சிரை வரைவு
cirai varaivu
பெருஞ் சிரையில் ஊடு கதிர் இயக்க மருந்தைச் செலுத்தி, அதனால் ஏற்படும் படத்தைக் காட்டுவது சிரை வரைவு (phlebogram) எனப்படும்.
பெருஞ் சிரையில் ஊடு கதிர் இயக்க மருந்தைச் செலுத்தி, அதனால் ஏற்படும் படத்தைக் காட்டுவது சிரை வரைவு (phlebogram) எனப்படும். இம்முறை அண்மைக் காலத்தில் மிகவும் பயன்படுகிறது. குருதி நாளங்களில் ஏற்படும் அடைப்பை இதன் மூலம் கண்டு பிடித்து அறுவையாலோ, மருந்தாலோ, அடைப்புகளை நீக்கிக் குணப்படுத்த முடியும்.
வழிமுறைகள். பெரிய சிரைகளில் அதாவது கால், கை, கழுத்தில் உள்ளவற்றில் ஊசி மூலம் ஊடு கதிர் இயக்க மருந்தைச் செலுத்தி 0.05 நொடி, 0.2 நொடி, 0.4நொடி என்று நேரம் குறிப்பிட்ட படம் எடுக்க வேண்டும். மருந்தால் ஒவ்வாமை வருகிறதா என்று கண்டறிந்த பின்னரே, மருந்தைச் செலுத்த வேண்டும். 5—10மி.லி வரையே செலுத்த வேண்டிய இம்மருந்து உடலில் எந்த இடத்திற்குச் சென்றாலும், எவ்விதத் தீமையும் உண்டாவதில்லை. பயன். சிரை அடைப்பு, காலில் சிரைகள் சுருட்டிக் கொள்ளுதல், அடைப்புகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கவும், அறுவையிலும் வரைபடம் பயன்படுகிறது. —சொ.நடராசன் நூலோதி. E. Braunwald, Heart Disease-A Text Book of Cardiovascular Medicine, W.B. Saunders Company, Philadelphia, 1983.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 269)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/advczep6/
தமிழ்“சிரை வரைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/advczep6/APA
Oliyon Research. (2026). சிரை வரைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/advczep6/MLA
"சிரை வரைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/advczep6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment