச்சிக் கடக்கும் நேரமாகிய இரலிலிருந்து 0–24 மணியாக நாள் பிரிக்கப் படுகிறது. இந்நேரமே கடிகாரங்களில் குறிக்கப் படுகிறது. தோற்றச் சூரிய வழி நேரத்திற்கும், சராசரி சூரிய வழி நேரத்திற்கும் உள்ள வேறுபாடு ±16' ஆகும். இது காலச் சமன்பாடு (equation of time) எனப்படும். —பங்கஜம் கணேசன் சூரிய வெப்பத் திரட்டிகள் சூரிய ஆற்றல் ஒளிக் கதிர்களாக எங்கும் பரவி இருப்பதை, எளிமையாக வெப்ப ஆற்றலாக மாற்றிப் பயன் படுத்தலாம். வெப்பக் கதிர்களை, வெப்ப ஆற்றலாக மாற்றித் தரும் கருவிகளே, சூரிய வெப்பத் திரட்டிகள் (solar collectors) ஆகும். இவை புவியில் விழும் கதிர்களைச் சேகரித்து, வெப்ப ஆற்றலாக மாற்றித் தரும் எந்திர அமைப்புகளாகும். இவை இரு வகைப்படும். சம தளத் தட்டு வகை வெப்பத் திரட்டிகள். இவை ஒளியூடுருவிப் பெட்டி. பாய்மத்தைக் கடத்த குழாய் வழிகள், வெப்ப ஏற்புந்தகடு (கருமை வண்ணத்தில்), கொள்கலன் ஆகிய பகுதிகளைப் பெற்றிருக்கும். ஒளியூடுருவிப் பெட்டி. சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சை, வெப்ப ஏற்புத் தகடுகள் பெற்றுச் சேகரிக்கும். இதனால் வெப்ப ஆற்றல் உருவாகிறது. ஆனால், உடனே ஏறத் தாழ 50 சதவீதத்திற்கும் மேல் மீண்டும் எதிரொளித்து வெளியேறி விடும். இதனால், வெப்ப இழப்பீடு நேரும். இப்பெட்டியின் மேல் நிலையிலுள்ள கண்ணாடித் தகடுகள், ஏற்புத் தகடுகளிலிருந்து எதிரொளிக்கும் ஒளிக் கற்றைகளை மீண்டும் எதிரொளிப்புச் செய்து, வெப்ப இழப்பீடு ஏற்படாமல் காக்கும். இக்கண்ணாடித் தகடுகள் மிகு அலை நீளம் கொண்ட சூரிய வெப்பத்தை உட்கவர்ந்து, ஏற்புத் தகடு மேலும் திறம்படச் செயல் புரிய உதவும். அதே வேளையில், ஏற்புத் தகட்டிற்கும், கண்ணாடித் தகடுகளுக்கும் இடையே குறைந்த அலை நீளம் உள்ளமையால், அதிலிருந்து வரும் ஒளிக் கற்றைகளை வெளியில் கடத்தாமல், எதிரொளிக்கிறது. கண்ணாடிப் பொருள்கள், ஒளியூடுருவிகள் என்பது குறிப்பிடத் தக்கது. குழாய் வழிகள். குழாய் வழிகள், பாதைகள் முதலியவை ஏற்புத் தகடுகளுக்குள்ளேயே, உயர் வெப்பங் கடத்தும் தன்மை கொண்ட உலோகங்களால் செய்யப்பட்டுப் பொருத்தப்படும். இவை சூடான நீர், காற்றுப் போன்ற பாய்மங்களை எடுத்துச் செல்லும், வெப்ப ஏற்புத் தகடுகள். இவை பெரும்பாலும் அலுமினிய உலோகத்தால் செய்யப்பட்டு, வெப்பத்தை ஏற்கப் பொருத்தப்பட்டிருக்கும். இதிலிருந்து, ஒளிக் கற்றைகளின் மீள் எதிரொளிப்பைக் குறைக்க, தகடுகளின் மேற்பரப்பு கறுப்பு வண்ணத்தால் பூசப்பட்டிருக்கும். சில சமயம் கறுப்புப் பூச்சிற்குப் பதிலாக வேதிப் பூச்சுகளும் பயன்படும். இத்தகடுகளே சூரிய ஆற்றல் அமைவுகளின் அடிப்படையாகும். கொள் கலன். மேற்கூறிய பகுதிகள் அனைத்தையும் ஏற்றுத் தாங்கிக் கொண்டிருக்கும் அமைப்பே, கொள்கலனாகும். இவை மரம், தகடுகள் முதலியவற்றால் செய்யப்பட்டிருக்கும். கொள் கலப் பெட்டியின் உட்பகுதிகள் வெப்பங் கடத்தாப் பொருள்களால் செய்யப் படுகின்றன. இவ்வகை வெப்பத் திரட்டிகள், பெரும்பாலும் நீர் சூடாக்கல், காற்றுக் குளிரூட்டிகள் போன்றவற்றில் பயன்படுகின்றன. ஒருமுகப்படுத்தி வகை வெப்பத் திரட்டிகள். சம தளத் தட்டு வகை வெப்பத் திரட்டியில், பரந்த அளவு வெப்பக் கதிர்க் கற்றை சேகரிக்கப்பட்டாலும், அவற்றைப் பயன்படுத்தும் போது, பிரிந்து சிதறி விடுகின்றன. எனவே, குறைந்த அளவு வெப்ப நிலையே கிட்டுகிறது. வெப்ப நிலையை உயர்த்த வேண்டுமாயின், சூரியக் கதிர் வீச்சு அனைத்தையும் ஒருமுகப் படுத்தி, ஒரு சிறு பரப்பினுள் படியுமாறு அமைக்க வேண்டும். அதாவது, கதிர்க் கற்றைகளைக் குவி மையப் புள்ளி (focal point) அல்லது குவி மைய அச்சில் படும் படி அமைக்க வேண்டும். இப்பணியை ஒருமுகப்படுத்தி வகை வெப்பத் திரட்டிகள் செய்கின்றன. பர வளைய வடிவில் குழிந்திருக்கும் இவற்றின் முகப்புப் பகுதிகள் எந்த அளவிற்கு இயலுமோ, அந்த அளவிற்குப் பளப்பளப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தாலே, பெருமளவு எதிரொளிப்பைப் பெற்று, ஆற்றலை உயர்த்த இயலும். எனவே, குழிப் பகுதிகள் அலுமினியம், கண்ணாடி போன்றவற்றால் ஆக்கப் படும். பாய்மக் கடத்துக் கறுப்புக் குழாய், குவி மையப் புள்ளியில் பொருத்தப்பட்டு, அதனுள்ளே பாய்மச் சுழற்சிக் கொண்டு சூடேற்றப்படுகிறது. மையக் குழாயில் வெப்ப இழப்பீட்டைத் தவிர்க்க, அதன் புறப் பகுதிகள் கண்ணாடி உறையால் சூழப் பட்டிருக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —கே.ஆர்.கோவிந்தன் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964. சூரியன் சூரியக் குடும்பத்தில் மையமாக விளங்குவது சூரியன். தன்னொளிர் தன்மையுடன் ஒரு பந்து போன்ற வடிவமுடையது. அதன் விட்டம் ஏறக் குறைய 1,392,000 கி.மீ ஆகும். புவியை விட ஏறத்தாழ 13,00,000 மடங்கு உருவத்தில் பெரியதாகவும், 3,33,000 மடங்கு எடை கொண்டதாகவும் உள்ளது. புவியிலிருந்து ஏறத்தாழ 14,96,00,000 கி.மீ. தொலைவிலுள்ளது. நொடிக்கு 2.99,792 கி மீ. செல்லும் ஒளி, சூரியனிலிருந்து புவியை அடைய ஏறக் குறைய 8.5 நிமிடங்களாகின்றன. இது தன்னைத் தானே தன் மையத்தியங்கு அச்சு கொண்டு, 25.38 நாள்கள் கால வட்டத்தில் ஒரு முறை சுற்றுகிறது. இக்கால கட்டம் மாறுதலுக்குட்பட்டது. 30° அகலாங்கில் இக்கால வட்டம் ஏறக் குறைய 28 நாள்களாகவும், துருவப் பகுதியில் ஏறக் குறைய 36 நாள்களாகவும் மாறுகிறது. 360 கி.மீ. தடிப்புள்ள போர்வையைப் போன்ற வெப்ப ஆவியைக் கொண்ட சூரியனின் புற வெப்ப நிலை ஏறத் தாழ 5500°C எனவும், உள்ளே செல்லச் செல்ல வெப்ப நிலை மிக வேகமாக உயர்கிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. சூரியனின் மையப் பகுதியின் வெப்பம் 15,000,000–16,000,000°C வரை மாறுபடுவதாகத் தெரிகிறது: 75% ஹைட்ரஜனையும், 24% ஹீலியத்தையும், 1% ஏனைய பொருள்களையும் உள்ளடக்கிய சூரியன், வெப்பத்தை வெளியிடுவதன் காரணமாக அனைத்து வெப்பத்தையும் காலப் போக்கில் இழந்து குளிர் மண்டலமாக மாறாது; ஏனெனில், இதிலிருந்து வெப்பம் குறையும் போது, அதனுள்ளேயிருக்கும் ஹைட்ரஜன் வெப்பமாக மாறி, இழக்கும் ஆற்றலை அவ்வப்போது ஈடு கட்டிக் கொள்கிறது. சூரியனை ஒரு கறுப்புக் கண்ணாடி மூலம் பார்த்தால், பெரிய பெரிய பள்ளங்களும், எரிமலைகளும் இருப்பது போலத் தோற்றமளிக்கும். இவை சூரியப் புள்ளிகள் அல்லது கறைகள் (sun spots) எனப்படும். சூரியனுக்கு உள்ளிருந்து மேல் வரும் வளிமம் விரிவதால், வெப்பம் தணிந்து ஒரு புள்ளி போன்ற அமைப்பு ஏற்படுகிறது. இப்புள்ளிகள் வெவ்வேறு விட்டங்களைக் கொண்டவை. சில புள்ளிகள், பல கோள்களை விழுங்கி விடக் கூடிய அளவு பெரியவை. சில புள்ளிகள் 15 நாள்களுக்கு ஒரு முறையும், வேறு சில 6 மாதங்களுக்கு ஒரு முறையும் தோன்றி மறைகின்றன. சூரிய ஒளியும், வெப்பமும் இல்லையெனில், உயிரினங்கள் இப்புவியில் வாழ இயலாது வீழ்ந்து விடும். ஆயினும், அதிக வெப்பம் உடலுக்குக் கேடு விளைவிக்கும். வெற்றுக் கண்களால் சூரியனைக் காணலும் கண்களுக்குக் கேடு விளைவிக்கும். —எம். அரவாண்டி சூல் கலைத்தல் கருவுற்று ஏழு மாதங்களுக்கு முன், சூல் பையிலிருந்து கரு வெளியேறி விட்டால், அது கருச் சிதைவு ஆகும். தானாக ஏற்படும் கருச் சிதைவு, பதினைந்து சூல்களுக்கு ஒன்றாக நடை பெறுகிறது. இது மக்கள் தொகையைக் குறைக்கும் இயற்கை வழியாகும். ஆனால், ஊக்குவிப்பால் ஏற்படும் கருச் சிதைவு சட்டத்திற்கு உட்பட்டும், புறம்பாகவும் நடைபெறுகிறது. சட்டத்திற்குப் புறம்பாக நடை பெறுபவை அதிக ஊறு விளைவிக்கக் கூடியவை. கருச்சிதைவால் ஏற்படும் ஊறுகள். தானாகவோ, ஊக்குவிப்பாலோ நடைபெறும் கருச் சிதைவுகளைத் தேர்ந்த மருத்துவர்களிடம் செய்து கொண்டாலும், ஊறுகள் விளைகின்றன. தாயின் உடல் நலக் கேடும், சில வேளை மரணம் ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையும் தோன்றும். கருச் சிதைவால் மிகைக் குருதிப் போக்கு, கருப்பையில் துளை, புண், மிகு குருதிச் சோகை, எதிர்காலத்தில் கருவுறாத் தன்மை ஆகியன ஏற்படலாம். எட்டு வாரங்களுககுள் ஏற்படும் கருச் சிதைவுகளால் ஊறுகள் மிகக் குறைவு; மரணம் ஏற்படக் கூடிய தீங்கு 5–6 மாதங்களில் ஏற்படும் கருச் சிதைவுகளில் ஏழு மடங்கு மிகுதியாகக் காணப் படுகிறது. இந்தியச் சட்டம் இருபது வாரங்களுக்கு உட்பட்ட கருச் சிதைவையே அனுமதிக்கிறது. சட்டத்திற்குப் புறம்பான கருச் சிதைவுகள், தாயிடம் நலக் கேடும் மரணமும் ஏற்படுத்தும். கருக்கலைப்பிற்கான காரணங்கள். கருவைத் தொடர்வதால், தாயின் உடலுக்கு ஊறு விளைதல், தாயின் உடல், மனத்திற்குப் பெரும் கேடு நேர்தல், பிறக்கும் குழந்தை வாழ்வதற்கு இயலாத உடல் அமைப்பு, அல்லது மனத்தில் ஊனமுடன் இருத்தல், சுற்பழிப்பால் ஏற்படும் சூல், கருத்தடை முறை களைப் பயன்படுத்தியும் ஏற்படும் சூல் தோன்றல் முதலியன கருக் கலைப்பிற்கான காரணங்கள் ஆகும். கருச் சிதைவுகளைச் செய்யக் கூடியவர்கள். பதிவு பெற்ற, மகப் பேற்றுத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களே 12 வாரங்களுக்குட்பட்ட சூலைக் கலைக்க வல்லவர். 12–20 வாரங்களில் கருச் சிதைவு ஏற்படின், இரு மருத்துவரின் ஒப்புதல் தேவை. கருச் சிதைவு செய்ய அரசு மருத்துவ மனைகளும், அரசு உரிமம் பெற்ற இடங்களுமே ஏற்றவை. சூல் கலைக்கும் முறைகள் செலுத்துதல்; கருவின் புறத்தே மருந்து செலுத்துதல் 5. லாமினேரியா கூடும், ஆக்சிட்டோசினால் ஊக்குவிப்பும். கருச்சிதைவு ரகசியமாகவே செய்யப்படும். செய்ய வருபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப் படும். 6. யோனியின் உள்ளே புரோஸ்டோகிளாண்டின் மருந்து செலுத்தல். 7. உள்ளிருப்பதை உறிஞ்சி எடுத்தல். 8. சூல் பையில் துளையிட்டுக் கருவை வெளிக் கொணருதல். மாத விலக்கு வாராமல், பதினான்கு நாளுக்குள் நெகிழிப் பீச்சுக் குழல் நீர்க் குழல் (cannula) மூலமாகச் சூல் பையின் உள்ளிருப்பை உறிஞ்சி எடுத்தலே மாத விலக்கு ஒழுங்குபடுத்துதல் (menstrual regulation) ஆகும். இது ஒரு கருத்தடை முறையாகாது. ஆனால், கருத்தடை முறைகள் செயலிழக்கும் சமயம், இது மிகவும் உதவி செய்யும். இது புற நோயாளர்ப் பகுதியிலேயே எவ்விதமான மயக்க நிலையும் தேவை இல்லாமல், செய்யக் கூடியதாகும். கருப்பையின் கழுத்துப் பகுதியில், 5–6 மி.மீ நெகிழி நீள் குழலைச் சூல் பையுள் செலுத்த வேண்டும். பின்னர் உறிஞ்சுவதற்காக 50 க.செ.மீ. நெகிழிப் பீச்சுக் குழாயை இதனுடன் தொடர்பு படுத்த வேண்டும். இதனால், வெற்றிடம் உருவாகும். இது மிகவும் சாதாரணமான, முற்றிலும் பாதுகாப்பான முறையாகும். எனினும், சூல் தொடர்வதற்கான குறிகள் இரண்டொரு நபர்களில் காணப்படுவதால், இம்முறை முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர், மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்வது நல்லது. கருப்பையின் உள்ளடக்கத்தை உறிஞ்சி, வெளியேற்றும் முறை முதல் மூன்று மாதங்களில் செய்யக் கூடிய சிறந்த முறையாகும். இம்முறையே தடுக்க முடியாத கருச் சிதைவுகளிலும், குறை கருச்சிதைவுகளிலும், முழுச் சூலிலும் பயன்படுகிறது. இது புற நோயாளர்ப் பகுதியிலேயே செய்யக் கூடியது. கருப்பையின் கழுத்தில், பக்க வாட்டில் வலியுறாத் தன்மை ஏற்படுத்தி, கழுத்தின் வாயிலைப் பெரிது படுத்தி, உலோகத்தால் செய்யப்பட்ட நீண்ட குழலை உட்செலுத்தலாம். உலோகக் குழல்கள் 4 அளவுகளில் (6, 8, 10, 12 மி.மீ) கிடைக்கும். இவற்றைச் சூலின் கால அளவிற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். வெற்றிடத்தை ஏற்படுத்தி, நீண்ட குழலின் மூலம் கருப் பொருள் வெளியேற்றப் பட, அதிக வெற்றிடம் தேவைப்படுகிறது. உறிஞ்சும் குழலின் மேல் உறுதியாகச் சுருங்குவதே, கருப் பொருள் முழுமையாக வெளியேறி விட்டதற்கான அறிகுறியாகும். அப்போது, வெற்றிடத்தை நீக்கிக் குழலை வெளியே எடுக்க வேண்டும். உறிஞ்சி அகற்றுதலின் பயன்கள் குறைந்த அளவு குருதிப் போக்கு, குறைந்த அளவு புண் ஏற்படுதல், சூல் பையின் கழுத்துக்குக் குறைந்த அளவு ஊறு விளைவித்தல், சூல் பையில் துளையிடுவதற்கான ஆபத்துக் குறைதல், சூல் பையினுள் இணைப்பு ஏற்பட்டு, மாத விடாய் நிற்றலைத் தவிர்த்தல், மிக விரைவில் செயல்படல் என்பவை. சூல்பையின் கழுத்தைத் தளர்த்திக் கருப் பொருளைச் சுரண்டி எடுக்கும் இம்முறை, தற்போது கை விடப்பட்டு, உறிஞ்சி அகற்றும் முறையே பின் பற்றப் படுகிறது. முதல் மூன்று மாதங்களில் சூல் கலைத்தலால் ஏற்படும் ஊறுகள். உறிஞ்சி அகற்றும் முறையைப் பின் பற்றாவிடில், மிகைக் குருதிப் போக்கு ஏற்படுகிறது. சில சமயம் கருப் பொருள் உள் தங்கி, அதிக அளவு குருதிச் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், வெற்றிடத்தின் மூலம் உறிஞ்சி அகற்றிய பின், ஆய்வாகச் சுரண்டல் வேண்டும். பிண்டப் பை (foetal sac) சுரண்டல் மூலம் வெளியேறா விட்டால், சூல் தொடரும். இதனால், இம்முறைகளில் 1–2 வாரங்களுக்குப் பிறகும், ஆய்வு செய்து கொள்வது நல்லது. நல வாழ்வு முறைகளைப் பின்பற்றா விட்டால், சூல் பையின் அடுத்த சூழல்களில் அடைப்பு ஏற்படக் கூடும். கருப்பையின் கழுத்து வாயிலை மிகுந்த வீரியத்துடன் தளர்த்தினால், தகுதியற்ற கழுத்து உருவாகும். சுரண்டலால், சூல் பையின் இரு பக்கங்களும் ஒன்றுடன் ஒன்று இணைய மாத விடாய் நின்று விடுவதும் உண்டு. Rh- தாயிடம் Rh+ உடைய கரு உருவாயிருக்குமேயாயின், Rh எதிர்ப்பாற்றல் தாயிடம் உருவாகிறது. <!---- Content verified in internet ----> இதற்காகத் தாய்க்கு 100 மைக்ரோ கிராம் எதிர் D உடலில் செலுத்த வேண்டும். கருவின் புறத்தே மருந்து செலுத்துதல். இம்முறை 12–14 வாரங்களான கருவிற்கே ஏற்றது. கரு மிகப் பெரியதாக இருப்பதால், உறிஞ்சி அகற்றும் முறை பயன்படுவதில்லை. அதே வேளை பனிக் குடப் பை சரி வர உருவாகாமல் சிறியதாக இருப்பதால், பனிக்குடத்தினுள் ஊசி செலுத்துவது கடினமாகிறது. இம்முறையை 15 வாரங்களுக்குப் பிற்பட்ட சூலுக்கும் பயன்படுத்தலாம். சூல் பையின் கழுத்தின் வழியே ஃபோலீகத்தீட்டர் (Foleycatheter) மூலம் புரோஸ்டோகிளாண்டின் அல்லது 150 மி.லி. எதாக்ரிடீன் லேக்டேட் மருந்தைக் கருவின் புறத்தே செலுத்தி, சில மணி இருக்கச் செய்தல் வேண்டும். இம்முறை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் கரு வெளியேறி விடும். கருவின் புறத்தே மருந்து செலுத்திச் சூல் கலைக்கும் முறை பனிக் குடத்தினுள் மருந்து செலுத்தும் முறையை விடப் பாதுகாப்பானது. பனிப் பையின் உள்ளே மருந்து செலுத்திக் கருக் கலைத்தல். இம்முறை 15–20 வாரங்களான கருவைக் கலைக்க உதவுகிறது. உதரத்தின் வழியே பக்க வாட்டில் வலியின்மை ஏற்படுத்தி, எண் 18 நீள் ஊசி பனிப் பையினுள் செலுத்தப் படும். தற்போது பயன்பாட்டில் இருப்பவை 20% உப்பு நீர் (saline) 150–250 மி.லி. இம்முறை தற்போது மிகவும் பயன் படுகிறது. உடலில் அதிக சோடியமும், குருதி உறைவதில் சில கோளாறுகளும் ஏற்படக் கூடும். பனிக் குடத்தினுள் மருந்து செலுத்திய பின், 80–98% பெண்களுக்கு 48–72 மணி நேரத்திற்குள், சூல் கலைந்து விடும். இதில் 20% குறை கருச் சிதைவாக அமையும். குருதி உறைவதில் கோளாறுகள் ஏற்படுவதன் மூலம், அதிக குருதிச் சேதம் ஏற்படுகிறது. லேமினேரியா கூட்டினால், கருவகக் கழுத்தைத் தளரச் செய்து, நாளத்தின் மூலம் ஆக்சிட்டோசின் மருந்தைச் செலுத்திச் சூல் கலைக்கலாம். கருப்பையின் கழுத்து கிழிந்து விட வாய்ப்புள்ளமையால், ஆய்வு செய்து பார்த்தல் வேண்டும். இவ்வாறாக, ஏற்படும் கருச் சிதைவுகளால், பின்னால் ஏற்படும் சூல்களிலும் தானாகவே கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.மேற்காணும் முறைகள் பயனளிக்கா விட்டால், சூல் பையைக் கிழித்துப் பிண்டத்தை வெளியேற்றலாம். இம்முறையுடன், சினை நாளம் அகற்றலும் (tubectomy) செய்யலாம். கருச் சிதைவிற்கு வரும் தாய்மாரின் நோக்கத்தை முதலில் நன்கறிய வேண்டும். இன்றியமையா நிலையிலேயே, மருத்துவர் கருச் சிதைவு செய்ய முன் வர வேண்டும். இதற்கு முன்னர், தாயின் உடல், மன நிலையை நன்கு ஆய்ந்து, சூல் பையின் பரிமாணம், நிலைகளை அறிய வேண்டும். சிறு நீரக ஆய்வு, குருதி வகை, Rh வகை, மேக நோய் முதலியவற்றுக்கான ஆய்வும் செய்தல் வேண்டும்.கருச் சிதைவுச் சட்டத்தை எளிதாக்கியமையால், தாயின் உடல் நலக் கேடும், மரணம் விளைதலும் மிகவும் குறைந்துள்ளன. ஆனால், தொடர்ந்து கருச் சிதைவு செய்வது, தாயின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாம். கருச் சிதைவு பிற கருத்தடை முறைகளுக்கு மாற்றாகாது, —ஜோதி விஜயராணி சூல் ஒட்டு கருவிலுள்ள குழந்தை மூச்சு விடவும், ஊட்டச் சத்துப் பெறவும் கழிவுப் பொருள்களை அகற்றவும் உதவும். உறுப்பு சூல் ஒட்டு (placenta) எனப்படும். நுரையீரல், இரைப்பைக் குடல், சிறு நீரகங்கள், தோல் ஆகியவற்றின் பணிகளைச் சூல் ஒட்டு செய்கிறது. செனிப்பக ஹார்மோன்கள், ஈஸ்ட்ரோஜன்கள், புரோஜெஸ்டிரான் ஆகியவை சூல் ஒட்டில் உற்பத்தி செய்யப் படுகின்றன. இதில் ஹைட்ரோ கார்டிசோன், வளர்ச்சி ஹார்மோன், அட்ரினோகார்டிகோ டிரோபிக் ஹார்மோன் ஆகியன உள்ளன. புரதம், மாவுப் பொருள், கொழுப்பு, பாஸ்ஃபேட், வைட்டமின், நுண் பொருள். இரும்புச் சத்து முதலிய பொருள்கள் சூல் ஒட்டுத் திசுவில் காணப்படுகின்றன. அடிப்படை உதிர் படலத்திலிருந்தும், நன்கு வளர்ச்சியடைந்த கோரியானிக் வில்லையிலிருந்தும் சூல் ஒட்டு உருவாகிறது. சூல் ஒட்டின் பெரும் பகுதியான விரலிகள், மரக் கிளைப் போல் காணப்படுகின்றன. பெரிய விரலிகளின் உள்ளே காணப்படும் குருதி நாளங்களும், கிளைகளாகப் பிரிந்து, புதிய விரலிகளில் நுழைகின்றன; இறுதி விரலிகளில் தந்துகி ளையங்களே காணப்படுகின்றன. வெளிப்புற உறையில் காணப்படும் புரோட்டோபிளாஸ்மத் தொகுப்பில் உட்கருக்கள் காணப்படுகின்றன. இந்த அடுக்கையே ஒன்றிய குழியம் என்பர். செல்களையும், உதிர் படல நாளங்களையும் கரையச் செய்யும் திறன் இதற்கு உண்டு. ஒன்றிய குழியத்தின் அடியில் சைட்டோடிரோபோபிளாஸ்ட் செல்கள் காணப்படுகின்றன. சில விரலிகள், அடிப்படை உதிர் படலத்துள் வளர்ச்சியடைகின்றன. இவ்விரலிகள், சூல் ஒட்டின் கருப் பகுதியுடனும், தாய்ப் பகுதியுடனும் தொடர்பு கொண்டுள்ளன. பல நுண்ணிய விரலிகள், விரலி இடைப் பள்ளத்திலுள்ள குருதி ஓட்டத்தில் தள்ளப் படுகின்றன. ஒன்றிய குழியத்தால் அழிக்கப்பட்ட சூல் ஒட்டின் குருதி, நாளங்களிலிருந்து விரலிகளிடையே பெறப் படுகிறது. விரலிகளில் காணப்படும் தாய்ப் பகுதி குருதி உறைவதில்லை; அவ்வாறே, விரலியுள் காணப்படும் கரு குருதியில் கலப்பதில்லை. விரலிகளைக் கழுவிக் கொண்டிருக்கும் தாய்ப் பகுதிக் குருதிக்கும், நாளங்களுள் விரலி ஓடிக் கொண்டிருக்கும் குருதிக்கும் இடையே நிலையான பரிமாற்றம் உண்டாகிறது. தாய்ப் பகுதி குருதியிலிருந்து, குழந்தை ஆக்சிஜனையும், ஊட்டத்தையும் பெறுகிறது. கழிவுப் பொருள்களும், கார்பன் டைஆக்சைடும், கருவின் உடலிலிருந்து தாய்ப் பகுதிக் குருதிக்குச் செல்லும். தோற்றத்தில் சூல் ஒட்டு ஒரு பருமனான முட்டை வடிவ அப்பம் போன்று இருக்கிறது. (இலத்தீன் மொழியில் பிளசெண்டா என்றால், தட்டையான அப்பம் என்று பொருள்). சூலின் இறுதியில் மகப் பேற்றின் பின்னர், சூல் ஒட்டின் விட்டம் 15–18 செ.மீ. ஆகவும், பருமன் 2–3 செ.மீ. ஆகவும், எடை 500–600 கிராம் ஆகவுமிருக்கும். சூல் ஒட்டில் சூல் பைச் சுவருக்கு அருகேயுள்ள தாய்ப் பரப்பு பனிக் குடக் குழிவை உள் நோக்கியுள்ள கருப் பரப்பு என இரண்டு பரப்புகள் உள்ளன. கருப் பரப்பில், மழமழப்பான ஒளிர் படலத்தின் அடியில் கோரியானிக் குருதி நாளங்கள் காணப்படுகின்றன. அவை ஆர வட்டத்தில் கொப்பூழ் இணைப்பிலிருந்து, சூல் ஒட்டுப் புறப் பரப்பிற்குச் செல்கின்றன. சூல் ஓட்டின் சாம்பல் நிறச் சிவந்த சூல் பைப் பரப்பு சில ஆழ்ந்த பள்ளங்களால் பல மடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெல்லிய உதிர் படலத்தால், தாய்ப் பரப்பிற்குச் சாம்பல் நிறம் கிடைக்கிறது. இது சூல் ஓட்டின் பெரும் பகுதியை அமைக்கும் விரலிகளின் மேல் காணப்படும். இயல்பாகச் சூல் ஓட்டு சூல் பையின் மேற்பகுதியுடன் ஒட்டியுள்ளது. அதன் முன் புற அல்லது பின் புறச் சுவர் அரிதாகச் சூல் பையின் அடிக் குழி அல்லது குழல்கள் பொருந்தியுள்ள இடத்தில் இணைக்கப்பட்டுள்ளது. —அ. கதிரேசன் நூலோதி. Alexander Rosinkin, Text Book of Obstetrics, First Edition, Mir Publishers, Moscow, 1983. சூல் ஒட்டு மாறுபாடுகள் மகப் பேறு இயல்பாக இருந்தால், கருப்பைக் கழுத்து முழுமையாகத் திறந்தவுடன், பனிக் குடம் (amnion) உடைகிறது. பனிக் குடம் நீர்மங்கள் சார்ந்த பெருக்கியாகப் பணி புரிந்து கழுத்தைத் திறக்க உதவுகிறது. உரிய காலத்தில், பனிக் குடம் உடைந்தால், கருவுயிர்ப்புக்கும், கருப்பையுட் குழந்தைக்கும் நல்லது. முறையான சுருக்கங்கள் தொடங்குவதற்கு முன்பே பனிக் குடம் உடைந்தால், முதிர்ச்சி முன் உடைவு என்பர். கூபக (pelvis) நுழை வாயிலில் உதயமாகும் பகுதி நிலை பெறாவிடில், உடையும் பனிக் குடம், முதிர்ச்சி முன்னதாகவோ, முன்கூட்டியதாகவோ இருக்கும். உதயமாகும் பகுதி, நிலை பெறு வளையத்தை உண்டாக்கவில்லை. பனிக் குட நீர்மமும் பிரியவில்லை. இந்நிலை குறுகலான கூபகம், குறுக்கு, சாய்வு, பிட்டத் (குறிப்பாகப் பாதத் தோற்றத்தில்) தோற்றங்கள், மிகு நீர்ப் பனிக் குடம் ஆகியவற்றில் உண்டாகிறது. கருப்பைக் கழுத்து விறைப்பாக இருந்தாலோ, படலங்கள் வலிமையற்றிருந்தாலோ, நெகிழ் தன்மை குறைந்த நிலை, பனிக் குட நீர்ம முதிர்ச்சியின் பின்னதாகவோ, முன்கூட்டியோ வெளிப்படலாம். பனி நீர் இவ்வாறு வெளிப்படுவது, பேறு காலத்தில் ஆபத்தான சிக்கலாகும். பேறு கால முதல் கட்டம் (விரிவு நிலை) நீடித்து இருக்கிறது. சுருக்கங்கள் வலியுடன் உள்ளன; கருப்பையில் மந்த நிலை உருவாகிறது. நிலை பெற்ற வளையம் இல்லாதிருந்து, பனிக் குட நீர் கருப்பையிலிருந்து வெளிப்பட்டால், குழந்தை உடலின் சிறிய பகுதிகள் (குறிப்பாக கொப்பூழ்க் கொடி) பிதுக்கம் அடையலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நீண்ட நேரத்திற்குக் கருப்பைக் குழிவு யோனியுடன் தொடர்பு கொண்டிருப்பதால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. நீடித்த உலர்ந்த கட்டத்தில், கருப் பையக அழற்சி தோன்றுகிறது. காய்ச்சல், மிகையான நாடித் துடிப்பு,யோனியிலிருந்து கலங்கலான நீர்ம வெளிப்பாடு ஆகியவையும் காணப்படுகின்றன. முன் கூட்டிய பனிக் குட உடைவில் கருப்பையினுள் குழந்தைக்கு மூச்சுத் திணறல் தோன்றுகிறது. முன் கூட்டிய பனிக் குட வெளிப்பாடு நிகழ்ந்தால், உடனடியாகச் சூலியை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று, குழந்தையின் மூச்சுத் திணறலையும், நோய் தொற்றையும் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். பனிக் குட நீர்மம் வெளிப்பட்ட 6–8 மணி நேரத்திற்குள் கருப்பைச் சுருக்கங்கள் தொடங்கா விடில், கருப்பையைத் தூண்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சுருக்கங்கள் வலிமையற்று இருந்தால், சுருப்பையின் சுருக்கத் தன்மையை ஊக்குவிக்க வேண்டும். சுருக்கங்கள் வலியுடன் இருந்தால், உணர்வு நீக்கி மருந்துகள் கொடுக்க வேண்டும். காலந் தாழ்த்திய பனிக் குட உடைவு. கருப்பைக் கழுத்துத் துளை முழுமையாகத் திறந்திருந்து, பனிக் குடம் உடையாமல் வெளியேற்றம் தொடங்கியிருந்தால், இந்நிலை காலந் தாழ்த்திய பனிக் குட உடைவு எனப்படுகிறது. படலத்தின் மிகையான வலிமை அல்லது படலங்களின் மிகையான விரிவடையும் தன்மை ஆகியவை இச்சிக்கலுக்குக் காரணமாகின்றன. இவை உரிய காலத்தில், பனிக் குடம் உடைவதைத் தடை செய்யும். கருப் படலங்கள் சிசுத் தலைக்கு அருகேயோ, அதனுடன் நெருக்கமாகவோ இருந்தால், மிகக் குறைவாக இருக்கும். நீர்மம், கால தாமதத்திற்குக் காரணமாகிறது. காலந்தாழ்த்திப் பனிக் குடம் உடையும் போது, பேறு காலம் தாமதமாகிறது. கருப் பைச் சுருக்கங்கள் வலியுடன் இருக்கின்றன. உதயப் பகுதியின் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. கருப் பைக் கழுத்து முழுமையாகத் திறந்துள்ளது எனவும், பனிக் குடம் உடையாமல் இருக்கிறது எனவும் உறுதியானவுடன், பனிக் குடத்தைச் செயற்கை முறையில் உடைக்க வேண்டும். விறைப்பான பனிக் குடத்தை, ஒன்றிரண்டு விரல்களை உள்ளே செருகி உடைக்க வேண்டும். துணிக் கட்டுப் போடப் பயன்படும் இடுக்கியையோ, புல்லட் இடுக்கியையோ பயன்படுத்த வேண்டும். உதயமாகும் பகுதி, கூபக நுழை வாயிலில் நிலை பெறாவிடில், பனிக் குடத்திலிருந்து பீறிட்டு வரும் ஓட்டத்தைத் தடை செய்ய வேண்டும். பிறப்புறுப்புப் பிளவு வழியாகச் சிசுப் படலங்கள் துருத்திக் கொண்டிருந்தால், அவற்றையும் துளைக்க வேண்டும். இதன் பின், தலை, மகுட நிலையை அடையத் தொடங்குகிறது. படலத்தால் மூடப் பட்டுக் குழந்தை பிறந்தால், படலத்தை உடனடியாகச் சிசுவிலிருந்து அகற்ற வேண்டும். குறிப்பாக, சிசுவின் தலைப் பக்கமாகத் திறந்து விட்டால்தான் குழந்தையின் மூச்சுத் திணறலைத் தவிர்க்க முடியும். கருக் குடையின் முறை கேடுகள். கருக் குடை பொதுவாக வட்டமாகவோ, நீள் வட்டமாகவோ இருக்கும். சில போது, அது நீளமாக, அவரை வடிவமாக இரண்டு மடல்கள் கொண்டுமிருக்கலாம். குருதி நாளங்களால் இணைக்கப்பட்ட பல பகுதிகள் கருக் குடையில் இருக்கும். கருக் குடை மெல்லியதாகக் கருப் பைச் சுவரின் பெரும் பரப்பில் விரிந்து கிடக்கிறது. முதன்மைக் கருக் குடையுடன் சில சமயம், மிகையான பகுதிகளும் இணைக்கப் பட்டிருக்கும். படலங்களுக்கிடையே செல்லும் தமனிகள், சிரைகள் ஆகியவற்றுடனும் இணைக்கப்பட்டிருக்கும். கருவுயிர்த்த பின், கருக் குடையின் மிகைப் பகுதிகள் கருப் பையின் உள்ளேயே தேங்கிக் கிடக்கலாம். இதனால், கருவுயிர்ப்பிற்குப் பிறகு, குருதிப் பெருக்கும், சீழ்த் தொற்றும் நிகழலாம். கருக் குடை வெளிப்பட்டவுடன், அதில் உடைந்த குருதி நாளங்கள் உள்ளனவா எனப் பார்க்க வேண்டும். இவை காணப்பட்டால், கருக் குடையின் மிகை மடல் கருப்பையில் தங்கி விட்டது என உறுதி செய்து, உடனடியாக அதைக் கை கொண்டு அகற்ற வேண்டும். அரிதாக, வெண்மையான விளிம்புடன் ஒழுங்காக இருக்கும் கருக் குடையிலிருந்து படலங்கள் வெளிப் படுகின்றன. கருப்பைச் சிலேட்டுமத்தையும், கருக் குடை ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தையும் பொறுத்துக் கருக் குடையின் வடிவம் அமையும். கருவகக் கோளங்களில் கருக் குடை பொருந்தியிருப்பது அல்லது வாட்டக் குறைவு அல்லது அழற்சி நிகழ்வுகளால், கருப்பையகம் பாதிக்கப்படுவது கருக் குடையைப் பாதிக்கும். விரல்களின் சிதைவாலும், சீர் குலைந்த குருதி ஓட்டத்தின் விளைவாலும், கருக் குடை நசிவுகள் உருவாகின்றன. இம்மாற்றங்களைத் தொடர்ந்து ஃபைப்ரின் படிகிறது. நசிவுகள் வெண்மையான வட்டமான பட்டைகளாக 15–20 மி.மீ. அளவில் கருக் குடையின் இரண்டு பக்கங்களிலும் (தாய், சேய்ப் பரப்பு) காணப்படுகின்றன. சில போது நசிவுகள் பெருமளவில் இருந்து, கருக் குடை முழுதும் காணப்படும். சிறுநீரக அழற்சியிலும், பேறு கால நச்சு நிலையிலும் பெரிய நசிவுகள் தோன்றுகின்றன. சிறிய நசிவுகளால் தீமை இல்லை. கருக் குடையின் பரப்பு முழுதும் காணப்படும் நசிவுகளால் குழந்தையின் இயல்பு மீறிய வளர்ச்சிகள் தோன்றுகின்றன. அவை, கருப்பையுள் குழந்தையின் மரணத்திற்கும் காரணமாகின்றன. நிறை மாதச் சிசுக்களின் தாய்ப் பரப்பில், வெண்மையான, திண்மையான புள்ளிகள் காணப்படுகின்றன. அவை நசிவடைந்த விரலிகளில் காணப்படும் கால்சிய உப்புப் படிவுகளாகும். கருப்பையுள் சிசுவின் வளர்ச்சி மீது எவ்விளைவையும் இவை ஏற்படுத்துவதில்லை. கருக்குடை ஒட்டிக் கொள்ளல். கருப்பையகம், கருவகத் தசையின் (myometrium) பொஞ்சடுக்கினுள் நுழையாது விரலிகள் உதிர் படலத்தின் இறுக்கு அடுக்குள் வளரும். குழந்தை பிறந்த பின்பு, பொஞ்சடுக்கிலிருந்து, கருக் குடையை எளிதில் பிரிக்க முடிகிறது. ஆனால், கருப்பைச் சுவருடன் கருக் குடை ஒட்டிக் கொள்வது மிகவும் நெருக்கமாக இருக்கிறது. ஒட்டிக் கொள்வதில் உண்மை வகை, போலி வகை என இரண்டு வகைகள் பிரித்தறியப் படுகின்றன. போலி ஒட்டலில் (placenta adherent) விரலிகள் கருப் பையகத்தினுள் வளர்ச்சியடைகின்றன. ஆனால், கருவகத் தசையை அடைவதில்லை. கருக் குடையைக் கையாலேயே பிரிக்க முடியும். உண்மை வகையில் (placenta accreta) விரலிகள் கருவகத் தசையினுள் சென்று வளர்ச்சி அடைகின்றன. இதனால், கருப் பைச் சுவரிலிருந்து கருக் குடையைப் பிரிக்க முடிவதில்லை. இது மிகவும் அரிது. தன் முழுப் பரப்புக் கொண்டோ, ஒரு பகுதி மட்டும் கொண்டோ கருக் குடை கருப்பைச் சுவரின் மேல் முட்டிக் கொள்ள முடியும். கருக் குடையில் ஒட்டிக் கொள்ளல் பின் வருவனவற்றால் நிகழும். அழற்சி நோயால், கருப் பையில் ஏற்படும் மாற்றங்கள் (கருப் பையக அழற்சி) கருப்பை ஃபைப்பேராமையோமா ஆகியவற்றைச் சுரண்டிய பின் உண்டாகும் தழும்புகள், கருப் பையின் விகார வளர்ச்சிகள் (குறை வளர்ச்சி, இரு கொம்புக் கருப்பை முதலியன) கருச் சிதைவின் பின்னர், பெண்களில் கருக் குடை ஒட்டிக் கொள்ளல் ஆகியன உண்டாகும். பேறு கால முதல், இரண்டாம் நிலைகளிலோ, மகப் பேற்றின் போதோ, ஒட்டியிருக்கும் கருக் குடை நிலைகளிலோ வெளித் தெரிவதில்லை. மூன்றாம் கட்டத்தில், குருதிப் பெருக்கு தொடங்குகிறது. விரைவாக அது மிகையாகிறது. தன் முழுப் பரப்புக் கொண்டு கருப்பைச் சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தால், குருதிப் பெருக்கு இல்லை. கருக் குடையின் ஒரு பகுதி பிரியத் தொடங்கியவுடன், கருக் குடை பிரிந்து வெளிப்படுவதை, ஒட்டியுள்ள கருக் குடை தடுத்தால், குருதிப் பெருக்கு தொடங்குகிறது. கருக் குடை தேங்கி விட்டால், கருப்பை சுருங்குவதில்லை. கருக் குடை பொருந்தியிருக்கும் இடத்திலுள்ள நாளங்கள் திறந்து, அது உள்ளிருக்கும் வரை குருதிப் பெருக்கு தொடர்கிறது. ஒட்டியுள்ள கருக் குடைக்கு உடனடி அறுவை செய்ய வேண்டும். போலி ஒட்டலைக் கை கொண்டு, பிரித்துக் கருப் பையிலிருந்து அகற்றி விடலாம். உண்மை ஒட்டலின் போது, கருப் பையை அகற்றி விடுவதே சிறந்தது. —அ. கதிரேசன் நூலோதி. Alexander Rosinkin, Text Book of Obstetrics, First Edition, Mir Publishers, Moscow, 1983: Gillian Turner et. al. Undergraduate Obstetrics and Gynaecology, John wright and Sons, Bristol, 1980. சூல் கால அகச் சுரப்பிக் குறைபாடு சூல் காலத்தில் தைராய்டு, கணையம், அண்ணீரகம், முன் பிட்யூட்டரி முதலிய நாளமில் சுரப்பிகள் பெருமளவில் பாதிக்கப்படும். தைராய்டு மிகையாகப் பணி புரியும் போது, சூலே அரிதாகும். இருப்பினும் கருத்தரிப்பு நடக்கிறது. தைராய்டு மிகைப் பணியின் போது ஓய்வும், துயிலூட்டிகளுமே போதும். சில போது மெத்தில் தயோயூரசில், கார்பமசோல் ஆகியன தேவைப் படுகின்றன. தைராய்டு மருந்து கொடுக்கலாமா, வேண்டாமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. தைராய்டு மருந்து கொடுக்காமல் இருந்தால், கருச் சிதைவு சூல் நச்சு நிலை, முன் முதிர்ச்சி, குழந்தை இறப்பு ஆகியவை நிகழலாம். சில போது 4–6 ஆம் மாதங்களில் தைராய்டு அறுவை செய்ய நேரிடும். தைராய்டு எதிர் மருந்துகள் தாய்க்குக் கொடுக்கப் படும் போது, அவை தாய்ப் பாலின் வழியே வெளியேறுவதால், குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுக்கக் கூடாது. தைராய்டு குறை நிலையில் சூல் உண்டானாலும், கருச் சிதைவு ஏற்பட்டு விடும். நிறைந்த அளவில் தைராக்சினைக் கொடுத்தால், நிலைமை சீரடையலாம். கணையம், போதிய அளவு இன்சுலின் சுரக்காமையால், குருதியிலும், சிறுநீரிலும் சர்க்கரை தோன்றி, நீரிழிவு நோய் உண்டாகலாம். சூல் நிலையில், நீரிழிவு நோய் உண்டாவது இயல்பு. சூல் காலம் நீடிக்கும் போது, இன்சுலின் தேவையும் மிகும். குருதியில் குளூக்கோஸ் மிகையாகக் காணப்பட்டால், சூல் பெண்ணுக்குக் காளான் நோய்கள் ஏற்படலாம். மிகையான நீர்ப் பனிக் குடம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குழந்தை பிறவி ஊனங்களுடன் பிறக்கலாம். பேறு கால நச்சு நிலையும் உண்டாகலாம். நீரிழிவு நோய் கொண்ட தாயின் சிசுக்கள், எடை மிகுந்துள்ளமை- யால், கருவுயிர்ப்புக் கடினமாக இருக்கும். எனவே, கருப்பைத் திறப்பு அறுவையே சிறந்தது. அரிதாகச் சூல் பையினுள்ளேயே குழந்தை இறந்து விடலாம். புதுப் பிறப்புக்கு, மூச்சு மண்டல நோய்கள் உண்டாவது எளிது. பேறு காலத்தின் போது, மருத்துவரும், மகப் பேற்று வல்லுநரும் இருப்பது நல்லது. சரியான உணவு, உரிய அலகில் இன்சுலின் தரப்பட்டால், சிக்கல் இராது. கடஒலி வரைவி கொண்டு குழந்தையின் நிலையைக் கணக்கிட வேண்டும். 36 வாரங்களில் லெசீதின்–ஸ்பின்கோஃபைலீன் விகிதத்தைக் கணக்கிடுவது நல்லது. வயிற்றின் எக்ஸ் கதிர்ப் படம் எடுப்பது நல்லது. மகப் பேற்று வலி உண்டானவுடன், சிண்டோசினான் பயன்படுத்தி, மகப் பேற்றை ஊக்குவிப்பது நல்லது. இல்லையெனில், இடுக்கியைக் கொண்டு குழந்தையை வெளியேற்றலாம். அவசர நிலையின் போது, சூல் பைத் திறப்பு அறுவை செய்ய வேண்டும். குழந்தை பிறந்தவுடன், தாயின் இன்சுலின் தேவை குறைந்து விடும். பிறந்த குழந்தைக்கும் நீரிழிவு நோய் இருக்கிறதா என ஆய்தல் வேண்டும். சூல் காலத் தொடக்கத்தில், கருக் குடையின் முன்னிலையால், குருதிப் பெருக்கு ஏற்பட்டு, முன் பிட்யூட்டரி சுரப்பியில் குருதிப் பெருக்கு ஏற்படும். இந்நிலையை ஷீஹான் கூட்டியம் (Sheehan's syndrome) என்பர். இங்கு, தாய்க்கு அதிர்ச்சி ஏற்படும். பால் சுரப்பும், தீட்டும் நின்று விடும். தைராய்டு, அண்ணீரகம் ஆகியவையும் பாதிக்கப் படுகின்றன. அடிசன் நோயும் (குறைந்த குருதி அழுத்தம், அசதி, உடலில் நிற மாற்றம்) தோன்றலாம். மயிர் உதிர்ந்து, தோல் தடிக்கும். சோர்வும், அசதியும் உண்டாகும். சூலின் போது, அட்ரினல் சுரப்பி வீக்கமடைந்து, அதன் மூன்று வகையான சுரப்பிகளும் அதிகரிக்கின்றன. அண்ணீரகத்தின் இத்தகைய மிகையான சுரப்பால், பெருமளவில் தீங்கு உண்டாவதில்லை. நாளமில் சுரப்பிகளில் மிகவும் முக்கியமானது சூல் ஒட்டு (placenta) ஆகும். இதன் சுரப்புகள் மனித கோரியானிக் செனிப்பகம் (HCG), ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஆகியன. இவை அனைத்தும் குலின் போது தாய், சேய் ஆகியோரின் நல வாழ்வுக்கு மிகத் தேவை. நூலோதி. John Hawkins, Text Book of Gynaecology, Ninth Edition, Churchill Livingstone, London, 1971. சூல் கால இதய நுரையீரல் சிக்கல்கள் சூல் காலத்தின் போது ஏற்படும் இதய நோய்கள் பெரும்பாலும் பிறவி இதய நோயாக இருக்கும் அல்லது பெறப்பட்ட முடக்கு வாத இதய நோயாக இருக்கும். அண்மைக் காலங்களில் ஏற்பட்ட மருத்துவ முன்னேற்றம் காரணமாக, பிறவி இதய நோய் கண்டவர்களும் வெற்றிகரமாகக் கருவுயிர்க்க முடியும். முடக்கு வாதக் காய்ச்சல் ஏற்பட்டு, அதன் விளைவாக ஏற்படும் இதய நோய்கள், பேறு காலத்தில் சிக்கல்களை உண்டாக்குகின்றன. பெருமளவில் ஈரிதழ்த் தடுக்கிதழ் பாதிக்கப்பட்டு, இதய இடக் கீழறைக்கான குருதி ஓட்டம் தடைப்படுகிறது. இதன் விளைவாகக் கடின மூச்சு, மிகையான நாடித் துடிப்பு ஆகியன உண்டாகின்றன. இறுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதே, கடின மூச்சு ஏற்பட்டு, நீலம் பூரித்தல் (cyanosis) உண்டாகிறது. இதயம் செயலிழக்கிறது; சூல் காலத்தில் மிகை எடையும், உதர விதானம் மேல் நோக்கித் தள்ளப் படுவதும், கருக் குடை குருதி ஓட்டம் பேணலும், சுழற்சியடையும் குருதியின் பரிமாண அதிகரிப்பும் இதயத் தசை மீது வினை புரிந்து, இதயப் பணியை முறிக்கலாம். மிகச் சிக்கலான காலம் 28–36 வாரம் வரையாகும். இதன் விளைவாக, தீவிர நுரையீரல் நீர்த் தேக்கமும், இதய முறிவும் உண்டாகும். எடையைக் குறைத்து, புரதம் அதிகமான மாவுப் பொருள் குறைந்த உணவு பரிந்துரைக்கப்பட்டு, இரும்புச் சத்தும், ஃபோலிக் அமிலமும் தர வேண்டும். தேவையிருந்தால், மருத்துவமனையில் சேர்த்து ஓய்வு, துயிலூட்டிகள், ஆக்சிஜன் டிஜிடாலிஸ், ஃபுரசமைடு, அமைனோஃபைலின் போன்றவை கொடுக்கப்படலாம். மைட்ரல் தடுக்கிதழ் மிகவும் குறுகி விட்டால், சூலுடைய பெண்ணின் பொது உடல் நிலை சீராக இருக்கும் போது, அறுவை செய்யலாம். குருதி உறை எதிர் மருந்துகளும் பயன்படுகின்றன. மகப் பேறு தானாகவே நடக்கும். தேவையிருந்தால், சிண்டோசினான் மருந்து கொடுத்து, இதை விரிவு படுத்தலாம். பேறு கால இரண்டாம் கட்டத்தின் போது, இடுக்கியைப் பயன்படுத்தலாம். நுண்ணுயிர் எதிர் மருந்துகளும், துயிலூட்டிகளும் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த பின்பு, போதிய ஓய்வு, உரிய மருந்துகள். குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை தேவைப்படும். நுரையீரல் சிக்கல்களாகக் காச நோயைக் குறிப்பிடலாம். மிகச் சிறந்த காச நோய் எதிர் மருந்துகள் (ரிபோமைசீன்) கண்டு பிடிக்கப்பட்டுள்ளமையால், மருத்துவம் எளிதாகும். கருக் கலைப்பு அறுவை முறை பொதுவாகத் தேவைப்படாது. சூல் காலத்தின் முதல் மூன்று மாதங்களின் போது, காச நோய் எதிர் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. பேறு காலத்தில் சாமண இடுக்கியோ, குறைந்த அளவிலான உணர்வகற்றலோ கையாளப்படலாம். குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி தடுப்பு ஊசி தர வேண்டும். மற்றுமொரு நுரையீரல் நோயாக, ஆஸ்த்துமாவைக் குறிப்பிடலாம். பேறு காலத்தில், கார்டிசோல் மிகுதியாக சுரப்பதால், ஆஸ்த்துமா நோய் தணிகிறது. முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கலாம். மகப் பேற்றில், ஹைட்ரோகார்டிசோன் கொடுக்கலாம். தேவையிருந்தால், சாமண இடுக்கியைக் கையாளலாம். சில நுரையீரல் தோய்கள் எதிர் உயிர் மருந்துகளால் கட்டுப்படுத்தப்படும். —அ. கதிரேசன் நூலோதிL.Nisson et.al., A Child is born, Faber and Faber, London, 1977 சூல் காலக் கணிப்பும் கருவறி முறையும் சூலின் தொடக்க இறுதிக் காலங்களில், சூலை அறுதியிடப் பல்வேறு வழி முறைகள் உள்ளன. குழந்தையின் பல்வேறு பகுதிகளைத் தொட்டுப் பார்த்து, இதயத் துடிப்பைக் கேட்டு, அதன் அசைவுகளை உணர்ந்து, எக்ஸ் கதிர் ஆய்வின் மூலம், குழந்தையின் எலும்புகளைப் பார்க்க முடிந்தால், சூலைப் பற்றி எந்த ஐயமும் இருக்க முடியாது. மேற்கூறிய சூலின் அறிகுறிகள் இறுதி மாதங்களிலேயே (5,6–ஆம் மாதம்) தெரியும். தொடக்கத்திலேயே சூலை அறுதியிட, நேர் மறை மற்றும் ஊக அறிகுறிகளே ஏற்புடையவை. சூல் அறிகுறிகள். சுவை, பசி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், காரச் சுவை கொண்ட பொருள்கள், சுண்ணாம்பு, கரி போன்ற பொருள்கள் மீது விருப்பம்; குமட்டல், வாந்தி; நுகர் உணர்வில் மாற்றங்கள் (மணப் பொருள்கள், புகையிலை, புகை மீது அருவெறுப்பு); நரம்பு மண்டலத்தில் மாற்றங்கள்; உறுத்தலுணர்வு, துயில் நிலை, மனப் போக்கின் மாற்றங்கள்; முகத் தோல் மாற்றம், வயிற்றின் நடுக் கோடு, மார்புக் காம்பு, முகப்பு வட்டம் ஆகியவற்றின் நிற மாற்றங்கள் ஆகியவை சூலடைந்த பெண்ணின் முழு உடலில் தோன்றும் பொது அறிகுறிகளாகும். பிறப்புறுப்புகளிலும், மாத விடாய்ச் சுற்றிலும் ஏற்படும் மாற்றங்கள். கொடிய நோய்களின் போதும், மன உளைச்சலின் போதும், மாத விடாய் நின்று விடலாம். இயல்பான பெண்ணிடம் மாத விடாய் நின்று விட்டால், சூல் என்றே கருத வேண்டும். சூல் பை, யோனி ஆகியவற்றின் சிலேட்டுமத்தின் நீல நிறம்; சூல் பை அளவு, அமைப்பு, நெருக்க அளவு ஆகியவற்றில் மாற்றங்கள்; மார்புக் காம்பில் உள்ள பால் நாளங்களிலிருந்து சீம்பால் வெளிப்படல் முதலியவை சூலின் நேர் முகமான அறிகுறிகள் ஆகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> யோனி முகப்பின் சிலேட்டுமத்தையும், புறப் பிறப்புறுப்புகளையும் உட்காட்டி மூலம் ஆய்தல்; பெண்ணின் யோனி ஆய்வு, இரு கை ஆய்வு, மார்- பகத்தைத் தொட்டுச் சீம்பாலை வெளிப்படுத்துதல் என்பன நேர்முக அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளும் வழிகளாகும். பெண்ணைக் கட்டிலிலோ, நாற்காலியிலோ அமர்த்தி, யோனி ஆய்வு செய்ய வேண்டும். கட்டிலில் இருக்கும் போது. பெண்ணின் கால்கள் வயிற்றின் மீது மடக்கி வைக்கப்பட்டு, விரிந்த நிலையில் இருக்க வேண்டும். நோயாளியின் திரிகத்திற்கு அடியில் ஒரு மெத்தையை வைக்க வேண்டும். ஆய்வாளர், முதலில் தம் கைகளைச் சுடு நீரிலும் பின்னர், தூரிகை கொண்டு சோப்பு நீரிலும் தொற்று நீக்கும் கரைசல் (0.5% குளோரமின் கரைசல் அல்லது 1% லைசோபார்ம் கரைசல்) கொண்ட நீரிலும் கழுவ வேண்டும். தொற்று நீக்கப்பட்ட கையுறை அணிய வேண்டும். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் நீர்த்த கரைசல் அல்லது ஏதாவது ஒரு தொற்று நீக்குங் கரைசலால் அல்குலை நன்கு கழுவி, தொற்று நீக்கப்பட்ட பஞ்சால் உலர்த்த வேண்டும். இடக்கையின் கட்டை விரல், ஆள் காட்டி விரல் கொண்டு, பேரிதழையும், சிற்றிதழையும் பிரிக்க வேண்டும். அதன் பின், அல்குல் மற்றும் முகப்பின் சிலேட்டுமம், பார்தோலின் சுரப்பி வெளி வாயில்கள், துளை, விடபம் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். உள் நோக்கி ஆய்வு. புறப் பிறப்புறுப்புகளையும், முகப்பின் சிலேட்டுமத்தையும் ஆய்வு செய்த பின்னர், உள் நோக்கிக் கொண்டு ஆயலாம். யோனியின் சிலேட்டுமம், சூல்பையின் கழுத்து ஆகியவற்றின் நீல நிறத்தையும் (பேற்றிற்கான நேர் மறை அறிகுறிகள்), கருப்பைக் கழுத்தின் நோய்களையும், யோனியின் நோய்களையும் (அழற்சி, கீற்று அரிப்பு, தொங்கு தசைப் புற்று நோய்) உள் நோக்கி மூலம் காணலாம். கரண்டி வடிவத்துடன், இரண்டு தடுக்கிதழ்கள் கொண்ட யோனி உள் நோக்கியைப் பயன்படுத்தலாம். இரு தடுக்கிதழ் உள் நோக்கி, யோனியின் முகப்பை அடையும் வரை உட்செலுத்தப் படுகிறது. அதன் இரண்டு அலகுகளும் பிரிக்கப் படுகின்றன. இப்போது, கருப்பைக் கழுத்தைக் காண முடியும். யோனியிலிருந்து உள் நோக்கியை வெளியே எடுக்கும் போது, யோனியின் சுவர்களை ஆராயலாம். கரண்டி வடிவ உள் நோக்கி மூலம் கருப்பைக் கழுத்தையும், யோனியையும் எளிதில் ஆய்வு செய்யலாம். கரண்டி வடிவ உள் நோக்கியை முதலில் யோனிக்குள் செலுத்தி, அதன் பின் புறச் சுவரும், விடபமும் அழுத்தப்படும். அடுத்து, மற்றோர் உள் நோக்கி உட்செலுத்தப்பட்டு, யோனியின் முன் புறச் சுவர் உயர்த்தப்படும். சூல் பைக் கழுத்தையும், யோனியையும் ஆய்வு செய்த பினனர், கை கொண்டு ஆய்வு செய்யலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூல் பெண்ணின் யோனி ஆய்வு. இடக் கையின் கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் கொண்டு, யோனியின் பேரிதழையும், சிற்றிதழையும் பிரித்து, வலக்கை ஆட்காட்டி விரலை யோனியில் செலுத்தலாம். இப்போது, கட்டை விரல் மேல் நோக்கியும், 4, 5 ஆம் விரல்கள் வளைந்தும், ஏனையவை விடபத்தின் மேலும் அமைந்திருக்கும். இரு கை ஆய்வு. சூல் பைக் கழுத்தைத் தொட்டுப் பார்த்த பின்னர், இரு கை ஆய்வைத் தொடரலாம். கையின் விரல்கள், யோனியின் உட் செலுத்தப்பட்டு, முன் புற வளைவின் மேல் வைக்கப் படும். சூல்பைக் கழுத்துப் பின்புறமாகத் தள்ளப் படும். இடக்கையின் விரல்கள், வயிற்றுச் சுவரைச் சிறிய கூபகத்தின் பக்கமாகத் தள்ளுவதால், முன் புற வளைவில் உள்ள கையின் விரல்களைச் சந்திக்கின்றன. இரண்டு கைகளின் விரல்களும் ஒன்றையொன்று சந்தித்தவுடன், கருப்பையைத் தொட்டு, அதன் நிலை, அமைப்பு, நெருக்க அளவு ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன: இதையடுத்துக் கருவகக் குழல்களும், சூலகங்களும் ஆய்வு செய்யப் படுகின்றன. ஆராயும் கைகளின் விரல்கள், கருப்பையின் கோணங்களிலிருந்து படிப்படியாகக் கூபகத்தின் பக்கச் சுவர்களுக்குச் செல்கின்றன. கூபக எலும்புகளின் உட்பரப்பைத் தொட்டுப் பார்த்த பின், மூலை விட்டக் கோட்டின் இணைப்பளவை அளவிடுவதுடன், இரு கை ஆய்வு முடிகிறது. கீழ்க் காணும் அறிகுறிகள் கொண்டு சூல் உறுதி செய்யப்படுகிறது. சூல் பை பெரிதாதல். கருவக வாழ்வின் 5–6 ஆம் வாரத்தில், சூல் பை அளவில் பெரிதாவதை அளவிட முடியும். கருப் பை, முதலில் முன், பின் புறத் திசைகளில் வளர்ந்து. உருண்டை வடிவமடைகிறது. பின்னர், குறுக்குத் திசையில் வளர்ச்சியடைகிறது. சூல் வளர வளரக் கருப் பையின் பெரிதான தன்மை தெளிவாகிறது. இரண்டாம் மாத இறுதியில், கருப்பை வாத்து முட்டை அளவாகிறது. 3ஆம் மாத இறுதியில் அதன் மேற்பகுதி பூப்பிணைப்பு மட்டத்தை அடைகிறது. கோர்விட்ஸ் ஹெகார் அறிகுறி. கருப்பையின் நெருக்க அளவு மெல்லியதாக இருக்கும். ஆய்வு செய்யும் கைகளின் விரல்கள் (இரு கை ஆய்வு) இடுக்கியில் தடையின்றிச் சந்திக்கின்றன. சூலின் தொடக்க காலத்தில், இந்த அறிகுறி சிறப்புத் தன்மை வாய்ந்தது. ஸ்னீகிரேவின் அறிகுறி. இதன் நெருக்க அளவில் சூல் பை, பெரும் மாறுதலடைகிறது. இரு கை ஆய்வின் போது, மெல்லிய சூல் பை அடர்த்தி அடையும். கைகளில் கிளர்த்தல் வினை நின்றவுடன், கருப் பை மீண்டும் மெல்லியதாகும். பிஸ்கசெக்கின் அறிகுறி. சூலின் தொடக்க வாரங்களில், சூல் பையின் உடல் வளர்ச்சி சீராக இருப்பதில்லை. இது முட்டை பொதிந்துள்ள கோணத்தில், கரு வளர்ச்சியடைவதைப் பொறுத்துள்ளது. சூல் வளர வளர, சமச் சீரற்ற தன்மை மறைகிறது. சூல் பையின் இடுக்கி மென்மையடைவதால், சூல் தொடக்கத்தில், கருப்பைக் கழுத்தின் நிலை எளிதில் மாற்றமடைகிறது என முன்பு கருதினர். இடுக்கி மென்மையடைவதால் உண்டாகும் சூல்பையின் முன்புற வளைவும், சூலின் தொடக்க கால அறிகுறியாகும். சூல் காலம் உறுதியாகவில்லையென்றால், ஓரிரு வாரம் சென்ற பின், மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். இப்போது முற்றிய சூலாகையால், அனைத்து அறிகுறிகளும் தெளிவாகத் தெரியும். சூல் வகை அறுதியிடல். பொதுவாக, முன் வரலாறு, கூர்ந்து நோக்கல், யோனி ஆய்வு போன்ற மருத்துவ ஆய்வு விவரங்களிலிருந்து சூல் உறுதிப் படும். சூலுடன், வேறு பல நோய் நிலைகளும் இருந்தால், உறுதி செய்வதில் இடர்ப்பாடு தோன்றலாம். வேற்றிடச் சூலையும், கருவகக் குழல் அழற்சியையும் பிரித்தறிவது மிகவும் கடினம். சூல் பையின் புற்று நோயிலிருந்து, சூல் உறுதி செய்தலும் எளிதன்று. மருத்துவ முறை ஆய்வுகள் தவிர, உயிரியல் சார்ந்த சூல் ஆய்வும் செய்ய வேண்டும். அஷீம்-சான்டெக் ஆய்வு. சூலின் தொடக்கத்திலிருந்தே பெண்ணின் உடலில் செனிப்பக ஹார்மோன் (gonodotropic hormone) உற்பத்தி செய்யப்பட்டுச் சிறுநீரில் வெளிப்படும். இந்தச் சிறுநீரைத் தோல் அடி ஊசியாக முதிர்ச்சியடையாத பெண் சுண்டெலிக்குள் செலுத்தினால், எலியின் கருப் பையும், குமிழ்ப் பைகளும் தூண்டப்பட்டு, வீக்கமடைந்த குமிழ்ப் பைகளில் குருதிப் பெருக்கு ஏற்படும். 6–8 கி. எடையுள்ள பெண் சுண்டெலிகளுக்கு, காலையில் தோன்றும் முதல் சிறுநீரை 0.2–0.4 மி.லி. அலகில் நாளும் 6 முறையாக, 2 நாள் ஊசி மூலம் செலுத்தினால், 96–100 மணி நேரங்களுக்குள் அவை இறந்து விடுகின்றன. கருப்பையும், சூலகங்களும் ஆய்வு செய்யப்பட்டால், குமிழ்ப் பைகளில் காணப்படும் குருதிப் பெருக்கு அல்லது பெரிதடைந்த சூல் பை ஒரு நேர் மறை அறிகுறியாகக் காணப் படும். தவளை ஆய்வு. சூல் பெண்ணின் சிறுநீரில் காணப்படும் கோனோடோடிரோபினின் வினையால் தவளைகள், பரட்டைகள் ஆகியன விந்தணுச் செல்களை உற்பத்தி செய்கின்றன. ஆய்வு செய்யப்பட வேண்டிய உயிரியின் முதுகிலுள்ள நிணப்பையுள் 2.5 மி.லி. சிறுநீர் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. 1–2 மணி நேரத்தில், பிப்பெட்டின் உதவியால், குதப்பை நீர்மம் எடுக்கப்படும். நுண் பெருக்கி மூலம் அசையும் தன்மை கொண்ட விந்தணுக்கள் அதில் காணப் பட்டால், ஆய்வு நேர் மறையாகக் கருதப்படுகிறது. தடுப்பாற்றியல் முறையில் சூல் உறுதி. தடுப்பாற்றியல் முறையில் சூலை உறுதி செய்ய, குருதித் திரட்டு (haemo–agglutination) முறை மேற்கொள்ளப் படுகிறது. புற ஒலி. இம்முறை போன்றவையும் சூலை அறுதியிடக் கையாளப்படுகின்றன. இவற்றின் மூலம் 8–10 ஆம் வாரத்திலேயே குழந்தையின் இதய ஒலிகளைக் கேட்க முடிகிறது. கருப்பையினுள் பொலிவடைந்த கரு அணுக்கள் இருப்பதைப் புற ஒலி காட்டுகிறது. அண்மைக் கால ஆய்வு. பெண்ணின் சிறுநீர் ஒரு சொட்டும், மனித செனிப்பக எதிர் சீரம் ஒரு சொட்டும், மனித செனிப்பக லேடக்ஸ் ஆண்டிஜன் 2 சொட்டும் கலந்து, 90 நொடிக்குப் பின் பார்க்கும் போது, செல் திரட்சி ஏற்பட்டிருந்தால், பெண் சூலுற்றுள்ளாள் என்றும், திரட்சியடையா விட்டால், இல்லை என்றும் முடிவு செய்யலாம். —அ. கதிரேசன் நூலோதி. C. Wirsen et. al., A Child is Born, Faber and Faber, London, 1977. சூல் காலக் கவனிப்பு பேறு காலத்தின் போது, உடல் நலத்தைப் பேணிக் காத்தல், இயல் நிலையிலிருந்து ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பிடித்தல், பாதுகாப்பான மகப்பேற்றிற்கு ஆயத்தம் செய்தல், மகப் பேற்றிற்குப் பின் சீரடைந்து, தாய்ப் பாலூட்டுவதைப் பேணல், உயிர்ப்புள்ள நல வாழ்வான, முதிர்ச்சியடைந்த குழந்தை பேணல் ஆகியன அடங்கும். மகப் பேற்றிற்குக் குடும்ப மருத்துவர், மகப் பேறு மருத்துவர், செவிலியர் ஆகியோரின் முழுக் கவனம் தேவை. முந்தைய பேறு கால வரலாறு, இடையே தோன்றிய நோய்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சூலுடைய பெண்ணின் முழு வரலாறும் தெரிந்திருக்க வேண்டும். இறுதி மாத விடாயின் முதல் நாள் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், வரப் போகும் பேறு காலத்தை அறுதியிட முடியும். முன்னோக்கி 9 மாதங்களையும், ஏழு நாளையும் கூட்டி அறுதியிடலாம் அல்லது பின்னோக்கி மூன்று மாதங்கள் கழித்து 7 நாள் கூட்டியும் கணிக்கலாம். காட்டாக, இறுதி மாத விடாயின் முதல் நாள் ஜனவரி 10 என்றால், எதிர் பார்க்கும் பேறு கால நாள் அக்டோபர் மாதம் 17 ஆம் நாளாகும். இந்த நாள் தாயின் முந்தைய மாத விடாய் எத்தனை நாள் நீடிக்கும் என்பதைப் பொறுத்தும் இருக்கும். சூல் காலக் கவனிப்பில், குழந்தையின் கருப்பையுள் அசைவுகள் (இது 18–20 வாரங்களிலேயே தெரியும்). மார்பக மாற்றங்கள், மசக்கை, சிறு நீர் அடிக்கடி பிரிதல், சில போது குமட்டல், வாந்தி போன்றவை கவனிக்கப் பட வேண்டும். தேவையேற்பட்டால், மருத்துவம் அளிக்க வேண்டும். யோனி வழியாகக் குருதி வெளிப்பட்டால், கூடுதல் கவனிப்பு வேண்டும். முந்தைய சூல்களின் தன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். தாய்க்கு 7, 8, 9 ஆம் மாதங்களில், இசிவு நோய்க்கான தடுப்பு ஊசி தர வேண்டும். முன்னர் பிறந்த குழந்தைகளின் எடையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அறுவை முறைகள் (சாமண இடுக்கி, கருப்பைத் திறப்பு போன்றவை) நிகழ்ந்திருந்தால், தெரிந்து கொள்ள வேண்டும். தாயின் உயரம், எடை, சிறுநீர் ஆய்வு, குருதி அழுத்தம் ஆகியவை கணக்கிடப்பட வேண்டும். குருதி ஆய்வு செய்து சோகை நோய் உள்ளதா என்பதையும், Rh குருதி வகையையும் அறிய வேண்டும். குழந்தையின் கருப்பைக் கிடப்பைச் சோதிக்க வேண்டும். குருதி ஆய்வின் போது, தந்தை Rh+ ஆக இருந்து, தாய் Rh– ஆக இருந்தால், குழந்தை சாதாரணமாக Rh+ ஆக இருக்கும். சில போது, Rh–ஆகவும் இருக்கலாம். குழந்தை Rh– ஆக இருந்தால் மகப் பேற்றின்போது, தாய்க்கும், சேய்க்கும் சிக்கல்கள் உண்டாகலாம். மருத்துவ ஆய்வின் போது, கருப் பையில் குழந்தை குறுக்காக அல்லது தலை கீழாக உள்ளதா என்பதையும், புட்டம் கீழாகத் தோன்றுகிறதா என்பதையும் அறுதியிட முடியும். தாயை ஆய்வு செய்யும் போது, கூர்ந்து நோக்கல், தொட்டுப் பார்த்தல், தட்டிப் பார்த்தல், ஸ்டெத் முறை ஆகியவை கையாளப் படும், கருப்பையின் உயரமும், கபால-கூபக விட்ட அளவு, குழந்தையின் தலை விட்டம் ஆகியனவும் கணக்கிடப்படுகின்றன. இவற்றைக் கொண்டு மருத்துவர் செயல்படுவார். —அ. கதிரேசன் நூலோதி. Vera Bodyazhina, Text Book of Obstetrics, First Edition, Mir Publishers, Moscow, 1983. சூல் காலக் குருதி நோய்கள் சூலடைந்த 28 வாரங்களில் பொலிவடைந்த கரு, கருப்பையகத்தில் நிலை பெறும் போதும், கருச் சிதைவு, வேற்றிடச் சூல், முத்துப் பிள்ளை நிலை, கருப்பைக் கழுத்து நைவு, யோனி அழற்சி ஆகியவற்றின் போதும், குருதிப் பெருக்கு ஏற்படக் கூடும். டிரோஃபோபிளாஸ்ட், கருப்பையகத்தில் நிலை பெறும் போது, குருதிப் பெருக்கு ஏற்படலாம். மாத விடாய் வந்த நாள் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இந்நிலை ஏற்படலாம். கருவுச் சிதைவுக்கான காரணங்கள் பல வகைப் படும். அவை பொலிவடைந்த முட்டையின் கோளாறு, மன உளைச்சல், தந்தையின் குரோமசோம் கோளாறு ஆகியவையாகும். கருச் சிதைவு ஏற்படப் போகும் அச்ச நிலை, தவிர்க்க முடியாத கருச் சிதைவு, வழக்கமான கருச் சிதைவு, முழுமையடையாத கருச் சிதைவு, மருத்துவம் சார்ந்த கருச் சிதைவு, குற்றஞ் சார்ந்த கருச் சிதைவு, சீழ் நிலையடைந்த கருச் சிதைவு ஆகிய அனைத்திலும் குருதி வெளிப்பாடு இருக்கும். முத்துப் பிள்ளையிலும், கருப் பைப் புறத் தோல் (chorion) புற்று நோய், கருக் குழலில் சூல், வயிற்றுள்ளுறுப்புகளில் ஏற்படும் சூல் ஆகியவற்றிலும் குருதிக் கோளாறு உண்டாகலாம். மேலும் கருப்பைக் கழுத்தில் தோன்றும் தொங்கு தசை, சூல் பைக் கழுத்தின் அரிப்புப் புண், அதன் புற்று நோய் ஆகியவையும் குருதிப் பெருக்கின் காரணமாக அமையலாம். முன் நிலைச் சூல் ஒட்டு (placenta), இயல்பான சூல் ஒட்டு ஆகியவையும் குருதிக் கோளாறுகளை உண்டாக்கும். குருதி உறை சிக்கல்களும் ஏற்பட்டுக் குருதி நாளத்தின் உள்ளேயே உறைவு ஏற்பட்டு, மேலும் பல சிக்கல்கள் உண்டாகலாம். சிறுநீரகப் பாதிப்பின் போது, குறைந்த அளவில் சிறுநீர் பிரிந்தும், பிரியாமலும் இருக்கலாம். கல்லீரல் பாதிப்பில், மஞ்சள் காமாலையும், நுரையீரல் பாதிப்பில் கடின மூச்சும், நீலம் பூரித்தலும், மூளைப் பாதிப்பின் போது, வலிப்புகளும், மயக்க நிலையும் உண்டாகலாம். பளிங்குப் படல மைய குருதி நாள உள் உறைவால், விழித் திரை பாதிக்கப்பட்டுப் பார்வை இழப்பு ஏற்படலாம். பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டு ஷீஹான் கூட்டியம் (syndrome) உண்டாகலாம். குருதி நாளத்தினுள் குருதி உறையும் போது, ஃபைப்ரினோஜன் குறைந்து, குருதி உறைவுக் கூறுகளான II V & VIII திராம்பின் எதிர்க் கூறு III ஆகியவையும் குறைகின்றன. இதனால், நுண் தட்டுகளின் எண்ணிக்கையும் குறைவதால், குருதி உறையாமல், பெருமளவில் குருதிப் பெருக்கு ஏற்படுகிறது. குருதி உறைவுக் கோளாறுகளைக் கண்டுபிடிக்க, பின் வரும் ஆய்வுகள் தேவை. அவை: குருதி ஆய்வு, நுண் தட்டு எண்ணிக்கை, குருதி உறைவு நேரம், ஃபைப்ரினோஜன், புரோதிராம்பின் நேரம், திராம்பின் நேரம் என்பன. தீவிர சிறுநீரகச் செயலிழப்பு, ஷீஹான் கூட்டியம் (முன் பிட்யூட்டரி சிதைவு), பேறு காலத்திற்கும் பின் வரும் குருதிப் பெருக்கு, உயிரிகளின் தாக்கம், சோகை, உள வயக் கோளாறுகள் அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குருதிக் கோளாறுகளுக்கான காரணத்தைக் கண்டு பிடித்து, ஆவன செய்ய வேண்டும். —அ. கதிரேசன் சூல் காலக் குருதிப் போக்கு இந்நிலை சூலடைந்த 28 வாரங்களுக்குப் பிறகு உண்டாகும் குருதிப் பெருக்கைக் குறிப்பிடுகிறது. இது மிகவும் சிக்கலானது. இதனால், தாய், சேயின் மரணம் நேரிடலாம். கீழ் நிலைக் கருக் குடையின் குருதிப் போக்கு, இயல் நிலையில் உள்ள கருக் குடையின் குருதிப் போக்கு எனக் குருதிப் போக்கு இரு வகைப்படும். சில போது, கருக் குடையிலிருந்து இல்லாமல், வேறு ஏதாவது பகுதியிலிருந்து (கருப் பைக் கழுத்துத் தொங்கும் சதை) குருதி வெளிப்படலாம். கீழ் நிலைக் கருக் குடை நான்கு வகைப்படும். இந்நிலை பல மகவு ஈன்ற பெண்களிடமே காணப்படுகிறது. முதல் வகை. கருக் குடை மேற்பகுதியில் இருந்தாலும், கருப்பையின் கீழ்ப் பகுதியை அடைகிறது. இரண்டாம் வகை. கருக் குடை கீழ்ப் பகுதியில் காணப்பட்டாலும், கருப்பையின் உள் வாயை அடைப்பதில்லை. 3, 4 ஆம் வகைகளில் கருக் குடை முழுமையாக உள் வாயை அடைக்கிறது. கருப்பையின் திடீர்ச் சுருக்- கங்களால் குருதிப் போக்கு ஏற்படுகிறது. இது விட்டு விட்டு நடைபெறுகிறது. குருதி எளிதில் வெளிப்படுவதால் வலி இருப்பதில்லை. இந்நிலை கவனிக்கப்படா விடில், குருதிப் பெருக்கு மிகுதியாகி விடுகிறது. நோயாளி உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். மல்லாந்து படுத்திருக்க வேண்டும். குருதிப் பெருக்கின் அளவைப் பொறுத்து, நோயாளியின் உடல் நிலை அமைகிறது. குருதி அழுத்தம், நாடித் துடிப்பு, உடல் வெப்பம் அனைத்துமே மாறுபடும் நிலையில், யோனி வழி ஆய்வு கூடாது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின், தேவையிருந்தால் குருதி கொடுக்க வேண்டும். கருக் குடையின் அமைப்பைப் பற்றி, கடஒலி வரைவி, ஐசோடோப், எக்ஸ் கதிர் ஆய்வு இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சில வேளை குருதிப் போக்கு தானாகவே நின்று விடும். அப்போது ஓய்வு எடுக்கலாம். குழந்தையின் உடல் நலத்தையும் கண்காணிக்க வேண்டும். நிலைமை சீரடையாவிடில் உணர்வகற்றி, தாயின் பனிக் குடத்தை உடைத்து, மகப் பேற்றை உண்டாக்கலாம். இல்லையெனில், கருப்பையைத் திறந்து குழந்தையை வெளியேற்றி, ஆவன செய்யலாம். இயல் நிலையில் அமைந்துள்ள கருக் குடையிலிருந்து குருதி வெளிப்பட்டால், வெளிப்படும் குருதியின் நிலையைப் பொறுத்து, மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். தேவையிருந்தால், தாயையும், சேயையும் காப்பாற்றிக் கருப்பைத் திறப்புச் செய்ய வேண்டும். குருதி அளிக்க வேண்டும். குருதி கிடைக்காவிடில், ஃபைப்ரினோஜன் மற்றும் III, V & VIII கூறுகள் கொண்ட உறைய வைக்கப்பட்ட பிளாஸ்மாவைக் கொடுக்கலாம். குருதி நாளத்தினுள்ளேயே குருதி உறைவு ஏற்பட்டால், ஹெப்பாரின் கொடுக்க வேண்டும். ஹெப்பாரின் அளவு மிகுதியாகி விட்டால், புரோமின் சல்ஃபேட் கொடுக்கலாம். —அ. கதிரேசன் புறத் தோல் புற்று. இது முத்துப் பிள்ளை நிலை யைத் தொடர்ந்து உண்டாகலாம். இந்நிலை விரை வாகப் பரவி, மரணத்தில் முடிகிறது. ஆனால், மிகவும் அரிதாகவே தோன்றுகிறது. மருத்துவமாகக் கருப் பையையும், சூலகங்களையும், சூலக நாளங்களையும் அகற்றி விட வேண்டும். மெத்தோடிரக்சேட் போன்ற புற்று எதிர் மருந்துகளைப் பயன்படுத்தலாம். வேற்றிடச் சூலின் போது (எ-டு: கருக் குழல் கருத்தரிப்பு) அறுவை செய்தே குருதிப் பெருக்கை நிறுத்த முடியும். —மு.கி. ராஜா சுப்பிரமணியம் நூலோதிG. Dixon, Antenatal Care, Eleventh Edition, Churchill Livingstone, London, 1978. சூல் காலச் சிறுநீர்ப் பாதை நோய் நாட்பட்ட சிறுநீரக அழற்சி மிகவும் அரிதாகச் சூல் காலத்தில் தோன்றும் ஆபத்தான நோயாகும். முன்னரே நுண்ணுயிரிகளால் காய்ச்சல் உண்டாகியிருந்தால், சிறுநீரக நோய் வருவது இயல்பு. தாய்க்குக் குருதி மிகை அழுத்தமோ, கால் வீக்கமோ இல்லாமல் இருக்கலாம். வெளிப்படும் சிறுநீரில் புரதம் இருக்கும். ஒப்பு அடர்வு எண் குறைவாக இருக்கும். குருதியில் யூரியா மிகுதியாக (இயல் அளவு 40 மி.கி.%) இருக்கலாம். சிறுநீரக அழற்சி யின் போது, கருச் சிதைவு நிகழ்வதால், கருக் கலைப்புச் செய்து விடுதல் நலம். சிறுநீரகப் பணிகள் செவ்வனே இருந்தால், சூல் கலைப்புத் தேவையில்லை. ஓய்வு தேவைப்படலாம். சில போது, மருத்துவம் பயனளிக்காமல், சிறுநீரக முறிவு ஏற்பட்டுக் கருப்பையினுள் குழந்தை இறந்து விடலாம். எனவே, கருப்பைத் திறப்பு அறுவை செய்து விடுவது நல்லது. —அ. கதிரேசன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> சூல் காலத் தொற்று நோய்கள் கருக் காலத்தின் போது, குறிப்பிடத் தக்க நோய் எதுவும் ஏற்படுவதில்லை. பிற பெண்களைப் பாதிக்கும் எந்தத் தொற்று நோயும் சூலியைத் தாக்கக் கூடும். ஜெர்மன் தட்டம்மை என்னும் நோய் முதல் மூன்று மாதங்களுக்குள் உண்டானால், குழந்தைக்கு ஊனம் உண்டாகலாம். இந்தியா போன்ற நாடுகளில் குலுடையவருக்குக் காச நோய் உண்டாகலாம். போதிய மருத்துவம் அளிக்கா விடில், பிறக்கும் குழந்தை காச நோயுடன் பிறந்து இறக்கலாம் அல்லது இறந்து பிறக்கலாம். மேலும் தாயின் காச நோய்க்காகக் கொடுக்கப்படும் ஸ்ட்ரெப்டோமைசீன் மருந்து கருப் பைக் குழந்தைக்குச் செவிட்டுத் தன்மையை உண்டாக்கலாம். கணவனுக்கு உண்டாகும் பால் வினை நோய்கள் (மேக நோய், வெட்டை நோய், சாங்ராய்டு) சூலிக்கும் கடத்தப்படலாம். டிரைகோமோனஸ், பேன், சிரங்கு, ஹெர்பீஸ் நோய், கழலைகள் ஆகியன பெண்ணின் பிறப்பு உறுப்புகளைப் பாதிக்கலாம். இவற்றில் பல, பிறக்கப் போகும் குழந்தைக்கு உண்டாகும் வாய்ப்புள்ளமையால், தாய்க்கும் முழுமையாக மருத்துவம் அளிக்க வேண்டும். இல்லையெனில், பிறவி ஊனங்கள் உண்டாகலாம். இன்ஃபுளுயென்சா. மலேரியா, டாக்சோபிளாஸ்மோசிஸ் போன்ற நோய்களும் சூல் காலத்தில் சிக்கல்களை உண்டாக்கிக் கருச் சிதைவை ஏற்படுத்தலாம். —அ. கதிரேசன் நூலோதி. M.G.R. Hull et.al.,Obstetrics and Gynaecology, First Edition, John Wright and Sons, Bristol, 1980. சூல் கால நச்சுத் தன்மை சூலியிடம் தோன்றும் தொடர்ச்சியான நோயூக்கு நிலைகளே சூல் கால நச்சு நிலையாகும். பொதுவாக, சூல் நிலை முடிந்தவுடன், இக்கோளாறுகள் மறைந்து விடுகின்றன. குழந்தை பிறந்த பின் அல்லது கருச் சிதைவுக்குப் பின் நச்சு விளைவின் அனைத்து அறிகுறிகளும் மறைந்து விடுகின்றன; இக்கோளாறுகள் தீவிரமாக நீண்ட காலம் நீடித்தால், பின் விளைவுகளும் நீண்ட காலம் நிலைத்திருக்கும். பல்வேறு நச்சுப் பொருள்கள் பெண்ணுடலின் மீது வினை புரிவதே இந்நச்சு நிலைக்குக் காரணம். இத்தகைய நச்சுப் பொருள்கள் உண்டாவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவை உடலிலேயே உருவாகின்றன. எனச் சிலர் கருதினர். ஆக்கச் சிதை மாற்றக் கோளாறால், பெண்ணாலேயே நச்சுப் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், நச்சுப் பொருள்கள், கருக் குடையிலிருந்து உருவாகின்றன எனச் சிலர் கருதினர். இதன் படி, சீர் குலைந்த கருக் குடையின் பணிகளால், நச்சுப் பொருள்கள் தோன்றின அல்லது நிறை சூலியின் பகுப்படைந்த கோரியான் பொருள்கள் குருதி ஓட்டத்திலும் செல்வதால், நச்சுப் பொருள்கள் உண்டாயின எனலாம், குழந்தையின் ஆக்கச் சிதை மாற்றம் கழிவுப் பொருள்கள் தாயின் உடலில் நடு நிலைப்படுத்தப்படா விட்டால், அல்லது உரிய காலத்தில் வெளியேற்றப்படா விட்டால், (தேக்க நச்சு நிலை) தேக்கமடைந்து சூலில் நச்சு நிலையைத் தோற்றுவிக்கின்றன என மற்றொரு கோட்பாடு கூறுகிறது. இத்தகைய நச்சுப் பொருள்களை நீக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. எனவே, நச்சு நிலைக்குக் காரணம், நச்சுப் பொருள்களே என்னும் கோட்பாட்டுக்கு அடிப்படை இல்லை. சூல் நச்சு நிலைக்கு, தடுப்பாற்றியல் கோட்பாடு குறிப்பிடத் தக்கது. இக்கோட்பாட்டின் படி, அயல் புரதங்களுக்குப் பெண்ணின் கூருணர்ச்சி விளைவாக, நோய் நிலை தோன்றுகிறது. இந்த அயற் பொருள்கள் கருவிலிருந்தும், கருக் குடையிலிருந்தும் தோன்றிச் சூலிக்குச் செல்கின்றன. மற்றொரு கோட்பாட்டின்படி, நாளமில் சுரப்பிகளின் சீர் குலைந்த பணிகளால் நச்சு நிலையில் தோன்றுகிறது. ஆனால், பேறு கால நச்சு நிலையில் தோன்றும் ஹார்மோன் சம நிலை மாற்றங்களே காரணம் என்று கொள்வதை விட இதன் விளைவுகள் எனக் கொள்ளலாம். இந்நிலை பெண்ணின் நரம்பு மண்டலத்தின் பணி சார்ந்த பண்புகளைப் பொறுத்துள்ளது. சூலால் பெண்ணின் உடலில், மிகைச் சுமை ஏற்றப்படுவதால், ஆக்கச் சிதை மாற்றத்தில் மாற்றங்களை உண்டாக்க அனைத்து உறுப்புகள், மண்டலங்கள் ஆகியவற்றின் பணிகள் மாற்றப்படுகின்றன. இவை உடலியங்கியல் சார்ந்தவையாகவோ, தக அமைவு மாற்றங்களாகவோ இருக்கலாம். இவை, சூலில் இயல்பான போக்குக்கும், கருவின் வளர்ச்சிக்கும் ஏற்ப அமைகின்றன. இம்மாற்றங்கள் தோன்றுவதும், வளர்ச்சியடைவதும் நரம்பு மண்டலக் கட்டுப்பாட்டிலேயே நிகழ்கின்றன. சூலியின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால், உடலின் தக அமைவு மறு வினை சீர் குலைகிறது. சில உறுப்புகள், மண்டலங்கள் ஆகியவற்றின் பணிகளில் ஏற்படும் மாற்றங்கள், நோயூக்குபவையாக மாறுகின்றன. ஆக்கச் சிதை மாற்றம் சீர் குலைகிறது, பல் வேறு அக வழி, புற வழித் தூண்டல் களுக்கான மறு வினைகளும் மாறுகின்றன. இக்கோளாறுகள் அனைத்தும் நச்சு நிலை உண்டாவதை ஊக்குவிக்கின்றன. நரம்பு மண்டலப் பணியில் மாற்றம், நச்சு நிலை உண்டாவது ஆகியவை பின் வரும் காரணங்களால் ஊக்குவிக்கப்படுகின்றன. அவை, கடந்த காலக் கடும் நோய்கள், தவறான அல்லது குறைந்த ஊட்டம், முறையற்ற நல வாழ்வு, மிகையான உளைச்சல், பெண்ணுடலின் எதிர்ப்பு ஆற்றலைக் குறைக்கும் கூறுகள் முதலியன. சூலின் இறுதியில் தோன்றும் நச்சு நிலை மிகவும் ஆபத்தானது. குருதி மிகை அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், கல்லீரல் கோளாறுகள், நாளமில் சுரப்பி நோய்கள், நீரிழிவு, தைராய்டின் மிகையான நச்சு நிலை ஆகியவற்றைக் கொண்ட பெண்களில், சூல் நச்சு நிலை தோன்றுகிறது. ஏனைய நோய்களின் பின்னணியில் தோன்றும் நச்சு, கூட்டான நச்சு நிலை எனப்படும். சூலின் தொடக்க கால நச்சு நிலை. சூல் கால வாந்தி, கட்டுப் படுத்த முடியாத வாந்தி, மிகையான உமிழ் நீர்ச் சுரப்பு, இறுதிக் கால நச்சு நிலை, சிறு நீரக நோய், இசிவு முன் நிலை, இசிவு நிலை முதலியவை சூலின் நச்சு நிலைகளாம். சூலின் இறுதிக் கால நச்சு நிலை. சூலின் இறுதிக் கால நச்சு நிலை என்பது ஒரு நோய் நிகழ்வின் வளர்ச்சியில், பல கட்டங்கள் ஆகும். தொடக்க நிலையான மகோதரம், மிகக் கடுமையான சிறுநீரக நோயாக மாறுகிறது, சிறுநீரக நோய் எக்ளாம்ப்சியா முன் நிலையாக மாறிப் பிறகு, எக்ளாம்ப்சியாவாக மாறுகிறது. எக்ளாம்ப்சியா முன் நிலையையும், சிறுநீரக நோயையும் தொடர்ந்து எக்ளாம்ப்சியா நோய் உண்டாகிறது. எக்ளாம்ப்சியா முன் நிலை. சூலிக்குத் தேவையான சுகாதார நெறி முறைகளைப் பின்பற்றா விட்டாலோ, சிறுநீரகப் பாதிப்புக்கு உரிய மருத்துவம் அளிக்கா விட்டாலோ எக்ளாம்ப்சியா முன் நிலை நோய் தோன்றுகிறது. அறிகுறிகள். வீக்கம், குருதி மிகு அழுத்தம், சிறுநீரில் அல்புமின் ஆகியவை சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். சிறுநீரகப் பாதிப்பு, எக்ளாம்ப்சியா முன் நிலையை அடையும் போது, மேற்காணும் அறிகுறிகளின் தீவிரத் தன்மை அதிகரிக்கும். குருதி மிகு அழுத்தம், வீக்கம், சிறுநீரில் அல்புமினுடன் தலைவலி, கண்ணின் முன்பு பட்டாம் பூச்சிப் பறப்பது போன்ற தோற்றம், வயிற்று வலி, வாந்தி, தூக்கமின்மை, சிடு சிடுப்பு ஆகியவை உண்டாகின்றன, தலை வலியும், பார்வைக் கோளாறுகளும் பெருமூளை குருதி ஓட்டச் சீர் குலைவின் அறிகுறிகளாகும். விழித் திரையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகப் பார்வை மந்தம் (வீக்கம், குருதிப் பெருக்கு, விழித் திரைக் கிழிசல்) உண்டாகும். குருதி ஓட்டக் கோளாறுகள், சிறுநீரக, கல்லீரல் பணிச் சிதைவுகள், பாதிக்கப்பட்ட ஆக்கச் சிதை மாற்றம் ஆகியவை சிறுநீரகப் பாதிப்பில் இருப்பதை விட, எக்ளாம்ப்சியா முன்நிலையில் மிகுதியாகக் காணப்படுகின்றன. மூச்சுத் திணறலும் மிகையாக இருக்கிறது. எக்ளாம்பசியா முன் நிலை, எந்த நேரத்திலும் எக்ளாம்ப்சியாவில் முடியலாம். எக்ளாம்ப்சியாவாக மாறாமலேயே, இன்றியமையாத உறுப்புகளில் குருதிப் பெருக்கு ஏற்படலாம். தாய்க்கும், சேய்க்கும் தீமை பயக்கும் கருக் குடையின் உரிய காலத்திற்கு முன்பான பிரிவும், பேறு காலச் சிக்கல்களும் உண்டாகலாம். குழந்தை மூச்சுத் திணறிக் கருப்பையினுள் ளேயே இறந்து விடக் கூடும் அல்லது மகப் பேற்றின் போது இறந்து விடலாம். மருத்துவம். நோயாளியை உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்து விட வேண்டும். தனி அறையில் வைத்து இடை விடாது கண்காணிக்க வேண்டும். ஒலி, ஒளிர்வான வெளிச்சம், வலி, கிளர்ச்சியூட்டும் உணர்வுகள் போன்ற உறுத்தக் கூடிய அனைத்தும் அகற்றப்பட வேண்டும். வீக்கத்தின் போது சிறுநீர்ப்பெருக்கிகள் பயன்படுகின்றன. அமைதியூட்டி மருந்துகளும் பயனளிக்கின்றன. உரிய மருத்துவத்தால், எக்ளாம்ப்சியாவைத் தவிர்த்து விடலாம். பெண்களின் நிலையும் சீரடைந்து, சூலுக்கு எந்த ஊறும் நேராது, எக்ளாம்ப்சியா. சூல் நச்சு நிலையின் இறுதிக் கட்டமே எக்ளாம்ப்சியா பேறு கால வலிப்பு நோய் ஆகும். எக்ளாம்ப்சியா முன் நிலையிலிருந்தோ, சிறுநீரகப் பாதிப்பிலிருந்தோ இது உண்டாகிறது. இன்றியமையாத உறுப்புகள், மண்டலங்களின் பணிகள் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் வெளிப் படுகின்றன. எக்ளாம்ப்சியாவின் மிக முக்கிய அறிகுறி உடல் தசைகளின் வலிப்பாகும். இதைத் தொடர்ந்து, ஆழ் மயக்கம் (coma) உண்டாகிறது. பொதுவாக, கருவுயிர்க்கும் போதே, எக்ளாம்ப்சியா தோன்றுகிறது. அரிதாக, பேறு காலத்தின் போதும் உண்டாகிறது. சில போது, குழந்தை பிறந்த பின் எக்ளாம்ப்சியா தோன்றலாம். இந்நோய், தலைச் சூலிகளிடம் மிகுதியாகக் காணப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட சூல், குறுகலான கூபகம், சிறுநீரக, குருதி நாள நோய் கொண்ட பெண்களில் இந்நோய் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. எக்ளாம்ப்சியாவின் மருத்துவ வெளிப்பாடுகள். எக்ளாம்ப்சியா முன் நிலை அல்லது சிறுநீரகப் பாதிப்பு ஆகியவற்றின் அறிகுறிகளுடன் வலிப்பும் தோன்றுகிறது. இதற்கு முன்னர், தீவிரமான தலைவலி, பார்வை பாதிப்பு, தூக்கமின்மை. அமைதியற்ற நிலை, குருதி மிகு அழுத்தம், சிறுநீரில் அல்புமின் ஆகியவை உண்டாகின்றன. ஒவ்வொரு வலிப்பும் ஓரிரு நிமிடங்கள் நீடிக்கிறது. உடலின் அனைத்துத் தசைகளும் பாதிக்கப் பட்டு உடல் இறுக்கமடைகிறது. மூச்சு விடல் பாதிக்கப்படுகிறது; முகம் நீல நிறமடைகிறது. முகம், உடல், கை, கால்கள் ஆகியவற்றில் வலிப்பு தோன்றி, 30–40 நொடி நீடிக்கின்றது. பின்னர், படிப் படியாகக் குறைகிறது. வாயில் நுரை வெளிப்படுகிறது (சரியாகப் பாதுகாக்கப்படா விடில், நோயாளி தன் நாக்கைக் கடித்துக் கொள்ளக் கூடும்). வலிப்பு நின்றவுடன், குறிப்பிட்ட நேரம் வரை நோயாளி நினைவிழந்த நிலையில் இருக்க, நினைவு மீண்டும் வருகிறது. நினைவிழப்பு நிலையின் போது, சில சமயம் மீண்டும் வலிப்பு தோன்றுகிறது. நவீன மருத்துவத்தில், இத் தகைய தாக்குதல்களைக் குறைக்க முடிகிறது. குழந்தை பிறந்த பின்னர், வலிப்புத் தோன்றுவதில்லை. சூலின் போது தோன்றக் கூடிய வலிப்புகளை உரிய மருத்துவம் மூலம் தவிர்க்கலாம். எக்ளாம்ப்சியாவில் இன்றியமையாத பல பணிகள் பாதிக்கப்படுகின்றன. மைய நரம்பு மண்டலப் பணிகள் சீர் குலைகின்றன. இதன் காரணமாகக் கிளர்த்தல் தன்மை அதிகரிக்கிறது. ஒலி, ஒளிர் வெளிச்சம் போன்றவை வலிப்புகளை ஊக்குவிக்கும். தாய்க்கும், சேய்க்கும் எக்ளாம்ப்சியா தீமை பயக்கிறது. எக்ளாம்ப்சியாவின் முதல் தாக்குதலின் போது அல்லது தாக்குதல் குறைந்த பின், பெண் மரணமடையலாம். மூளையில் குருதிப் பெருக்கு, மூச்சுத் திணறல், இதய முறிவு. நுரையீரல்களில் நீர்த் தேக்கம் ஆகியன மரணத்திற்குக் காரணமாகின்றன. உடனே, மருத்துவ உதவி கிடைக்கா விடில், காயங்கள் ஏற்படலாம். ஊமைக் காயங்கள், எலும்பு முறிவுகள், நாக்குக் கடிப்பு, உள்ளிழுப்பு நிமோனியா, சிறுநீரகக் கோளாறு, உள நோய்கள் போன்றவையும் எக்ளாம்ப்சியா தாக்குதலின் பின்னர் ஏற்படலாம். எக்ளாம்ப்சியாவில், கருப்பையுள் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். அண்மைக் காலமாக, எக்ளாம்ப்சியாவால் ஏற்படும் இறப்பு வீதம் குறைந்து வருகிறது; இதற்கு முன் காப்பு முறைகளும், மருத்துவமும் காரணமாக உள்ளன. மருத்துவம். கிளர்த்தலை உண்டாக்கும் சூழ்நிலைகளிலிருந்து, நோயாளிகளை அப்புறப்படுத்தி வைக்க வேண்டும்; அவர்களுக்குத் தூக்க மருந்துகள் கொடுக்கலாம். ஒலி எதுவுமில்லாத, நல்ல காற்றோட்டமுள்ள அறையில் நோயாளி இருக்க வேண்டும். ஆய்வு, ஊசிகள், உட்குழல் செலுத்தல் போன்ற அனைத்துச் செய்முறைகளும் நோயாளியின் தூக்க நிலையிலேயே செய்யப்பட வேண்டும். மார்ஃபீன், குளோரால் ஹைட்ரேட் கொண்டு எக்ளாம்ப்சியா தாக்குதல்களைக் குறைக்க வேண்டும். (0.15 கி. மார்ஃபீன், 1 மணி நேரம் கழித்து இனிமா மூலம் 2கி. குளோரால் ஹைட்ரேட், 3 மணி நேரத்திற்குப் பின் 0.015 மார்ஃபீன், 7 மணி நேரத்தில் 2 கி. குளோரால் ஹைட்ரேட், 13–21 மணி நேரத்தில் 1.5 கி. குளோரால் ஹைட்ரேட்). குழந்தைப் பிறப்பைப் படலங்களை உடைத்தல், இடுக்கி, புறச் சுழற்சி ஆகியவற்றால் விரைவுபடுத்தலாம். உடலின் பிற மண்டலப் பணிகளைச் சீராகப் பேண வேண்டும். தற்கால மருத்துவம். எக்ளாம்ப்சியாவில், மூளையின் உணர்வு, இயக்க நிலைகள், கிளர்த்தல் நிலையில் உள்ளன. பல்வேறு தூண்டல்கள், ஒளிர் வெளிச்சம், ஒலிப் பாதைகள் வழியாக வலிப்புகளை ஊக்குவிக்கக் கூடும். இதற்கு முழுமையான ஓய்வே முதன்மையானது. பார்வை, கேட்பது, தொடல், வலி பற்றிய எந்தத் தூண்டல்களும் கூடா. நோயாளி அனுமதிக்கப்பட்டவுடன், வெளிப்புற யோனி ஆய்விற்கு முன்னர், ஊசிகள் போடு முன்பும், உட்குழல் செலுத்தும் போதும், சிரை அறுவையின் போதும், ஈதர் கொண்டு உணர்வு நீக்கம் செய்ய வேண்டும் மகப் பேறு மருத்துவ மனைகளில் எக்ளாம்ப்சியாவுக்குச் சிறப்பு அறைகள் கட்ட வேண்டும். அறைக்கு நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும்: நோயாளியைக் கம்பளி கொண்டு போர்த்த வேண்டும். புரண்டு படுக்கச் செய்து, குடல், சிறுநீரகப் பணிகளை நோக்க வேண்டும். குருதி அழுத்தத்தை அளவிட்டு, மூச்சு விட ஆக்சிஜன் அளிக்க வேண்டும். முகத் தசைகளின் துடிப்பு, கண்ணிமைகளின் துடிப்பு போன்றவற்றின் போது, மகப் பேறு மருத்துவர், வாய் விரிப்பியை உட்செலுத்த வேண்டும்; நாக்கைக் கடிப்பதைத் தவிர்க்க கடைவாய்ப் பற்களுக்கு இடையே இக்கருவியைச் செலுத்த வேண்டும். வலிப்புத் தாக்குதல்களின் போது, நோயாளி தன்னைக் காயப்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நோயாளி மூச்சு விடத் தொடங்கியதும், முகத்தின் நீல நிறம் மாறும் வரை, ஆக்சிஜன் கொடுக்க வேண்டும், உமிழ் நீர், மூச்சுப் பாதைக்குள் செல்லாதவாறு வாயைத் துடைக்க வேண்டும். எக்ளாம்ப்சியாவில் சிரை வழியாகக் குளூக்கோசை செலுத்துவது முக்கியமான முறையாகும். இதன் மூலம், கபால உள் அழுத்தம் குறைகிறது. சிறுநீர்ப் பிரிவு அதிகரிக்கிறது; மையோகார்டியத்தின் ஊட்டம் அதிகரிக்கிறது. ஹைபோதயசைடு (டைகுளோர்தயசைடு), மானிட்டால், ஃபுரோசெமைடு போன்ற வேறு பல சிறுநீர்ப் பிரிப்புகள், எக்ளாம்ப்சியாவின் (எக்ளாம்ப்சியா முன் நிலையிலும்) சிக்கலான மருத்துவத்தில் கையாளப்படுகின்றன. திசுக்களிலிருந்து மிகையான நீர்மம் அகற்றப்படுகிறது. உடலின் இன்றியமையாத பல பணிகள் சீரடைகின்றன. புரதக் குறை நிலையில் அல்புமின், உலர்ந்த பிளாஸ்மா போன்றவை கொடுக்கப் படுகின்றன. பேறு காலத்தை விரைவு படுத்த எக்ளாம்ப்சியாவில், பல முறைகள் கையாளப்படுகின்றன. கருப்பைக் கழுத்து அகலமாகத் திறந்திருந்தால் பனிக்குடத்தைத் துளை செய்யலாம். மகப் பேறு கிடுக்கி, புறச் சுழற்சி, கூபகத்தைப் பிடித்து வெளியேற்றுதல் போன்ற முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிற முறைகள் பயனளிக்கா விடில், சீசேரியன் முறை கையாளப்படுகிறது. சிறுநீர் சுரக்காமை, விழித் திரை அழற்சி அல்லது விழித் திரைக் கிழிசல், கருக்குடை உரிய காலத்திற்கு முன்பாகப் பிரிதல் போன்ற பல சிக்கல்கள் தோன்றினால், கூபகம் வழியாகக் குழந்தை வர முடியாமையால், சீசேரியன் முறை கையாளப்படுகிறது. எக்ளாம்ப்சியாவிலிருந்து சீரடைந்தவர்களுக்குச் சிறப்பு மருத்துவமும், பராமரிப்பும் அளிக்க வேண்டும். மகப் பேற்றின் பின்னர், ஒவ்வொரு நாளும் குருதி அழுத்தம் அளவிடப்பட வேண்டும். 2–3 நாளுக்கு ஒரு முறை சிறுநீர் ஆய்வு செய்ய வேண்டும். கருவுயிர்த்த பெண்ணின் பொது உடல் நிலை, அவள் இதயத்தின் பணி, மூச்சு மண்டலத்தின் நிலை, பால் உறுப்புகளின் உட்சுருள்வு ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும். சீழ்த் தொற்று, நிமோனியா போன்ற பல சிக்கல்களும் தோன்றலாம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். கால் வீக்கத்தையும், குருதி மிகு அழுத்தத்தையும் குறைக்க சிறுநீர்ப் பெருக்கிகளும், வலிப்பு வாராமல், தடை செய்யச் சிரை வழியாக டயசிபாம் அல்லது வினர்கான் போன்றவையும் கொடுப்பது சிறந்தது. —அ. கதிரேசன் நூலோதி. Alexander Rosinkin, Text Book of Obsterics, First Edition, Mir Publishers, Moscow, 1983. சூல் குழல் பெண் உடலின் சூல்பையின் இரண்டு பக்கமும் உள்ள குழல்களைச் சூல் குழல்கள் (fallopian tubes) என்பர். கருப்பையின் மேற்பகுதியில் உள்ள இக்குழல், வெளிப் புறமாகவும் பின் புறமாகவும் அகன்ற பந்தகத்தின் மேற்பகுதியில் காணப்படுகிறது. உடற்கூற்று இயல்படி, இக்குழல் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் படுகிறது. அவை, சிற்றிடை வெளிப் பகுதி, குறுகலான பகுதி, குடுவை விரிவு, கூம்புப் புழை எனப்படும். சிற்றிடை வெளிப்பகுதி. இது கருப்பையின் சுவர் வழியாகச் செல்கிறது. 1 மி. மீட்டருக்கும் குறைந்த துளை கொண்டுள்ளது. குறுகலான பகுதி. கருப்பையின் பக்கத்தில் சிறிது அகலமாக உள்ளது. குடுவை விரிவுப் பகுதி. இது மிகவும் அகன்ற பகுதி. கூம்புப் புழை. இதில் விரல்களைப் போன்ற ஊது குழல் வடிவ அமைப்புகள் (fimbria) காணப்படுகின்றன. இதில் ஓர் அமைப்பு மிகவும் நீளமாகச் சூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூல் குழலில் மூன்று உறைகள் காணப்படுகின்றன. அவை அகன்ற பந்தகமான உதரவுறை, வெளியே நீள வாட்டத்திலும் உள்ளே வட்ட வடிவத்திலும் அமைந்த தசை இழை உறை, சீதச் சவ்வு ஆகியன. இதில் அசையும் இழை கொண்ட தூண் வகைப் புறத் தோல் (epithelium) உள்ளது. இது சூலகத்திலிருந்து வெளிப்படும் முட்டையைக் கருப் பையை நோக்கித் தள்ளுகிறது. இதிலுள்ள காப்ளெட் செல்களின் சுரப்பு, முட்டைக்கு ஊட்டம் அளிக்கிறது. சூலகக் குழலுக்கான குருதிப் பரிமாற்றம் சூலகத் தமனியிலிருந்தும், கருப்பைத் தமனியிலிருந்தும் கிடைக்கிறது. இவ்வகை இரு நாளக் குருதிப் பரிமாற்றம் சூல் குழலுக்குப் பாதுகாப்பளிக்கிறது. சிரை குருதி நிண நீர், கீழ் முதுகு நிணச் சுரப்பிகளை அடைகிறது. சூலகப் பிணயத்திலிருந்தும், துணைப் பரிவு நரம்பு மண்டலத்திலிருந்தும் நரம்பூட்டம் கிடைக்கிறது. அண்மை உறுப்புகள். சூல் குழலின் மிக அருகே கருப்பை உள்ளது. வெளிப்புறமாகக் கூம்புப் புழையின் பந்தகங்களும், கூபகத்தின் பக்கச் சுவர்களும் உள்ளன. முன் புறமாகவும், பின் புறமாகவும், மேற்புறமாகவும் உதரவுறைக் குழிவும் சிறு குடல்களும் காணப்படுகின்றன. கீழ்ப் புறமாகச் சூலகங்களும், அகன்ற பந்தகமும் உள்ளன. சூல் குழலின் பணிகள். விந்தணுவைப் போன்று அசையும் ஆற்றல் இல்லாத முட்டையை உந்தித் தள்ளுவதே இதன் பணியாகும். தசை இழைகள், குற்றிழைகள் ஆகியவற்றின் அலை அசைவால் இச்செயல் நடைபெறுகிறது. கேப்ரியல்லா ஃபல்லோ பியோ என்னும் இத்தாலிய உடற்கூறு இயலாளர், சூல் குழலைப் பற்றி விவரித்தமையால், இதற்கு 'fallopian tube" என்னும் பெயர் ஏற்பட்டது. —அ. கதிரேசன் சூல் குழல் அழற்சி வெட்டை நோய், சீரற்ற கருக் கலைப்பு, பேறு கால நுண்ணுயிர்ப் பாதிப்பு ஆகியவற்றால் சூல் குழல் அழற்சி (salpingitis) ஏற்படுகிறது. இரு குழல்களும், சூலகமும் பாதிக்கப்படுகின்றன. பாதிப்பு கீழிருந்து மேல் நோக்கிச் செல்கிறது. நுண்ணுயிரிகள் யோனியிலிருந்து கருப்பையகத்துக்குப் (endometrium) பரவி, அங்கிருந்து சூல் குழலை அடைகின்றன. யோனியின் அமில நிலையும், சூல் பைக் கழுத்தில் நிறைந்து கிடக்கும் காரச் சளியும், சூல் பையின் குற்றிழை அசைவும், நுண்ணுயிரிகள் பரவுவதற்குத் தடையாக உள்ளன. மேலும், கருக் கலைப்பின் போதும், மாத விடாயின் போதும், மகப் பேற்றின் போதும், பாதுகாப்பு எப்பிதீலியம் சிதறி விடுவதால், நுண்ணுயிர்ப் பாதிப்பு உண்டாகலாம். சூல் பையின் மீது செய்யப் படும் அறுவைகளின் போதும், நோய் பரவ வாய்ப்புண்டு. மேலும், சூல் குழலின் அருகேயுள்ள குடல் வால், சிறு குடல், உதரவுறை ஆகியவற்றின் அழற்சியின் போதும், சூல் குழல் பாதிக்கப்படுகிறது. நுண்ணுயிர்ப் பாதிப்பு குருதி நாளம் வழியாகவும், நிண நாளங்கள் வழியாகவும் ஏற்படலாம். நோய்க் காரணிகள். கோனோகாக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஹிமாலிடிகஸ், இ. கோலை, ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆகியவை நோய் நுண்ணுயிரிகளாகும். அரிதாகக் காச நுண்ணுயிரியும், குழலைப் பாதிக்கிறது. தீவிர சூல் குழல் பாதிப்பில் குழல் வீங்கி, அழற்சியடைந்து உதரவுறைப் பரப்பின் குருதி நாளங்கள் விரிவடைந்து, சீழ் நிலை அடைகிறது. உரிய நேரத்தில், போதிய நுண்ணுயிர் எதிர் மருந்துகள் அளித்தால், நோய் சீரடைகிறது. சீழ்க் கட்டி தோன்றி விட்டால், டக்ளசின் பை (pouch of Douglas) வழியாகச் சீழை வெளியேற்றலாம். சூல் குழலைச் சுற்றி ஒட்டுப் பொருள்கள் உண்டாவதால், சூல் குழல் அடைப்பட்டு, மலட்டுத் தன்மை உண்டாகிறது. சூல் குழலில் நீர்மம் தேங்கலாம். சீழ் தேங்கலாம்: நாட்பட்ட அழற்சி ஏற்படலாம்; சூல் குழலும், சூலகமும் சேர்ந்து சீழ்க் கட்டியாக மாறலாம். இந்நோய் நிலையின் போது, அடி வயிற்றில் வலி, காய்ச்சல், மிகையான நாடித் துடிப்பு, குமட்டல், வாந்தி ஆகியவை உண்டாகலாம். யோனி மூலம் நீர்மமோ, சீழோ வெளிப்படலாம். வெட்டை நோய்ப் பாதிப்பில், சிறுநீர் பிரியும் போது, வலி ஏற்படுவதுடன், அல்குல் அழற்சியும் உண்டாகும். உரிய ஆய்வு செய்து, நோய்க் காரணியைக் கண்டு பிடித்து, மருத்துவம் அளிக்க வேண்டும். பொதுவாக, மருத்துவம் அளித்த போதிலும், சில சமயம், சூல் குழலை அறுவை மூலம் அகற்ற நேரிடுகிறது. வயது குறைந்த இளம் பெண், கருத்தரிக்கக் கருதினால், ஒரு பக்கம் மட்டும் சூல் குழலை அகற்றலாம் அல்லது திறந்து விடலாம். இரண்டு குழல்களும், சூலகங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தால், கருப் பையையும், இரு குழல்களையும், சூலகங்களையும் அகற்ற நேரிடும். நுண்ணுயிர் எதிர் மருந்துகள் கொடுத்த பின்னரும் நோய் நீடித்தால், சூல் குழலை அகற்ற வேண்டும். சூல் குழல்–சூலக நாட்பட்ட அழற்சி தீவிர நிலையடைந்தால், அறுவை தேவைப்படுகிறது. 40 வயதுக்கும் மேற்பட்ட பெண் அல்லது நிலையாக மாத விடாய் நின்று விட்ட பெண்களிலும், அறுவை மருத்துவமே பயனளிக்கும். —அ.கதிரேசன் சூல் குழல் வரைவு எக்ஸ் கதிர் அரங்கத்தில் வல்லுநர் மூலம் கருப்பைச் சூல் குழல் வரைவு செய்யப்படுகிறது. மாத விடாய் வட்டத்தின் 14ஆம் நாளே இதற்குப் பொருத்தமுடையதாகும். பிறப்பு உறுப்புகளை நன்கு தொற்று நீக்கிய பின், எக்ஸ் கதிரில் தெரியக் கூடிய மருந்து உட் செலுத்தப்படும். இதன் மூலம் கருப் பையையும், சூல் குழலையும், நோய் நிலைகளையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். சூல் குழல் நல்ல நிலையில் திறந்திருந்தால், உட்செலுத்தப்பட்ட மருந்து உதரவுறைக் குழிவிலும், சிறு குடல் மீதும் காணப்படும். சூல் குழல் நீர்மம் கொண்டிருந்தால், அயோடின் நீர்மம் வெளிப்படாது. சிலர் எக்ஸ் கதிர்ப் படங்கள் நன்கு தெரிய, 50% டையடோனும், 6% பாலிவினைல் ஆல்கஹாலும், நீரும் கொண்ட கரைசலைப் பயன் படுத்துகின்றனர். இம்மருந்து விரைவிலேயே உறிஞ்சப் படுகிறது. திசு மறு வினையோ, கூபகத்தில் ஒட்டும் பொருள்கள் உண்டாவதோ அரிது. அயோடின் கொண்ட பாப்பி விதை எண்ணையை விட மேற்கூறியது சிறந்தது எனக் கருதுவர். உருப்பெருக்கிக் கண்ணாடியில் வயிற்றை நோக்கும் போது, 30 நொடிக்கு மேல் எக்ஸ் கதிர் விழக் கூடாது. இரண்டு எக்ஸ் கதிர்ப் படங்களே எடுக்கலாம். சூல் குழலின் உடற்கூற்று இயல் தன்மையை அறிவதுடன், கருப்பையின் பிறவி ஊனங்கள், கருப்பை ஊனங்கள், கருப்பையகத் தொங்கு தசை, தசைப் புற்று இருப்பதையும் கண்டு பிடிக்கலாம். —அ. கதிரேசன் சூல் தடுப்பும் கருவிகளும் கருத்தடுப்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பங்கு உண்டு. ஆண்கள், ஆண் குறி உறையைக் கலவிக்கு முன்பு அணிந்து கொள்ள வேண்டும். இந்த உறை இரண்டு வகைப்படும். காண்டம் (condom) என்பது மெல்லியதாக இருக்கும். இவ்வுறையை ஒரு முறையே பயன்படுத்த முடியும், இரண்டாம் வகையான உறை சிறிது கடினமாக இருக்கும். இதை எளிதில் கழுவி, மீண்டும் பயன்படுத்தலாம். இதை அணிவதால் வெளிப்படும் விந்து, இந்த உறையுள் தங்கி யோனிக்குள் செல்லாது. உறையில் துளை எதுவும் இராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அண்மைக் காலமாக, விந்தை அழிக்கும் மருந்துகள் கொண்ட உறை தயாரிக்கப்படுகிறது. தடை செய்யப்படும் புணர்ச்சி. கலவியின் போது ஆண் விந்து வெளிப்படும் நேரமறிந்து, ஆண் குறியை யோனியிலிருந்து வெளியே எடுத்து, விந்தை வெளியே விட்டு விட வேண்டும். இது பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. விந்து நாள துண்டிப்பு. இது ஆண்களுக்கான அறுவை முறையாகும். விந்து வெளிப்படும் நாளத்தை இறுகக் கட்டி விட்டாலோ, துண்டித்தாலோ விந்து யோனிக்குள் செல்ல முடியாது. ஆனால், ஆணுக்கு முழுமையாகப் புணர்ந்த உணர்ச்சி இருக்கும். தல உணர்வு நீக்கம் மூலம் இவ்வறுவையைக் கையாளலாம். மிகவும் எளிதான இவ்வறுவைக்குப் பிறகு, சில நாள் விந்தணு உயிரோடு உள்ளமையால், விந்தை ஆய்ந்து, அணு இல்லையென்று தெரிந்த பின்னர் புணரலாம் அல்லது அதுவரை கருத்தடை மருந்துகளைக் கையாளலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பெண்களின் மாத விடாய் வட்டத்தில் பாதுகாப்பான காலத்தில் கருத்தரிக்க இயலாது. அடுத்த மாத விடாய் வருவதற்கு 14 நாளுக்கு முன்பு, முட்டை வெளிப்படுகிறது. இக்காலத்திற்கு 5 நாள் முன்பும், 2 நாள் பின்பும் கருத்தரிப்பு ஏற்படலாம். இதைக் கணக்கில் கொண்டு, மாத விடாய் வட்டத்தின் 10–11 நாள்களில் புணர்ச்சியைத் தவிர்ப்பது நல்லது. இதைப் பின்பற்றுவது மிகவும் கடினம். உடல் வெப்ப முறை, கருப்பைக் கழுத்திலிருந்து மிகையாகச் சளி, மாத விடாய் வட்டத்தின் 12 மாத முறை ஆகியவற்றால், பாதுகாப்புக் காலத்தைக் கணக்கிடலாம். கருப்பைக் கழுத்து அடைப்பான். இந்த அடைப்பானை உள்ளே பொருத்துவதால், விந்தணு உட்செல்ல முடியாது. டுயூமாஸ் அடைப்பான் மிகு பயன் அளிக்கிறது. இது போன்ற பல வகை அடைப்பான்கள் உண்டு. வேதிக் கருத்தடைக் கருவிகள். ஜெல்லி, கிரீம், களிம்பு போன்றவை விந்தணுவைச் செயலற்றதாக்கும் தன்மை கொண்டுள்ளன. இதைப் பொருத்தும் முறையை நன்கு தெரிந்து கொண்டு குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தியும் பயன் பெறலாம். கருப்பையுள் பொருத்தப்படும் கருவிகள். இந்த நெகிழிக் கருவி உட்செலுத்துங் கருவி கொண்டு பொருத்தப்படும். இது இரண்டு வகைப்படும். முதல் வகையான லிப்பின் வளையம், சாஃப்-டி-வளையம் ஆகியவற்றில் தாமிரம் இல்லை. இரண்டாம் வகையான தாமிரம் 7. தாமிரம் டி, பல வகையான எடை ஆகியவற்றில் தாமிரம் உள்ளது. இவை பணி புரியும் விதம் பற்றிப் பல கருத்துகள் உண்டு. கருப்பையகத்தில் மாற்றங்கள் உண்டாக்குவனவாகவும், புரோஸ்டோகிளாண்டின் உற்பத்தியை அதிகரிப்பனவாகவும் கருதப்படுகிறது. இவ்வகைக் கருவி மாத விடாயின் போதோ, மாத விடாய்க்குப் பிறகோ உள்ளே பொருத்தப்படலாம். வேண்டிய நேரத்தில் அகற்றிக் கொள்ளலாம். ஆனால், சில சமயத்தில் கருப்பைக்குக் காயம் ஏற்படலாம். பொருத்தியிருந்த போது, சூல் உண்டானால் கருச் சிதைவு ஏற்படலாம். இவற்றைப் பல ஆண்டுகள் வரை வைத்துக் கொள்ளலாம். கருத்தடை மருந்துகள். 30–50 மைக்ரோ கிராம் கொண்ட ஈஸ்ட்ரோஜனும், புரொஜெஸ்ட்ரானும் கலந்த மாத்திரை, முன் பிட்யூட்டரியைத் தூண்டி, முட்டை வெளிப்படுவதைத் தடுக்கிறது. கருப்பைக் கழுத்தின் சளித் தன்மை மாறுகிறது. கருவகக் குழலின் அசைவு மந்தமடைகிறது. கருப்பையகத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், கருத்தரிப்பு ஏற்படுவதில்லை. மாத விடாய் தொடங்கியதிலிருந்து 5ஆம் நாள் இம்மாத்திரையை நாளும் ஒன்றாக 21 நாள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இம் மாத்திரைகளால் குருதி உறை கட்டி, மார்பகப் புற்று, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு ஆகியன உண்டாகலாம். குருதி அழுத்தம், இதய நோய், கால் கை வலிப்பு, கொழுத்த உடல் கொண்டோருக்கு இம் மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. டிப்போ–புரோவரா எனும் புரோஜெஸ்ட்ரான் 150 மி.கி. அலகில் 3 மாதத்திற்கு ஒரு முறை ஊசியாகத் தரலாம். அறுவை முறைகள், கருவகக் குழலைக் கட்டி விடுதல் அல்லது துண்டித்து விடுதலைச் செய்யலாம். வயிற்றைத் திறந்தோ, யோனி வழியாகவோ செய்யப் படும் இது, நிலைத்த அறுவை முறையாகும். —மு.கி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. H.S. Kaplan, The New Sex Therapy, Vol. II, Bailliere Tindall, London, 1980. சூல் பை அகற்றல் குலைக் கலைத்தல், கருப்பைத் தசை வளர்ச்சி, சூலக நோய், கருப் பைக்குப் பெருமளவிலான காயம், நிறுத்த முடியாத குருதிப் பெருக்கு, கருப் பைக் கட்டிகள், கூபக உறுப்புகளின் இடப் பெயர்ச்சி, உட்கருப்பையகப் புத்து வீச்சு (endometriosis), கருப்பை அல்லது கருப்பைக் கழுத்துப் புற்று நோய், தீங்கற்ற கட்டி (fibroid) ஆகிய நிலைகளில் சூல் பை அகற்றல் செய்யப்படும். கருப் பையை யோனி அல்லது வயிறு வழியாக அகற்றலாம். கருப்பைக் கழுத்துப் புற்று நோய்க்கு, வயிற்று வழி அறுவை செய்யப்படுகிறது. புற்று நோய்க்கு யோனி வழியாகவும், கருப்பையை அகற்றவாம். இவ்விரு அறுவை முறைகளைக் கையாளுவதிலும், பல செயல் முறைகள் உண்டு. சிலர் சூலகங்களையும் அகற்றி விடுகின்றனர். புற்று நோய்க்காக அறுவை செய்தோரில் 98 விழுக்காட்டினர் 5 ஆண்டுகளுக்கு உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது. அறுவை செய்து முடித்த பின்னர், கதிர் வீச்சு மருத்துவம் அளிப்பதா அல்லது புற்று நோய் எதிர் மருந்து அளிப்பதா என்பதை வல்லுநரே முடிவு செய்வார். —மு.கி. ராஜாசுப்பிரமணியம் சூல் பைச் சுருக்க ஊக்கிகள் ஆக்சிடோசினும், எர்காட் அல்கலாய்டுகளும் சூல் பைச் சுருக்க ஊக்கிகளில் (uterine stimulants) குறிப்பிடத் தக்கவை. ஆக்சிடோசின் மைய நரம்பு மண்டலத்தில் தொகுக்கப்பட்டு, பிட்யூட்டரி சுரப்பியின் பின் மடலுக்குக் கடத்தப்படுகிறது. இந்த நியூரோபைசின் என்னும் புரதத்துடன் சுரப்புத் துகள்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஹார்மோன் பால் சுரப்புக்குக் காரணமாக இருப்பதுடன், கருப்பையின் மெல்லிய தசை இழைகளைத் தூண்டி, கருப் பைச் சுருக்கத்தையும் ஊக்குவிக்கிறது. மகப் பேற்றை ஊக்குவிப்பதில், இதன் பங்கு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆக்சிடோசினுக்கான சிறப்பு உறிஞ்சிகள், பாலூட்டத்தின் போது மார்பகச் சுரப்பியிலும், சூலின் இறுதியில் கருப் பையின் மீதும் காணப்படுகின்றன. கருப்பைச் சுருக்கத்தில் ஆக்சிடோசின் முக்கிய பங்கு பெறுவதால், மகப் பேற்றைத் தூண்டப் பயன் படுகிறது. ஆக்சிடோசினும், புரோஸ்டாகிளாண்டின் F20உம் சூல் கால ஆறாம் மாதத்தில் கருக் கலைப்புக்குப் பயன்படுகின்றன. ஆக்சிடோசின், சிரை ஊசியாக அல்லது தசை ஊசியாகச் செலுத்தப் படுகிறது. 5% டெக்ஸ்ட்ரோசில், 10 மில்லி/மி. லி. என்ற அலகில், சிரை வழியாக ஆக்சிடோசின் செலுத்தப் படுகிறது. 30 நிமிடத்தில், 0.25 அலகு என்ற அளவில் கொடுக்கப்படலாம். வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் தெளிப்பானாகப் பயன் படுத்தும் வண்ணம் ஆக்சிடோசின் சிட்ரேட் தயாரிக்கப்படுகிறது. ஆக்சிடோசின் செலுத்தப் படும் போது கவனக் குறைவாக இருந்தால், கருப் பை கிழியக் கூடும். முந்தைய கருப்பை நோய் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். மகப்பேற்றில் முதல், இரண்டாம் கட்டங்களிலும், கருவுயிர்ப்பிலும் ஆக்சிடோசின் கொடுக்கக் கூடாது. சுருவுயிர்த்த குருதிப் பெருக்கில் எர்காட் அல்கலாய்டு கையாளப்படுகிறது. மெத்தில் எக்கோனோவின் என்ற மருந்து குருதிப் பெருக்கை நிறுத்துவதில் பெரும் பயனளிக்கிறது. கருப்பைச் சுருக்கத்தில் இம்மருந்து பயன்பட்டாலும், குழந்தை இறக்கும் வாய்ப்பிருப்பதால், இதைப் பயன்படுத்துவதில்லை. எர்கோனோவினை 0. 2 மி.கி. அலகில் தசை ஊசியாகக் கொடுக்கலாம். மாத்திரையாகக் கொடுப்பதாக இருந்தால், 0.2-0.4. மி.கி. அலகில் 6 மணி நேரங்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம். இந்நிலையில் குமட்டல், வாந்தி, கிறுகிறுப்பு, குருதி மிகை அழுத்தம் போன்றவை உண்டாகலாம். —மு. கி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. Charles R. Craig et. al., Modern Pharmacology, First Edition, Little Brown and Co., Boston, 1982. சூல் பைத் தசை கருப்பைச் சுவரின் மூன்று அடுக்குகளில், சூல் பையகத் தசையே (myometrium) பருமனானது. கருப் பைக் கழுத்தில் உள்ள சூல் பையகத் தசையில் எளிய தசைத் திசுவும், பெருமளவில் நார்த் திசுவும் காணப் படுவதால், இது முரடாக இருக்கிறது. சீரற்ற நிலையில் தசை இழைகளும், நார்த் திசுவும் கலந்துள்ளன. கருப்பையின் உடலில் சூல் பையகத்தசை 10–20 மி.மீ. பருமனாக இருக்கும். பேறு காலப் பின் நிலைகளில், மூன்று அடுக்குகளையும் எளிதில் பிரித்தறியலாம். உதர உறையின் (peritoneum) அடியில் இருக்கும் வெளி அடுக்கு நீள் போக்கில் இருக்கும். கருப்பைக் கழுத்திலிருந்து செல்லும் இழைகள் முன் புறமாகக் கருப்பைக் கழுத்தின் பின்பரப்பை அடைகின்றன. இந்த அடுக்கு மிகவும் மெல்லியதாக இருப்பதால், குழந்தை பெறாத கருப் பையில் இதைக் கண்டு பிடிக்க முடியாது. குழந்தையை வெளியே தள்ளும் போது, இந்த அடுக்கு முக்கிய பணி புரிகிறது. மூன்று அடுக்குகளிலும், மிகவும் பருமனானது மைய அடுக்கேயாகும். இதில் தசைக் கற்றைகள் இணைப்புத் திசுவுடன் காணப்படுகின்றன. குழந்தை பெறக் கூடிய பேறு கால நிலையில் எளிய தசைத் திசு மிகுதியாகக் காணப்படும். பூப்படைவதற்கு முன்பும், மாத விடாய் நின்ற போதும், இந்த அடுக்குக் குறைவாகவே காணப்படும். இதில், தசைக் கற்றைகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன. கருப்பைக்கான குருதி நாளங்கள் இணைப்புத் திசுக்களில் இருப்பதால், குருதி நாளங்களின் துளை, தசைச் செல்களின் சுருக்கத்தைப் பொறுத்துள்ளது. குழந்தையை வெளியேற்றும் பங்கு இருந்த போதும், குருதிப் பெருக்கைத் தடை செய்வதே இந்த அடுக்கின் பணியாகும். உள் தசை அடுக்கில் வட்ட வடிவ இழைகள் காணப்படுகின்றன. இவை உள் வாயிலைச் சுற்றியும், கருக் குழலின் திறப்புகளிலும் காணப்படுகின்றன. இது சுருக்குத் தசையாகப் பணி புரிவதாகக் கொள்ளலாம். —மு. கி.ராஜாசுப்பிரமணியம் சூல் பை நார்க் கட்டி கருவகத் தசையிலிருந்து (myometrium) உருவாகும் தசைப்புத் துகள் (myoma) தீங்கற்ற புது வளர்ச்சி ஆகும். ஹிப்பாக்கிரடீஸ் இக்கட்டிகளை ஸ்கிரோமடா என்று குறிப்பிட்டார். ரோகிடான்ஸ்கி இதை நார்க் கட்டிகள் (fibroids) என்றார். ஆனால், வர்சோவ், இவற்றை லியோமையோமா என்றார். ஃபைப்ராய்டு, மையோமா என்னும் சொற்கள் வழக்கத்தில் இருந்தாலும், லியோமையோமா என்பதே பொருந்தும். கட்டிகள் உருண்டை வடிவத்தில் இருக்கும்; இவை உறையால் மூடப்பட்டுள்ளமையால், இவற்றை எளிதில் அகற்றி விடலாம். இவை ஒன்றுக்கு மேலாகவும், மிகப் பெரியவையாகவும் இருக்கலாம். இக்கட்டிகள் பெரும்பாலும் 35–45 வயதினரில் காணப்படுகின்றன. இக்கட்டி உண்டாகும் காரணம் தெரியவில்லை. மிகப் பெரிய கட்டிகள் குழந்தையே பெறாதவர்களிடம் காணப்படும். 15% நோயில் கருவகக் குழல் அடைபட்டு, மலட்டுத் தன்மை தோன்றக் கூடும். கருப்பைத் தசைப் புத்து மலட்டுத் தன்மை காரணமாக அமையும். ஆகவே கட்டியை அகற்றி விட்டால், பெண், சூல் அடையலாம். ஆய்வக முடிவுகளில் தசைப் புத்து உற்பத்தி செய்யும் ஹார்மோனும், தசைப் புத்து உண்டாவதைத் தடை செய்யும் ஹார்மோனும் இதற்குக் காரணம் எனக் கண்டுள்ளனர். தசைப் புத்து, எண்ணிக்கையில் மிகுந்து, சில போது, நூறுக்கு மேலாகவும் காணப்படலாம். சில வடிவத்தில் மிகச் சிறியவையாகவும், சில மிகப் பெரியவையாகவும் உள்ளன. தசைப் புத்தில், பல வித நசிவு, சுருக்கமடைதல், ஹையலினாக மாறுதல், நீர்ப்பை மாற்றம், கொழுப்பு மாற்றம், கால்சிய உப்புப் படிதல், இளஞ்சிவப்பு மாற்றம், புற்றாதல் முதலியன காணப் படுகின்றன. தசைப் புத்தின் சிக்கலாகத் தன்னைத் தானே சுருட்டிக் கொண்டு, குருதித் தேக்கம் ஏற்பட்டு வயிற்று வலியும் உண்டாகிறது. தசைப் புத்தில் உறை கிழிந்து விடலாம்; அழற்சி விளைவுகள் ஏற்படலாம். 700 தசைப் புத்து நோயினரில் 20 பேரிடம் கருப் பைப் புற்று நோய் காணப்பட்டது. தசைப் புத்தும் சூலும். தசைப் புத்தில் மலட்டுத் தன்மை ஏற்பட்டாலும், சூல் அடைவது மிகவும் இயல்பாகும். சிலேட்டுமப் படலத்தின் அடியில் இருக்கும் தசைப் புத்து கருப் பையை நிலை குலையச் செய்து, மலட்டுத் தன்மையை உண்டாக்குகிறது. சூலடைந்தால், கருச் சிதைவு ஏற்படும். சூலின் போது, தசைப் புத்து இளஞ்சிவப்பு நசிவடைந்து வயிற்று வலி, தொடு வலி, வாந்தி, காய்ச்சல், வெள்ளணுப் பெருக்கம் ஆகியவை தோன்றும். இதற்கு, அறுவை முறையைக் கையாளக் கூடாது. பேற்றின் போது, தசைப் புத்து பெரிதாகலாம். ஆனால், மகப் பேற்றின் பின் சிறிதாகி விடுகிறது. சில சமயம், தசைப் புத்து கருப் பைக் கழுத்தை அடைத்து விட்டால், கருப்பைத் திறப்பு அறுவை செய்து, குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். தசைப் புத்தின் அறிகுறிகள். மாத விடாயின் போதான குருதிப் பெருக்கு மிகையாக இருப்பது, அடிக்கடி தீட்டு ஏற்படுவது. ஒவ்வொரு மாத விடாய்க்கும் இடையே குருதிப் பெருக்கு உண்டாவது முதலியன அறிகுறிகளாகும். தசைப் புத்து பக்கத்திலுள்ள உறுப்புகளை அழுத்துவதால், மலச் சிக்கல், சிறுநீர்த் தேக்கம், கால் வீக்கம், நரம்பு வலி, அடி வயிற்றில் வலி, வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, மிகையான நாடித் துடிப்பு, படபடப்பு, வயிற்றில் வீக்கம் போன்ற பல அறிகுறிகளும் தோன்றுகின்றன. மருத்துவம். போதிய ஓய்வும், குருதி இழப்புக்கு இரும்புச் சத்தும், மாத்திரைகளும் பயனளிக்கும்; அறுவை தேவையிருந்தால், ஹீமோகுளோபின் அளவு 70%க்கு மேல் இருக்க வேண்டும். முன்பு கதிர் வீச்சு மருத்துவம் பரிந்துரைக்கப் பட்டது. அண்மைக் காலமாக அது கை விடப்பட்டது. அறுவை மூலம் தசைப் புத்தை அகற்றுவதே சிறந்த முறை. யோனி வழியாகவோ, வயிறு வழியாகவோ தசைப் புத்தை அகற்றி விடலாம். மிகவும் சிக்கலான நோயில் கருப் பையை அகற்றி விடுவதும் ஒரு முறையாகும். —மு. சி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. Gordon Bourne, Text Book of Gynaecology, Ninth Edition, Churchill Livingstone, London, 1971. சூல்பையக இறப்பு சூல் காலத்தின் போது, எந்த நேரத்திலும் குழந்தை சூல் பையினுள்ளேயே இறக்கலாம். இது 28 வாரங்களுக்கு முன்பு நடந்தால், கருச் சிதைவு எனலாம்; 28 வாரங்களுக்குப் பிறகானால், இறந்து பிறந்ததாகவே கொள்ள வேண்டும். காரணங்கள். பிறவி ஊனங்கள், Rh முரண்பாடு, கருக் குடைக் கோளாறு, குருதி மிகு அழுத்தம், கொப்பூழ்க் கொடிச் சேதம், குழந்தைக்கு ஆக்சிஜன் பற்றாக் குறை, கருப் பை மிகைச் சுருக்கங்கள், நீடித்த மகப் பேற்று வேதனை, தாயின் நீரிழிவு, சிறுநீரக நோய், மேக நோய், நுண்ணுயிர்ப் பாதிப்புகள் முதலியன காரணங்களாகலாம். அறிகுறிகள். கருப்பையுள் குழந்தையின் அசைவுகள் இல்லாமை, குழந்தையின் இதய ஒலி கேளாமை, கருப்பை வளர்ச்சியடையாமை, மார்பக வளர்ச்சி குறைந்து கபில நிற நீர்மம் வெளிப்படுதல், எக்ஸ் கதிர்ப் படங்கள் எடுத்தால், கபால எலும்புகளின் சிதைவு, இதயத்திலும், குருதி நாளங்களிலும் வளிமத் தேக்கம், பந்து போல் குழந்தை சுருண்டு கிடப்பது ஆகிய அறிகுறிகளைக் கொண்டு, குழந்தையின் இறப்பை உறுதி செய்யலாம். இதற்கு எக்ஸ் கதிர் ஆய்வும் பயன்படும். இறந்த குழந்தை நீண்ட நாள் கருப் பையில் இருந்தால், இறந்த குழந்தையிலிருந்து திராம்போ பிளாஸ்டின் வெளிப்பட்டுக் குருதி உறைவை ஊக்குவிக்கும். குருதி நாள உள் உறைவுக்கு, ஹெப்பாரின் சிறந்த மருந்தாகும். பேறு தொடங்கிய பின்னர், நுண்ணுயிர்த் தாக்கம் ஏற்படக் கூடும். சிண்டோசினான் அல்லது புரோஸ்டாகிளாண்டின் E₂ சிரை வழியாகக் கொடுத்துக் குருதிப்பெருக்கத்தைத் தவிர்க்கலாம். —சாரதா கதிரேசன் நூலோதி. P.R. Myers Cough, Munro Kerr's Operative Obstetrics, Tenth Edition, Bailliere Tindall, London, 1982. சூல் பையின் இடப் பெயர்ச்சி குழந்தை பெறாத பெண்களில் சூல் பை முன்னோக்கித் திரும்பியும், வளைந்தும் இருக்கும். இதனால் சூல் பையின் உடல், கழுத்துப் பக்கத்தில் முன்னோக்கி வளைந்திருக்கும். இயல்பான கூபகத்தில் சூல் பை ஒரே நிலையில் இருப்பதில்லை. சிறுநீர்ப் பை நிரம்பி இருந்தால், சூல் பை ஒரு பக்கமாகத் தள்ளப்படும். இயல்பான நிலையில் கருப் பை இருக்கும் போது, யோனி ஆய்வின் மூலம் புற வாயில் கீழ் நோக்கியும், பின்னோக்கியும் இருப்பது தெரிய வரும். அப்போது, முதலில் தொடப்படும் பகுதி கருப் பைக் கழுத்தின் முன் உதடாகும். கருப் பைக் கழுத்து 90° திரும்பியிருந்தால், புற வாயில் கீழ் நோக்கி முன்னோக்கி அமைய, முதலில் தென்படும் பகுதி பின் உதடாகும். அப்போது, சூல் பைக் கழுத்து மேல் நோக்கியும், பின்னோக்கியும் இருக்கும். மேலும், கருப்பை பின் திரும்பி இருப்பதாகக் கருதப்படும். இங்கு, திருப்பம் என்பது சூல் பைக் கழுத்துக் கால்வாயின் திசையே ஆகும். வளைவு எனும் போது, சூல் பை உடல், கழுத்தை நோக்கி இருப்பதாகக் கொள்ள வேண்டும். சூல் பை முன் புறமாகத் திரும்பி, பின் புறமாக வளைந்திருந்தால், சூல் பை கூபகத்தில் மிகவும் பின் புறமாக உள்ளது எனக் கொள்ளலாம். சூல் பையும், சூல் பைக் கழுத்தும், எந்நிலையில் இருந்தாலும், கோளாறு எவ்விதம் இருந்தாலும், மருத்துவம் சிக்கலானது. சிலருக்குக் கோளாறுகள் இல்லையெனில், பின் முதுகு வலி, புணர்ச்சியின் போது, வலி முதலியவை இருக்கலாம். அப்போது சூல் பையின் இடப் பெயர்ச்சியைச் சரி செய்ய வேண்டும். சூல் பை எந்நிலையில் இருந்தாலும், அது நகரக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரே நிலையில் இறுக்கமாக இருக்கக் கூடாது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பின் திரும்பிய நிலை. ஒல்லியான பெண்களில், வயிற்று உறுப்புகள் அனைத்தும் முன்னோக்கி இருக்கும் போது, இந்நிலை உண்டாகிறது. இது கருப்பையகத்தின் (myometrium) கோளாறாகக் கருதப் படுகிறது. சிலருக்குக் குழந்தை பிறந்தவுடன் கருப் பை. பின் திரும்பிய நிலையை அடைகிறது. சில போது, தசைப் புத்தும், சூலகக் கட்டிகளும் இருக்கும் போது, இந்நிலை ஏற்படலாம். இதனால், சிலருக்கு மாத விடாயின் போது, வலி, மிகையான குருதிப் பெருக்கு, சீழற்ற வெள்ளை படுதல், உடல் கனத்துப் போன உணர்வு, புணர்ச்சியின் போது வலி, மலட்டுத் தன்மை, மிகவும் அரிதாகக் கருச் சிதைவு, சிறுநீர்த் தேக்கம் ஆகியவை தோன்றலாம். கை விரல்கள் கொண்டே நிலையைச் சரிப்படுத்தலாம். பின் திரும்பிய நிலை அசையாது இறுக்கமாக இருந்தால், கருக் குழல் சூலக அழற்சியும், கூபக உதரவுறை அழற்சியும், கூபகக் கட்டிகளும் காரணமாக இருக்கலாம். அப்போது தேவையிருந்தால், பின் திரும்பிய நிலையை, அறுவை முறையால் சரி செய்யலாம். பின் திரும்பிய நிலையில் பெண் கருத்தரித்தால், சிறுநீர்த் தேக்கம் ஏற்படும். மெதுவாகச் சிறுநீரை வெளியேற்றினாலே, சூல் பை இயல் நிலை அடையும். சூல் பையின் முன்னோக்கிய வளைவு. இந்நிலையை ஈஸ்ட்ரோஜன் போன்ற மருந்துகள் கொடுத்துச் சீர் செய்யலாம். இந்த வளைவின் போது ஏற்படும் தீட்டு வலி, மணமான பின்போ, குழந்தை பிறந்த பின்போ, சரியாகி விடும். கருப் பைக் கழுத்தை விரிவடையச் செய்து, மருத்துவம் அளிப்பர். அரிதாகப் பரிவு நரம்புத் துண்டிப்பு, சூல் பை அகற்றல் போன்றவற்றைக் கையாண்டு தீட்டுக் கால வலியைப் போக்கலாம். கருப் பையின் பக்கவாட்டுத் திருப்பம். இது பெரும்பாலும் பிறவியிலேயே உண்டாகிறது. உதரவுறை ஒட்டும் பொருள்கள், கருக் குழல்–சூலக அழற்சி, சூலகக் கட்டி ஆகியவற்றால் இத்திருப்பம் உண்டாகிறது. கருப் பையின் உள் நோக்கிய திருப்பம். இது திடீரென்றோ, நாட்பட்டோ நிகழலாம். பெரும்பாலும், மகப் பேற்றிற்குப் பின் நிகழும் இதைக் கை கொண்டே சரி செய்து விடலாம். நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, தூய ஒரு காலன் சுடுநீரை 3–4 அடி உயரத்திலிருந்து, அழுத்த நிலையில் யோனியின் உட் செலுத்த வேண்டும். நீர் செலுத்தப்பட்ட பின்னர், கருப் பையின் நிலை சீரடைகிறது. இதுவும் தவறி விட்டால், ஆழ்ந்த உணர்வகற்றலின் பின், கையால் சரி செய்யலாம். இறுதியாக வயிற்றைத் திறந்து, கருப் பையை இயல் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். வயது முதிர்ந்த பல மகவு ஈன்ற பெண்ணாக இருந்தால், சூல் பையையே அகற்றி விடலாம். —மு.கி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. Gordon Bourne et. al., Shaw's Text Book of Gyanecology, Ninth Edition, Churchill Livingstone, 1971. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> சூல் பையின் கழுத்து பேரிக்காய் வடிவில் இருக்கும் சூல் பை 3 செ.மீ. நீளமும், 6.5 செ.மீ. அகலமும், 3.5 செ.மீ. பருமனும் கொண்டது. உடற்கூறு சார்ந்தும், பணி சார்ந்தும், இதை உடல் என்றும், கழுத்து என்றும் பிரிக்கலாம். இவ்விரண்டும் சேரும் இடத்தில், உள் வாயில் இருக்கிறது.இங்கு உடலின் சிலேட்டுமப் படலம், கழுத்தின் சிலேட்டுமமாகத் தொடர்கிறது. கழுத்து, யோனிப் பகுதி, யோனி மேற்பகுதி எனப் பிரிக்கப் படுகிறது. யோனிப் பகுதி யோனிக்குள் துருத்துகிறது. கன்னிப் பெண்களில், கூர் உருளையாகவும் பல மகவு ஈன்ற பெண்களில் குட்டையாகவும், தட்டையாகவும் இருக்கும். கருப் பையின் கூரை, கருக் குழல் பொதிந்த இடத்திற்கு மேல் இருக்கிறது. கருப் பைக் குழிவு உள் வாயில் மட்டத்தில் குறுகலடைந்து, கழுத்துக் கால்வாயுள் செல்கிறது. கழுத்துக் கால்வாய் உள் வாயிலிருந்து வெளி வாயில் வரை சென்று யோனிக்குள் திறக்கிறது. குழந்தை பெறாத பெண்களின் வெளி வாயில் வட்ட வடிவமாகவும், குழந்தை ஈன்ற பெண்களில் கிடை மட்டப் பிளவு போன்றும் இருக்கிறது. சூல் பைக் கழுத்தின் (cervix) சிலேட்டுமப் படலம், யோனியின் கீழ்ப் பகுதியின் தோல் போன்று இருக்கிறது. அதில் பல மடிப்புகள் காணப்படுகின்றன. முன் புறத்திலிருந்து பின்னோக்கிக் குறுக்காகப் பள்ளங்கள் செல்கின்றன. சூல்பைக் கழுத்தின் சிலேட்டும உறையில், சளி அடிப் படலம் இல்லை. கருப் பைக் கழுத்து, அதன் சுரப்பிகள் ஆகியவற்றின் புறத் தோல், நேரடியாகச் சூல் பைக் கழுத்தின் கருவகத் தசையுடன் (myometrium) தொடர்பு கொள்கிறது. கழுத்துச் சுரப்பிகள் பல வடிவத்துடன் அமைந்து, கார்போஹைட்ரேட் நிறைந்த சளியைச் சுரக்கின்றன. இது கார நிலையில் காணப்படுவதால், விந்தணுக்களைக் கவர்கிறது. இச்சுரப்பு, சூல் பைக் கழுத்தின் துளையை மூடிக் கொண்டு, நுண்ணுயிரிகளின் தாக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் புறத் தோல் தூண் போன்று அமைந்து, கூருருளை வடிவ உட்கருக்களைக் கொண்டுள்ளது. இதிலுள்ள இழைகளின் அசைவு, வெளி வாயிலை நோக்கியிருக்கும். சூல் பைக் கழுத்தின் கருவகத் தசை, மாத விடாய் வட்டத்தின் போது மாற்றம் அடைவதில்லை. சூல் பைப் புற்று, கோளப் புற்றாகத் (adenocarcinoma) தீங்கு குறைந்து இருக்கும். கருப் பைக் கழுத்துப் புற்று பெரிதும் தீங்கு வாய்ந்த செதில் (squamous) செல் கொண்டது. சூல் பை உடலுக்கும், கழுத்துக்கும் இடைப்பட்ட குறுகிய பகுதி, இடுக்கு (isthmus) எனப்படும். கழுத்தின் நீளமும், சூல் பை உடலின் நீளமும், வயதைப் பொறுத்து மாறுபடும். பத்து வயதில் 2:1 ஆகவும், பூப்படைந்தவுடன் 1:2 ஆகவும், முதிர்ச்சியடைந்ததும் 1:4ஆகவும், இருக்கும். சூல் பைக் கழுத்து அழற்சி. சீழ் சார்ந்த கருச் சிதைவு, பேறு காலப் பின் நிலைச் சீழ், வெட்டை நோய் ஆகிய நோய் நிலைகளில் சூல் பைக் கழுத்து அழற்சி (cervicitis) தீவிரம் அடைகிறது. யோனி சிவந்து, வீக்கமும், சீழ் சளிச் சுரப்பும், தொடு வலியும் தோன்றும். தீவிர வெட்டை அழற்சியில் பின் முதுகு வலியும், கீழ் வயிற்று உப்புசமும் காணப்படும். கருவகத் தசை (myometrium) அழற்சியும் உடன் இருக்கலாம். சீழ் கொண்ட கருச் சிதைவிலும், பேறு கால நுண்ணுயிர்ப் பின் பாதிப்பிலும், தீவிரமான கழுத்து அழற்சியை விடக் கருப் பையக (endometrium) அழற்சியே பெரிதும் காணப்படும். அழற்சியின் காரணத்தைக் கண்டு பிடித்து, மருத்துவம் அளிக்க வேண்டும். கருப் பையின் நாட்பட்ட அழற்சி.. இது அடிக்கடி நிகழக் கூடியதாகும். கருச் சிதைவின் போதோ, குழந்தைப் பிறப்பின் போதோ ஏற்படும் கருப் பைக் கழுத்துக் கிழிசல் இந்நிலையை உண்டாக்கலாம். இந்தக் கிழிசல் சீரடையா விடில், கிழிபட்ட பகுதிகளின் விளிம்புகள் வெளியே திறந்து, கருப்பைக் கழுத்துக் கால்வாய் பெரியதாகி, யோனியிலிருந்து நச்சுயிரிகள் உட்புகுந்து நாட்பட்ட அழற்சியை உண்டாக்கலாம். சூல் பைக் கழுத்தை விரிவு படுத்த கருவிகளைப் பயன் படுத்துவதும் இத்தகைய விளைவை ஏற்படுத்தலாம். கடும் அழற்சி நாட்பட்ட அழற்சியாக மாறலாம். சூல் பைக் கழுத்துக் கால்வாய் சீரற்று உள்ளமையாலும், சுரப்பிகள் பல வடிவில் காணப் படுவதாலும், உட்சென்ற உயிரிகள் நுண்ணுயிர் எதிர் மருந்துகளால் பாதிக்கப் படாத இடங்களில் தங்கி விடும். மேலும், கருப் பைக் கழுத்தின் சிலேட்டுமப் படலம், மாத விடாயின் போது, உதிர்ந்து விடுவதில்லை. ஆகவே, நுண்ணுயிர்ப் பாதிப்பு நீடிக்க வாய்ப்பு உண்டு. இங்கிருந்து நோய் பிற இடங்களுக்குப் பரவி, மலட்டுத் தன்மையை உண்டாக்கும். நாட்பட்ட அழற்சியுடன் அரிப்புப் புண்ணும் தோன்றலாம். கருப் பைக் கழுத்தின் அனைத்துப் பகுதியுமே பாதிக்கப்படலாம். நோய் வரலாற்றிலிருந்தும், நோயாளியின் கோளாறுகளிலிருந்தும், நோயை உறுதி செய்யலாம். புற்று நோயிலிருந்து பிரித்தறிய, பிணிக் கூற்று ஆய்வு தேவையாகும். இந்நோய்க்குச் சுட்டுப் பொசுக்கல் முறை சிறந்தது. சூல் பைக் கழுத்தின் திசுக்கள் உறைந்து தூண் புறத் தோல் சிதைக்கப் பட்டு, நாளடைவில் யோனிப் பகுதியில் செதில் புறத்தோலியம் (squamous epithelium) உண்டாகலாம். அண்மைக் காலமாகப் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுட்டுப் பொசுக்கல் முறை மூலம் அகற்றி விடுகின்றனர். —சாரதா கதிரேசன் நூலோதி. John Hawkins, Shaw's Text Book of Gynaecology, Ninth Edition, Churchill Livingstone, London, 1971; P.C. Williams et.al., Grays Anatomy, Thirtysixth Edition, Churchill Livingstone, London. 1980. சூலகம் பூக்கும் தாவரங்களின் இனப் பெருக்க உறுப்பான பூவிலுள்ள பெண் உறுப்பே சூலகம் (gynoecium) ஆகும். இது மலரின் நான்காம் உறுப்பாகும். மலர் என்பது தடைப் பட்ட வளர்ச்சியைக் கொண்ட இனப் பெருக்கமாகிய செயலில் ஈடுபடும் கிளையாகும். மலரின் பகுதிகள் பூத்தளம் மீது அமைந்திருக்கும். இவற்றில், சூலகம் மலரின் நுனி உறுப்பாக அமைகிறது. பெரும்பாலும், சூலக அலகுகள் சேர்ந்தே காணப் படினும், மொனிமியேசி (Monimiaceae) குடும்பத்தில் பூத்தளம் கிண்ணம் போல் அமைந்து, கிண்ணத்தின் உட்புறம் முழுதும் சூலக அலகுகள் (carpels) பரவிக் காணப்படும். குடுவை வடிவத்திலுள்ள சூலகத்திற்குப் பொதுவாக மூன்று பகுதிகளுண்டு. பருத்த அடிப் பகுதியைச் சூல் பை (ovary) என்றும், உருளையான நடுப் பகுதியைச் சூலகத் தண்டு (style) என்றும், சூலகத் தண்டின் நுனிப் பகுதியைச் சூலக முடி (stigma) என்றும் குறிப்பிடுவர். சூலக முடிப் பகுதி சற்று அகன்று பசையோடு இருக்கும். மலர்களைஇனங் கண்டு கொள்வதற்கும், அவற்றை விவரிப்பதற்கும், சூலகம், சூலகத்தின் பகுதிகளைச் சார்ந்த பண்புகள் பெரிதும் பயன் படுகின்றன. குலகத்தைத் தவிர, பிற உறுப்புகள் மலரில் எவ்வாறு இணைந்துள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு, மலர்களை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை ஹைபோகைனஸ் (hypogynous), பெரிகைனஸ் (perigynous). எபிகைனஸ் (epigynous) ஆகும். ஹைபோகைனஸ் நிலையில், மலரின் பிற உறுப்புகளான அல்லி, புல்லி, மகரந்தத் தாள் ஆகியன சூலகத்திற்குக் கீழே உள்ளமையால், இம்மலரின் சூலகத்தை மேல் மட்டச் சூல் பை (superior ovary) என்பர். எ-டு. எலுமிச்சை, பூவரசு, செம்பருத்தி முதலியன. எபிகைனஸ் மலரில் சூல் பைக்கு மேலே மலரின் பிற உறுப்புகள் அமைந்துள்ளமையால், இதைக் கீழ் மட்டச் சூல் பை (inferior ovary) என்பர். எ.டு. பூசணி, கொய்யா, மாதுளை முதலியன. பெரிகைனஸ் மலரில் பூத்தளம் கிண்ணம் போல் காணப் படும். கிண்ணத்தின் விளிம்பில் அல்லி, புல்லி, மகரந்தத் தாள்கள் அமைந்திருக்கும். கிண்ணத்தின் மையப் பகுதியில் சூலகம் அமைந்திருக்கும். எ-டு. ரோஜா, அவரை முதலியன. பெரும்பாலும், சூலகம் காம்பற்றுக் காணப்படும். ஆதண்டை, கடலை போன்ற மலர்களின் சூலகத்திற்குக் கீழே காம்பு இருக்கும். இதைச் சூலகக் காம்பு (gynophore) என்பர். சூலகத்தின் அலகுகள் தனித்தோ, இணைந்தோ காணப்படலாம். தனித்த நிலையை, இணையாச் சூல் (apocarpous) என்றும், சூலிலைகள் ஒன்றோடொன்று சேர்ந்து ஒரு சூலகமாக இருந்தால், அதை இணைச் சூல் (syncarpous) என்றும் கூறுவர். சூலிலைகள் ஒன்றோடொன்று இணைவதென்பது வெவ்வேறு மட்டத்தில் நடைபெறலாம். லேமியேசி (Lamiaceae) என்னும் துளசிக் குடும்பத்தில் சூல் பைகளின் அடிப் பகுதி மட்டும் இணைந்திருக்கும். புளியாரையில் (oxalis) சூல் பைகள் மட்டுமே இணைந்திருக்கும். சூலகத் தண்டுகள் தனித்திருக்கும்; செம்பருத்தியில் சூல் பை, சூலகத் தண்டுகள் இணைந்தும், சூலக முடிகள் தனித்தும் காணப்படும். எருக்கு மலரில் சூல் பைகளும் சூலகத் தண்டுகளும் தனித்தும், சூலக முடி மட்டும் இணைந்தும் காணப்படும். அரளிக் குடும்ப மலர்களில் சூல் பைகள் மட்டுமே தனித்தும், சூலகத் தண்டு, சூலக முடிகள் இணைந்த நிலையிலும், இருக்கும். பல சூலிலைகள் இணைந்த சூலகத்தைக் கூட்டுச் சூல் பை (compound ovary) என்று கூறலாம். கூட்டுச் சூல் பை இரு நிலைகளில் அமைந்திருக்கலாம். சூலிலைகள் இணைவதால், சூல் பையில் தடுப்புச் சுவர்கள் (septa) தோன்றிச் சூலிலைகளின் எண்ணிக்கையை ஒத்த அறைகள் (locule) தோன்றும். இதைச் சீனோகார்பஸ் (coenocarpus) என்பர். எ-டு. பருத்தி, வெண்டை, கத்தரி. சில மலர்களின் சூல் பை பல சூலிலைகளான போதும், தடுப்புச் சுவரின்றி ஒரே அறையைக் கொண்டிருக்கும். இதைப் பேராகார்பஸ்(paracarpous) என்பர். எ-டு. கடுகு, வெள்ளரி, விளா. பூக்கும் தாவரங்களில் ஒரு சூலிலையைக் கொண்ட நிலையைப் படி மலர்ச்சியால் உயர்ந்தது என்றும், பல சூலிலைகள் கொண்ட நிலை பின் தங்கியது என்றும் கருதுவதுண்டு. படி மலர்ச்சியில், பின் தங்கிய குடும்பங்களில் சூலகம் இணையாச் சூலிலைகளைக் கொண்டிருக்கும். இங்கு, சூலிலைகள் இணையாமல் தனித்தே காணப்படும். பொதுவாக, இக்குடும்பங்களில் தனித்துள்ள சூலிலைகள் மேடிட்ட பூத்தளத்தில் சுழல் முறையில் அமைந்திருப்பதைக் காணலாம். எ-டு. அன்னோனேசி, ரெனன்குலேசி. மெக்னோலியேசி. பல சூலிலைகள் கொண்ட உயர் குடும்பங்களில் சூலிலைகள் இணைந்த நிலையில் காணப்படும். இதையே, இணைச் சூல் பை (syncarpous) என்பர். பொதுவாக, இவ்வகை மலர்களில், சூலிலைகள் ஒரே சுற்றிலிருக்கும். ஆனால், அரிதாக மாதுளை போன்ற இனங்களில் அவை இரு சுற்றிலும் இருப்பதைக் காணலாம். ஒரே மலரில் காணப்படும் சூலிலைகளின் எண்ணிக்கை பொதுவாக, அம்மலரிலுள்ள அல்லி, புல்லிகளின் அடிப்படையிலிருக்கும். அடுக்கு வட்டமான (cyclic) மலர்களில், சூலிலைகளின் எண்ணிக்கை குறைவாகவும், குறைந்த வேறுபாட்டுடனும் அமையும். ஆனால், திருகு (spiral) மலர்களில், சூலிலைகள் மிகுதியாகவும், வேறுபாட்டுடனும் காணப்படுகின்றன. சூலிலைகளின் எண்ணிக்கையைப் பொறுத்துச் சூலகத்தைப் பல வகையாகப் பிரிக்கலாம். ஒரு சூலிலைச் (monocarpallary) சூல்பை எ-டு. அவரை, ஆவாரை முதலியன; இரு சூலிலை (bicarpallary) சூல் பை எ-டு. கத்தரி, முள்ளங்கி முதலியன; மூன்று சூலிலைச் (tricarpallary) சூல் பை எ-டு. வெங்காயம், பருத்தி, வெள்ளரி; ஐந்து சூலிலை சூல் பை (pentacarpallary) எ-டு. வெண்டை, விளா. சூல் பையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் காணலாம். இவ்வறைகளின் எண்ணிக்கையும், சூலக விளக்கத்திற்குப் பயன்படுவதுண்டு. ஒரு சூலறைச் (unilocular) சூல் பை - எ-டு. அவரை, முள்ளங்கி, விளா முதலியன. இரு சூலறைச் சூல் பை எ-டு. கத்தரி, தக்காளி, முதலியன. மூன்று சூலறைச் சூல் பை எ-டு. வெங்காயம், பருத்தி முதலியன. ஐந்து சூலறைச் சூல் பை எ-டு. வெண்டை. முள்ளங்கி, வெள்ளரி, விளா முதலியவற்றில் சூலிலைகளின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட போதும், அவற்றில் சூலறைகள் ஒன்றே. இதற்குக் காரணம் அவை பாராகார்பஸ் அமைப்பைக் கொண்டவை. சூலகத்தின் அலகு சூலிலைகள் என்று கருதிய போதும், சூலிலை என்பது ஒரு கற்பித (hypothetical) உறுப்பாகவே கொள்ளப்படுகிறது. சூலிலை என்பதை ஓர் இலை போன்ற உறுப்பாகவும், அதன் விளிம்புகளில் சூல்கள் அமைந்திருப்பதாகவும், தாவரப் புறவியலார் கருதுவர். இந்த இலை போன்ற உறுப்பு நடு நரம்பு, பக்க நரம்புகளுடன் காணப்படும். விதை மூடாத் தாவரங்களில், சூல்களைக் கொண்ட இவ்விலை போன்ற பகுதி மூடாத நிலையிலிருக்கும். பூக்கும் தாவரங்களில் பொதுவாக, இந்தச் சூலிலைகள் மூடி, சூல்கள் உள்ளடங்கிய நிலையிலிருக்கும். அரிதாகச் சில இனங்களில், சூலிலைகள் முழுதும் மூடாத நிலையிலிருப்பதுண்டு. எ.டு. ட்ரமிஸ் (Drimys). சூலிலை என்ற கற்பித உறுப்பு, உட்புறம் மடங்கிய இலையின் விளிம்புகள் ஒன்றோடொன்று சேர்வதால், தோன்றக் கூடும் என்று கதே என்ற பழம் பெரும் தாவரவியலர் கூறியுள்ளார். சூலக இலையின் உருமாற்றமே சூலகம் என்ற அந்நாளைய கொள்கையைத் தற்காலத் தாவரவியலர் ஒத்துக் கொள்வதில்லை. மலர் என்பது வளர்ச்சி தடைப்பட்ட ஓர் இனப் பெருக்கக் கிளை என்று தாவரவியலர் கூறுகின்றனர். அதனால், மலரின் உறுப்புகளான புல்லி, அல்லி, மகரந்தத் தாள்கள், சூலிலைகள் ஆகியன இலையின் உரு மாற்றங்களேயாகும். எவ்வாறு இலை சூலிலையாக உருமாறியது என்பதைத் தெளிவாக்கப் பல கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பி. ஜி. எல். ஸ்வாமி என்பாரின் கான்டூப்லிகேட் கார்பெல் (conduplicate carbel) கொள்கையும், பூரி என்பாரின் கொள்கையும் குறிப்பிடத் தக்கவை. சூலக இலைக் கொள்கையின் கூற்றுப்படி, பசுமையான இலையும், சூலிலையும் ஒத்த அமைப்புக் கொண்டவை; இரண்டுமே பசுமையானவை; நரம்புகள் இலைத் துளைகள் கொண்டவை; மேலும், நீட்சிகள், சுரப்பிகள் இரண்டிலுமே ஒன்று போல் காணப் படும். சூலிலைக்கு 3 நரம்புகளுண்டு; இவை மூன்றுமே சூலிலையின் அடிப் பகுதியிலிருந்து தோன்றுகின்றன. தொன்மையான சூலகங்களில் 5 நரம்புகள் கொண்ட சூலிலைகளைக் காணலாம். சூலிலையின் நடு நரம்பு, பூத்தளத்தின் கீழ் மட்டத்திலிருந்து புறப்பட்டுச் சூலிலையின் வெளிப் பக்கத்தில் வரியிட்டது போல் அமைந்திருக்கும். இதை மேல் வடு (dorsal suture) என்பர். ஏனைய இரண்டு நரம்புகள், இலையின் ஓரத்தை அணுகிப் போவதுண்டு. இவற்றிலிருந்து பிரிந்து செல்லும் நரம்புகள் சூல்களை அடையும். சூல்கள் கொண்ட சூலக இலையின் ஓரங்களை வளமான பகுதி (fertile region) என்று கூறுவர். இந்த ஓரங்கள் இணைவதாலேயே, கீழ் வடு (ventral suture) தோன்றியிருக்கக் கூடும் என்பது பலருடைய கருத்து. தொன்மையான தாவரங்களில், கீழ் வடு என்பது சூலிலையின் நுனியிலிருந்து அடி வரை நீள் வாக்கில் அமைந்திருப்பதைக் காணலாம். நாளடைவில் சிறந்த முறையில், மகரந்தச் சேர்க்கை நடக்க வேண்டி, சூலக முடி என்ற வளமான பகுதி, சூலிலையின் நுனியில் மட்டுமே அமைந்து செயற்படுவதை யும் காணலாம். இந்த வளர் பகுதி சிறிது சிறிதாகக் குறைந்து, இன்றைய நிலையை அடைந்துள்ளதையும் காணலாம். ஒரு சூலகத்தில் ஒன்றோ, அதற்கு மேற்பட்டோ சூல்கள் காணப்படலாம். அவை சூல் பையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்திருக்கும். சூல்கள் சூல் பையோடு இணைந்துள்ள வளமான பகுதியைச் சூல் ஒட்டு (placenta) என்று கூறுவர். சூலகத்தில் சூல்கள் அமைந்துள்ள முறைக்குச் சூலமைவு (placentation) என்று பெயர். சூல் இலைகள் சூலறைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்துச் சூல் அமைவு மாறுதலடையலாம். விளிம்பொட்டு முறை (marginal placentation). பொதுவாக ஒரு சூலிலை கொண்ட மலர்களில், சூல்கள் கீழ் வடுவை அடுத்துள்ள சூலமைவில் வரிசையாக அமைந்திருப்பதைக் காணலாம். எ-டு. அவரைக் குடும்பம். அச்சொட்டு முறை (axial placentation). சூலகம் பல சூலிலைகள் கொண்ட நிலையில், சூல்கள் சூல் பையின் நடுவே அமைந்திருக்கும். எ-டு. கத்திரி, தக்காளி, வெங்காயம். புற ஒட்டு முறை (parietal placentation). இவ்வகையைப் பேராகார்பஸ் சூல் பையில் காணலாம். பல சூலிலைகளாலான ஒரு சூலறை மட்டும் கொண்ட சூல் பைகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சூலமைவுத் தொகுப்புகள் சூல் பையின் புறத்தே அமைந்திருக்கும். எ-டு. கடுகு, வெள்ளரி, விளா, கீழ் ஒட்டு முறை (basal). ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூல்கள், சூல் பையின் அடியிலுள்ள சூலமைவில் அமைந்திருக்கும். எ-டு. சூரியகாந்தி, நெல். மேல் ஒட்டு முறை (pendulous). ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூல்கள், சூல் பையின் மேற் பகுதியிலுள்ள சூலமைவிலிருந்து தொங்கு நிலையிலுள்ளதைக் காணலாம். எ-டு. கொத்துமல்லி, ஆமணக்கு, தனித்த மைய ஒட்டு முறை (free central). சூல் பையினுள், சூலமைவு உருண்டையாகக் காணப் படும். அது சூல் பையின் மேற் பகுதி அல்லது கீழ்ப் பகுதியுடன் மட்டுமே இணைந்திருக்கும். இந்த சூலமைவு மேற்பரப்பில் சூல்கள் காணப்படும். எ-டு. காரனேஷன் (carnation). மேல் போக்கு முறை (superficial), அல்லி மலரின் சூல் பை பல அறைகள் கொண்டது. இதில் சூல்கள் தடுப்புச் சுவர்களிலும், வெளிச் சுவரை அடுத்தும் இருப்பதைக் காணலாம். —தி. ஸ்ரீகணேசன் சூலிடல் பிட்யூட்டரி சுரப்பியால் உண்டாக்கப்படும் செனிப்பக ஹார்மோன்கள் சூலகங்களில் பெருமளவு மாற்றங்களைத் தோற்றுவிக்கும். இவை குமிழ்ப் பை முதிர்ச்சி, குமிழ்ப் பையின் நிலை, முதிர்ந்த குமிழ்ப் பையின் வெடிப்பு (முட்டை வெளியாகும் நிலை) கார்பஸ்லூட்டியம் உருவாகும் நிலை என மூன்றாகப் பிரிக்கப் படுகின்றன. குமிழ்ப் பை முதிர்ச்சி. புறத் தோல் (epithelial) செல்களின் அடுக்கால் போர்த்தப்பட்ட ஒரு முதிரா அண்டச் செல் முதிராக் குமிழ்ப் பையில் உள்ளது. இதன் வெளிப் புறம் இணைப்புத் திசுவால் சூழப் பட்டுள்ளது, குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலும், சூல் பையுள் இருக்கும் கருவின் வளர்ச்சியிலும், முதிராக் குமிழ்ப் பைகள் உருவாகின்றன. முதிராக் குமிழ்ப் பைகள், எண்ணிக்கையில் 400,000—500,000 வரை இருக்கும். குழந்தை. பருவ நிலை அடைந்தவுடன் 35,000—40,000 வரை குமிழ்கள் தொடர்ந்து வளர்கின்றன. ஏனையவை சிதைந்து விடுகின்றன. முதிராக் குமிழ்ப் பைகளில் 450—500 மட்டும் முதிர்ச்சியடையும். ஏனையவை, சூம்பி விடுகின்றன. முதிர்வதற்கு முன்பே, சிதைவுறும் சூலகக் குமிழ்ப் பைகளையே சூம்பி விடுபவை என்று ஸ்வாவ்யான்ஸ்கி என்பார் குறிப்பிட்டார். அண்டச் செல்லும் செதில் அடுக்கும் நசிந்து விட, குமிழ்ப் பையில் இணைப்புத் திசு தோன்றும். மாத விடாய் வட்டத்தின் முதல் அரைப் பகுதியிலேயே, 28 நாள் வட்டத்தில் 14 ஆம் நாளில் (அல்லது 21 நாள் வட்டத்தில் 10—11 நாள்களில்) குமிழ்ப் பை முதிர்ச்சியடைகிறது. இந்நிலையில், இதன் ஏனைய பகுதிகளான அண்டச் செல் செதில் அடுக்கு, இணைப்புத் திசு உறை ஆகியவை மிகுந்த மாற்றம் அடைகின்றன. அண்டச் செல் 5—6 மடங்கு அதிகரிக்கிறது. அதன் பரப்பில், பளிங்கு போன்ற உறை தோன்றுகிறது. அதன் புரோட்டோபிளாசத்தில் சிக்கலான மாற்றங்கள் நிகழ்கின்றன. குமிழ்ப் பை முதிர்ச்சியடைவதற்கு முன்பு. இரண்டு நிலையில் பகுப்புத் தோன்றுகிறது. முதல் பகுப்பில், இரண்டு சமமில்லாத செல்கள் உண்டாகின்றன. சிறிய செல் அகற்றப் படுகிறது. பெரிய செல் மீண்டும் பகுப்படைகிறது. அப்போது, பாதி குரோமோசோம்கள் ஒதுக்கப்படுகின்றன. இரண்டாம் பகுப்பிற்குப் பிறகு, முட்டை முதிர்ச்சியடைந்து, பொலிவடைய ஆயத்தமாக உள்ளது. முதிர்ச்சி அடையும் போது, குமிழ்ப் பை புறத் தோல் அடுக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செதில் உறையாக மாறுகிறது. முதலில் அண்டச் செல்லுக்கும், இணைப்புத் திசு உறைக்கும் இடையிலுள்ள வெற்றிடத்தைச் செதில் அடுக்குச் செல்கள் நிரப்புகின்றன. ஆனால், பின்னர் செல் திரட்சியில் ஒருங்கிணைந்து, பெரிய குழிவாக மாறுகின்றன. பெரிய குழிவில் உள்ள குமிழ்ப் பையில், ஒளி ஊடுருவும் நீர்மம் நிறைந்து காணப்படும். பெரிய குழிவினுள் நீர்மம் தேக்கமடையும் போது, செதில் செல்கள், முட்டையின் பக்கமாகவும், குமிழ் பைச் சுவரின் பக்கமாகவும் நகர்கின்றன. ஆர வளைவுள்ள மகுடத்தால் சூழப்பட்ட அண்டச் செதில் அடுக்குச் செல்களின் முகட்டின் ஓர் ஓரத்தில் அமைந்துள்ளது. குமிழ்ப் பை முதிர்ச்சியடைந்தவுடன், முகட்டிலிருந்து ஒரு முதிர்ந்த முட்டை வெளிப்பட்டு, குமிழ்ப் பை நீர்மத்துள் கிடக்கிறது. பெண் உடலில் சிக்கலான வினைகளை உண்டாக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், குமிழ்ப் பையால் சுரக்கப்படுகிறது. பருவமடைந்தவுடன் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், சூல் பை, யோனி, வெளிப் பிறப்புறுப்புகள் இரண்டாம் நிலைப் பாலினப் பண்புகள் ஆகியவற்றின் வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. வயது வந்த நிலையில், முதிர்ச்சியடையும் குமிழ்ப் பைகளால் சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜென்கள், கருவகத் தசைச் செல்கள் பெருக்கமடைவதைத் தூண்டுகின்றன. கருப்பையின் விறைப்புத் தன்மையையும், அதன் சுருக்கங்களைத் தூண்டும் பொருள்களின் கிளர்த்தலையும்,கூருணர்ச்சியையும் ஈஸ்ட்ரோஜென்கள் அதிகரிக்கின்றன. மார்பகச் சுரப்பிகளின் பணிகளையும், வளர்ச்சியையும் ஈஸ்ட்ரோஜென்கள் ஊக்குவிப்பதோடல்லாமல், பாலுணர்ச்சியையும் செறிவடையச் செய்கின்றன. குமிழ்ப் பை முதிரும் போது, அதன் இணைப்புத் திசுப் படலம் இரண்டு உறைகளாக மாறுகிறது. அவை உள்ளுறை, வெளிப் புற நார்ப் பொருள் ஆகியவையாகும். முட்டை வெளிப்படல். கிராஃப் நுண் குமிழ் உடைபட்டு, முதிர்ந்த பொலிவுறாத முட்டை வெளிப்படுகிறது. ஆர வளைவு கொண்ட மகுடத்தில் சூழப்பட்ட முட்டை, குமிழ் நீர்மத்துடன் உதரவுறைக் குழிவினுட் சென்று கருவகக் குழலினுள் நுழைகிறது. 28 நாள் வட்டத்தில் 14—15ஆம் நாளில் முட்டை வெளிப் படுகிறது. மாத விடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்து கணக்கெடுக்க வேண்டும். (21 நாள் மாத விடாய் வட்டத்தில் விரைவிலேயே நிகழ்கிறது). பொலிவடைய இதுவே, மிகவும் பொருத்தமான காலமாகும். —அ. கதிரேசன் சூலுறுதல் ஒரு விந்தணுவும், ஒரு முட்டையும் செல்லாக ஒருங்கிணைவதே குலுறுதல் (fertilisation) ஆகும். இதிலிருந்து, ஒரு புதிய உயிரினம் உருவாகிறது. முட்டையும், விந்தணுவும் முதிர்ச்சியடைவது ஒரு சிக்கலான நிகழ்வாகும். இப்போது, இரண்டு செல்களின் உட்கருவிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியாகும். சூலுற்றபின் உருவாகும் ஒரு புதிய செல்லின் உட்கருவில், குரோமோசோம்கள் முழுமையாக உள்ளன. விந்தணுத் தோற்றம். ஆண் பால் சுரப்பிகளின் வளைந்து, நெளிந்த விந்தணு நாளங்களில் விந்தணுக்கள் தோன்றுகின்றன. விந்தணுவிற்கு ஒரு தலை, கழுத்து, நீண்ட மெல்லிய வால் ஆகியவை உண்டு. சைட்டோபிளாசத்தின் ஒரு மெல்லிய அடுக்கால் சூழப்பட்ட விந்தின் உட்கருவே, அதன் தலையாகும். சைட்டோபிளாசமே கழுத்தாகவும், வாலாகவும் வளர்கிறது. ஒரு விந்தணுவின் அசையும் தன்மை வாலின் அசைவுகளைப் பொறுத்துள்ளது. புராஸ்டேட் நீர்மத்துடனும், விந்தணுக் குமிழ்களின் சுரப்புடனும் கலந்த பின்னர், விந்தணுவிற்கு நகரும் ஆற்றல் கிடைக்கிறது. விந்தணு, புராஸ்டேட், விந்துக் குமிழ்களின் சுரப்பு ஆகியவற்றின் கலவையே விந்து நீர் ஆகும். புணர்ச்சியின் போது, 5—8 மி.லி. விந்து, யோனியினுள் உந்திச் செலுத்தப்படுகிறது. இதில் 200—500 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுகின்றன. சூல் பையின் கழுத்துத் துருத்திக் கொண்டிருக்கும் பின் புற வளைவில் விந்து தேங்கிக் கிடக்கிறது. பின் புற வளைவில் தேங்கியுள்ள விந்தில், உட்கழுத்துக் கால்வாய் அமுங்கிக் கிடக்கிறது. சூலடைவதற்கான சூழ்நிலை இதன் மூலம் கிடைக்கிறது. புணர் கிளர்ச்சியில் சூல் பைத் தசைகள் சுருங்குவதால், கழுத்தின் புறத் துளை சிறிதே திறக்கிறது. புணர்ச்சியின் போது, பின் புற வளைவில் செலுத்தப் பட்ட விந்து கருப்பைக் கழுத்தின் சிலேட்டுமப் பகுதி துருத்திக் கொண்டுள்ளது. புணர்ச்சியின் பின்னர், விந்தணுவுடன் சிலேட்டுமப் பகுதி, சூல் பைக் கழுத்தினுள் இழுக்கப் படுகிறது. எனினும், விந்தணு சூல் பையினுள் ஊடுருவிச் செல்வதற்கான முக்கிய நிலை, விந்தணுவின் நகரும் தன்மையேயாகும். யோனி நீர்மம் அமில நிலையில் உள்ளது. விந்தணு உட்செல்லும் சூல் பையின் கழுத்து கார நிலையில் உள்ளது. இது சூலடைவதற்கு ஏற்ப உள்ளது. சூல் பைக் கருவகக் குழல்களின் காரண நிலை, விந்தணுவின் நகரும் ஆற்றலையும், சூலுறும் சில நாள் சுளுக்குப் பேணுகிறது. ஒரு நிமிடத்திற்கு 3—3.5 மி.மி. வேகத்தில் விந்தணு உட்செல்கிறது. 60—90 நிமிடங்களில் விந்தணுக்கள் சூல் பைக் குழிவினுள் காணப்படுகின்றன. இரண்டு—மூன்று மணி நேரங்களில் கருவகக் குழல்களை அடைந்து, முட்டையைச் சந்திக்கின்றன. முட்டை தானாக நகர முடியாது. முதிர்ந்த குமிழ்ப் பை வெடித்தவுடன், ஆர வட்டம் கொண்ட மகுடத்துடன் கூடிய முட்டை, வெளிப்படும் நீர்மத்தால் வயிற்றறையினுள் தள்ளப்பட்ட பின்னர்க் கருவகக் குழலை அடைகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இழைகளின் அசைவாலும், குழலின் இயக்கத்தாலும் உண்டாகும் நீர்ம ஓட்டத்தில் முட்டை சிக்குண்டு, அடித் தளத்திலிருந்து, கருவகக் குழலின் சூல் பை ஓரத்தை அடைகிறது. முட்டை வெளிப்படும் போது, நிகழும் வயிற்றுத் தசைகளின் அமுக்க ஆற்றலால், முட்டை, குழல் நோக்கித் தள்ளப்படுகிறது. பல மில்லியன் விந்தணுக்கள், குழலின் உட்பகுதிக்குச் சென்று முட்டையைச் சந்திக்கின்றன. முட்டை- யின் பரப்பில் உள்ள ஒரு கழலையை ஊடுருவிச் சில விந்தணுக்கள் முட்டையை அடைகின்றன. ஒளி ஊடுருவு படலத்தைச் சில ஊடுருவிச் சென்று, முட்டையின் புரோடோபிளாசத்தை அடைகின்றன. விந்தணுவால் உற்பத்தி செய்யப்படும் நொதியின் மூலம் ஊடுருவிச் செல்கின்றன. இந்த நொதி, முட்டையின் ஒளி புகு படலத்தையும், டரிப்சின் நொதியையும் கரைக்கும். பிற விந்தணுக்கள் அழிந்து, சிதைந்து, குழல் சிலேட்டுமத்தில் உறிஞ்சப் படுகின்றன. முட்டையை அடையும் ஒரு சில விந்தணுக்களில் ஒன்றே ஒன்றுதான் முட்டையைக் கருவுறச் செய்கிறது. அதன் உட்கரு, முட்டையின் உட்கருவை நோக்கிச் சென்று இரண்டறக் கலக்கிறது. சூலுற்ற முட்டையின் பகுப்பும், சூல் பையினுள் செல்லுதலும். சூலுற்ற முட்டையில் முனைப்பான ஆக்கச் சிதை மாற்றம் நிகழ்கிறது. உட்கருக்களின் இணைப்புடன் பகுப்பு நிகழ்வும் தொடங்குகிறது. கேரியோகைனடிக் பகுப்பு மூலம், இரண்டு குழந்தைச் செல்கள் (blastomers) தோன்றுகின்றன. இவை மீண்டும் பகுப்படைகின்றன. இச்செல்களின் விரைவான பகுப்பால், செல் திரள் தோன்றுகிறது. இது முசுக்கட்டை போன்ற தோற்றமளிக்கின்றது. கருவுற்றதைத் தொடர்ந்து, 8—10 நாளில் பகுப்படையும் முட்டை, குழல் வழியாகச் சென்று, சூல் பைக் குழிவை அடைகிறது. குழல் தசையின் லய இயக்கத்தால், முட்டை கடத்தப்படுகிறது. இழையின் அதிர்வுகள் சிறப்பு வாய்ந்தவையல்ல. நிலை பெறல். பகுப்பைத் தொடர்ந்து, சூலுற்ற முட்டையில், பண்பு சார்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. சூல் குழலின் உள்ளே இருக்கும் போது, கருவுற்ற முட்டை, அதன் ஒளி புகு உறையிலிருந்து பிரிக்கப்படுகிறது. முட்டை, சூல் பையினுள் நுழைந்தவுடன், செல் திரளின் வெளி அடுக்கு வளப்ப மூலத் திசுவாகக் (traphoblastic tissue) கருவகத் தசையின் (endometrium) மேலார்ந்த அடுக்கில் முட்டை அமைந்தவுடன் (பொதுவாக, குழல்களின் மட்டத்தில் முன் புற அல்லது பின் புறச் சுவரில்) அதன் வளப்ப மூலத் திசு புறத் தோல் சிலேட்டுமம், சுரப்பிகள், அடுக்குச் செல்கள், சூல் பைச் சிலேட்டும நாளங்கள் ஆகியவற்றைக் கரைத்து விடும். கருவகத் தசையின் பணி சார்ந்த அடுக்கில் படிப்படியாகப் பொதிந்து விடுகிறது. சிலேட்டுமத்தில் முழுமையாக முட்டை பதிந்தவுடன், உள் நுழைந்த இடம் மூடப் படுகிறது. இத்துடன் நிலை பெறும் நிகழ்வு முடிகிறது. இப்போது கருவகத் தசை கருவுக்குத் தேவையான ஊட்டப் பொருள்களைச் சுரக்கிறது. வளப்ப மூலத்தால் சூல் பைச் சிலேட்டுமம் கரைக்கப் பட்டவுடன், நிலை பெற்ற முட்டையைச் சுற்றியுள்ள திசுக்கள் சிதைவடைந்து, கருவுக்கு ஊட்டம் அளிக்கின்றன. புரதம், மாவுப் பொருள். கொழுப்பு, வைட்டமின், உப்பு மற்றும் கருவின் ஊட்டத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான பல பொருள்கள் காணப்படுகின்றன. கருப் படலங்களின் வளர்ச்சி. நிலை பெற்றவுடன், முட்டை விரைவாக வளருகிறது. வளப்ப மூலத்தின் மேல், புடைப்பு உறிஞ்சிகள் உண்டாகின்றன. இந்நிலையில் அவற்றிற்குக் குருதி நாளங்கள் இல்லை. அவை, முதிர்ச்சியடையா விரலிகளாகும். விரலிகளுக்கும் கருவகத் தசைக்கும் இடையேயான திசுக்கள் சிதைவடைகின்றன; தாய்ப் பகுதிக் குருதி வரத் தொடங்கும். விரலிக்கும், கருவகத் தசைக்கும் இடையேயுள்ள இடம் விரலியிடை இடம் எனப்படும். இது முட்டையை முழுமையாகச் சூழ்ந்துள்ளது. பின்பு, விரலியிடை இடம் சூல் ஒட்டுப் பகுதியில் மட்டும் காணப்படும். இது இரண்டாந்தர விரலியிடை இடம் எனப்படுகிறது. வளப்ப மூலத்துடன் கருவின் உட்செல்களும் வளர்ச்சியடைகின்றன. முட்டை, குழலினுள் இருக்கும் போது, உட்செல் வளர்ச்சி தொடங்குகிறது. உட்செல் நடுவே நீர்மம் நிறைந்த குழிவுகள் தோன்றுகின்றன. பின்னர், அவை ஒருங்கிணைந்து எக்சோசீலோமாகும். முட்டை, பிளாஸ்டோசிஸ்டாக மாறுகிறது. பிளாஸ்டோசிஸ்ட் குழிவைச் சுற்றியுள்ள செல்கள், மீசோபிளாஸ்டாக மாறுகின்றன. பிளாஸ்டோசிஸ்டின் ஒரு பகுதியில் செல்கள் திரள்கின்றன. இந்தத் திரட்சியில், எக்டோபிளாஸ்ட், எண்டோபிளாஸ்ட் எனப்படும் இரண்டு நுண் கணுக்கள் தோன்றுகின்றன. இந்த நுண் கணுக்களின் நடுவே குழிவுகள் விரைவில் தோன்றுகின்றன. எக்டோபிளாஸ்ட், எக்டோபிளாஸ்ட் குமிழாகவும், எண்டோபிளாஸ்ட், எண்டோபிளாஸ்ட் குமிழாகவும் மாறுகின்றன. எக்டோபிளாஸ்ட் குமிழ், ஒரு காம்பு மூலம், வளப்ப மூலத்துடன் இணைக்கப் படுகிறது. இது பனிக் குட நீர்மம் கொண்ட குழிவாக மாறுகிறது. எண்டோபிளாஸ்ட் குமிழ், மைய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பின்னர், அது. கரு இழைப் பையாக மாறுகிறது. பனிக் குடத்திற்கும், கரு இழைப் பைக்கும் இடையே அமைந்துள்ள எக்டோபிளாஸ்ட், எண்டோபிளாஸ்ட் செல்கள் கருவாக மாறுகின்றன. எக்சோசீலோம் குழிவின் அளவு பெரிதாகிறது. மீசென்சைம் செல்கள், கோரியான், அம்னியான் ஆகியன கரு இழைப் பையை நோக்கித் தள்ளப் படுகின்றன. இதன் இடையே கரு காணப்படுகிறது. குமிழ்களின் சுவர்களும், கோரியானும் இரண்டு மடிப்புக் கொண்டுள்ளன. கருவில், வெளி உறை (ectoderm), நடு உறை (mesoderm), உள் உறை (endoterm) என்னும் மூன்று அடுக்குகள் காணப் படுகின்றன. இவ்வடுக்குகளிலிருந்து, கருவின் அனைத்துத் திசுக்களும்,உறுப்புகளும் உண்டாகின்றன. பையினுள், ஒரு தெளிந்த நீர்மம் தேக்கமடைவதால், பனிக் குடம் விரைவாக அளவில் பெரிதாகிறது. அப்போது, அதன் சுவர் விரலிப் படலப் பக்கமாகச் சென்று, அத்துடன் ஒட்டிக் கொள்கிறது. பிளாஸ்டோசிஸ்ட் குழிவு மறைந்து விடுகிறது. பனிக் குடத்துக்கும் கரு இழைப்பைக்கும் இடையே இருந்த கரு, பனிக் குட குழியினுள் துளைத்துச் சென்று, படிப் படியாக முழுமையாகப் பொதிந்து விடுகிறது. இக்குழிவு, பெரிதானவுடன் கரு இழைப்பை குறைந்து சிதைந்து விடுகிறது. படலங்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து, கருவின் பின் குடலிலிருந்து அலண்டாய்ஸ் உருவாகிறது. காம்பு வழியாக அலண்டாய்ஸ், விரலிப் படலத்திற்குச் செல்கிறது. இந்தக் காம்பு, பனிக் குட குமிழை வளப்ப மூலத்துடன் இணைக்கிறது. கரு உடலிலிருந்து விரலிக் கோரியான் வரையிலான பாதையிலுள்ள நாளங்களின் மீது அலண்டாய்ஸ் காணப்படுகிறது. கோரியான் வரையிலான பாதையிலுள்ள ஒவ்வொரு விரலிக்குள்ளும் கரு நாளங்கள் வளர்கின்றன. இந்தக் கட்டத்தில் கருவின் அலண்டாய்ஸ் குருதிச் சுழற்சி தொடங்குகிறது. கரு வளர்ச்சியின் தொடக்கக் கட்டங்கள் முடிவு பெற்றவுடன், கருவைச் சுற்றிப் பனிக் குட நீர்மம் காணப்படுகிறது. உதிரும் படலம், கோரியான், பனிக் குடம் என்ற மூன்று படலங்களும் கருவைச் சுற்றிக் காணப்படுகின்றன. உதிரும் படலம் தாயிடமிருந்து பெறப் படுகிறது. கோரியானும், பனிக் குடமும், கருவைச் சார்ந்தவையாகும். சூலின் போது மாறுதலடையும் கருவகத் தசையின் பணி சார்ந்த படலமே உதிரும் படலமாகும். குழந்தை பிறந்த பின்னர், சூல் ஒட்டுடனும், பிற படலங்களுடனும் உதிரும் படலம் சூல் பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. அதனால்தான், அது உதிரும் படலம் எனப்படுகிறது. நிலை பெறும் போது, சூல் பையின் சிலேட்டுமம், சுரப்புக் கட்டத்தில் இருக்கிறது. சுரப்பிகள், சுரப்புகளால் நிறைந்துள்ளன; உட்பிழம்புச் செல்கள் உருண்டையாகிக் கிளைக்கோஜனைக் கொண்டுள்ளன. கருவகத் தசையின் பணி சார்ந்த அடுக்கு, பஞ்சு அடுக்காகவும், நெருக்கமான அடுக்காகவும் மாறுகிறது. பஞ்சு அடுக்கில் சுரப்பிகளே காணப்படுகின்றன. கடின அடுக்கில் வட்டமான உட்பிழம்புச் செல்கள் காணப் படுகின்றன. இவற்றிற்கிடையே, சுரப்பிகளின் கழிவாய் நாளங்கள் செல்கின்றன. சூல், நிலை பெற்றவுடன் கருவகத் தசை பருமனடைகிறது; பின்னர், உப்புசமடைகிறது. சுரப்பிகளில் நீர்மங்கள் காணப்படுகின்றன; உட்பிழம்புச் செல்கள் பெரிதாகின்றன; அவற்றிலுள்ள கிளைக்கோஜனின் அளவு அதிகரிக்கிறது. இம்மாறுபட்ட உட்பிழம்புச் செல்கள் சூலின் உதிரும் செல்கள் எனப்படுகின்றன. நெருக்கமான அடுக்கில் பொதிந்துள்ள கரு, உதிரும் படலத்தால் சூழப்பட்டுள்ளது. உதிரும். படலம், கருவின் எந்தப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து, அதைக் கீழ்க் காணுமாறு பிரிக்கின்றனர். அவை, கருப்பைக் குழிவின் பக்கமாக உள்ள கருவின் மேலுள்ள உதிர் படல் உறை, கருப்பைச் சுவருக்கும் கருவுக்கும் இடையேயுள்ள அடிப்படை உதிர் உறைப் படலம், கரு இருக்கும் இடத்தைத் தவிர ஏனைய பகுதியில் உள்ள வெளிப்புற உதிர் படலம் ஆகியன. கரு முதிர்ச்சியடையும் போது, உறை மற்றும் வெளிப்புற உதிர் படலம் இழுக்கப்பட்டு, மெல்லியதாகி ஒன்றையொன்று ஒட்டியுள்ளன. 4 மாத வயதுடைய மனிதக் கரு, சூல் பை முழுதும் அடைந்துள்ளது. உதிர் படலத்தின் இரு பகுதிகள் ஒன்றாகி, மிகவும் மெல்லியதாகின்றன. அப்போது, அடிப்படை உதிர் படலம் பருமனடைந்து, அதில் பல குருதி நாளங்கள் காணப்படுகின்றன. சிலேட்டுமப் படலத்தின் இப்பகுதி தாயின் சூல் ஒட்டாக மாறுகிறது. வளப்ப மூலத்திலிருந்தும், மீசோபிளாஸ்டிலிருந்தும் கோரியான் உருவாகிறது. முதல் தர விரலிகளில் குருதி நாளங்கள் காணப்படுவதில்லை. ஆனால், சூலின் முதல் மாத இறுதியில் அலண்டாய்சிலிருந்து, குருதி நாளங்கள் வருகின்றன. முதலில் விரலிகள். சுருவின் முழுப் பரப்பையும் மூடுகின்றன. சூலின் இரண்டாம் மாதத்தில் உறை உதிர் படலத்தின் அருகேயுள்ள கோரியான் பகுதி விரலிகள் சூம்புகின்றன. 3 ஆம் மாதக் கருவில் கோரியானின் இப்பகுதியிலிருந்து விரலிகள் மறைந்து, அது மிகவும் மழமழப்படைகிறது. பனிக் குடம். பனிக் குட நீர்மத்தால் சூழப் பட்ட கருவைக் கொண்ட படலப் பையே பனிக் குடம் எனப்படுகிறது. கோரியாலை ஒட்டியே பனிக் குடமும் இருக்கிறது. சூல் ஓட்டின் உட்பரப்பை ஒட்டி அமைந்து, கொப்பூழ்க் குமிழுக்குச் சென்று, அதை மூடுகிறது. கொப்பூழ்ப் பகுதி கருவின் வெளி உறைகளுடன் ஒட்டியுள்ளது. அம்னியான் ஒரு மெல்லிய படலமாகும். மீசென்கைமாவால் உருவான இணைப்புத் திசுச் செல்களும் புறத் தோலும் இதில் காணப்படுகின்றன. கருவுக்கு மிக மிக அருகில் உள்ள மிகவும் உள்ளேயுள்ள படலமான பனிக் குடத்தை அடுத்துக் கோரியானும், இறுதியாக உதிர் படலமும் காணப் படுகின்றன. பனிக் குட நீர்மம். பனிக் குடக் குழிவில் நீர்மம் காணப்படுகிறது. சூலின் இறுதியில், இதன் அளவு 1–1.5 லிட்டராகும். பனிக் குடப் புறத் தோலிலிருந்து சுரப்பு மூலம் இந்நீர்மம் உருவாகிறது. தாயின் குருதி நாளங்களிலிருந்து கசியும் குருதியிலிருந்தும், கருவின் நீரகங்கள் பணியாற்றுவதன் விளைவாலும், இந்நீர்மத்தின் ஒரு பகுதி உண்டாகிறது. இந்நீர்மத்தில், புறத் தோல் உதிர்ந்த பகுதிகளும், தோலின் சீபச் சுரப்பிகளின் விளைபொருள்களும், கரு உடலின் நுண்ணிய மயிரும் காணப்படுகின்றன. பனிக் குட நீர்மத்தில் புரதம், உப்பு, யூரியா, கொழுப்பு, சர்க்கரை, ஹார்மோன்கள், நுண் பொருள்கள் முதலியன காணப்படுகின்றன. கரு வளரவும், கருப்பையில் அதன் அசைவு நிகழவும் ஏற்ற சூழ்நிலையைப் பனிக் குட நீர்மம் உண்டாக்குகிறது. இந்நீர்மம் மிகவும் குறைவாக உள்ளமையால், கருவிற்குப் பிறவி ஊனங்கள் உண்டாகின்றன. கருவின் ஆக்கச் சிதை மாற்றத்தில் பனிக் குட நீர்மம் பங்கு கொள்கிறது. மென்மையான கருவை ஒவ்வாமையிலிருந்து காக்கிறது. கரு உடலுக்கும், கருப் பைச் சுவருக்கும் இடையே, கொப்பூழ்க் கொடி சிக்கி நசுங்கி விடுவதைப் பனிக் குட நீர்மம் தடை செய்கிறது. கருப் படலத்தில் காணப்படும் பனிக் குட நீர்மம், கருப் பைக் கழுத்துத் துளை இயல்பாக விரிவடைவதை ஊக்குவிக்கிறது. —மு.கி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. H.G.Dixon. Obstetrics and Gynaecology, John Wright and Sons, Bristol, 1980. சூழ்நிலை ஆய்வு கருவி, எந்திரம் போன்றவை செயல்படப் போகும் சூழ்நிலையை ஆய்வுக் கூடங்களில் செயற்கையாக உருவாக்கி, அச்சூழலில் கருவியின் செயல்பாட்டை ஆய்வு செய்தல் சூழ்நிலை ஆய்வு (environment test) எனப்படுகிறது. எத்தகைய கருவியாக இருந்தாலும், ஏதேனும் ஒரு விதத்தில் சூழ்நிலையால் பாதிக்கப் படவே செய்யும், எனவே, எக்கருவியும் வடிவமைக்கப் படும் போதே, அது செயல் படப் போகும் சூழலில் ஆய்வு செய்யப்பட்டு, வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படும். காட்டாக, விண் கலங்களில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு, விண்வெளி போன்ற சூழலை ஆய்வகத்தில் உருவாக்கி, அச் சூழலில் மனிதன் உயிர் வாழ முடியுமா என்பதை அறிய வேண்டும். பொதுவாக ஒரு கருவி செயல்படப் போகும் சூழ்நிலையை முழுமையாக ஆய்வகத்தில் உருவாக்குதல் எளிதன்று என்பதால், சூழலில் உருவாகக் கூடிய பல்வேறு மிகை நிலைகள் (environmental extremes) தனித் தனியே உருவாக்கப்படுகின்றன. இத்தகைய மிகை நிலைகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது பலவற்றின் கூட்டான பாதிப்பில் கருவி ஆய்வு செய்யப் படுகிறது. இத்தகைய ஆய்வுகளில், கருவி நிறைவாகச் செயல்பட்டால், உண்மைச் சூழலிலும் அது சிறப்பாக இயங்கும் எனக் கருதலாம். வெப்ப நிலை ஆய்வுகள். இந்த ஆய்வுகள் சுற்றுப் புறத்தின் பாதிப்பிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட தனியறைகளில் (sealed chamber) நிகழ்த்தப் படுகின்றன. தனியறைகளின் வெப்ப நிலையைக் குளிர்வூட்டிகளின் மூலம் ஓரளவு குறைக்கவும் இயலும்; மின் சூடேற்றிகளின் மூலம் வெப்ப நிலையை உயர்த்தவும் முடியும். கருவியின் பயன்பாட்டைப் பொறுத்து, பல்வேறு வெப்ப நிலை அளவுகள் ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, இராணுவத் தளவாடங்களை -60°–165°F வரை ஆய்ந்தால் போதும். ஆனால், விண்வெளி கருவிகளானால், 0°F இலிருந்து பல்லாயிரம் பாகை அளவு வரை ஆய்வது இன்றியமையாததாகிறது. ஆய்வுக்குப் பயன்படும் தனியறைகள் உயர் வெப்ப நிலையை நீண்ட கால அளவிற்கு உருவாக்கி வைத்திருக்கக் கூடியவையாக இருப்பதோடு, தீர்மானிக்கப் படுகிற விகிதத்தில், நேரம் செல்லச் செல்ல வெப்ப நிலையைச் சிறிது சிறிதாகக் கூட்டவோ, குறைக்கவோ வல்லவையாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செயல்பாட்டுச் சூழலில் (actual environment) உருவாகக் கூடிய வெப்ப நிலை மாற்றங்கள் செயற்கையாக உருவாக்கப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப் போகும் ஒரு கருவியை ஆய்வு செய்வதாகக் கொள்ளலாம். உண்மைச் சூழலில், அக்கருவியின் மீது வைகறையில் இளம் வெப்பம் இருக்கும். பிறகு, நேரம் செல்லச் செல்ல வெயில் ஏறுவதால், வெப்பம் சீராக உயர்ந்து, நண்பகலில் உச்ச நிலை அடையும். பின்னர், சீராகக் குறையும். சில சமயம், இரவு வேளையில் குளிராகவும் இருக்கலாம். இதே சூழலை ஆய்வகத்தில் உருவாக்க, தனியறையின் வெப்பக் கட்டுப்பாட்டுக் கருவியில் முதலில் இருக்க வேண்டிய வெப்ப நிலை, ஒரு மணி நேரத்திற்கு எத்தனைப் பாகை வெப்பம் ஊட்டப் பட வேண்டும், உச்ச வெப்ப நிலையின் அளவு பின்னர், எந்த விகிதத்தில் வெப்பம் குறைய வேண்டும். இரவு நேரக் குளிர்ச்சியை உருவாக்கக் குளிர்வூட்டி எப்போது செயல்பட வேண்டும் போன்ற அனைத்துத் தசுவல்களும், முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. பின்னர், செயல்பாட்டுச் சூழல் போன்ற மாதிரிச் சூழல் தனியறையில் தானாகவே உருவாக்கப்பட்டு விடும். இச்சூழலில் கருவி ஆய்வு செய்யப்படும். அழுத்த ஆய்வுகள். பொதுவாக அனைத்துக் கருவிகளும், கடல் மட்ட அழுத்தத்திலேயே செயல் படுகின்றன. மிகு உயரத்தில் பயன்படும் கருவிகள் குறைந்த அழுத்தத்திலும், விண்வெளிக் கருவிகள் ஏறக் குறைய, அழுத்தமே இல்லாத நிலையிலும் செயல்படுகின்றன. மேலும், சில கருவிகள் சுரங்கம் மற்றும் கடலுக்கு அடியில் பயன்படும் போது, மிகை அழுத்தத்தில் செயல் பட வேண்டியுள்ளது. எனவே, வெப்ப நிலை ஆய்வுக்குப் பயன்படும் அதே தனியறையில் அழுத்த ஏற்றிகளும், வெற்றிடம் உருவாக்கும் கருவியும் பொருத்தப் படுகின்றன. இவற்றின் மூலம், முன்னரே தீர்மானித்த அழுத்தத்தை உயர்த்தவும், குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். பதிவு கருவிகளின் உதவியால் அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட மாற்றங்களைப் பதிவு செய்யலாம். ஈரப் பதம், மணல், காளான் ஆய்வுகள். பொதுவாக, அனைத்துக் கருவிகளும் ஈரப் பதமான சூழல், உப்பு நீர்த் தாரை, காற்றினால் வாரி அடிக்கப் படும் மணல் ஆகியவற்றால் பாதிக்கப் படுகின்றன. இவற்றோடு, ஈரப் பதம் உயர்ந்தால், சில வகைக் காளான்கள் முளைக்கும் வாய்ப்பு உண்டு. பல வகை மின் கருவிகள் இக்காளான்களால் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. வெப்ப நிலை ஆய்வுகளுக்குப் பயன்படும் அதே தனியறையில் காற்றின் ஈரப் பதத்தைக் கூட்டவும், குறைக்கவும் வல்ல கருவிகள் பொருத்தப்படுகின்றன. மணல் ஆய்வுக்கென்று மணலைப் பல்வேறு வேகத்தில் வாரி அடிக்கக் கூடிய கருவிகள் பயன்படுகின்றன. முடுக்கம் மற்றும் அதிர்வு ஆய்வுகள். பல்வேறு எந்திரங்களும், கருவிகளும் வேறுபடும் முடுக்கத்தாலும், பலவகை அதிர்வுகளாலும் பாதிக்கப்படுகின்றன. சான்றாக ஏவூர்தியின் கட்டுப்பாட்டுச் செலுத்தத்தின் போது, கருவிகள் உயர் முடுக்கத்தால் தாக்கப் படுகின்றன; மறு நுழைவின் (reentry) போது, மிகுதியான முடுக்கக் குறைவால் பாதிக்கப் படுகின்றன; ஏவுகணை, ஊக்கி (booster) போன்றவை பிரியும் போது, உயர் அதிர்ச்சிக்குள்ளாகின்றன. முடுக்க ஆய்வு, மைய விலக்குக் கருவி அல்லது நீள்பாதைக் கருவி மூலம் நிகழ்த்தப் படுகிறது. மைய விலக்குக் கருவியில் ஆய்வு செய்யப் பட வேண்டிய கருவி, கை போன்ற அமைப்பில் பொருத்தப் படுகிறது. இந்த அமைப்பு மிக வேகமாகச் சுழற்றப் படுகிறது. இதன் விளைவாகக் கருவியில் மைய விலக்கு முடுக்கம் ஏற்படுகிறது. சுழல் வேகத்தை மாற்றுவதன் மூலம், முடுக்கத்தின் அளவை மாற்றலாம். மையத்தில் சுழலும் இணைப்புகள் மூலம், கருவிகளுக்கான வெளிக் கொணரப் படுகிறது. கருவியின் மீது, முடுக்கத்தின் திசையை மாற்ற வேண்டுமானால், சுழலும் கரத்தின் சார்பில் ஆய்வுக் கருவியின் நிலையை மாற்றலாம். நீள் பாதைக் கருவியில், மிக நீண்ட தொலைவிற்கு நேராகவும், மேடு பள்ளமற்றதாகவும் இருப்புப் பாதை அமைக்கப் படுகிறது. இதன் மீது, நகர வல்ல ஊர்தி போன்ற அமைப்பே நீள் பாதைக் கருவி. இக்கருவி ஏவூர்திகளின் மூலம், மிக விரைவாக முடுக்கப் படலாம். இதன் மூலம், ஏவூர்திகள் சந்திக்கப் போகும் முடுக்கச் சூழலை எளிதில் உருவாக்கலாம். முடுக்கக் குறைவைக் காண்பதற்கு, இருப்புப் பாதையின் நடுவே நீண்டு கிடக்கும் பாத்திரம் போன்ற ஓர் அமைப்பில் நீர் நிரப்பப் படுகிறது. நகரும் ஊர்தியின் கீழ்ப் புறமாக ஒரு தகடு இந்த நீருக்குள் வருமாறு பொருத்தப் படுகிறது. இந்தத் தகட்டிற்கு நீரினால் ஏற்படுத்தப்படும் தடை மிக விரைவாக முடுக்கத்தைக் குறைத்து விடுகிறது. மின் முறையிலோ, மின் எந்திரவியல் முறையிலோ, கட்டுப்பாடாக அதிர்வுகளை உருவாக்க வல்ல கருவியின் மேல் ஆய்வுக்குரிய கருவி வைக்கப் படுகிறது. தேவையான அதிர்வுகள் உருவாக்கப்பட்ட நிலையில் கருவி ஆய்வு செய்யப்படுதல் அதிர்வு ஆய்வு எனப்படும். —வயி. அண்ணாமலை நூலோதி. Harold A. Rothbart. Mechanical Design and System Hand Book, c Graw-Hill Book Company, London, 1964. சூழ்நிலைப் பாதுகாப்பு ஒரு சூழ்நிலை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள ஆற்றலை இயலும் அளவுக்கு நன்முறையில் பயன் படுத்துவதே நிறைவான பாதுகாப்பாகும். சூழ்நிலைக் காரணிகளைப் பொறுத்தே, சூழ்நிலையின் பாதுகாப்பு அமைகிறது. பாதுகாப்புத் திட்டத்தில் நிலத்தின் இயற்கை வளங்கள், நீர், காட்டு விலங்குகள், தாவரங்கள், நில அமைப்பியல் (natural topography) ஆகியவை அடங்கும். இச்சூழ்நிலைக் காரணிகளை ஒருமைப்படுத்துவதில், சூழ்நிலையின் தத்துவங்களைப் பயன்படுத்துவதும் அடங்கும். நில அரிப்பு, நெருப்பு, வெள்ளம், நீர் தூய்மைக் கேடு அடைதல் (water pollution) ஆகியவற்றால், சூழ்நிலை பாழாவதை முறையாகக் கட்டுப்படுத்த வேண்டும். பாதுகாத்தல் மனப் பான்மையை (conservation attitude) மக்களிடம் உருவாக்க வேண்டும். சூழ்நிலைக் காரணிகளான நிலம், நீர், ஒளி, நெருப்பு, வளி மண்டலம் முதலியவற்றில் ஏற்படும் வேறுபாடுகள் சூழ்நிலையின் சமச் சீர்மையைப் பாதிக்கின்றன. காரணிகளில் ஏற்படும் வேறுபாடுகளைத் தகுந்த வழிகளில் களைவதால், சூழ்நிலையின் பாதுகாப்பை நன்முறையில் ஏற்படுத்தலாம். சூழ்நிலையிலுள்ள, வறண்ட நிலையைத் தாங்க வல்ல தாவரங்களைப் பயிர் செய்தல் போன்ற வழி முறைகளைக் கையாளுவதன் மூலம், பாலைவனங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தக்க ஊட்டச் சத்துகளை அளித்து, நைட்ரஜன் தேவையைக் குறைந்த அளவிற்குக் கொணர்தல், ஒரு பாசனத்திற்கும், மற்றொரு பாசனத்திற்கும் இடைப்பட்ட கால அளவை அதிகரித்துத் தாவரங்களை ஆழமாக வேர் விடச் செய்தல், விதைகளை நீர் அல்லது கால்சியம் குளோரைடு கரைசல் அல்லது பொட்டாசியம் பாஸ்ஃபேட் கரைசல் அல்லது குளோரோ கோலின் குளோரைடு (CCC) என்ற வளர்ச்சிப் பொருள் கரைசலில் 10–12 மணி நேரம் ஊற வைத்துப் பிறகு, நிழலில் உலர்த்தி விதைத்தல் போன்ற முறைகளால் தாவரங்களின் வறட்சி தாங்கும் திறன் அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் அறியப் பட்டுள்ளது. இம்முறைகளால், வறண்ட சூழ்நிலைகளில் தாவர வளர்ச்சியைச் சீரமைத்துத் தாவர இனங்களைப் பாதுகாக்கலாம். வறட்சியைத் தாங்கும் பல தகவமைப்புகளைப் பெற்றுள்ள தாவரங்களை வளர்த்து, தாவரச் சூழ் மண்டலங்களைக் காக்கலாம். நீராவிப் போக்கைக் குறைக்க தாவரங்கள், வறண்ட சூழ்நிலைக்கேற்றவாறு, தங்களின் இலைத் துளைகளைச் சுருக்கியும், அதிக சூரிய ஒளியைத் தவிர்த்தும் வளர்கின்றன. மெழுகு கரைசல், அப்சிசிக் அமிலம் போன்ற வளர்ச்சி கட்டுப்படுத்தும் பொருள்களை இலைகளின் மீது தெளிப்பதால், நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்தி, வறண்ட சூழ்நிலையிலும், தாவர இனங்கள் வளர வழி செய்யலாம். வெப்ப நிலைக் குறைவும், மிகையும் தாவரங்களுக்கு அழிவை ஏற்படுத்துவதால், அவற்றின் அழிவிலிருந்து தகுந்த முறைகளைக் கையாண்டு, தாவர சமூகத்தைப் பாதுகாக்க முடியும், உறை பனியின் அழிவிலிருந்து தாவரங்களைப் பாதுகாக்க, இரவில் புகை மண்டலங்களை உண்டாக்குதல், இரவில் நீர்ப் பாசனம் செய்தல், காலை வேளைகளில் வெப்பம் வெளிப்படா வண்ணம் செடிகளின் மீது நீரைத் தெளித்தல், குளிர் காற்றுப் பரவாத (cold air drainage) இடத்தைத் தேர்ந்தெடுத்தல் போன்ற வழிமுறைகளைக் கையாளலாம். அமில குணமற்ற, காற்றோட்டமான, ஈரமான அல்லது சற்றுச் சூடான மண் தாவர வளர்ச்சிக்கேற்றவாறு அமைகிறது. மட்குதல், உப்பாகுதல் போன்றவை நிகழக் காரணமான நுண்ணுயிர்கள் பெருக, மண்ணின் தன்மை தகுந்த முறையில் அமைய வேண்டும். சூழ்நிலைக் காரணிகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும், சத்துப் பொருள் உண்டாகும். வேதிச் சுழற்சித் தடைப்பட்டுக் காற்றோட்டக் குறைவால், மண்ணிலுள்ள தாவர நுண்ணுயிர்களின் வளர்ச்சி குறையும். மண்ணிலுள்ள உலோக அயனிகளை மழை நீர் அடித்துச் செல்லாதவாறு பாதுகாத்தால், மண் வளம் பெருகும். ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் அமிலக் காரத் தன்மையை உண்டாக்க வல்ல உப்புகள் உள்ளன. இந்தக் கழிவு நீர், ஆறு அல்லது ஓடைகளில் கலந்து, நிலங்களில் அமில–காரத் தன்மையை உண்டாக்கும். அமில–கார நிலங்களில், தாவரங்கள் சத்துப் பொருள்களை உறிஞ்ச இயலுவதில்லை. அமிலத் தன்மை உள்ள நிலத்தில், தகுந்த அளவு சுண்ணாம்புச் சத்தைச் சேர்த்து, காரத் தன்மை உள்ள நிலத்தில் ஜிப்சம் இட்டு, நீரை மிகுதியாகப் பாய்ச்சி, உப்புகளை அடித்துச் செல்லச் செய்து, நிலத்தின் வளத்தைப் பெருக்கி, மண் வளத்தைப் பாதுகாக்கலாம். தேவையான சத்தை அளிக்கக் கூடிய, அதே சமயத்தில், மண் தன்மையை மாற்றக் கூடிய செயற்கை உரங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்தி, நிலத்தின் வளத்தைப் பாதுகாக்கலாம். உப்புத் தன்மையைத் தாங்க வல்ல தாவரங்களை வளர்ப்பதன் மூலம், மண்ணின் தன்மை மாறி, பயிர் முளைக்க ஏற்றதாக மாற்றப் படுகிறது. உலகின் பல இடங்களில் உள்ள வளமிக்க பண்ணை நிலங்கள் தகுந்த மண் வளப் பாதுகாப்பு முறைகள் கையாளப் படாமையால், பயனற்ற தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. மண் அரிப்பினால், நில வளம் வீணாவது மனித இனத்திற்கு மிகவும் கேடு செய்யும். மண் வளப் பாதுகாப்பை மேம்படுத்தப் பல வகை முறைகள் கையாளப்படுகின்றன. தாவரங்களை நெருக்கிப் பயிர் செய்து, மண்ணில் இலை மட்குகளையும் (humus), ஊட்டச் சத்துகளையும் அதிகரிக்கலாம். நீர், காற்று மூலமாக ஏற்படும் மண் அரிப்பைத் தாவரங்கள் தடுக்கின்றன. நிலத்தின் மேல் மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, இயற்கை, செயற்கை உரங்களை நிலத்திற்கு இட வேண்டும். மேலும், சணப்பை போன்ற தாவரங்களை பயிர் செய்தும், தகுந்த பயிர்ச் சுழற்சி முறைகளைக் கையாண்டும், தகுந்த ஊடு பயிர்களை வளர்த்தும், நிலத்தை வளமாகப் பாதுகாக்கலாம். மலைச் சரிவுகளில் ஏற்படும் மண் அரிப்பைக் காடுகளை வளர்த்தும், புல்வெளிகளை ஏற்படுத்தியும் தடுக்கலாம். காற்றினால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்க, படர்ந்து வளரும் தாவரங்களையும், காற்றுத் தடைகளையும் அமைக்கலாம். காடுகளில், பல்வேறு உயரமுள்ள மரங்களை வளர்த்து, காற்றின் வேகத்தைக் குறைத்து, மண் அரிப்பைத் தடுக்கலாம். குளிர்ந்த வெப்ப நிலை உடைய பகுதிகளிலும், திறந்த சமவெளிகளிலும், கடற்கரை ஓரங்களிலும் காற்றுத் தடையால், பொருளாதாரச் சிறப்பு மிக்க பயிர்கள் நன்கு வளர்கின்றன. கரிமப் பொருள்களை இயற்கை அல்லது செயற்கை முறையில் சேர்த்து, மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம். உதிர்ந்த இலை அடுக்குகள் மழை நீர் மண்ணை அரித்துக் கொண்டு ஓடாமல் தடுக்கின்றன. தேவையற்ற பொருள்களும், வளிமங்களும், வளி மண்டலத்திலும், நீரிலும் கலப்பதால், தூய்மைக் கேடு ஏற்படுகிறது. சூழ்நிலையைக் கெடுக்கும் இப்பொருள்கள், தொழில் வளம் பெருகி வரும் அனைத்து நாடுகளிலும் இடையூறாக உள்ளன. தொழிற்சாலைக் கழிவுப் பொருள்கள், ஊர்திகளிலிருந்து வெளிப்படும் நச்சு வளிமங்கள் முதலானவை சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பைக் குறைத்துக் கேடுகளை விளைவிக்கின்றன. சாயத் தொழிற்சாலைகள், கரும்பு ஆலைகள், வேதிப் பொருள் தயாரிக்கும் ஆலைகள், நூற்பாலைகள், காகித ஆலைகள் முதலியன கந்தக டைஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு, வளிமம் முதலியவற்றை வெளியேற்றுகின்றன. அவை தாவர வளர்ச்சிக்குக் கேடு விளைவித்துத் தாவர இனத்தையே அந்தப் பகுதிகளிலிருந்து அழித்து விடும் தன்மை வாய்ந்தவை. தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பொருள்களால், சுற்றுப் புறச் சூழல் தூய்மைக் கேடு அடைதலைத் தவிர்க்க, அரசு பல வித முயற்சிகள் எடுத்து வருகிறது. ஊர்திகளிலிருந்து வெளி வரும் புகை, ஓசோன், நச்சுப் பொருள்கள், பிற வளிமங்கள் ஆகியன தாவரங்களின் வளர்ச்சியைச் சீர் குலைக்கின்றன. சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து உண்டாகும் துகள்களையும், வளிமங்களையும், புது வகைப் பொறியியல் உத்திகள் மூலம் (electro static precipitator) வளி மண்டலம் மாசு படாமலும், தாவரங்களுக்குக் கேடு விளைவிக்காமலும் செய்யலாம். காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் கழிவு நீர், ஆற்று நீரை மாசு படுத்துகின்றது. அந்தக் கழிவு நீரிலுள்ள நச்சுப் பொருள்களை வடிகட்டியும், பல வேதி மருந்துகளைச் சேர்த்தும், நச்சுத் தன்மையை நீக்கி வேளாண்மைக்குப் பயன்படுத்தத் தீவிர முயற்சிகளும், ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.—கு, பத்மநாதன் நூலோதி. இரா. சுந்தரம், தாவரச் சுய சூழ் நிலையியல், தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1972; H.G. Jones, Plants and. Micro Climate, Cambridge University Press, Sydney 1983. இயற்கையின் மூன்று பெரும் உறுப்புகளான காற்று, நீர், நிலம் ஆகியவற்றை மாசுறுத்துவதைப் பொறுத்துச் சூழ்நிலைத் தூய்மைக் கேட்டை முறையே காற்றுத் தூய்மைக் கேடு (air pollution), நீர்த் தூய்மைக் கேடு (water pollution), நிலம் அல்லது மண் தூய்மைக் கேடு (land pollution) எனப் பாகுபடுத்தலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> விலங்கினங்களின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ ஊறு விளைவிக்கும் பொருள்கள் காற்றில் கலத்தலால், காற்றின் தூய்மை கேடுறுகிறது. இம்மாசு வளிம வடிவிலோ, துகள் வடிவிலோ (particulate matter) இருக்கக் கூடும். இவற்றுள் முதன்மையானவை கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், ஃப்ரியான், பூச்சி கொல்லிகள், புகை மூட்டப் பொருள்கள் (fumigants), ஃபுளூரைடு, பாஸ்ஃபேட், ஆர்செனிக், கேட்மியம், பாதரசம், காரீயம், வெள்ளி, வனேடியம் ஆகியனவாகும். இவை கண், தொண்டை ஆகிய உறுப்புகளில் தோன்றும் எரிச்சல், பக்க வாதம், புற்று நோய் போன்ற கேடுகளை விளைவிக்கக் கூடியன. தொழிலகங்களிலிருந்து உமிழப் படும் மாசுப் பொருள்களின் தன்மை, தொழிலுக்குத் தொழில் மாறுபடுகிறது. உரத் தொழிற்சாலைக் கழிவுகளில் நைட்ரஜன் ஆக்சைடுகள், யூரியா, கரி, கந்தகம், சுண்ணாம்புக் கல், பாஸ்ஃபேட் போன்றவற்றின் துகள்கள் மிகுந்துள்ளன. சிமெண்ட் ஆலையின் புகை போக்கியில் வெளியாகும் தூசில் அலுமினியம், சோடி- யம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் சிலிக்கானின் ஆக்சைடுகள் உள்ளன. அனல் மின் நிலையங்களில் தூசுச் சாம்பல் (fly ash) எனும் நுண் துகள் வகைச் சாம்பல் சிறு குன்றுகளைப் போல் குவிந்து கிடக்கின்றது. மேலும் கந்தகம் உள்ளடங்கிய கரியை எரிமமாகப் பயன்படுத்துவதால், புகை, அமிலத் தன்மை பெறுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> உரத் தொழிற்சாலைகள். உரத் தொழிற்சாலைகளில் நைட்ரஜன், பாஸ்ஃபேட் என இரு வகைப்பட்ட உரங்கள் தயாராகின்றன. இவற்றிலிருந்து நைட்ரஜன் ஆக்சைடுகள், யூரியா, கரி, கந்தகம், சுண்ணாம்புக் கல், சல்ஃபைடுகள், பாஸ்ஃபேட்டுகள் ஆகியன நுண் துகள் வடிவில் வெளியேற்றப்படுகின்றன. சிமெண்ட் ஆலைகள். அலுமினியம், பொட்டாசியம், சிலிக்கான், கால்சியம், சோடியம் போன்றவற்றின் ஆக்சைடுகளின் கலவையே சிமெண்ட் தூசு ஆகும். இவை பயிர்களின் இலை, தண்டுகளின் மீது படிந்து, வளர்ச்சியைப் பாதிக்கின்றன. அமிலத் தொழிற்சாலைகள். உரத் தொழிலுக்கு அடிப்படையான சல்ஃப்யூரிக் அமிலத் தயாரிப்பில் கந்தக டைஆக்சைடு ஒரு கிளை விளை பொருளாகும். நைட்ரிக் அமிலத் தயாரிப்பில் வெளி வரும் நைட்ரிக் ஆக்சைடு சல்ஃபர் டைஆக்சைடைப் போன்றே அமிலத் தன்மை மிக்கதாதலால், அமில மழையைத் தோற்றுவிக்கக் கூடும். வளி மண்டலத்தில் இவ்வாக்சைடு ஒளி வேதி வினையை ஊக்குவித்து, நச்சுப் பொருள்களை உருவாக்கி, புவியின் காப்பு வளையமான ஓசோன் படலத்தை மெலிதாக்குகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> குளோரின் தயாரிப்புக் கலங்கள். இங்கு குளோரின் வளிமம், எரிகாரம், பாதரசம் ஆகியன காற்றிலும், கழிவு நீரிலும் கலக்கும் வாய்ப்பு உள்ளது. விலங்கினங்களின் அன்றாட வாழ்க்கையின் விளைவாகக் கழிவுப் பொருள்களும் சூழ்வெளியை மாசுபடுத்துகின்றன. மாசுப் பொருள்களின் தாக்கம் அட்டவணை 1இல் தொகுக்கப்பட்டுள்ளது. காற்றின் தூய்மைக் கேட்டைத் தடுக்கும் வழி முறைகள். தானியங்கி ஊர்திகளிலிருந்து வெளியேற்றப் படும் கார்பன் மோனாக்சைடு (CO), ஹைட்ரோகார்பன்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்குச் சில முறைகள் கையாளப்படுகின்றன. காற்று–எரி பொருள் கலப்பியைத் தகுந்த வடிவமைப்பில் உருவாக்கி, காற்றில் கலக்கும் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோகார்பன்கள் ஆகியவற்றின் விழுக்காட்டினைக் குறைக்கலாம்; வெளியேற்றுக் குழாய் அமைப்பில் எரி கருவி- களைப் பொருத்தி, வெளியேறும் வளிமங்களை எரிக்கலாம். இம்முறையில் செலவு கூடுதலாக இருப்பதுடன், வருவாயும் கருதத் தக்க அளவுக்கு இல்லை; இவ்வெரி கருவிகளுடன், வினையூக்கியையும் இணைத்துப் பயன்படுத்தலாம்; வெளியேறும் வளிமக் கலவையைக் குளிர்விக்கலாம்; வெளியேறும் வளிமக் கலவையில், நைட்ரிக் ஆக்சைடின் விழுக்காட்டைக் குறைப்பதற்குப் பெரும எரி நிலையைக் குறைக்கலாம் அல்லது எரி பொருள் பெரும எரி நிலையை அடையும் போது, ஆக்சிஜனைக் குறைந்து வழங்கலாம். தொழிலகங்களிலிருந்து உமிழப்படும் காற்றுக் கசடுகளின் அளவைக் குறைக்க வேண்டும். தொழிலகங்களிலிருந்து வெளியாகும் கழிவு வளிமங்கள் திண்ம, நீர்மத் துகள்களைச் சுமந்துள்ளன. இத்துகள்கள் மிகச் சிறியனவாக உள்ளமையாலும், நிலை மின்னேற்றம் கொண்டுள்ளமையாலும், தொங்கல் நிலையிலுள்ளன. இவற்றைப் பிரித்தெடுப்பதற்குக் கீழ்க் காணும் பொறிகள் பயன்படுகின்றன; புவி ஈர்ப்புப் படிவிப்பு அறைகள், சடத்துவப் பிரிப்பிகள் (inertial separators), சுழல்வான்கள் (cyclones), வடிகட்டிக் கூடங்கள், மின் வீழ் படிவிப்புக் கூடங்கள், நீர்ம வழிக் கழுவும் அமைப்புகள் முதலியவையாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> உரத் தொழிற்சாலை, ரேயான் தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து வெளியாகும் SO₂ஐ நீக்குவதற்கு இவ்வளிமத்தை ஓர் உலையில் செலுத்திச் சுண்ணாம்புத் தூளைத் தூவ வேண்டும். இம்முறை மூலம் 30% SO₂ஐ மட்டுமே நீக்க முடியும் என்னும் நிலையில் நாடிகோலைட், சோடியம் பைகார்பனேட் ஆகியவற்றைப் பயன்படுத்தினால், 70% வரை நீக்கலாம். சோடியம் அலுமினேட்டைப் பயன்படுத்தினால், 85% வரை SO₂ ஐ உறிஞ்சலாம். கழிவு வளிமங்களை MnO₂ உடன் வினைப்படுத்தி, MnSO₄ ஆக மாற்றி. இவ்வாறு பெறப்படும் MnSO₄ஐ நீர்ம அம்மோனியாவுடன் வினையுறுத்தி, காற்றூட்டம் செய்து, மீண்டும் MnO₂ஐப் பெறலாம். இவ்வழி முறையைப் பயன்படுத்தி 90% SO₂ நீக்கப்படுகிறது, MnO₂ + SO₂ → MnSO₄ MnSO₄ + 2NH₃ + H₂O + ½O₂ → MnO₂ + (NH₄)₂ SO₄ உருகிய கார்பனேட் உப்புகளில் (430°C இல் 32% Si₂CO₃,33% Na₂CO₃ மற்றும் 35% K₂CO₃ ஆகியவற்றின் கலவை) SO₂ வளிமத்தை உறிஞ்சலாம். M₂CO₃ + SO₂ → M₂SO₃ + CO₂ (M = Si, Na,K) M₂SO₃, 600°Cஇல் M₂S மற்றும் M₂SO₄ ஆகக் சிதைவுறுத்தப் படுகிறது. M₂S நீராவி CO₂ கலவையுடன் 430°C க்குச் சூடு படுத்தப் படுகிறது. இதன் வாயிலாக M₂CO₃ மீண்டும் பெறப் படுகிறது. நீரேற்றப்பட்ட லிக்னைட் சாம்பல் படுகைகளின் மீது SO₂ வளிமத்தைச் செலுத்தியும் பிரிக்கலாம். இச்சாம்பலிலுள்ள காரப் பொருள் (சுண்ணாம்பு) SO₂ உடன் வினைப்பட்டுச் சல்ஃபைட் உப்புகளை விளைவிக்கிறது. இவ்வுத்தி மூலம் 80% SO₂ஐ நீக்கலாம். ஈர வழிமுறைகள் லர்கி முறை. தொழிலகக் கழிவு வளிமங்களைக் காற்று முன் வெப்பமூட்டிகள் (air preheaters), மிகை வெப்பம் பயனுறு கொதி கலன்கள், வெப்பப் பரிமாற்று அமைப்புகள் ஆகியவற்றில் செலுத்தி, வெப்ப நிலை 100°Cக்குக் கீழ் கொண்டு வரப் படுகிறது. திண்மத் துகள்கள் வென்ச்சரி வளி துலக்கிகள் (Venturi scrubber) மூலம் நீக்கப்படும். இறுதியாக, SO₂ முழுவதும் H₂SO₄ ஆக மாற்றப்படும். அம்மோனியா கழுவு கலன். புகை போக்கி வளிமங்கள் 140°Cக்குக் குளிர்விக்கப்பட்டு, நீராவியுடன் கலவையாக அம்மோனியாவில் செலுத்தப்படுகின்றன. இங்கு விளைவாகும் அம்மோனியம் சல்ஃபைட், அம்மோனியம் சல்ஃபேட்டாக ஆக்சிஜனேற்றப்பட்டு, விற்கப்படுகிறது. இவ்வழிமுறையால் 90–95% வரை SO₂ நீக்கப்படுகிறது. நீர் தூய்மைக் கேடு. தொழிலகக் கழிவுகள் கலப்பதால், நீர் இயற்பியல், வேதியியல், உயிரியல் தன்மைகளிலிருந்து வேறுபட்டுப் பயனற்ற நிலை அடைதலே நீரின் தூய்மைக் கேடு ஆகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வேதிப் பொருள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் அமிலங்கள், காரங்கள், சோப்பு போன்ற மாசு நீக்கிகள், ஃபீனால், சயனைடு, துத்தநாகம், காரீயம், பாதரசம், பூச்சி கொல்லி, பாசி கொல்லிகள் ஆகியவற்றாலும், தோல் பதனிடும் அமைப்புகள், சர்க்கரை ஆலைகள், துகில், உரம், இரும்பு, எஃகு, சாராயம், மருந்து ஆகியவற்றின் தயாரிப்பில் விளைவாகும் கழிவுகளாலும் நீர் கேடுறுகிறது. தூய்மையாக்கும் வழி முறைகள். தொங்கல் நிலையிலுள்ள கழிவுகள் படிவிப்பு, வடி கட்டல் முறைகளில் அகற்றப்படுகின்றன. கூழ்ம நிலைப் பொருள்கள் திரிதல் மூலம் அகற்றப்படுகின்றன. கரைந்த நிலையிலுள்ளவை வீழ் படிவாக்கல் மற்றும் அயனிப் பரிமாற்ற முறையில் அகற்றப்படுகின்றன. நீரைக் குடிப்பதற்கு ஏற்றதாகச் செய்வதற்கு மூன்று நிலைகளில் தூய்மையாக்கல் நிகழ்த்தப்படுகிறது. அவை தெளிய வைத்து இறுத்தல், வடி கட்டல், நுண்ணுயிரகற்றம் என்பன. தேக்கத் தொட்டிகளுக்குக் கொண்டு வரப் படும் நீருடன் படிகாரம் சேர்க்கப்பட்டு, கூழ் நிலை மாசுகள் திரிக்கப்படுகின்றன. சற்றே தெளிந்த நீர், வடி பாத்திகள் வழியே வடி கட்டப்படுகிறது. சரளைக் கற்களாலான வடி பாத்திகளில் மெதுவாக இயங்குபவை. விரைவாக இயங்குபவை என இரு வகைகள் உள்ளன. குளோரின், சலவைத் தூள், புற ஊதாக் கதிர் வீச்சு, ஓசோன் ஆகியவற்றைக் கொண்டு, நீரில் நுண்ணுயிரகற்றம் செய்யலாம். தொழிலகக் கழிவு நீரை இத்தகைய விரிவான வழி முறைகளில் தூய்மைப் படுத்துவது செலவு மிக்க பணியாகும். எனவே, பின் வரும் எளிய முறைகள் பின்பற்றப் படுகின்றன. (அ) கடற்கழி உருவாக்குதல் (lagooning). கழிவு களில் அமிலம், காரம், கரிமப் பொருள்கள் மிகுந்திருப்பின், இம்முறை கையாளப்படுகிறது. தொட்டி களில் தேக்கப்பட்டுள்ள நீரில் ஆக்சிஜனைச் செலுத்தி, கழிவின் உயிர் வேதி ஆக்சிஜன் தேவையை நிரப்பலாம். (ஆ) ஆக்சிஜனேற்ற குட்டைகள் (oxidation ponds). இம்முறையில் ஆக்சிஜனேற்ற சூழ்நிலையில் மிகை வெப்ப நிலையில் கழிவுகள் செரிக்கப்பட்டு, நிலைப்படுத்தப்படுகின்றன. (இ) கிளர்வுற்ற கசடு முறை (activated sludge process). கரிம அடக்கம் மிகுந்த பால், இறைச்சி ஆகிய கழிவு வகைகளுக்கு மட்டுமே இம்முறை ஏற்றது. (ஈ) சொட்டும் வடி கட்டி (trickling filter). இவ்வமைப்பில் நொறுக்கப்பட்ட கற்கள், சல்லி, சரளைக் கல் ஆகியன அடுக்கப்பட்டுக் கழிவு நீர் இதன் மீது தெளிக்கப்படுகிறது. கழிவு நீர் வடிகட்டும் திண்மப் பரப்பின் மீது மெல்லிய படலமாகப் படிந்து, பாக்டீரியா உருவாக அடிப்படையாகிறது. காற்று உட்புக வசதியும், வாய்ப்பும் உள்ளமையால், வளி வாழ் நுண்ணுயிர்கள் படலத்தின் மீது செழித்து வளர்ந்து, ஆற்றல் நிலையிறக்கம் அடையச் செய்கின்றன. குறிப்பிட்ட சில முதன்மைத் தொழிற்சாலைகளின் கழிவுகளும், அவை நீக்கப்படும் முறைகளும் வருமாறு: உணவுப் பொருள் தயாரிப்பு. பழம், காய்கறி ஆகியவற்றைப் பதப்படுத்துதல், குளிர்வித்தல் மற்றும் உலர்த்தல் கூடங்கள். பால் வகைப் பொருள் தயாரிப்புக் கூடங்கள் ஆகியவற்றின் கழிவுகள் பயிர் நிலங்களில் தெளிப்பதற்கு ஏற்றவை. இவற்றில் கொழுப்பும், மாவுப் பொருளும் மிகுந்துள்ளமையால், இவை கடற்கழித் தேக்க முறைக்கு ஏற்றவை. துகள் நிலைப் பொருள்கள் சலித்தல் மூலமும், எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருள்கள் மிதப்புக் சுலங்களில் பால்மமாகவும் வெளியேற்றப்படுகின்றன. காகித ஆலைகள். காகித ஆலைக் கழிவுகள் கரிம, கனிமப் பொருள்களைக் கொண்டவை. அவற்றின் pH மதிப்பு நிலையில்லாமல் இருப்பதாலும், கழிவுகள் வண்ணக் கலவையாக இருப்பதாலும், திருத்த முறை சற்றே கடினமானது. கூழ்ம நிலைப் பொருள்களைத் திரளாக்குதல், pH மதிப்பு மாறாதிருக்கும் போது மட்டுமே இயலும். நுண்ணுயிர்களை அவற்றின் உணவுத் தேவையுடன் கழிவு நீரில் புகுத்தினால் கழிவு நிலையிறக்கம் அடைந்து, இறுதியில் முழுமையாகச் செரிக்கப்படுகிறது. இரும்பு உருக்கு ஆலைகள். ஊது உலைகளில் கழுவப் பயன்படுத்தப்பட்ட நீர், படிவிப்பான்கள் மற்றும் கெட்டியாக்கல் கருவிகளின் வாயிலாகச் செலுத்தப்பட்டுத் திண்மச் செறிவேற்றம் அடைகின்றது. வடி கட்டப்பட்ட நீர், சுண்ணாம்பால் நடு நிலைப் படுத்தப்படுகிறது. இதனால், கரைந்துள்ள இரும்பு உப்புகள் இரும்பு (II) ஹைட்ராக்சைடாக வீழ் படிவாக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு, அகற்றப்படும். வேதிப்பொருள் ஆலைகள். அமில, கார மற்றும் வெடியுப்புத் தயாரிப்பு ஆலைக் கழிவுகள் நடு நிலைப் படுத்தப் படுகின்றன. சாயக் கழிவில் இடம் பெறும் பொருள்களுள் சில ஆக்சிஜனேற்றத்திற்கும், சில ஒடுக்கத்திற்கும் (reduction) உட்பட வல்லனவாதலால், ஒரு கட்டச் சீரமைப்புக்கு ஏற்றவையல்ல. கெட்டியாக்கல் முதல் அயனிப் பரிமாற்று முறை வரை பல முறைகள் வழக்கிலுள்ளன. கதிரியக்கக் கழிவுகள். கதிரியக்கத் தன்மை வாய்ந்த கழிவுகள் பொதுவாக, யுரேனியம் பிரித்தெடுக்கும் கூடம், புளூட்டோனியம் தயாரிப்புக் கூடம், அணு ஆற்றல் ஆய்வு மையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. யுரேனியம் பிரிப்பு வகைக் கழிவுகள் அமிலத் தன்மையும் இரும்புச் செறிவும் மிகுந்தவை. அயனிப் பரிமாற்ற முறையின் மூலம் இவை அகற்றப்படுகின்றன. செறிவாக்கப் பட்ட கழிவுகள் கடலடியில் புதைக்கப்படுகின்றன. நிலத்தின் தூய்மைக் கேடு. வேதிப் பொருள்கள் மண்ணுடன் கலப்பதால், நிலத்தின் செழிப்புக் குன்றும். இந்நிலை பின் வரும் காரணங்களால் உருவாக்கப் படுகிறது. விலங்கினங்களின் கழிவு, வீட்டுக் கழிவு (குப்பை). கனிமம், நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து எழும் திண்மக் கழிவு, புழு பூச்சிக் கொல்லி ஆகியவற்றின் மிகுதி; தேவைக்கு மேல் உரத்தைத் தூவுவதாலும், பாதிப்புத் தோன்றக் கூடும். எடுத்துக் காட்டாக, மிகையளவு அம்மோனியம் சல்ஃபேட் சேர்க்கப்படும் போது, அம்மோனியம் அயனிகள் ஊடு பயிர்களால் உறிஞ்சப்பட்டு, சல்ஃபேட் அயனிகள் மண்ணில் தங்கி விடுகின்றன. இதனால், மண்ணில் அமிலத் தன்மை கூடுகிறது. அதே போன்று, KNO₃ மிகையளவில் சேர்க்கப்பட்டால், K+ மண்ணில் செறிவுற்றுக் காரத் தன்மை கூடுகிறது. இதன் விளைவாக மண் பயனற்றதாகி விடக் கூடும். கதிரியக்கப் பொருள் சிதறிப் பரவுதல் (radioactive fallout) எனும் தோற்றப்பாடு மூலம், கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள்கள் நிலத்தில் விழுந்து மண்ணைப் பல ஆண்டுகளுக்குக் கேடுறுத்தும். நிலம் கேடுறுதலைத் தடுப்பதற்கு, நில நிரப்புதல் (land fill) எனும் முறை எளியதாகும். தாழ்வான பகுதிகளில், கழிவுகளைக் கொட்டி, அடுக்குகளாக நிரம்பிய குவியல், கெட்டிப்பட்ட பின்பு, மண்ணால் மூடலாம். திண்மப் பொருள்களை மிகைக் காற்றோட்டத்தில் நன்கு எரிக்கலாம். தொழிலக மற்றும் வீட்டுக் கழிவுகளை நிலைப்படுத்தித் தோன்றும் கசடுகளை, நிலத்தில் நிரப்பலாம். திண்மக் கழிவுகளில் நெகிழிகள், தாள், உலோகப் பொருள்கள், பீங்கான், எரிக்கப் படாத கரிமப் பொருள்கள் ஆகியவை அடங்கும். இவை, நகராட்சி மையங்களில் சேகரிக்கப்பட்டுப் பிரிக்கப்படுகின்றன. நெகிழிகள் அவற்றின் அடர்த்தியின் அடிப்படையில், மிதப்பு முறையால் பிரித்தெடுக்கப் படுகின்றன. இரும்புப் பொருள்கள், மின் காந்த முறையில் பிரித்தெடுக்கப் படுகின்றன. கண்ணாடி, தாள் ஆகியன காற்றுப் பிரிப்பான் வழியாக அகற்றப் படுகின்றன. இரும்பு வகையல்லாத உலோகங்கள் சுழல் வகை நொறுக்குவான்கள் (gyratory crushers) மூலம் பொடியாக்கப்படுகின்றன. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. John W. Clark, et. al., Water Supply and Pollution Control, Harper International, New York, 1977. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> சூழ்நிலைப் பிரமிடுகள் சூழ்நிலை இயல் என்பது இயற்கையின் அமைப்பையும், இயற்கை நிலைகளில் வாழும் உயிரிகளுக்கும், அவற்றின் சூழ்நிலைகளுக்குமிடையே உள்ள உறவுகளையும் அறிவதாகும். நிலம், பாறை போன்றவையும் சூழ்நிலையின் பகுதியாக அமைகின்றன. அனைத்து விலங்குகளும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தாவரங்களைச் சார்ந்துள்ளன. உயிரின உறவுகளை ஏற்படுத்தும் விளைவுகள் சூழ்நிலையில் இடம் பெற்றுள்ளன. ஒரு சமுதாயத்தில் பொதுவாகச் செயல்படும் உயிர்ச் சம நிலைத் தத்துவம் (biotic balance), உணவை உருவாக்குதல், பயன்படுத்தல் ஆகிய ஒழுங்கிற்கு, அவற்றிடையே உள்ள உறவு முறைகள் இன்றியமையாதவையாகும். வேறுபாடான உணவு உறவுகளாகிய, உணவுச் சங்கிலி (food chain). உணவு வலை (food web), சூழ்நிலைப் பிரமிடுகள் (ecological pyramids) முதலியவற்றைக் கொண்டு வாழ்க்கை வலையை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சமுதாயத்திலும் பல உணவுக் கோவைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும், ஒரு குறிப்பிட்ட கொன்றுண்ணியால் (predator) முடிவடையும். உணவுக் கோவையிலுள்ள தயாரிப்பவை, முதல், இரண்டு, மூன்றாம் நிலைத் தரத்திற்கேற்றவாறு ஓர் உறவு முறை உள்ளது. தயாரிப்பவை, நுகர்பவையின் உயிரி எடைக்கும், ஆற்றல் அளவுகளுக்கும் இடையே காணப்படும். இத்தகைய உறவு முறைகளை முக்கோணக் கோபுரங்களின் மூலம் விளக்கலாம். சூழ்நிலைக் கோபுரங்களை எண்ணிக்கைக் கோபுரம், உயிரி எடைக் கோபுரம், ஆற்றல் கோபுரம் எனப் பிரிக்கலாம். எண்ணிக்கைப் பிரமிடுகள். தயாரிப்பவையின் எண்ணிக்கைக்கும் முதல், இரண்டு, மூன்றாம் நிலை நுகர்பவையின் எண்ணிக்கைக்கும் உள்ள உறவு முறையை எண்ணிக்கைப் பிரமிடாக விளக்கலாம். சூழ்நிலைத் தொகுப்பில், முதல் நிலைத் தயாரிப்பவையின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அடுத்து, முதல் நிலை நுகர்பவையின் எண்ணிக்கையும், இரண்டு, மூன்றாம் நிலை நுகர்பவையின் எண்ணிக்கையும் அமையும். தயாரிப்பவையிலிருந்து படிப்படியாக நுகர்பவையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். எண்ணிக்கைப் பிரமிடின் அடிப் பகுதி பெரும் எண்ணிக்கையில் உள்ள தயாரிப்பவற்றைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக. ஒரு புல்வெளி அல்லது பயிர்ச் சூழ்நிலைத் தொகுப்பிலுள்ள தயாரிப்பவையாகிய புற்களும். பயிர்களும் பிரமிடின் அகன்ற அடிப் பகுதியாக அமையும், எண்ணிக்கையில் முதல் நிலை நுகர்பவையாகிய வெட்டுக் கிளி, முயல் முதலியன இருக்கும். புல்வெளிச் சூழ்நிலைத் தொகுப்பின் உச்சியில், உணவுக் கோவையில் கொன்றுண்ணிகளான புலிகள் குறைந்த எண்ணிக்கையில் காணப் படும். பயிர்ச் சூழ்நிலைத் தொகுப்பில் இரண்டு, மூன்றாம் நிலை நுகர்பவவையாகிய தவளை, பாம்பு முதலியவை எண்ணிக்கையில் படிப்படியாகக் குறைந்து காணப்படும். சில சூழ்நிலைத் தொகுப்பில் மேற்கூறியவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட அமைப்புக் காணப்படும். சான்றாக, மரச் சூழ்நிலைத் தொகுப்பில், முதல் நிலைத் தயாரிப்பவையாகிய மரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அடுத்து, முதல் நிலை நுகர்பவையாகப் பறவைகளும், அவற்றின் மீது சாறுண்ணிகளாக வாழும் இரண்டாம் நிலை நுகர்பவையாகிய பூச்சிகளும் மிகு எண்ணிக்கையில் அமையும். தயாரிப்பவற்றின் எண்ணிக்கை குறைவாகவும் முதல், இரண்டாம் நிலை நுகர்பவை படிப்படியாக எண்ணிக்கையில் மிகுதியாகவும் அமைந்துள்ளன. இந்த அமைப்பிற்குத் தலை கீழ்ப் பிரமிடு என்று பெயர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> உயிரி எடைப் பிரமிடு. பல உயிரின உணவு மட்டங்களிலுள்ள உயிரி எடைகளுக்கிடையே ஓர் உறவு முறை அமைந்துள்ளது. புல்வெளி அல்லது மரம் போன்ற தரைச் சூழ்நிலைத் தொகுப்பில் அனைத்து உயிரின மட்டங்களை விடத் தயாரிப்பவையின் உயிரி எடை மிக அதிகமாக இருக்கும். புல்வெளிச் சூழ்நிலைத் தொகுப்பில் தயாரிப்பவையிலிருந்து மேல் மட்டக் கொன்றுண்ணி வரை, எண்ணிக்கையும், உயிரி எடையும் குறைந்து கொண்டே வரும். மரச் சூழ்நிலைத் தொகுப்பில் தயாரிப்பவையிலிருந்து, நுகர்பவை வரை எண்ணிக்கை மிகுந்து கொண்டே போனாலும், அவற்றின் உயிரி எடை குறைந்து கொண்டே வரும். முதல் நிலை நுகர்பவையாகிய பறவைகளின் உயிரி எடையை விட, சாறுண்ணிகளாக வாழும் இரண்டாம் நிலை நுகர்பவையான பூச்சிகள், எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பினும், உயிரி எடையில் குறைவாகவே இருக்கும். நீர்ச் சூழ்நிலைத் தொகுப்பில் டயாட்டம்கள் (diatoms), தாவர மிதவை உயிரிகள் (phyto-plankton) ஆகிய முதல் நிலைத் தயாரிப்பவையின் உயிரி எடை அவற்றை உண்ணும் முதல் நிலை நுகர்பவையாகிய தாவர ஊனுண்ணியை விடக் குறைவாகும். இரண்டாம் நிலை நுகர்பவையாகிய, ஊனுண் மீன்களின் உயிரி எடை, ஏனைய உயிரின மட்டங்களை விட மிகுதி. இத்தகைய உணவுக் கோவையில் உள்ள உயிரினங்களின் உயிரி எடைகளுக்கிடையே உள்ள உறவு முறையைத் தலை கீழ்ப் பிரமிடு வடிவில் விளக்கலாம். ஆற்றல் கோபுரம். சூழ்நிலைத் தொகுப்பிலுள்ள முதல் நிலைத் தயாரிப்பவை சூரிய ஒளியின் ஆற்றலை உறிஞ்சி, வேதி ஆற்றலாக மாற்றும். இந்நிலை வேதி ஆற்றல் உணவுக் கோவையில் தயாரிப்பவையிடமிருந்து, முதல், இரண்டாம் நிலை நுகர்பவை வழியாக, உயர் நிலை ஊனுண்ணிகள் வரை செல்லும். புல்வெளிச் சூழ்நிலைத் தொகுப்பில், குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிட்ட கால அளவில், முதல் நிலைத் தயாரிப்பவையாகிய புற்கள் அதிக சூரிய ஒளியைப் பயன்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட பரப்பளவிலுள்ள நன்னீர்ச் சூழ்நிலைத் தொகுப்பில் மிதவை உயிரிகள் அவற்றை உண்டு வாழும் தாவர ஊனுண் மீன்களை விடப் பெருமளவில் ஆற்றலைச் சேமித்து வைக்கின்றன. ஓராண்டில், தாவர ஊனுண் மீன்கள் குறைந்த அளவில் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. சூழ்நிலைத் தொகுப்பில் ஆற்றல் ஒழுக்கு (energy flow) ஒரு வழிப் பாதையாகக் காணப்படுகிறது. சூரியக் கதிர் வீச்சிலிருந்து ஆற்றல் பெறப்பட்டுச் சூழ்நிலைத் தொகுப்பில் தொடங்குகிறது. சூரிய ஆற்றல் வேதி ஆற்றலாகத் தயாரிப்புகளில் மாற்றப் படுகிறது. இவ்வாற்றல், அடுத்துள்ள உணவு ஊட்ட நிலைக்கு (trophic level) வெப்ப இயக்க விதிகளுக்குட்பட்டு நிகழ்கிறது. இதன் காரணமாக, ஆற்றல் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றப்படும் போது, சிறு அளவில் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. பல்வேறு பட்ட உணவு வாட்ட நிலைகளில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் உயிரின ஆற்றல் எனப்படுகிறது. —கு. பத்மநாபன் நூலோதி. E.P.Odum, Ecology, Holt Rinehart and Winston, New York, 1963. சூழ்நிலை மண்டலம் 1935 ஆம் ஆண்டில் ஏ.ஜி. டான்சிலி என்பார் சூழ்நிலை மண்டலம் (ecosystem) எனும் சொல்லை உருவாக்கினார். இம்மண்டலம், பலவாறாக வரையறை செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை மண்டலம் என்பது உயிரற்ற பொருள்களாகிய நீர், நிலம், வெப்பம், ஒளி ஆகியவையும், உயிருள்ள பொருள்களாகிய தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவையும் ஒரே சூழ்நிலையில் கூட்டாகக் காணப்படும் தன்மையாகும். புவி ஒரு பெரும் சூழ்நிலை மண்டலமாக விளங்குகிறது. இப்பெரும் சூழ்நிலை மண்டலம், நிலச் சூழ்நிலை மண்டலம் (terrestrial ecosystem), நீர்ச் சூழ்நிலை மண்டலம் (aquatic ecosystem) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிலச் சூழ்நிலை மண்டலம் காடு, பாலைவனம், புல் வெளி, பயிர் நிலம், மலை போன்ற பல்வேறு கிளைச் சூழ்நிலை மண்டலங்களைக் கொண்டுள்ளது. இதே போல், நீர்ச் சூழ்நிலை மண்டலம், நன்னீர், உப்பு நீர், கழிமுகச் சூழ்நிலை மண்டலங்களைக் கிளைச் சூழ்நிலை மண்டலங்களாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்திலும் பல நுண் சூழ்நிலை மண்டலங்கள் (microecosystem) காணப் படுகின்றன. ஒரு செடியின் தண்டுப் பகுதி, இலை, வேர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நுண் சூழ்நிலை மண்டலமாகும். மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைச் சூழ்நிலை மண்டலங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு விமானத்தின் உட்பகுதியும் சூழ்நிலை மண்டலமாகும். ஓர் அறிவியல் ஆய்வகம், ஒரு மீன் வளர்க்கும் தொட்டி ஆகியவற்றையும் சூழ்நிலை மண்டலம் எனலாம். சூழ்நிலை மண்டலங்கள் பலவகைப் படினும் அவை ஒவ்வொன்றும் அமைப்பு, செயல்பாடுகளில் ஒற்றுமையுடன் விளங்குகின்றன. சூழ்நிலை மண்டலங்களின் பொதுப் பண்புகள். ஒவ்வொரு சூழ்நிலை மண்டலமும், உயிருள்ள மற்றும் உயிரற்ற ஆக்கக் கூறுகளால் ஆனது. சூழ்நிலை மண்டலத்தின் அமைப்பும், செயல்பாடும் பல்வகைக் காரணிகளால் கட்டுப்படுத்தப் படும். ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்திலும், ஆற்றல் சுழற்சி (energy cycle) நடைபெறுகிறது. இச்சுழற்சி, ஆற்றல் அழிவற்றது என்னும் வெப்ப இயக்கவியல் விதிப்படி நடைபெறுகிறது. ஒவ்வொரு சூழ்நிலை மண்டலமும், நாளடைவில் முதிர்ச்சி அடைகிறது. தொடக்கத்தில் சிக்கல் குறைந்த அமைப்பாகத் தோன்றும் சூழ்நிலை மண்டலம், கால ஓட்டத்தில் சிக்கலாகி விடுகிறது. சூழ்நிலை மண்டலத்தின் ஆக்கம். சூழ்நிலை மண்டலத்தின் உயிரற்ற கூறுகள், கரிம மற்றும் கனிமக் கூட்டுப் பொருள்களாகும். அமினோ அமிலங்கள், ஹீயூமிக் அமிலங்கள் ஆகியன கரிமப் பொருள்களாகும். பாஸ்ஃபரஸ், கந்தகம், நைட்ரஜன், கார்பன் ஆகியன கனிமக் கூட்டுப் பொருள்களாகும். சூழ்நிலை மண்டலத்தின் முக்கிய உயிரற்ற காரணிகளாக (abiotic factors) மண், காற்று, வெப்பம், ஒளி, தாதுப் பொருள்கள் ஆகியன கருதப் படுகினறன. சூழ்நிலை மண்டலத்தின் உயிருள்ள ஆக்கக் கூறுகளாகப் பாக்டீரியா, தாவரம், விலங்கு ஆகியன உள்ளன. சூழ்நிலை மண்டலத்தை, அவற்றின் செயற்பாட்டிற்கு ஏற்ப, சிதைப்பவை ((decomposers), உற் பத்தியாளர் (producer), நுகர்பவை (consumer) என்று பெயரிட்டுள்ளனர். சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றல் அம்மண்டலத்தில் காணப்படும் உற்பத்தியாளர் எனப்படும் தாவரங்களாலேயே உற்பத்தி செய்யப் படுகிறது. இம்மண்டலத்திலுள்ள தன்னூட்ட உயிரிகளாகிய (autotrophs) தாவரங்கள், பச்சையம் கொண்டுள்ள பாக்டீரியாக்கள் ஆகியன எளிய கனிமப் பொருளைக் கொண்டு, சூரிய ஒளி ஆற்றலால், பச்சையங்கள் மூலம் சிக்கலான உணவுப் பொருள்களைத் தயாரிக்கின்றன. எனவே இவற்றைச் சூழ்நிலை மண்டலத்தின் முதன்மை உறுப்பினர் என்பர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தாவரங்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும் தாவர உண்ணிகளை (herbivores) முதன்மை நுகர்பவை அல்லது முதல் நிலை விழுங்கிகள் (primary consumer) என்பர். தாவர உண்ணிகளைக் கொன்று தின்னும் விலங்குகளை இரண்டாம் நிலை நுகர்பவை என்றும், இவ்விலங்குகளைக் கொன்று தின்பவற்றை மூன்றாம் நிலை நுகர்பவை (tertiary consumer) என்றும் கூறுவர். இவ்வகை நுகர்பவையின் கழிவுப் பொருள்களை, வளரும் தாவரங்களுக்கேற்ற கனிம, கரிமப் பொருள்களாக மாற்றுபவையைச் சூழ்நிலை மண்டலத்தின் மாற்றிகள் (transformers) என்று குறிப்பிடுவர். இவற்றாலேயே, சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றலும், சத்துப் பொருள்களும் மறு சுழற்சி அடைகின்றன. தயாரிப்பவையாகிய தாவரங்களும், நுகர்பவையாகிய விலங்குகளும் இறந்து, மண்ணில் விழும் போது, இவற்றைத் தாக்கி அழித்து, சிக்கலான கூட்டுப் பொருள்களைச் சிதைக்கும் எளிய பொருளாகச்சில சாறுண்ணிகளும், பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் செயல்படுகின்றன. இவற்றை, சூழ்நிலை மண்டலத்தைச் சிதைப்பவை என்பர். சூழ்நிலை மண்டலத்தில் காணப்படும் தயாரிப்பாளரான தாவரங்கள், நுகர்பவையான விலங்குகள், சிதைப்பவை, மாற்றிகளின் எண்ணிக்கையில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்தின் சூழ்நிலை அமைப்புப் பிரமிடுகள் (ecological pyramids) வரையப்படுகின்றன. சூழ்நிலை மண்டலப் பிரமிடுகளின் அமைப்பைக் கொண்டு, அச்சூழ்நிலை மண்டலத்தின் வளர்ச்சியையும், அழிவையும் ஊகிக்கலாம். சூழ்நிலை மண்டலத்திற்கு எடுத்துக் காட்டாக, ஒரு நன்னீர்க் குட்டையையோ, குளத்தையோ, ஏரியையோ காணலாம். இச்சூழ்நிலை மண்டலத்திலுள்ள உயிரற்ற பொருள்களின் கூறாக நீர், நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு, பாஸ்ஃபேட், நைட்ரேட், குளோரைடு உப்புகள், பல வகைப் பட்ட அமினோ அமிலங்கள், ஹியூமிக் அமிலம் ஆகியன உள்ளன. உயிர்ப் பொருள்களின் கூறுகளாகப் பல்வகைப் பட்ட உயிரிகளைக் காணலாம். இச்சூழ்நிலை மண்டலத்திலுள்ள தயாரிப்பாளர், இந்நீரில் மிதந்து கொண்டிருக்கும் பலவகைத் தாவரங்களும், தாவர மிதவை உயிரிகளும் (phytoplanktons) ஆகும். விலங்கு மிதவை உயிரிகள் (zooplanktons) முதல் நிலை நுகர்பவையாக, இந்நீர்ச் சூழலில் உள்ளன. இம்மிதவை உயிரிகளைத் தின்று வாழும் மீன்கள், மெல்லுடலிகள் ஆகியன இரண்டாம் நிலை நுகர்பலையாகும். இம்மீன்களையும், மெல்லுடலிகளையும் தின்று வாழும் பாம்புகள் மூன்றாம் நிலை நுகர்பவையாகும். இச்சூழ்நிலை மண்டலத்தில் இறந்து போகும் தாவர, விலங்கு உயிர்களைத் தாக்கி அழிக்கும் சாறுண்ணிகளும், பூஞ்சைகளும் இம்மண்டலத்தைச் சிதைப்பவையாகும். இவை அழியும் பொருள்களின் ஆற்றலை மண்ணுக்கு மாற்றுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —கோவி. இராமசுவாமி சூழ்நிலையியல் தாவரத்திற்கும் அதன் சூழ்நிலைக்கும் உள்ள உறவு முறையை எடுத்துரைக்கும் அறிவியல் பிரிவிற்குத் தாவரச் சூழ்நிலையியல் (plant ecology) எனப் பெயர். உயிரினங்களுக்கும், சூழ்நிலைக்கும் உள்ள உறவு முறைகளைப் பற்றிப் படிப்பதைச் சூழ்நிலையியல் என்பர். வாழ்விடம், அதன் சூழல் ஆகியவை பற்றி அறிவது வாழ்விடச் சூழ்நிலையியல் (habitat ecology) எனப்படும். தனியுயிரிகளின் தேவை, அவை செயல் படும் முறை, சூழ்நிலைக் காரணி ஏற்படுத்தும் விளைவு முதலியன தனி உயிரிச் சூழ்நிலையியல் எனப் படும். ஒரே இனத்தைச் சார்ந்த உயிரிகள் தொகுதியரகக் காணப்படுவதால், அவை ஒன்றையொன்று சார்ந்து வாழும் வாழ்க்கையில் சிக்கல் உண்டாகிறது. உயிரினத் தொகையில் ஒன்றுடன் ஒன்று செயல் படும் முறை, சூழ்நிலையோடு செயல்படும் முறை ஆகியவற்றால் ஒரு விலங்கு அல்லது தாவர உயிர்த் தொகையின் அளவும், அதனுடைய வளர்ச்சியின் வீதமும் ஒழுங்குபடுத்தப் படுகின்றன. இவை யாவும் உயிர்த் தொகைச் சூழ்நிலையியல் (population ecology) எனப்படும். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் தாவர, விலங்குகளிடையே உள்ள உறவுகள் பற்றிய படிப்பு, சமுதாயச் சூழ்நிலையியல் (synecology) எனப்படும். ஒரு குறிப்பிட்ட தட்ப வெப்ப நிலையில் காணும் மிகச் சிறந்த உயர் நிலைத் தாவரக் கூட்ட அமைவிற்கு உச்ச நிலை அமைவு எனப் பெயர். ஒவ்வொரு தாவர அமைவிலும், ஒன்று அல்லது இரண்டு ஓங்கு தன்மை பெற்ற இனங்கள் காணப்படும். அவை, ஒரே வகையான வளரியல்பைக் கொண்டுள்ளமையால், தாவர அமைவின் வெளித் தோற்றத்திற்கு அடிப்படையாகின்றன. மேலும், பிற தாவரங்கள் பரவிப் பெருகுதலையும் கட்டுப் படுத்துகின்றன. இந்தியாவில் வெப்ப மண்டல மழைக் காடுகள், இலையுதிர் காடுகள், முட்காடுகள், உவர் நிலத் தாவரங்கள் என்னும் தாவர அமைவுகள் காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப் பரப்பில் சமமாக உள்ள தட்ப வெப்ப நிலையிலிருந்து மாறுபட்டு, நுண் தட்ப வெப்ப நிலை (microclimate) ஏற்படும். ஒவ்வோர் உச்ச நிலை அமைவும், இரண்டு அல்லது மூன்று தாவரச் சேர்க்கைகள் என்னும் பெரும் உட்பகுதிகளைக் கொண்டிருக்கும். ஓரினச் சேர்க்கை என்பது ஓங்கு தன்மை பெற்ற ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த தாவரத் தொகுதி ஆகும். ஓர் இடத்தில், ஓங்கு தன்மை பெற்ற தாவர இனங்களின் கீழே காணப்படும் இரண்டாம் நிலை ஓங்கு தன்மை பெற்ற தாவரங்களுக்குத் தாவரச் சமூகம் எனப் பெயர். புறத் தோற்றத்தின் இயல்பைக் கொண்டு தாவர சமூகத்தைத் தோற்றச் சமூகம், அடுக்குச் சமூகம், பூவாத் தாவர சமூகம் என வகைப்படுத்தலாம். வளர் பருவத்தின் வேறுபட்ட காலங்களில் மிகை வளர்ச்சி, பூக்கள், கனிகள் ஆகியன தாவரச் சேர்க்கைக்குப் புதிய தோற்றத்தை அளிக்கும். இது தோற்றச் சமூகம் எனப்படும். அடுக்குச் சமூகத்தில், தாவரக் கூட்டங்கள் பல அடுக்குகளில், பல வரிசைகளில் அமைந்திருக்கும். பூவாத் தாவரச் சமூகத்தில், மரங்களின் கீழே தரையில் பாசி போன்ற பூவாத் தாவரங்கள் காணப்படும். தாவரக் கூட்டம் வளர்ச்சி அடையும் போது, ஒரே வாழ்விடத்தில் மாறுபட்ட பல தாவரத் தொகுதிகள் வந்தடையும். வழி முறை வளர்ச்சி, படிப் படியாகத் தொடர்ந்து, இறுதியில் வாழ்விடக் காரணிகளுக்குச் சமமான தாவரத் தொகுதியில் நிலையாக்கப் படும். உச்ச நிலைத் தாவரக் கூட்டமே இறுதியில் நிலையாகும். வழி முறை வளர்ச்சி, நீர் வளமுடைய இடத்திலிருந்து தொடங்கினால், அது நீர் வழி முறை வளர்ச்சி எனப்படும். வறண்ட வாழ் இடங்களிலிருந்து தொடங்கினால், வறள் நில வழி முறை வளர்ச்சி எனவும், தாவரங்களே இல்லாத பாறையிலிருந்து தொடங்கினால், பாறை வழி முறை வளர்ச்சி என்றும் குறிக்கப்படும். ஒரு நிலையில் உள்ள தாவரத் தொகுதிகள், அடுத்த நிலைக்குரிய தாவரத் தொகுதிக்கு வழி வகுத்து, வழி முறை வளர்ச்சியை உச்ச நிலைத் தாவரக் கூட்டத்திற்குக் கொண்டு செலுத்தும். வழி முறை வளர்ச்சிகள் எத்தகைய சூழலில் தொடங்கினாலும், இறுதியில், இடைநிலைத் தாவரங்களை நோக்கியே அமைகின்றன. சூழ்நிலைக்குத் தக்கவாறு, தாவரங்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றன. அதிக மழை அல்லது அதிக வெப்ப நிலை அல்லது மேடு, பள்ளத்தாக்குப் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளுக்குத் தகுந்தவாறு, பல வகைத் தாவரக் கூட்டங்கள் உருவாகியுள்ளன. வெப்ப மண்டலக் காடுகளில், அடுக்குத் தாவரத் தொகுதி உச்ச நிலை அடைகிறது. இலையுதிர்க் காடுகளில், தாவரங்கள் வெப்பக் காலத்தில் இலைகளை உதிர்த்து விடும். இவை, பெரும்பாலும், இடை நிலைத் தாவரத் தன்மையைக் கொண்டவை. முட்காடுகள், குறைந்த மழையும், அதிக வெப்பமும் உள்ள இடங்களில் காணப்படும். பெரும்பாலான தாவரங்கள், இடை நிலைத் தாவரங்களாகவும், வறள் நிலத் தாவரங்களாகவும் (xerophytes) இருக்கும். தொற்றுத் தாவரங்கள் பிற தாவரங்களின் மேல் வளரும். ஆனால், எந்தவித உணவையும் பிற தாவரங்களிலிருந்து அவை பெறா. கடற்கரை மணல் தாவரங்கள் பெரும்பாலும், வறள் நிலத் தாவர உருவ அமைப்பைப் பெற்றிருக்கும். உவர் தாவரங்கள், உவர் நிலங்களில் வளரப் பல தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.உவர் சதுப்புத் தாவரங்களை வெப்ப மண்டலக் கடல்களிலும், தட்டையான மண் நிறைந்த கடல்களிலும், கழிமுகப் பகுதிகளிலும் காணலாம். இவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளர, பல தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. தங்களுடைய உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் தாவரங்கள், தன்முனைப்பு உயிரிகள் (autotroph) என்றும், உணவிற்காகப் பிறவற்றைச் சார்ந்துள்ளவை பிற முனைப்பு உயிரிகள் (heterotroph) என்றும் பிரிக்கப்படும். பச்சைத் தாவரங்கள் தன்னிச்சையானவை அல்ல. அவை சூழ்நிலைக் காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்ட உயிரினங்களாகும். மண், ஈரம், காற்று, வெப்ப நிலை போன்ற காரணிகளின் கூட்டே சூழ்நிலை என்று கூறலாம். உயிரினத்தைப் பாதிக்கும் எந்த நிலையும்–எந்தப் பொருளும் காரணி எனப்படும். ஒரே வகையான அமைப்புடைய இடமே வாழ்விடம் என்று குறிப்பிடப் படும். காரணிகளைத் தட்ப வெப்பக் காரணிகள், நிலக் காரணிகள், உயிர்க் காரணிகள் எனப் பிரிக்கலாம். மழை, வளிம மண்டல வெப்ப நிலை முதலியன தட்ப வெப்ப நிலைக் காரணிகளில் அடங்கும். நிலக் காரணிகளில், மண்ணின் தன்மை, ஈரம், வெப்ப நிலை முதலியன அடங்கும். உயிர்க் காரணிகளில் சாறுண்ணிகள், புல் உண்ணும் விலங்குகள் முதலியன அடங்கும். சூழ்நிலையின் அனைத்துக் காரணிகளும், உயிரினத்தைப் பாதிக்க வல்லன. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட காரணி மட்டுமே முதன்மை வாய்ந்ததாக, ஆளுமையுடன் வரையறை செய்ய வல்லதாக இருக்கும். சுற்றுப்புறச் சூழல் காரணிகளால், தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்தால், ஒவ்வொரு காரணியும் தனிப்பட்ட வினையியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தெரிய வரும். காரணிகள், உயிரினங்களைப் பாதிப்பதோடு அல்லாமல், தங்களுக்குள்ளேயே ஒன்றையொன்று பாதிக்கக் கூடியவையாகவும் உள்ளன. பல காரணிகள் ஒரே சமயத்தில் தாவரத்தைப் பாதிப்பதால், தாவரத்தின் ஒவ்வொரு செயலும், பல காரணிகளால் கட்டுப் படுத்தப்படும். தாவரத்தின் செயல்பாடு சூழ்நிலையால் தூண்டப்பட்டு நிகழ்கிறது. தூண்டுதல் நின்று விட்டால், துலங்கலும் தடைப்படும். தாவரங்களைப் பாதிக்கும் சூழ்நிலையின் பல்வேறு தன்மைகள் அல்லது காரணிகளை அளந்தறிவது எளிதன்று. வளி மண்டலத்திலுள்ள தன்மைகளின் அளவை விட, தாவரத்தைச் சூழ்ந்துள்ள வளி மண்டலத்தில் ஏற்படும் தட்ப வெப்ப வேற்றுமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அவையே தாவரத்தைப் பாதித்து, பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஒரு காரணி, பிறிதொரு காரணியின் குறைபாட்டை ஈடு செய்கிறது. எடுத்துக் காட்டாக, குறைவான மழையால் ஏற்படும் விளைவை உயர்ந்த நீர் மட்டம் அல்லது தாழ்ந்த வெப்ப நிலை சீர் செய்து விடும். மண்ணிலுள்ள தாது உப்புகள் ஒன்றையொன்று ஈடு செய்கின்றன. காரணிகள் தனித் தனியாகத் தோற்றுவிக்கும் விளைவும், அவை ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் விளைவும் ஒரே வகையாக இருப்பதில்லை. சூழ்நிலையின் காரணிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும், தொடர்ந்து மாறிக் கொண்டும் உள்ளமையாலும், விளைவுகளைத் தாமதமாகப் எதிர்பலிப்பதாலும், எந்தக் காரணியை மாற்றினாலும், எதிர்பாராத விளைவுகள் உண்டாகும். சூழ்நிலையில் ஏற்படும் தட்டுப்பாடுகளையும், குறைபாடுகளையும் சிறிது காலமே தாவரங்கள் சரி செய்து கொள்ள இயலும். தாவரத்தின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நிலையில், தாங்க முடியாத அளவிற்கு எந்தக் காரணியின் முனைப்பு மிகுந்தாலும், குறைந்தாலும், அந்தக் காரணியைச் சீர் திருத்தித் தாவரத்தின் செயல் முறையை மாற்றலாம். —கு. பத்மநாபன் நூலோதி. R.L. Smith, Ecology and Field Biology, Harpe Publication, New York, 1966. சூழ் வலைகள் ரோமானியர்களே சூழ் வலைகளை (seines) முதன் முதலில் பயன் படுத்தியவர்கள். ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளுக்குக் கூட்டங் கூட்டமாகச் சேர்கின்ற நெத்திலி (anchovies), பாறை (carangids) போன்ற மீன்களைப் பெருமளவில் பிடிக்கவே இத்தகைய வலைகள் பயன்படுகின்றன. சூழ் வலைகள் (trawl nets) உருவ அமைப்பில் இழு வலைகளை ஓரளவு ஒத்திருந்தாலும், இயக்கத்தில் இரண்டும் மாறுபட்டுள்ளன. இழுவலைகள் தோணியின் விசையோடு, பல பகுதிகளின் அடிமட்டத்தில் சென்று, மீன், இறால், நண்டு போன்றவற்றைச் சேகரிக்கும். சூழ் வலைகள் ஒரே இடத்திலுள்ள மேல் மட்ட மீன்களைச் சேகரிக்கும். சூழ்வலைகள் பையுள்ள வலைகள், பையற்ற வலைகள் என இரு வகைப்படும். பையுள்ள வலைகள் வால் பகுதியில் புனல் போன்ற பையையும் (bag) அதிலிருந்து பக்கத்திற்கொன்றான சிறகு போன்ற அமைப்பையும், சிறகுகளின் முடிவில் வலிமை இழு கயிறுகளையும் பெற்றிருக்கும். பையுள்ள சூழ் வலைகளில் இரண்டு சிறகுகளின் மையத்திலோ, ஒரு சிறகின் மையத்திலோ பைகள் அமைந்திருக்கும். மேலும், ஒரே சூழ்வலையில் பல பைகளும் காணப்படும். பல செவ்வக வலைத் துண்டுகளால் ஆக்கப்பட்ட பையற்ற வலைகள், முடிவில் வலிவான இழு கயிறுகளைக் கொண்டிருக்கும். (படம் 1–3). இரண்டாம் வகை வலைகளில் பை இல்லாவிடினும், மீன்களைச் சேகரிப்பதற்கு ஏற்ற குமிழ் போன்ற தொய்வான அமைப்புகள் இருக்கும். கடற்கரைச் சூழ் வலைகளின் (Beach seines) அமைப்பு. பைகளற்ற சூழ் வலைகள் பருத்தி அல்லது சணலால் ஆக்கப்பட்டவை. 2–6 மீ. நீளமும் 5–11 மீ. உயரமும் கொண்ட, 100–600 செவ்வக வலைத் துண்டுகளால் இவ்வலைகள் உருவாக்கப்படும். ஓரத் துண்டுகளில் 3–5 செ.மீ. துளைகளும் (mesh apertures). நடுத் துண்டில் 1.2–2 செ.மீ துளைகளும் இருக்கும். இச் சூழ் வலைகளின் வால் பகுதியில் பைகள் அமைந்திருக்கும். இப்பைகள் 7.5 மீ. நீளத்தையும் 2.7மீ. அகலத்தையும் கொண்டவை. பையின் இறுதியிலுள்ள துளைகள் 0.8 செ.மீ ஆகவும், வாய்ப் பகுதியில் உள்ள துளைகள் 1.7 செ.மீ. ஆகவும் இருக்கும். இறகு பகுதியின் ஒரு பக்க நீளம் 3–6 மீ. இதன் அடிப் பகுதித் துளை 15–23 செ.மீ ஆகும். இழு கயிற்றின் அண்மைப் பகுதி 60–90 செ.மீ ஆக இருக்கும். பையற்ற ஒரு பெரிய முழு வலையை இயக்க, 60–80 மனிதர்களும், ஒரு பெரிய தோணியும், 4 சிறு தோணிகளும் தேவை. வலையின் ஒரு பக்க இழு கயிற்றைக் கரையில் நிலைப் படுத்திய பிறகு, பெரிய தோணி ஒன்று 10–20 மனிதர்களுடன், வலையின் எஞ்சிய பாகத்தைக் கடலினுள் எடுத்துச் சென்று, குறிப்பிட்ட இடத்தில் அரை வட்ட வடிவமாக வலையை வீசியெறிந்த பிறகு,வலையின் மற்றோர் இழு கயிற்றைக் கரைக்கு எடுத்து வரும். இதன் பின், பெரிய தோணி சூழ் வலையின் நடுப் பகுதியில் நங்கூரத்தால் நிலைப்படுத்தப்படும். சிறிய தோணிகள் ஒவ்வொன்றிலும் 6–8 பேர் சென்று, மீன் கூட்டங்களைச் சூழ் வலைக்குள் துரத்துவர். எதிர் எதிர் உள்ள இழு கயிறுகளை 25க்கும் மேற்பட்டோர் கரையில் நின்றவாறே இழுத்து மீன்களைச் சேகரிப்பர். கரைச் சூழ் வலைகள் மூலம் அவ்வப்போது மீன்களைச் சேகரித்தாலும், 8 நாள் தொடர்ந்து இயக்கியும், மீன்களைச் சேகரிப்பதுண்டு. சூழ் வலைகள் ஆழ் கடலில் முழுமையாகத் தோணிகளின் உதவி கொண்டு இயக்கப்படுவதுண்டு. இவ்வாறான சூழ் வலைகளைத் தோணிச் சூழ் வலை (boat seines) என்பர். உலகின் பல பகுதிகளில், இத்தகைய வலைகள் பேரளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறத் தாழ, 500 பேரின் துணை கொண்டு, நியூசிலாந்து கடலில் இயங்கும் 2 கி.மீ நீளமுள்ள கரை வலைகள் குறிப்பிடத் தக்கவை. கரை வலைகள் தோணிகளின் துணை இல்லாமல், நன்கு நீந்தக் கூடிய மீனவர்களால், சில உலகக் கடல்களில் இயக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. எனினும், இத்தகைய சூழ் வலைகளை இயக்குவதற்குக் கரடு முரடற்ற தரைப் பகுதிகளும், அலை வேகம் குறைந்த பகுதிகளுமே மிகவும் ஏற்றவை. சூழ் வலைகளை இயக்கும் போது ஏற்படும் ஒலியின் காரணமாக, மீன்கள் வலையினுள் வந்து சேர்வதற்கு வாய்ப்பு இருப்பினும், மிகுந்த ஒலியை உண்டாக்க இலை, இலைக் குச்சி போன்றவற்றை இழு கயிறுகளில் கட்டி, மீன்களைத் திகிலடையச் செய்வதுண்டு. எனினும், சூழ் வலைகளின் மீன் பிடி திறனை அதிகரிக்க, இவற்றில் மின்னாற்றலைப் பயன்படுத்தி, மீன்களை அச்சுறுத்தி ஒரே இடத்தில் நிலைக்காதவாறு செய்கின்றனர். இதற்குத் தாமிரக் கம்பிகளை மிதவைக் கயிற்றிலும், பளுக் கயிற்றிலும் இணைத்து, மின்னோட்டக் கம்பிகளாக (electrodes) அவற்றைப் பயன்படுத்தலாம். அருகில் நிலை நிறுத்தப்பட்ட தோணியிலிருந்து, மின் உற்பத்தி செய்து இக்கம்பிகளுக்கு அனுப்புவர். மீன்கள் பிடிபட்டவுடன், சூழ் வலைகளில் நீண்ட நேரம் இருக்க வேண்டியுள்ளமையால், இவ்வலைகளில் பயன்படக் கூடிய மின்ஆற்றலின் அளவைத் தேர்வு செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். பொதுவாக, மின்னாற்றல் பெறுகின்ற சூழ் வலைகளின் சிறகுப் பகுதிகள் குட்டையாகவே அமைக்கப் படும். —இரா, சந்தானம் நூலோதி. A.V. Brandt, Fish Catching Methods of the World, Fishing New (Books) Ltd., London, 1972; C.V. Kurian, and V.O. Sebastian, Prawns and Prawn Fisheries of India, Second Edition, Hindustan Publishing Corporation (India), New Delhi, 1982. சூழ்வளிப் புற வெப்ப இயல் உலர் காற்றும், நீராவியும் கலந்த கலவையைப் பற்றி விளக்கும் அறிவியலின் ஒரு பகுதி, சூழ்வளிப் புற வெப்ப இயல் எனப்படும். காற்றுக் குளிரூட்டல் சுமை, இரும்பு அமைப்புகள் வழியாக நிகழும் வெப்பச் செலுத்துதல், குளிரூட்டும் கோபுரங்கள் போன்றவற்றைக் கணக்கீடு செய்வதற்கு இவை அடிப்படையாக உள்ளன. வளி மண்டலம் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான், கார்பன் டைஆக்சைடு, நீராவி போன்ற பல வளிமங்களின் கலவையாகும். ஆனால், பொதுவாக, குளிர்விப்புக் கணக்கீடுகளுக்காக வளி மண்டலம் காற்றும், நீராவியும் கலந்ததாகக் கருதப் படுகிறது. முதன்மை வரையறைகள் உலர் காற்று. அனைத்துலக இணைக் குழுவின் கூற்றுப்படி, ஆக்சிஜன் -0.2095, நைட்ரஜன் -0.7809, ஆர்கான் -0.0093, கார்பன் டைஆக்சைடு 0.0003 என்னும் மூலக்கூறு விகிதங்களை உலர் காற்றுக் கொண்டுள்ளது.ஈரப்பதமிக்க காற்று. இது உலர் காற்றும், நீராவியும் கலந்த கலவையாகும்; நீராவியின் அளவு காற்றில் வெப்புநிலைக்குத் தக்கவாறு மாறும். நீராவி. காற்றில் கலந்துள்ள நீராவியே, ஈரப் பதம் எனப்படும். காற்றுக் குளிரூட்டலில், ஈரப் பதத்தின் அளவை அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். ஈரப் பதம் எவ்வளவு மிகுதியான நீராவியைத் தன்னால் பெற முடியுமோ, அந்த அளவைப் பெற்றால், ஈரப் பதம் நிறைவடைந்து விட்டதெனக் கொள்ளலாம். இவ்வகைக் காற்று, கண்களுக்குத் தெரிவதில்லை. இத்துடன் சிறிதளவு நீரைச் சேர்த்தால், நீர்த் துளி காற்றில் மிதந்து, மூடு பனியை உருவாக்கும். காற்றும், நீராவியும் கலந்த கலவையின் வெப்ப நிலை, நீராவியின் சமன்படு வெப்ப நிலையை விட மிகுதியாக இருப்பின், நீராவி மிகுதியாகச் சூடாக்கப் பட்ட நிலையில் உள்ளது எனலாம். தனி ஈரச் செறிவு அல்லது ஈரச் செறிவு விகிதம் என்பது நீராவியின் எடைக்கும், காற்றும் நீராவியும் கலந்த கலவையில் உள்ள உலர் காற்றின் தனி எடைக்கும் உள்ள விகிதம் ஆகும். முதல் ஈரச் செறிவு அல்லது நீராவியின் அடர்த்தி. இது காற்று, நீராவிக் கலவையில் உள்ள நீராவியின் எடை (கி.கி./மீ³.) ஆகும். ஈரப் பத விகிதம். இது நீராவியின் எடைக்கும், அடிப்படை அளவிலான நீராவிச் சாற்றுக் கலவையில் உள்ள உலர் காற்றின் எடைக்கும் உள்ள விகிதம் ஆகும். சமன் படு நிலை. இது ஒரே உலர் குடுவை வெப்ப நிலை மற்றும் அழுத்தம் இவற்றில் வழக்கமான ஈரப் பத விகிதத்திற்கும், சமன் நிலை ஈரப் பத விகிதத்திற்கும் உள்ள விகிதம் ஆகும். W = ஒரு கிலோ உலர் காற்றில் அடங்கியுள்ள ஈரப் பதம் எனவும், Wg = ஒரு கிலோ உலர் காற்றை, அதே உலர் குடுவை வெப்ப நிலையில் சமன்படுத்தத் தேவையான ஈரப் பதம் எனவும் கொண்டால், μ = தனித்த ஈரப்பதம் அல்லது ஆவியின் அடர்த்தி. கன மீட்டர் (மீ³) கன அளவுள்ள காற்று மற்றும் ஆவி கலந்த கலவையில் உள்ள நீராவியில் உள்ள எடையே தனித்த ஈரப் பதம் அல்லது ஆவியின் அடர்த்தி எனப்படும். சார்பு ஈரப் பதம். இது கொடுக்கப்பட்ட கன அளவிலுள்ள நீராவியின் உண்மையான எடைக்கும், காற்று நிறைவடையும் போது வெப்ப நிலை கொண்ட கன அளவில் உள்ள நீராவியின் எடைக்கும் உள்ள விகிதம் ஆகும். உலர் குடுவை வெப்ப நிலை. ஈரப் பத விகிதம் அல்லது வெப்பக் கதிர் வீச்சு இவற்றின் தாக்கம் இல்லாத வெப்ப நிலை அளவியில் பதிவு செய்யப் படும். வெப்ப நிலையே, உலர் குடுவை வெப்ப நிலை எனப் படும். பனிப் புள்ளி வெப்ப நிலை. ஈரப் பத விகிதத்திற்கும், பாரமானியின் அழுத்தத்திற்கும் உரிய சமன் படும் வெப்ப நிலை, பனிப் புள்ளி வெப்ப நிலை எனப்படும். இது ஈரப் பதம் மிகுந்த காற்றுக் கலவை சீரான அழுத்தத்தில் குளிர்விக்கப்படும் வெப்ப நிலையே ஆகும். உலர் குடுவை வெப்ப நிலைக்கும் பனிப் புள்ளி வெப்ப நிலைக்கும் உள்ள வேறுபாடு பனிப் புள்ளி இறக்கம் எனப்படும். ஈரக் குடுவை வெப்ப நிலை. இது காற்றோட்டமுள்ள ஈரமான துணியால் சுற்றப் பட்டிருக்கும். குடுவையைக் கொண்ட வெப்ப நிலை அளவியில் கிடைத்த வெப்ப நிலை ஆகும். உலர் குடுவை வெப்ப நிலைக்கும், ஈரக் குடுவை வெப்ப நிலைக்கும் உள்ள வேறுபாடு இறக்கம் எனப்படும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964. சூழல் தடைகள் ஓரிடத்தின் சூழல் பல்வேறு சூழ்நிலைக் காரணிகளால் அறுதியிடப்படுகிறது. பல்வேறு சூழ்நிலைத் தடைகளான (ecological barriers) சூரிய ஒளி, வெப்ப நிலை, நீர், ஊட்டச் சத்து, உயிர்க் காரணிகள் ஆகியவை வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கின்றன. சில காரணிகள் மறைமுகமாகவும் பாதிக்கின்றன. எடுத்துக் காட்டாக, ஓரிடத்தின் தாவர இனத்தை ஒளி நேரடியாகப் பாதிக்கிறது. அதே சமயத்தில், சூழ்நிலையின் தன்மைகள் அனைத்தும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. இவை யாவும் இணைந்து, ஓரிடத் தாவரத்தின் சமூகத்திற்கு அடிப்படையாகின்றன. அனைத்துத் தாவரங்களும், பொதுவாக ஒரே தேவையைக் கொண்டுள்ளமையால், தாவரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. நீர், ஊட்டச் சத்து, சூரிய ஒளி முதலிய தன்மைகள் தகுந்த அளவு இல்லாத போதோ, வளர்ச்சிக்கேற்ற வெப்ப நிலை இல்லாத போதோ தாவர இனங்கள் ஓரிடத்தில் தொடர்ந்து நிலைத்து வாழா. சூழ்நிலைக் காரணிகளில் பற்றாக் குறை பெருகும் போது, அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வது கடினமாகும். சூழல் ஏற்புத் திறன் கொண்ட சில தாவரங்கள் (ecotypes) மாறுபட்ட சூழ்நிலைத் தடைகள் உள்ள இடங்களில் வளர்வதற்குப் பல்வேறு புறத் தகவமைப்புகளையோ, தகுந்த வினையியல் மாற்றங்களையோ கொண்டு தனித்து விளங்குகின்றன. இயற்கையில் தாவர இனங்கள் போதுமான வளர்ச்சியைக் கொண்டிருந்த போதும், பெரும் போட்டியின் காரணமாக, நிலைத்த தன்மையைப் பெறாமலும் போகலாம், மண்ணின் அமில–காரத் தன்மை, உவர் களர் நிலங்கள், அதிக வெப்பம் அல்லது உறை பனி, ஊட்டச் சத்துப் பற்றாக்குறை, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதிப்பு, காற்றோட்டமின்மை போன்ற சூழ்நிலைத் தடைகள், தாவர இனங்கள் குறிப்பிட்ட இடத்தில் செழித்து வளர்ந்து நிலைத்து நிற்கவோ, வளராமல் அழியவோ காரணமாக உள்ளன. மேற்கூறிய தடைகளைத் தவிர, கடினமான சூழ்நிலையில் ஒரு தாவர இயல் வளர, அதன் தகவமைப்புகளும், வினையியல் ஆற்றல்களும் காரணமாக உள்ளன. தாவர இனங்கள் ஓரிடத்திலிருந்து புதியதோர் இடத்திற்குப் பரவவும், புதியதொரு சூழ்நிலையில் வளரவும், பல்வேறு சூழ்நிலைத் தடைகள் காரணமாகின்றன. இவற்றில் சில நிலையில்லாத் தடைகளாகவோ, நிலையான தடைகளாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக, மலைத் தொடர், அமில–கார நிலங்கள், திறந்த புல் வெளிகள், நில அமைவு (topography), பயிர் செய்யும் முறைகள், எரித்தல் முதலியனவாகும். நிலையில்லாத் தடைகள் சில ஆண்டுகள் நிலைத்து நிற்கும். நீர் தேங்கியுள்ள குட்டைகள், பெரிய ஏரி முதலானவை முழுமையற்ற அல்லது முழுமையான தடைகளாகவும் இருக்கலாம். இவை, சில நீர்த் தாவரங்கள் அல்லது நிலத் தாவரங்கள் பரவுதலுக்குத் தடைகளாக உள்ளன. நீர் நிரம்பியுள்ள ஏரி, நிலத் தாவரங்களும் வறள் நிலத் தாவரங்களும் வளரத் தடையாக உள்ளது. வறண்ட பாலைவனங்கள் புது வகைத் தாவரங்கள் வளர ஏற்றவாறு இல்லை. உயிர்க் காரணித் தடைகளான மனிதன், விலங்கு, ஒட்டுண்ணித் தாவரங்கள் (parasites) முதலியன புதியதொரு தாவரக் கூட்டம் பரவி, நிலைக்கத் தடைகளாக உள்ளன. நிழல் தாவரங்கள் திறந்த புல் வெளிகளில் வளரா. அவ்வாறே, அடர்ந்த காடுகளில் காணப்படும் குறைந்த சூரிய ஒளி, அதிக நீர் முதலான ஒளி நாட்டத் தாவரங்கள் (sun-loving plants) வளரத் தடைகளாக உள்ளன. மனிதன், விலங்கு, வெள்ளம் முதலானவை புதிதாக ஒரு தாவர இனம் அமையவோ, அங்குள்ள தாவர இனம் அழியவோ காரணமாக உள்ளன. மகரந்தச் சேர்க்கைக்குத் தேவையான குறிப்பிட்ட வண்டினங்கள் ஓரிடத்தில் இல்லாவிடில், குறிப்பிட்ட தாவரங்கள், இனப் பெருக்கம் செய்ய இயலாமல் அழிந்து விடும். இவ்வாறு சில சூழ்நிலைத் தடைகள் தாவர இனங்கள் பரவுவதற்குத் தடைகளாக உள்ளன. மண்ணின் அமில–காரத் தன்மை சில தாவர இனங்கள் நன்கு வளரவும், வேறு சில தாவரங்கள் வளரத் தடையாகவும் உள்ளது. மண்ணின் pH 4 க்குக் கீழும், pH 9க்கு மேலும் இருந்தால், தாவரங்கள் வளரா. தாவரங்கள் வளர்வதற்குத் தேவையான தாதுப் பொருள்கள் அல்லது ஊட்டச் சத்துகள், அதிக அமில–கார நிலங்களில் பயனற்றவையாக மாற்றப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, அமில நிலங்களில் இரும்புச் சத்து, மாங்கனீஸ், அலுமினியம் போன்றவை நச்சுத் தன்மை உண்டாக்கும் அளவில் பெருகித் தாவரங்கள் அழியக் காரணமாக உள்ளன. கார நிலங்களில், மண்ணின் செயல்களால், ஊட்டச் சத்துகள் பயனற்ற அயனிகளாக மாற்றப்பட்டுத் தாவர வளர்ச்சிக்குக் கிடைப்பதில்லை. நிலத்தில் 0.5%க்கு மேல் உப்புகள் இருக்குமேயானால், தட்ப வெப்ப நிலை அல்லாமல், நிலத்தின் தன்மையே, தாவர சமுதாயத்தை அமைக்கிறது. குதிரை மசால் தாவரம் pH 7–7.5 வரை உள்ள நிலத்தில் நன்கு வளரும். ஓட்ஸ் தாவரம் குறிப்பாக pH 5 உள்ள நிலத்தில் செழித்து வளரும். உவர் நிலங்களில் வளரும் தாவரங்கள், பல புறத் தகவமைப்புகளைப் பெற்றுள்ளமையால், வேறுபட்ட சூழ்நிலையிலும், சூழ்நிலைத் தடைகளால் பாதிப்பின்றி வளரும். இத்தகைய தாவரங்களின் வேர்ப் பகுதி நீண்டும், தண்டுப் பகுதி சதைப் பற்றுடனும், பச்சையத்துடனும் காணப் படுகின்றன. கனிகளிலேயே விதை முளைக்கும் திறன், குறைவான நீராவிப் போக்கு போன்ற தகவமைப்புகளையும் கொண்டு, தனித் தன்மையுடன் வளருகின்றன. பிற தாவரங்கள் உவர் மண்ணில் நன்கு வளரா. ஒரு தாவர சமூகம் ஓர் இடத்தில் நிலைத்து வளர, நில நீரின் அளவு முக்கிய காரணமாக உள்ளது. ஈரமான இடத்தில் வளரும் தாவரங்கள், வளி மண்டலத்தில் ஈரம் மிகுந்துள்ள இடங்களிலேயே வளர வல்லன. பெரணி வகைகள் ஈரம் நிறைந்த நிழலான வெப்ப மண்டலக் காடுகளிலேயே மிகுதியாக வளரும். மலையைக் கடக்கும் வெப்பக் காற்று உயரே சென்று, சரிவில் பொழிகிறது. கடலை நோக்கி இருக்கும் மழைச் சரிவில் மழை மிகுந்தும், நிலப் பக்கத்தை நோக்கி இருக்கும் சரிவில் மழை குறைந்தும், இருக்கும். இவ்விரு பக்கங்களிலும் வளரும் தாவர வகைகள், பெய்யும் மழையின் அளவிற்கு நேர் விகிதத்தில் இருக்கும். வெப்ப நிலை, தாவரங்களில் அளவியலான மாற்றங்களையும், பண்பியலான மாற்றங்களையும் உண்டாக்குகிறது. மித வெப்பப் பகுதித் தாவரங்கள் 5°Cக்கு வளருவதில்லை. அதிக வெப்ப நிலையில் வளரும் தாவரங்கள், அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் பெற்றோ, புறத் தகவமைவுகளால் அதிக வெப்பத்தைத் தவிர்த்தோ வளர்கின்றன. பிற சாதாரண நிலத் தாவரங்கள், அதிக வெப்பத்தைத் தாங்கி வளர இயலாமல் அழிந்து விடுகின்றன. காற்றின் வேகமும், இலைப் பரப்பின் அளவும், இலையின் வெப்ப நிலைக்கு அடிப்படையாகின்றன. வறண்ட சூழ்நிலையில் காற்றின் வெப்ப நிலை 45°Cக்கு அதிகமாவதால், அகன்ற இலையுடைய தாவரங்கள் அழுகி விடுகின்றன. ஆதலால், சிறிய இலைகளையுடைய தாவரச் சமூகமே வெப்பமான வறண்ட சூழ்நிலைகளில் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறனைக் கொண்டு வளரும். உறை பனியின் தாக்குதலிலிருந்து, தாவரங்கள் தங்களைக் காத்துக் கொள்ளப் பல தகவமைப்புகளையும், வினையியல் தன்மைகளையும் கொண்டிருக்க வேண்டும். முட்டைக்கோஸ், கோதுமை, இலையுதிர் காடுகளில் உள்ள மரங்கள் முதலியன குறைந்த வெப்ப நிலையில் கடினமாதல் தன்மைக்கு உள்ளாக்கப்பட்டு, பிறகு உறை பனியைத் தாங்கும் திறனைப் பெற்று வளர்கின்றன. ஒரு தாவரம் வளர ஏதுவான இயங்கு நிலை, அதனுடைய மரபு வழிச் செயல் ஆக்க முறையால் (physiological genetics), கட்டுப்படுத்தப் படுகிறது. உயர்ந்த வெப்ப நிலையிலும், சில தாவரங்கள் கடினமாகும் தன்மை அடைகின்றன. இவ்வகைத் தாவரங்கள் 55°Cக்கு வெப்பத்தையும் தாங்கி வளர வல்லவை. மண் வாழ் உயிரிகளில் பல நுண்ணுயிர்கள் செயல்படும் போதே, ஒவ்வொரு வேதி நிலையும் இயங்கி இடைப் பொருள் கிடைக்கும். மேட்டுப் புவியில் இலைமட்கு (peat) உண்டாவதற்கு வெப்ப நிலை ஏற்றதாக இருக்க வேண்டும். காற்றோட்டம் குறைவாக உள்ள நிலத்தில், ஒடுக்கும் செயல்கள் (reduction reaction) மிகுதியாக நிகழ்வதால், அவை தாவர இனங்கள் வாழத் தடையாக உள்ளன. குறைந்த காற்றோட்டத்தால், மண்ணில் வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிர்கள் நன்கு வளர்ச்சியடையா. மேலும், நச்சுப் பொருள்கள் குறைவான காற்றோட்டமுள்ள இடங்களில் உண்டாவதால், அவை தாவரங்கள் வளர்ந்து நிலைத்து நிற்கத் தடையாக உள்ளன. மேற்கூறிய சூழ்நிலைக் காரணிகளால் ஏற்படும் தடைகளைக் குறிப்பிட்ட சில தாவர இனங்கள் வென்று நிலைத்து நிற்கின்றன. வேறு வகைத் தாவரங்கள் மாறுபட்ட சூழ்நிலைத் தன்மைகளில் வளரா. ஓரிடத்தின் நில அமைப்பு, தட்ப வெப்பக் காரணிகளைப் பொறுத்துத் தாவர சமுதாயம் அமைகிறது. —கு. பத்மநாபன் நூலோதி. H. G. Jones, Plants and Microclimate, Cambridge University Press, Cambridge, 1983; A.C.Leopold and P.E. Kriedemann, Plant Growth and Development, Tata McGraw-Hill Pub. Co.. New Delhi, 1980. சூழல் பொறியியல் வாழுமிடங்களில், சுற்றுப்புறங்களில் ஏற்படும் விளைவுகளை மதிப்பீடு செய்து சுற்றுப்புறம் கெடுவதை இயன்ற வரை குறைப்பதற்கு உருவாகும் கல்வி, சுற்றுச் சூழல் பொறியியல் (environmental engineering) எனப்படும். சமூகத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்து, ஆடம்பர வாழ்விற்கு வழி வகுத்த தொழில் நுட்பத்தால், சுற்றுப்புறச் சீர் கேடு வாராமல் தடுக்க, சுற்றுச் சூழற் பொறியாளர்கள் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும், மாசுகளைத் திறமையாகக் கட்டுப் படுத்தும் தூய்மை முறைகளையும், அனைத்துக் கழிவுகளையும் தூய்மை செய்து, மீண்டும் பயன்படுத்த வகை செய்யும் சுழற்சி முறைகளையும் வடிவமைப்பதே தொழிற்சாலை மற்றும் அரசுச் செயலமைப்புகளின் குறிக்கோளாகும். மாசுபடுத்தும் பொருள்களைச் சுற்றுப் புறங்களில் கொட்டுவதை முறைப்படுத்தும் செந்தரங்களும், வரைமுறைகளும் தொழிற்சாலைப் பணிகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. நாட்டுச் சுற்றுச் சூழற் சட்டம் அரசு ஒழுங்கு முறைச் சட்டத்தின் ஒருங்கமைவிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். இச்சட்டம், அரசுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொடர்புடைய தொழில் மற்றும் அரசு நடவடிக்கை ஒவ்வொன்றுக்கும் முன்பாகச் சுற்றுப்புறத்தின் மீதான தாக்கங்களை நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இதே போன்று, இந்தக் கூட்டரசின் சட்டத்திற்குப் பிறகு, உருவாக்கப்பட்ட மாநிலச் சுற்றுப்புறக் கொள்கைச் சட்டங்களும், மிக விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிடுகின்றன. இந்த ஆய்வுகள் பின் வரும் நடவடிக்கைகளுக்கு முன்னர்ச் செய்யப் பட வேண்டும். மின் நிலையம் மற்றும் செலுத்தத் தொடர்கள் (transmission lines), எரி வளிமத் துளைகள், இருப்புப் பாதைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், அணுவாற்றல் வசதிகள், விமான தளங்கள், சுரங்க வசதிகள் ஆகியன அமைத்தல்; போக்குவரத்துக்குப் பயன்படும் நீர் நிலைகளிலும், அவற்றின் கிளை நதிகளிலும், கழிவுகள் நிறைந்த நீர்மங்களைக் கலந்து விடும் தொழில் நிறுவனங்கள்; சாலை முன்னுரிமைகள், ஆழ் துளை அனுமதிகள், தாதுப் பொருள் வெட்டிக் கொள்ள குத்தகை மற்றும் பொது நிலத்தைப் பயன்படுத்தல். 1970 டிசம்பரில், குடியரசுத் தலைவரின் ஆணையின் படி, சுற்றுப் புறப் பாதுகாப்பு நிறுவனம் (Environmental Protection Agency–EPA) உருவாக்கப்பட்டது. தூய்மையான காற்று மற்றும் காற்றின் தூய நிலைச் சட்டங்களை மேலும், நீட்டிப்புச் செய்யும் பொதுச் சட்டம் 91–604இன் படி ஓர் ஆணையரைக் கொண்ட இந்நிறுவனத்திற்குச் செந்தரங்களை முடிவு செய்வதும், நீர், காற்று இவற்றின் பண்புகளை உயர்த்துவதற்குக் கால அட்டவணை தயாரிப்பதும், முக்கிய கடமைகளாகும். இரைச்சல் கட்டுப்பாட்டுச் சட்டம், இயற்கை வளங்களை மீளப் பெறும் பாதுகாப்புச் சட்டம், நச்சுப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றையும் இந்நிறுவனமே செயல் படுத்துகிறது. மாநில மற்றும் உள்ளூர் அரசுகளுக்கு நீர், காற்று ஆகியவற்றால், மாசுகளைக் கட்டுப்படுத்தவும், கழிவு நீரைத் தூய்மை செய்யும் வசதிகளை ஏற்படுத்தவும், நல்கைகள் வழங்குகிறது. தொழில் கொள்கை. தொழில் துறைச் சுற்றுச் சூழல் குழுக்களின் மூலமாகப் பெருந் தொகையையும், தொழில் நுட்ப வளத்தையும் சுற்றுப்புறச் சீர் கேடுகளைக் கண்டு பிடித்து அகற்றுவதற்காகப் பயன்படுத்துகிறது. பல சுற்றுப்புறச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, நல வாழ்வு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல், பொறியியல் போன்ற பல துறை வல்லுநர்களின் கருத்துத் தேவைப்படுகிறது. நீர், காற்று ஆகியவற்றின் சிக்கல்கள் அவற்றிற்கே உரிய அணுகு முறையையும், தீர்வையும் கொண்டுள்ளன. வரைமுறைப்படுத்தும் செந்தரங்கள் (restricting standard) கடுமையாக உள்ளமையால், அனைத்துக் கட்டுப்பாட்டுக் கருவிகளும் தூய்மை மிகுந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும், தனித்தனிக் கட்டுப்பாடு (control) அமைக்கப்பட வேண்டும். வேதியியல் அல்லது இயற்பியல் முறைகளாலோ, இவ்விரண்டும் இணைந்த முறைகளாலோ, தூய்மையைக் கெடுக்கும் பொருள்களை அகற்றித் தூய்மை செய்யலாம். இம்முறைகளால், நீரை மீண்டும் பயன்படுத்தலாமெனக் கருதப் படுகிறது. காற்று அல்லது வளிம நிலையிலுள்ள மாசுகளை வடி கட்டல், உறிஞ்சல் ஆகிய முறைகளால் அகற்றி விட்டுத் தூய்மையான வளிமத்தை, வளி மண்டலத்திற்கு அனுப்பி விடலாம். பிரித்து அகற்றப் பட்ட மாசு உலர்ந்ததாக இருப்பினும், மிகக் கவனமாக அழித்திட வேண்டும். இல்லையேல், வேறு ஒரு புது, நீர் அல்லது காற்று மாசுச் சிக்கல் எழும். இயற்கை வளங்களைப் பிரித்தெடுக்கும் தொழில்கள் நிலப் பரப்பைச் சீர் குலைக்கின்றன. எனவே, சுரங்கத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களிடம் நிலத்தைச் சீர் திருத்தி, முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வரும் பொறுப்பு வழங்கப் படுகிறது. மேற்பரப்பில் தாது வெட்டலின் மீதான கட்டுப்பாடு மற்றும் சீர் திருத்தச் சட்டம் தற்போது, நிலக்கரி வெட்டுவதை மட்டுமே தன் வரம்புக்கு உட்படுத்துகிறது. மேற்பரப்புத் தாதுக்களை வெட்டி எடுக்கும் பணிகளைக் கட்டுப் படுத்துவதற்கும் தாது எடுக்கப்பட்ட பின்னர்க் கை விடப்பட்ட நிலங்களைச் சீர் திருத்தி, முன்பிருந்த நிலைக்குக் கொணரவும், ஒப்புக் கொள்ளப்பட்ட செயல் திட்டங்களை உருவாக்கும்படி மாநிலங்களுக்கு, மைய அரசு ஆணையிடுகிறது. அனைத்துத் தாது வெட்டு நடவடிக்கைகளும், அந்தந்த மாநிலங்களில் உள்ளன. இச்சட்டங்கள் பல ஒப்புக் கொள்ளப் பட்ட செப்பனிடும் திட்டத்தையும், செப்பனிடும் பணி நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தையும், கட்டாயமாக்குகின்றன. காற்றுத் தூய்மையைப் பராமரித்தல். வளிம நிலையிலுள்ள மாசு, பல ஆதார நிலைகளிலிருந்து வருகிறது. இம்மாசின் ஒரு குறிப்பிட்ட பகுதி இயற்கையாலேயே உருவாக்கப்படுகிறது. இதற்குத் தாவரங்களால் ஏற்படும் ஹைட்ரோ கார்பன்கள், மகரந்தம், தூசிகளைச் சுமந்து வரும் பெருங்காற்று, கந்தக டைஆக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவற்றை வெளி விடும் எரிமலைகள், தாவரங்களின் அழிவுகள், விலங்குகளின் கழிவுகள் ஆகியவை காரணமாகின்றன. மனிதனால் ஏற்படும் வளி மண்டல மாசுகளில், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன் துகள்கள், கந்தக ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகியவை பேரளவிலுள்ளன. உட்கனற் பொறியைப் பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் ஊர்திகள் இந்த மாசைத் தோற்றுவிக்கின்றன. அமெரிக்காவில், பெருமளவிலுள்ள மாசுகளில் 50% உட்கனற் பொறியிலிருந்து வருகிறதுஎன்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேறும் பொருள்களைக் கட்டுப்படுத்த, EPA ஒரு தடுப்பு ஒழுங்கு சட்டத்தை இயற்றித் தானோடித் தொழில் நிறுவனங்கள் அதைப் பின்பற்ற வலியுறுத்துகிறது. தானோடிகள் வெளியிடும் கழிவுகளைக் கட்டுப் படுத்த வகை செய்யும் 1970ஆம் ஆண்டு தூய காற்றுச் சட்டம் வினையூக்கி மாற்றிகள் (catalitic converters) காரியக் கலப்பற்ற பெட்ரோலைப் பயன்படுத்துதல் போன்ற செலவு மிகுந்த புகையைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பின்பற்றும்படி விதிக்கிறது. தொழிலகங்களும், எரி பொருளைப் பயன்படுத்தும் இடங்களும் முக்கிய மாசுகளில் 30% அளவிற்கு வெளி விடுகின்றன. நியூயார்க் நகரில் கந்தக டை ஆக்சைடு மற்றும் மிதக்கும் துகள்களின் அளவு 1965இலிருந்து 90% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. எனினும், மூச்சுப் பாதை நோய்களால் ஏற்படும் சரிவு, துன்பம் ஆகியன குறையவில்லை. சுற்றுப்புறக் காற்று, வெளியிடும் புகை ஆகியவற்றிற்கு எல்லா மாநிலங்களிலும், செந்தரங்கள் உள்ளன. இவை தொழிற்சாலைகள், வளிம நிலையம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப் பட்டுள்ளன. புகை போக்கி ஒன்றிலிருந்து வெளி வரும் புகையைக் குறிப்பிட்ட வரம்புக்கு உட்படுத்துவதே, வளிம மற்றும் துகள் கட்டுப்பாட்டிலுள்ள பொதுவான முனைப்பு ஆகும். பயன்படுத்தும் மூலப் பொருளின் எடையை அடிப்படையாகக் கொண்டு, வெளிவரும் புகை, வரம்புக்கு உட்படுத்தப்படுகிறது. மூலப் பொருள்களின் எடை (process weight), எஃகு மற்றும் கற்காரை ஆலைகளிலும், இரும்பல்லாத உலோக உருக்கு உலைகளிலும் மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய ஆலைகளில், புகை போக்கியில் புகும் எல்லாப் பொருள்களுக்கும் முழுமையாகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டியிருக்கும். இப்பொருள்- களைச் சேர்த்து வைக்கும் கருவிகள் அமைப்பளவிலும், பணச் செலவிலும் மிகுதியாக இருக்கும். சேமிப்புக் சுருவிகளில் மிகுந்த ஆற்றலுள்ள இழையாலான வடி கட்டும் அமைப்புகள், நிலை மின்சாரப் படிவிப்பான்கள் ஆகியன குறிப்பிடத் தக்கவை. ஒவ்வொரு கருவிக்கும் ஆகும் செலவு மதிப்பீடு செய்யப்பட்டுத் தேவையான சேமிப்புத் திறன் உள்ள கருவி தெரிவு செய்யப் படும். கந்தகத்தின் ஆக்சைடுகளைப் பிடித்து வைப்பதும், கட்டுப்படுத்துவதும், சுற்றுப் புறச் சூழல் பொறியாளர்களுக்குக் கடினமளிக்கின்றன. சுற்றுப் புறக் காற்றின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. இத்தரத்திற்குத் தக்கதாகக் கணக்கிடப்பட்ட செந்தரங்கள் மிகவும் வலிவிழந்த தொழில்களின் மீது பெரும் பளுவைச் சுமத்துகின்றன. பல தாமிர உருக்காலைகளும், நிலக்கரி எரிக்கப்படும் பயனீட்டு மின் நிலையங்களும் (utility power plant) வலிமையற்ற கந்தக டை ஆக்சைடை வெளி விடுகின்றன. கந்தக டை ஆக்சைடைச் சுண்ணக் கல் கழிவு அல்லது காஸ்டிக் கரைசல்களால் கழுவுவது மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. கழுவுவதற்கு மிகப் பெரிய கருவி தேவைப் படுவதோடு, கழிவு நீர் மற்றும் திண்மப் பொருள்களை அழிப்பதும் சிக்கலாகிறது. எனினும், அடர்வு மிகுந்துள்ள சுந்தக டைஆக்சைடு வளிமத்தைக் குறைந்த பணச் செலவில், தூய்மை செய்து கந்தகம், கந்தக அமிலம், கால்சியம் சல்பேட், அம்மோனியம் சல்பேட் ஆகிய துணை உற்பத்திப் பொருள்களையும் பெறலாம். உருக்கு உலையிலிருந்து வெளி வரும் வளிமங்களின் அடர்வை உயர்த்தி, உற்பத்திப் பொருள்களைப் பெறுவதற்கு எடுத்த முயற்சி தாமிரம் உற்பத்தி செய்வதற்கு, மாற்று முறைகளை விரிவாக ஆய்வு செய்ய வழி வகுத்தது. —கு. உதயபாலன் சூளை நீற்றுதல் வினை நிகழ்வதற்குப் பயன்படும் வெப்பக் கலனாகிய சூளைகள் சுழல் வகை, செங்குத்தான வகை என இரு வகைப்படும். சுழலும் சூளை சிமெண்ட் தயாரிப்பில் பயனாகிறது. இச்சூளை (படம் 1) 160 மீ. நீளமுடையது. கீழ்ப் பகுதியில் எண்ணெய் அல்லது கரியை எரித்து உருவாக்கப்பட்ட சுடர் மேல் நோக்கிப் பாய்கிறது. சிமெண்ட் தயாரிப்பின் மூலப் பொருள்களான சுண்ணாம்பும், களிமண்ணும் அடங்கிய சேற்றுக் குழம்பு சூளையின் மேல் பகுதியிலிருந்து புவி ஈர்ப்பாலும், சூளையின் சுழற்சியாலும் சரிந்து விழுகிறது. சூளையின் மேல் பகுதியில் சேறு உலர்த்தப் பட்டு, மைய மற்றும் கீழ்ப் பகுதிகளில் நீற்றுதலுக்குள்ளாகிறது. உலர்த்தும் பகுதியில் எஃகு சங்கிலிகள் அமைக்கப்பட்டு, வெப்பப் பரிமாற்றம் விரைவாக்கப் படுவதால், எரி பொருள் திறன் மிகுதியாகிறது. குளையின் உட்பகுதியின் இடைவெளிகளில் வெப்ப மின் இரட்டைகள் நிறுவப் படுகின்றன. இதனால், சூளையின் எப்பகுதியிலும் திண்ம நிலைப் பொருள்கள் மற்றும் வெளி வரும் சூளை வளிமங்களின் வெப்ப நிலைகளை நன்கறியலாம். மூலப் பொருள்களின் நுழை வாய்ப் பகுதியில், வளிமங்கள் வெளியேறுகின்றன. சூளையின் அடிப் பகுதியிலிருந்து சிமெண்ட் கட்டிகள் விழுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சுண்ணாம்புச் சூளைகள் பெரும்பாலும் செங்குத்து நிலை கொண்டவை. இச்சூளைகளில் நிலவும் வெப்ப நிலை வரம்பு 982–1260°C. வினையின் விரைவைக் கூடுதலாக்குவதற்கும், சுட்ட சுண்ணாம்பு மறு கார்பனேற்றம் ஆகாமல் தடுப்பதற்கும், நீற்றுதலில் வெளியாகும் கார்பன் டைஆக்சைடைச் சூளையிலிருந்து விரைவாக வெளியேற்ற வேண்டும். பெரும்பாலான சுண்ணாம்புக் காளவாய்கள் எதிரோட்டத்தில் (counter current) இயங்குகின்றன. மூலப் பொருள்களின் பாய்வு திசையும், வெப்ப ஆற்றலின் பாய்வு திசையும் ஒன்றுக்கொன்று எதிராக அமைந்துள்ளன. இச்சூளைகளைப் பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி அல்லது எரி வனிமம் ஆகியவற்றால், நேரடியாகச் சூடு படுத்தலாம். உற்பத்தித் திறனும், சுண்ணாம்பின் தரமும், எரி பொருளின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகின்றன.----> அமெரிக்காவில், சுண்ணாம்புத் தயாரிப்புக்குச் சுழல் வகைச் சூளைகளே பயன்படுகின்றன. சுழல் வகைச் சூளைகளில், உற்பத்தி கூடுதலாகவும் (நாளொன்றுக்கு 600 டன்), இயக்குவோரின் எண்ணிக்கை குறைவாகவும் அமையும். செங்குத்துச் குளைகளில், எரி திறன் கூடுதலாகவும், தொடக்கமுதலீடு குறைவாகவும் இருக்கும். செங்குத்துச் சூளைகள் சுழல் வகைச் சூளைகளைப் போன்று, மிகச் சிறிய சுண்ணாம்புக் கற்களை நீற்றுவதற்கு ஏற்றவையல்ல. தொன்று தொட்டுப் பயன்படுத்தப் பட்டு வரும் இவ்விரு வகைகளுடன் புதிய சூளை வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சுண்ணாம்புக் கல் வகைகளுள் பலவும், சூளை வெப்ப நிலை வரம்புகளில் நொறுங்கித் தூளாகிக் கையாள்வதற்குத் தகுதியற்றவையாகின்றன. இச்சிக்கலுக்குத் தீர்வு காண நகரும் படுகைச் சூளை (moving grate kiln) எனும் வகை உருவாக்கப் பட்டுள்ளது. கால்சிமடிக் சுழலும் கனப்புச் (calcimatic rotatory hearth kiln) சூளையில் சுண்ணாம்புத் தளம் நகர்வதில்லை. மாறாக, பல எரிப்பிகளை அமைத்து, வெப்ப நிலைப் பரவல் சீராக்கப் படுகிறது. நுண்ணிய படிகங்களாக அமைந்துள்ள சுண்ணாம்புக் கல்லை நீற்றுவதற்குப் பாய்ம–திண்மச் சூளை (fluo-solids kiln) பயனாகிறது. கருத்துப் படிம வாயிலாக ஆய்ந்தறியப்பட்ட சூளை உற்பத்தித் திறனைக் கூடுதலாக்க முயன்றால், மீ நீற்றுதலுக்கும், குறை நீற்றுதலுக்கும் உட்பட்ட பொருள்கள் சமச் சீரற்ற கலவையாக வெளி வரும். பீங்கான் பொருள்களை இறுதி இறுக்கம் செய்வதற்குக் குகைச் சூளை (tunnel kiln) பயனாகிறது. இறுகாத நிலையிலுள்ள பீங்கான் அமைப்பை ஒரு கூட்டில் வைத்து, சூளையின் ஒரு முனையிலிருந்து, மற்றொரு முனைக்கு இழுத்துச் செல்ல வேண்டும். சூளையின் வெப்ப நிலை ஒரு முனையிலிருந்து, மையப் பகுதியை அடையும் வரை உயர்ந்து கொண்டேபோய், மற்றொரு முனைக்குச் செல்கையில், மீண்டும் சரிகிறது (படம் 6). வெப்ப நிலை உயருதலும், குறைதலும் படிப்படியாக நிகழ்வதால், பீங்கான் பொருள், திடீர் வெப்ப அதிர்வுக்கு உள்ளாவது தடுக்கப்படுகிறது. இவ்வகைச் சூளைகளின் நீளம் 25–170 மீ. வரம்பிலும், குறுக்களவு 3 X 2.6 மீ.² எனவும் அமைந்துள்ளன. —மே ரா. பாலசுப்பிரமணியன் சூறைக் குருவி இது சோளப் பட்சி என்றும் குறிப்பிடப்படும். இது மைனா இனத்தைச் சேர்ந்தது. வயல்களில் சோளம், கம்புப் பயிர்கள் முற்றும் காலத்தில் ஆயிரக் கணக்கான குருவிகள் கூட்டமாக வட நாடுகளிலிருந்து தெற்கே வலசை வருகின்றன. மைனா அளவுள்ள இதன் தலையும், கொண்டையும் மிகவும் கறுத்தும், உடல் சிவப்பு நிறத்திலும் உள்ளன. விளைந்த தானியத்திற்கு, இவை ஓரளவு அழிவை ஏற்படுத்தினாலும், பயிர்களின் பெரும் எதிரியான வெட்டுக் கிளியைப் பிடித்துத் தின்று, உழவர்களுக்கு நன்மையும் செய்கின்றன. சூறை மீன் கடல்களின் வெப்ப, மித வெப்பப் பகுதிகளில் பெரும்பாலான சூறை (tuna) இனங்கள் பரந்து காணப் படு- கின்றன. எனினும், இந்தியக் கடல்களில் 11 சூறை இனங்களே காணப்படுகின்றன. அனைத்துச் சூறை இனங்களும், பெர்சிபாம்ஸ் வகைப்பாட்டில் அடங்கும். சூறை மீன்கள் பொதுவாகக் குருதி நிறமுள்ள தசையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இவை பருத்த உடலையும், இரு மேல் துடுப்புகளையும் பெற்றுள்ளன. இரண்டாம் மேல் துடுப்பை அடுத்தும், குதத் துடுப்பை (anal fin) அடுத்தும், 6–9 இளந்துடுப்புகள் (Finlets) காணப்படும். வால் துடுப்பின் அடிப் பகுதி, மிகவும் குட்டையாக ஒடுங்கி இருக்கும். மார்புப் பகுதியில் மட்டுமே செதில்கள் பரந்து காணப் படுகின்றன. குத்தெலிச் சூறை (Auxis thazard). இதன் உடல் பருத்துப் பக்கவாட்டில் சிறிது தட்டையாக இருக்கும். வாய் கோணலாகவும், இரு தாடைகளில் உள்ள பற்கள் சிறியனவாகவும், ஒரே வரிசையில் அமைந்துள்ளன. செதில்கள் மார்புப் பகுதியில் பரவியும், பின் பகுதியில் குறுகியும், பக்கவாட்டுக் கோட்டுடன் ஓட்டியவாறும் அமைந்துள்ளன. முதல் மேல் துடுப்பு இரண்டாவதை விடப் பெரியதாகவும், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட தொலைவு தலையின் நீளத்தை விடக் குறைவாகவும் இருக்கும். வால் துடுப்பு அகலமாக, இரண்டாக விரிந்து காணப்படும். தலை கருமையாகவும், முதுகு நீல நிறமாகவும் உள்ளன. பக்கவாட்டில், மார்புத் துடுப்புக்குப் (pectoral fin) பின்னர், கோணலான கறுப்புப் பட்டைகளும், கீழ்ப் பகுதி வெளிறிய மஞ்சள் கலந்த பழுப்பு நிறமும் கொண்டுள்ளன. மீனினங்களையும், தலைக் கால் மெல்லுடலிகளையும் (cephalopods) உண்ணும் இவை, ஏறத் தாழ, 500 மி.மீ. நீளம் வளரக் கூடியவை. எலிச் சூறை (A. thunnoides). இதன் மார்புச் செதில்கள், குத்தெலிச் சூறை போலில்லாமல், பின் பகுதியில் தொடர்ந்து, பக்கக் கோட்டுப்பகுதிகளில் அகன்று காணப்படும். குறுக்கு வெட்டுத் தோற்றத்தில், உடல் சிறிது தட்டையாகக் காணப்படும். எனினும், நிறம் குத்தெலிச் சூறையை ஒத்தே உள்ளது. 200–600 மி.மீ. நீளமுடைய இது மீன், தலைக் கால் மெல்லுடலிகள், புழுக்கள் போன்றவற்றை உண்ணும். சார்டா ஓரியண்டாலிஸ் (Sarda orientalis). இது குறுகிய நீளமான உடலைக் கொண்டுள்ளது. மார்புச் செதில் பகுதியும், செதில்களும் சிறியவை. இரு தாடைகளிலும் உள்ள பற்கள் உள் வளைந்து காணப்படும். உடலின் மேல் பகுதி நீல நிறத்தையும், நீளமான எட்டுப் பட்டையான கோடுகளையும் கொண்டிருக்கும். கீழ்ப் பகுதி வெள்ளி நிறமாகவும், மேற்பகுதியில் 7–8 இளந் துடுப்புகளும், அடிப் பகுதியில் 5–7 இளந் துடுப்புகளும் உள்ளன. பெரும்பாலும், மீன்களையே இவ்வினச் சூறை உண்கிறது. நாய்ப் பல் சூறை (Gymnosarda unicolor). உடல் பருத்தும், நீண்டும், மூக்குப் பகுதி கூர்மையாகவும், தலை நீண்டும் காணப்படும். கீழ்த் தாடை பெருத்தும், இரு தாடைகளில் கூம்பு போன்ற பற்களும் உள்ளன. மார்புச் செதில் பகுதி குறுகி உள்ளது. பக்கவாட்டுக் கோடு மார்புத் துடுப்புப் பகுதியில் மேல் வளைந்தும், பின் தொடரும் போது, வளைந்து, வளைந்தும் செல்கிறது. முதல் மேல் துடுப்பிற்கும், இரண்டாம் துடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதி மிகக் குறுகிய இடைவெளியைக் கொண்டுள்ளது. இரண்டாம் மேல் துடுப்பும், குதத் துடுப்பும் உட்புறம் குவிந்திருக்கும். தலையும், முதுகும் கருநீல நிறத்தையும், அடிப் பகுதி வெள்ளி நிறத்தையும், முதல் மேல் துடுப்பு கறுப்பு நிறம் கலந்த பச்சை நிறத்தையும், ஏனைய துடுப்புகளும், இளந் துடுப்புகளும் நீல நிறத்தையும் பெற்றுள்ளன. இது மீன்களையும், தலைக்கால் மெல்லுடலிகளையும் பெரிதும் உண்ணும். கட்ஸ்வோனஸ் பெலாமிஸ் (Katsuwonus pelamis). இவ்வினச் சூறை வணிகச் சிறப்புடையது. இந்தியப் பெருங்கடல், ஆஃப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரை, மடகாஸ்கர், மொரிஷியஸ், சோமாலிக் கடற்கரை, ஏடன் வளைகுடா, இலட்சத் தீவுகள், அந்தமான், இந்தோனேசியா, மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா போன்ற கடல்களில் இவ்வினம் மிகுதியாகக் காணப்படுகிறது. உடல் பருத்தும், தலைப் பக்கத்தில் ஒடுங்கியும் காணப்படும். மூக்குப் பகுதி நீளமாகவும், கூர்மையாகவும் வால் சிறிது கோணலாகவும் இருக்கும். இரண்டு தாடைகளிலும், வரிசையான பற்கள் காணப்படுகின்றன. முதல் மேல் துடுப்பின் முன் முள்கள் நீளமாகவும், பின் முள்கள் குட்டையாகவும் உள்ளன. இரண்டாம் மேல் துடுப்பின் பின் பகுதி உட்குவிந்துள்ளது. மேற்பகுதியிலும், அடிப் பகுதியிலும் 7–8 இளந் துடுப்புகள் காணப்படுகின்றன. முதுகுப் பகுதி நீல நிறத்தையும், வயிற்றுப் பகுதி, மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தையும் கொண்டிருக்கும். உடலின் பக்கவாட்டுக் கோட்டிற்குக் கீழே, 4–6 நீள வாக்கிலான கறுப்புப் பட்டைகள் உள்ளன. இவ்வினச் குறையில் காற்றுப் பைகள் இல்லை. கணுக்காலிகள், கணவாய், நெத்திலி மீன் குஞ்சுகளை உண்ணும். ஆண், பெண் மீன்கள் தனித் தனியே காணப்படினும், இரு பால் ஒருங்கிணைந்த (hermophrodite) மீன்களும், இவ்வினத்தில் அவ்வப்போது காணப்படும். நன்கு வளர்ச்சியடைந்த மீன் 20 லட்சம் முட்டைகள் இடும் திறனைப் பெற்றுள்ளது. ஆண் மீனின் பெரும வளர்ச்சி 800 மி.மீ. ஆகவும், பெண் மீனின் வளர்ச்சி 775 மி.மீ. ஆகவும் உள்ளது, சதைப் பகுதியைப் பதனிடாமல் சமைத்தும், சிறிது கெட்டுப் போயிருந்தால், உப்பு நீரில் பதப் படுத்த வெயிலில் உலர்த்திக் கருவாடாக்கியும் உண்ணலாம். இவ்வின மீன்களிலிருந்து மாசி என்னும் கருவாடு செய்து விற்கின்றனர். பருமனாக வெட்டிய மீன் துண்டுகளைப் பனை ஓலைகளில் பதித்து உப்பு நீரில் சிறிது நேரம் அவித்து, இத்துண்டுகள் கட்டியாகும் வரை புகையில் பலமுறை பதப்படுத்துவதன் மூலம் மாசி பெறப் படுகிறது. ஈதுன்னஸ் அப்னிஸ் அப்னிஸ் (Euthunnus affinis affinis). இவ்வினத்தில் உடல் பருத்தும், குறுகியும் உள்ளது. இரு தாடைகளிலும், மிகச் சிறிய கூம்பு போன்ற பற்கள் உள்ளன. இரு மேல் துடுப்புகளுக்கும் இடையேயான இடைவெளி மிக, மிகக் குறைவு. நன்கு வளர்ச்சியடைந்த இளந் துடுப்புகள் மேற்பகுதியில் 8–9 உம், அடிப் பகுதியில் 6–7 உம் உள்ளன. வாய் கோணலாக உள்ளது. தலையும், முதுகும், நீலம் கலந்த கறுப்பு நிறத்தையும், அடிப் பகுதி வெள்ளி நிறத்தையும் கொண்டிருக்கும். உடலின் பக்கவாட்டுக் கோட்டிற்கு மேலாக வளைந்து செல்லும் கருமையான கோடுகள் காணப்படுகின்றன. மார்புத் துடுப்புக்குக் கீழே எட்டுச் சிறிய கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. மீன்கள், தலைக்கால் மெல்லுடலிகள், இறால் போன்றவற்றை இச்சூறை பெரிதும் உண்ணும். துன்னஸ் (துன்னஸ்) ஓரியன்டாலிஸ் (Thunnus thunnus orientalis). துன்னஸ் பேரினத்தைச் சார்ந்த சூறை பெரும்பாலும், ஆழ்கடல் பகுதிகளிலேயே காணப்படும். இச்சூறையின் இரு தாடைகளிலும் ஒரே வரிசையில் அமைந்த சிறிய கூம்பு போன்ற கூரிய பற்கள் உள்ளன. மார்புப் பகுதியில் செதில்கள் பெரியவாகவும், ஏனையவை மிகச் சிறியவாகவும் உள்ளன. மேலும், இது மீன், இறால் போன்றவற்றையே பெரிதும் உண்ணும், இவ்வினச் குறை பக்க வாட்டில் தட்டையான ஆனால், பருத்த உடலைக் கொண்டுள்ளது. மார்புத் துடுப்பு குட்டையாக இருக்கும். முதுகு நீலங் கலந்த கறுப்பாகவும், வயிற்றுப் பகுதி வெள்ளி நிறமாகவும் இருக்கும். இரண்டாம் மேல் துடுப்பு கறுப்பாகவும், இளந் துடுப்புகள் மஞ்சளாகவும் உள்ளன. இவ்வினத்தில் காற்றுப் பை இல்லை. பெரும அளவான 300 செ.மீ. நீளத்தையும், 260 கி.கி. எடையையும் இச்சூறை கொண்டுள்ளது. து. (து) ஆலலுங்கா (T(T) alalunga). இவ்வினத்தில் தலை கூம்பியும், இரு தாடைகளில் கூம்பிய பற்களும் உள்ளன. மார்புத் துடுப்பு, அடிப் பகுதியில் உள்ள முதல் இளந் துடுப்பைத் தொடும் அளவுக்கு நீண்டுள்ளது. இவ்வினத்தில் காற்றுப் பை அகலமாகவும், நீளமாகவும் உள்ளது. பக்கவாட்டுக் கோடு முன் புறம் மேல் நோக்கி வளைந்தும், பின் புறம் நீண்டும் உள்ளது. முதுகு இரும்பு நிறத்தையும், வயிறு வெள்ளி நிறத்தையும் பெற்றுள்ளன. இரு பக்கங்களிலும் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. மார்புத் துடுப்புக் கருமையாகவும், மேல் துடுப்பு, வால் துடுப்பு இவை பழுப்பு நிறமாகவும் உள்ளன. பெரும அளவாக 130 செ.மீ. நீளத்தையும் 45 கி.கி. எடையையும் இவ்வினம் கொண்டுள்ளது. து. (பேராதுன்னஸ்) ஒபிசஸ் சிபி (T.Parathunnus obesus sibi) இவ்வினத்தில் தலையும், கண்ணும் பெரியவையாக உள்ளன. மார்புத் துடுப்பு, இரண்டாம் மேல் துடுப்புத் தொடங்கும் இடம் வரை நீண்டுள்ளது. காற்றுப் பை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. பக்க வாட்டுக் கோடு முன்னால் அலை அலையாக வளைந்துள்ளது. முதுகு நீலங்கலந்த கறுப்பாகவும், கீழ்ப் பகுதி வெள்ளி நிறமாகவும் இருக்கும். இவ்வினம் 240 செ.மீ. நீளத்தையும் 200 கி.கி. எடையையும் கொண்டுள்ளது. து. (நியோ துன்னஸ்) அல்பாக்ரஸ் (T. Neothunnus albacres). இவ்வினத்தில் காற்றுப் பை குறுகியும், நீண்டும் உள்ளது. உடல் முழுதும் செதில்களும், மார்புப் பகுதியில் பெரிய செதில்களும் காணப்படும். மேலும், ஏனைய இனங்களை விட, இதன் வால் பகுதி நீண்டுள்ளது. மார்புத் துடுப்பு இவ்வினத்திலும், முன்னது போல் நீண்டுள்ளது. இரண்டாம் மேல் துடுப்பும், குதத் துடுப்பும் இளம் மீன்களில் மிகவும் நீண்டுள்ளன. முதுகுப் பகுதி கருமையான நிறத்தையும், வயிற்றுப் பகுதி மெல்லிய சாம்பல் நிறக் கோணல் கோடுகளையும், வரிசையான வெள்ளி நிறப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். மார்புத் துடுப்பு பச்சை கலந்த மஞ்சளையும், பிற துடுப்பு இளந் துடுப்பு ஆகியன மஞ்சள் நிறத்தையும் கொண்டுள்ளன. ஏறத்தாழ 170 செ.மீ நீளத்தையும், 70 கி.கி. எடையையும் இவ்வினம் கொண்டுள்ளது. து. (கிஷினோயல்லா) டோங்கால் (T. Kishinoella tonggo). இவ்வினத்திற்குக் காற்றுப் பை இல்லை. உடலின் அகலத்தை விடத் தலையின் நீளம் மிகுதி. வால் கோணலாக உள்ளது. தாடைகளில் பெரிய கூம்பிய பற்கள் உள்ளன. பக்கவாட்டுக் கோடு முன்னால் அலை அலையாக வளைந்தும், பின்னால் தொடர்ச்சியாக நீண்டும் இருக்கும். மேற்பகுதி நீலம் கலந்த சாம்பல் நிறத்தையும், அடிப் பகுதி வெள்ளி நிறத்தையும், வரிசையாக அமைந்துள்ள நிறமற்ற புள்ளிகளையும் கொண்டுள்ளன. துடுப்புகள் மஞ்சள் நிறத்தையும், சாம்பல் நிற ஓரங்களையும் கொண்டுள்ளன. இவ்வினம் 100 செ.மீ. நீளம் இருக்கும். —இரா. சந்தானம் நூலோதி. J.R. Norman, A History of Fishes, Ernest Benn Ltd., London, 1963. சூறை மீன்களும், அலகு மீன்களும் இவை இறைச்சிக்காகப் பண்டைக் காலத்திலிருந்தே, வேட்டையாடப்படுவதாகக் கற்காலச் சான்றுகள் கூறுகின்றன. சூறை மீன்களும், அலகு மீன்களும் (tuna and bill fishes) கடல்களில் மிதவை வகை மீன்களாகக் காணப்படுகின்றன. பொதுவாகக் கடலின் வெப்பச் சரிவான பகுதியில் (thermocline), ஏறத் தாழ, 10–150 மீ. ஆழம் வரை இவை வாழ்கின்றன. மஞ்சள் துடுப்புச் சூறை மீன் (yellow fin tuna) ஆழம் குறைவான வெப்பச் சரிவான பகுதியிலும், பெரிய கண் சூறை மீன் மிகு ஆழத்திலும் காணப் படுகின்றன. ஸ்கிப்ஜேக் டூனா (skipjack tuna) கடற்கரையை நோக்கி வரும் போது, நீரின் மேல் மட்டத்தில் இருக்கும். போனிடோக்கள் (bonitos), ஃபிரிகேட் மீன் (frigate tuna), புல்லட் மீன் (bullet tuna) ஆகியவை கடற்கரையை விட்டுச் சற்றுத் தள்ளிய, ஆழம் குறைவான பகுதிகளில் காணப்படுகின்றன. சூறை மீன்களில் மிகச் சிறியது–புல்லட் மீன் (0.5 கி.கி,) மிகப் பெரியது வட பகுதி நிலத் தடுப்பு மீன் (700 கி.கி.) ஆகும். அலகு மீன்களில் மிகச் சிறிது–குட்டைமூக்கு ஈட்டி மீன் (30 கி.கி.); மிகப் பெரியது–கறுப்பு மார்லின்(1300 கி.கி.)ஆகும். கடல் மீன்களில், சுறா நீங்கலாக, மிகப் பெரியவை கறுப்பு மார்லின் மீன்களே என்பது குறிப்பிடத் தக்கதாகும். விரைவாக நீந்துவதற்கு இவை பெயர் பெற்றவை. எடுத்துக் காட்டாக, பாய்மர மீன் 1 மணியில் 110 கி.மீ. கடக்கும் திறன் பெற்றது. சூறை மீன்களில் மிக மெதுவாக நீந்தும் மீன் ஒரு நொடியில் தன் உடல் நீளத்தை விட அதிக நீளம் கடக்கும் தன்மை கொண்டது. இவ்வேகத்தில் நீந்தினால், 1 மீ. நீளமுள்ள ஒரு மீன், அட்லாண்டிக் கடலை இரு மாதங்களுக்கும் குறைந்த காலத்தில் கடந்து விடும். தம் வாழிடத்திற்கேற்ற பல தகவமைப்புகளை இம்மீன்கள் உடலின் வெளிப் புறத்திலும், உள்ளுறுப்புகளிலும் பெற்றுள்ளன. சூழ்நிலையிலிருந்து எளிதில் காண முடியாதவாறு, இவற்றின் உடல் வண்ணம் அமைந்துள்ளது. தம் நிறப் பட்டைகளின் மூலம் தம் குழுவைச் சார்ந்த பிற மீன்களுக்கு உணவுள்ள இடம், வயது, பால் தன்மை முதலியவற்றை அறிவுறுத்துகின்றன என்று வல்லுநர் கருதுகின்றனர். இம்மீன்களை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன், இவற்றின் நிறம் வேகமாக மங்கத் தொடங்கும்.விரைவாக நீந்துவதற்கு இம்மீன்கள் பெற்றுள்ள தகவமைப்புகளில், டார்பிடோ (torpedo) போன்ற வடிவம் பெற்று, நீரைக் கிழித்துச் செல்லும் வகை குறிப்பிடத் தக்கது. மேலும் நீந்தும் போது, தடையில்லாதிருக்க முதுகுப் புறத் துடுப்பு நீண்ட குழியில் உள்ளிழுக்கப் படுவதும், கண்களும் இவ்வாறே உள்ளிழுக்கப் படுவதும் ஏற்ற தகவமைப்புகளாகும். அலகு மீனில் இதற்கெனத் தனி அலகே உள்ளது. அண்மைக் காலம் வரை இவ்வலகு (உணவுக்காக) பிற மீன்களைத் தாக்குவதற்காக உள்ளது எனக் கருதிய அறிவியலார், இவை நீந்தும் போது ஏற்படும் தடையைக் குறைக்கவே இருப்பதாக இன்று கருதுகின்றனர். இவற்றின் மார்புத் துடுப்புகள் அகலமாயிருப்பதால், நீரில் மூழ்காமல் இவை மிதக்கின்றன. விரைவாக நீந்தும் பழக்கத்திற்கேற்ப, இவற்றின் தசை மண்டலம், சுவாச மண்டலம், குருதி ஓட்ட மண்டலம் முதலியவையும் ஏற்ற தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. இடை விடாது நீந்துவதற்காக விரைவில் தசைச் சோர்வு ஏற்படாத சிவப்புத் தசைகள் மிகுதி யாக உள்ளன. இவ்வியக்கத்தின் காரணமாக ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்கும். எனவே, செவுள்களுக்குத் தொடர்ந்து, ஆக்சிஜன் கலந்த நீர் அளிப்பதற்காக நீந்தும் போது கூட, இவற்றின் வாய் திறந்த நிலையில் இருக்கும். வாய் திறந்த நிலையில் நீந்திக் கொண்டேயிருக்கா விடில், ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு முட்டுவதோடு, இவை நீரில் மூழ்கவும் நேரிடும். இம்மீன்கள் நீரை விடக் கனமானவையாகையால், இவை எப்போதும் பறந்து கொண்டேயிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிக அளவு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல, அதிகமான ஹீமோகுளோபின் மனிதனில் இருப்பதைப் போல உள்ளது. பிற மீன் வகைகளைப் போலவும், அலகு மீன்களைப் போலவும் இல்லாமல், சூறை மீன்கள் வெப்பக் குருதி ஓட்டத்தைக் கொண்டுள்ளன. உணவு முறை. இம்மீன்களின் உணவு, சிறிய மீன்கள், தலைக்காலிகள், கடின ஒட்டுக் கணுக்காலி கள் முதலியவை. தம் எடைக்குச் சம எடையுள்ள உணவை இவை நாளும் உட்கொள்கின்றன. இனப் பெருக்கமும், வளர்ச்சியும். சூறை மீனின் முட்டை மிகச் சிறியதாகவும் (1 மி. மீ. விட்டம்), அலகு மீனின் முட்டை இதை விடப் பெரியதாகவும் இருக்கும். கருவுற்ற பின், முட்டை 4 நாள் கழித்து, இளவுயிரியாகப் பொரியும். இதன் நீளம் 2.5 மி.மீ. இம்மீன்கள் வியக்கத்தகு வளர் திறன் பெற்றவை. எடுத்துக் காட்டாக, ஒரு வட பகுதி நீலத் தடுப்பு மீனின் இளவுயிரி, பில்லியன் மடங்கு வளர்ச்சி பெற்று (எடையில்) முதிர் நிலையை அடைகிறது. சராசரியாக ஒரு பெண் மீன் ஓர் ஆண்டில் ஒரு மில்லியன் முட்டைகளுக்கு மேல் இடும். எ–டு: 50 கி.கி. எடையுள்ள ஒரு நீலத் துடுப்பு மீன் ஓர் ஆண்டில் 5 மில்லியன் முட்டைகள் இடுகிறது. இவை ஒரே சமயத்தில் இடப்படாமல், பல காலங்களில் பல முறை இடப்படுகின்றன. இவ்வாறு, மிகுதியான முட்டைகள் இடப்பட்டாலும், அனைத்தும் முதிர் நிலையை அடைவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இளவுயிரி நிலையில் அதிக அளவு இறப்பு ஏற்படுவது, பிற மீன்களுக்கு இரையாவது, கடற்பறவைகள், பிற கடல் விலங்குகளுக்கு இரையாவது போன்றவை சில காரணங்களாகும். இவற்றால், ஒரு பெண் இடும் 1 மில்லியன் முட்டைகளிலிருந்து, இரண்டே இளம் மீன்கள் முதிர் நிலையை அடைவதாகக் கண்டு பிடித்துள்ளனர். வலசை போதல். பிற விலங்குகளைப் போன்று, இம்மீன்களும் வலசை போகின்றன என ஆய்வில் அறியப் பட்டுள்ளது. இவ்வாய்வுகளின் போது, அடையாள நாடாலில் மீன் பற்றிய குறிப்புகளைக் குறித்து, மீனின் உடலில் கட்டி, கடலில் விட்டு விடுவர். பிறகு, இவ்வடையாளம் கொண்ட மீன்கள் மீண்டும் பிடிபடும் போது, அம்மீன்கள் கடந்த தொலைவு, காலம் முதலியவை அறியப் படுகின்றன. சூறை மீன்களில் மிகு தொலைவு பயணம் செய்பவை நீலத் துடுப்பு மீன், ஆல்பகோர் மீன் ஆகியவையே; இம்மீன்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து, ஒரு கடலை விட்டு, மற்றொரு கடலை அடைகின்றன. சூறை மீன் குழுக்கள். இவை கூட்டமாக வாழ்பவை. மீன் கூட்டம் மீன் குழு எனப்படும். இம்மீன் குழுவில் உள்ள மீன்கள், ஒரே அளவுள்ளவையாக இருக்கும். மீன்கள் பெரியவையாகும் போது, குழுவிலுள்ளவற்றின் எண்ணிக்கை குறைகிறது. இம்மீன் குழுக்கள் கடலில் மிதக்கும் பொருள்களையோ, பிற பெரிய மீன்களையோ, திமிங்கிலம், டால்ஃபின் போன்றவற்றையோ, சிறு மீன் கூட்டத்தையோ பின் தொடர்ந்து செல்கின்றன. கடலில் காணப்படும் பறவைகளின் செயல்களை வைத்தே, இம்மீன்களின் இருப்பிடம், அளவு முதலியவற்றை மீனவர்கள் எளிதில் கண்டு பிடிக்கின்றனர். மீன் பிடி முறைகள். வணிக முறையில் இவற்றைப் பிடிக்க 3 முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை: கோல் தூண்டில் உதவியுடன் பிடித்தல், சுருக்குப் பை வலைமுறை, நீள் தூண்டில் முறை எனப்படும். கோல், தூண்டில் உதவியுடன் மீன் பிடித்தல். ஜப்பானியர்களும், அமெரிக்கர்களும் பசிபிக் கடலிலும், இந்தியாவிலும், லட்சத் தீவுகளிலும் இம்முறையைப் பயன் படுத்துகின்றனர். லட்சத் தீவுகளில் ஸ்கிப்ஜேக் மீன் இம்முறையால் பிடிக்கப் படுகிறது. சுருக்குப் பை வலை முறை. அமெரிக்கா, ஜப்பான் (பசிபிக் கடல்), நார்வே, அர்ஜெண்டைனா, பிரான்ஸ், ஸ்பெயின் முதலிய நாடுகள் இம்முறையைக் கடைப் பிடிக்கின்றன. இந்தியாவில் கர்நாடகம், கோவா, கேரளக் கடல் பகுதிகளில் சிறு சூறை மீன், ப்ரிகேட் மீன், புல்லட் மீன் முதலியவை இம்முறையில் பிடிக்கப் படுகின்றன. நீள் தூண்டில் முறை. ஜப்பான், தாய்வான், கொரியா முதலிய நாடுகள் இம்முறையைப் பின் பற்றுகின்றன. இந்தியாவில் கேரளக் கடலில் குறிப்பிட்ட அளவு மட்டுமே இவ்வகை மீன் பிடிப்பு நடை பெறுகிறது. அண்மைக் காலத்தில், எதிரொலிக் கருவிகள், நீரினுள் தொலைக் காட்சிக் கருவிகள் ஆகியவற்றின் துணை கொண்டும், மீன்கள் பெருமளவில் பிடிக்கப் படுகின்றன. இந்தியக் கடல் பகுதிகளில், சூறை மீன் களும், அலகு மீன்களும் பெரும்பாலும் செவுள் வலை மீன் பிடித்தல் முறை மூலமே பிடிக்கப் படுகின்றன. கொக்கி–முள்–வரிசை முறை மூலம் சிறிய அளவில் சூறை மீன்கள் பிடிக்கப்படுகின்றன. —சி.முத்தையா <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->