அட்லான்டிக் சாசனம்
aṭlāṉṭik cācaṉam
1939ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவாக, நெவில் சேம்பர்லின் என்னும் ஆங்கிலப் பிரதம மந்திரி பதவியிழந்தார்.
1939ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவாக, நெவில் சேம்பர்லின் என்னும் ஆங்கிலப் பிரதம மந்திரி பதவியிழந்தார். 1940-ல் வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதம மந்திரியானார். அப்போது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையே எப்பொழுதுமேயுள்ள நல்லுறவு மேலும் வலிவடைந்தது. சர்ச்சிலும், அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த பிராங்லின் ரூஸ்வெல்ட்டும் அட்லான்டிக் கடலில் ஒரு போர்க் கப்பலில் 1941 ஆகஸ்டு 14-ல் சந்தித்து எட்டு அமிசங்கள் கொண்ட ஒரு சாசனத்தை வகுத்தனர். இது 1918-ல் ஜனாதிபதி வில்சன் தயாரித்த பதினான்கு அமிசத் திட்டத்தின் முதல் ஐந்து அமிசங்களை யொத்திருந்தது. நேசநாடுகள் வெற்றிபெற்ற பின்னர் ஏற்படும் சமாதானத்தின் தன்மையை நிருணயிக்கும் முறையில் இச்சாசனம் அமைந்தது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 75)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b46z5r8b/
தமிழ்“அட்லான்டிக் சாசனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b46z5r8b/APA
Oliyon Research. (2026). அட்லான்டிக் சாசனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b46z5r8b/MLA
"அட்லான்டிக் சாசனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b46z5r8b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment