கம்சன் என்னும் கொடிய அரசனின் படைத்தலைவன். கிருட்டிணனையும் அவன் நண்பர்களையும் கொல்வதற்காக அகாசுரன் பெரும் பாம்பாக உருமாறித் திறந்த வாயுடன் வந்தான். கிருட்டிணனின் நண்பர்கள் திறந்திருந்த வாயை ஒரு குகை எனக் கருதி அதனுள் நுழைந்தார்கள். தம் தவற்றை உணர்ந்து அல்லலுற்ற அவர்களைக் கிருட்டிணன் காப்பாற்றினான். இது மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியாகும்.