சினைப் பசுப் பராமரிப்பு
ciṉaip pacup parāmarippu
பசுக்களின் சினைக் காலம் 285 நாள் ஆகும்.
பசுக்களின் சினைக் காலம் 285 நாள் ஆகும். சினைக் காலத்தின் தொடக்கமும்,, இறுதி மூன்றில் ஒரு பங்கு பருவமும் சிக்கலான காலம் ஆகும். தொடக்கத்தில், சில பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகக் கருச் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. கரு வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பகுதி, இறுதிப் பருவத்தில் நடைபெறுவதால், அடுத்த கறவைக்கான ஆற்றல் பெறச் சத்துள்ள தீவனமும் தேர்ந்த பாதுகாப்பும் இன்றியமையாதனவாகும்.
அறிகுறிகள். பசுக்கள் சினை அடைந்த பின், மீண்டும், காளைகளை ஏற்றுக் கொள்ளா. இவற்றின் நடவடிக்கையிலும், தோற்றத்திலும் அமைதியுடன் கூடிய மாற்றம் காணப்படும். தேர்ச்சி பெற்ற மருத்துவர் உதவியுடன், நேரடி ஆய்வு மூலமாகவோ, ஒளிக் கதிர், ஒலிக் கதிர், குருதி, சிறுநீர் ஆய்வு மூலமாகவோ சினை நிலை உறுதிப்படுத்தப் பட வேண்டும்.
விதிமுறை. கருவுற்ற பசுக்களைத் தொலைவான, மேடு பள்ளமான இடங்களில் நடத்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றைப் பேண நல்ல காற்றோட்டமுள்ள, சுகாதாரமான கொட்டகைகள் தேவை. கொட்டகைகளின் தரை வழுக்கும் தன்மை அற்றதாக இருக்க வேண்டும். கருவுற்ற பசுக்களை, எருது, நாய் முதலியவை துரத்தாதவாறு பாதுகாக்க வேண்டும். ஏனைய மாடுகளுடன் சண்டையிட வாய்ப்பளிக்கக் கூடாது. நீரில் நீந்த விடக் கூடாது.
இவை பிற மாடுகளுடன் கலக்க நேர்ந்தால், நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு. தேவையான உணவும், நல்ல நீரும் அளிக்க வேண்டும். மிகு வெப்பம், குளிர், காற்று, மழை, பனி இவற்றிலிருந்து பாதுகாத்தல் வேண்டும், கருவுற்ற ஏழாம் மாதம் முதல் பிற பசுக்களிடமிருந்து பிரித்துத் தனியாக வளர்க்க வேண்டும்.
கன்று ஈன 15-30 நாளுக்கு முன்னரே, மேய்ச்சலுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். இத்- தருணத்தில் காலையிலும், மாலையிலும் நல்ல சமதளத் தரையில் நடத்தி, உடற்பயிற்சி அளிப்பதன் மூலம் கன்று ஈனும் போது, ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
கலப்பினப் பசுக்கள் கருவுற்ற பின்னரும், தொடர்ந்து பால் கொடுத்துக் கொண்டிருக்கும். கன்று ஈனும் வரை, தொடர்ந்து பால் கறந்தால், பசுவின் உடல் நலம் குன்றிப் போவதுடன், அடுத்த கறவைக்கு மடி வளர்ச்சி ஏற்படுவதும் தடைப்பட்டுப் போகலாம். பிறக்கும் கன்றும், நல வாழ்வுடன் இருக்க முடியாது. எனவே, ஏழாம் மாதம் முடிந்தவுடன், பால் கறப்பதை நிறுத்த வேண்டும். குறைந்தது 60 நாள் பால் வற்றிய நிலை தேவை. —எம். தியாகராசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 393)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/azremf4x/
தமிழ்“சினைப் பசுப் பராமரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/azremf4x/APA
Oliyon Research. (2026). சினைப் பசுப் பராமரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/azremf4x/MLA
"சினைப் பசுப் பராமரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/azremf4x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment