மீட்பு நிரல்
mīṭpu niral
பொருள்கள் · Senses
1.
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்தத்தில் நேர்மின்னாகவோ எதிர்மின்னாகவோ திடீரென ஏற்படும் மாறுதல். இது மின்சுற்று வழிக்குத் தகவலை அனுப்புகிறது. pulse code modulation : துடிப்புக் குறியீடு; துடிப்புக் குறிப்பேற்றம் : பீ. ஏஎம் அமைப்பில் ஒப்புமை சமிக்கையை தொடர்ந்து இடைவேளையில் மாதிரி எடுத்து ஒரு துடிப்பு அலைமாற்ற வீச்சு கலைமாற்ற (ஆம்ப்ளிட்டியூடு மாடுலேட்டர்) அலைவடிவை ஏற்படுத்தலாம். ஒரு சமிக்கையின் உயர்ந்த அலை வரிசையின் இரட்டை மதிப்பை மாதிரி அளவாகக் கொண்டு ஒரு உவமச் சமிக்கையைத் தொடர்ந்து மாதிரியெடுத்தால் குரலை மீண்டும் உருவாக்குவது போதுமானது. மாதிரித் துடிப்பின் கால இடைவெளிக்கு மட்டும் திறக்குமாறு அமைக்கப்பட்டுள்ள வாயிலைக் கொண்ட மின்சுற்றில் ஒத்திசைவு உவமச் சமிக்கையை அனுப்பி மாதிரி எடுக்கப்படுகிறது. இதில் வெளியீடாக வருவது PAM சமிக்கை. pulse duration modulation : துடிப்பு கால அளவுப் பண்பேற்றம் : தொடர்முறை வடிவில் இருக்கும் தகவலை இலக்கமுறைச் செய்தியாக மாற்றியமைத்து குறியாக்கம் செய்வதில் ஒரு வழிமுறை. துடிப்பின் கால அளவை மாற்றியமைத்து இக்குறியாக்கம் செய்யப்படுகிறது. பண்பேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, சமிக்கையானது நிலையான அதிர்வெண், கால அளவு, வீச்சு கொண்ட தொடர்ச்சியான துடிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. பண்பேற்றத்தின் போது துடிப்பின் கால அளவு மாற்றப்பட்டு தகவல் குறியாக்கம் செய்யப்படுகிறது. pulse modulation : துடிப்புப் பண்பேற்றம்; துடிப்பு ஏற்ற இறக்கம் : தகவல்களை அனுப்புவதற்கு ஏற்ற இறக்கம் செய்யப்பட்டுள்ள அல்லது பண்பியல்புப்படுத்தப்பட்டுள்ள துடிப்புகளின் தொடர் வரிசையைப் பயன்படுத்தல். PAM. PPM, PDM போன்றவை இந்த ஏற்ற இறக்க வகையைச் சேர்ந்தவை. pulse position modulation : துடிப்பு இடநிலைப் பண்பேற்றம் : தகவலைக் குறியாக்கம் செய்யும்போது துடிப்புகளின் இட நிலையை மாற்றியமைத்து சமிக்கையைப் பண்பேற்றம் செய்யும்முறை. பண்பேற்றம் செய் யப்படுவதற்கு முன்பு சமிக்கையானது நிலையான அதிர்வெண், கால அளவு மற்றும் வீச்சு கொண்டதாக இருக்கும். பண்பேற்றத்தின்போது துடிப்பின் இடநிலை மாற்றப்பட்டு, தகவல், குறியாக்கம் செய்யப்படுகிறது. pulse regenerators : துடிப்பு மீட்டுருவாக்கிகள் : தொலை பேசிக்கம்பியின் பாதை நெடுகிலும் டிடிஎம் சமிக்கைகள் வலுப்பெறுகின்றன; பிரிகின்றன. பிழைகள் சேர்க்கப் படவில்லையென்றால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் துடிப்பு இருக்கிறதா இல்லையா என்று கூறமுடியும். தேவைப்படும் துல்லியத்துக்குள் துடிப்பின் அலைவடிவத்தை வைத்திருக்க கம்பி நெடுகிலும் துடிப்பு மீட்டுருவாக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருமுறை துடிப்பு புதுப்பிக்கப்படும் போதும் ஒரு புதிய, சிதையாத துடிப்பு கம்பியில் அனுப்பப்படுகிறது. துடிப்பு இல்லை என்று கண்டுபிடிக்கப்படும் போது, துடிப்பு அனுப்பப்படுவதில்லை. punch : துளையிடல். punched card : துளையிட்ட அட்டை : தரவு செய்முறைப்படுத்தும் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படும் காகித அட்டை. இதில் நூற்றுக்கணக்கான தனித்தனி அமைவிடங்களில் நுண்ணிய செவ்வகத் துளைகள் இடப்படுகின்றன. இத்துளைகள் எண்ணியல் மதிப்பளவுகளையும் ஆல்பா எண்ணியல் குறியீடுகளையும் குறிக்கின்றன. punching position : துளையிடு இட நிலை : ஒர் அட்டைப் பத்தியின் பிரிவினைப் பகுதிகளில் ஒன்று. இதில் ஒரு துளையினை இடலாம். punching station : துளையிடும் நிலையம் விரற்கட்டைத் துளையிடு எந்திரம், அட்டைத் துளையிடு எந்திரம், ஆகியவற்றில். துளையிடும் செய்முறைக்காக ஒர் அட்டையினைப் பொருத்துவதற்கான பகுதி. punch, key : விசைத் துளையிடல். punch, x : எக்ஸ் -துளை . punctuator : நிறுத்தக்குறிகள். pure procedure : தூய முறை : நிறைவேற்றத்தின் போது தனது எந்த பகுதியையும் மாற்றமைவு செய்து கொள்ளாத நடைமுறை. purge அழிப்பு : ஒரு கோப்பினை அழித்து விடுதல். push : தள்ளு : ஒரு செயல் முறை அடுக்கின் உச்சி அமைவிடத்தினுள் தரவுவைத் தள்ளிச் செலுத்துதல். அடுக்கின் சுட்டு முள், அடுக்கின் உச்சிக்கு வருகிற அடுத்த அமைவிடத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் தானாகவே உயர்ந்து விடுகிறது. இது "விரைவுத் தள்ளல்" (Pop) என்பதிலிருந்து வேறுபட்டது. push instruction : தள்ளு நிரல் : தள்ளும் செயற்பாட்டினை நிறைவேற்றுகிற கணினி நிரல். pushdown list : கீழ்த்தள்ளுப்பட்டியல் . கீழிருந்து மேல் நோக்கி எழுதப்படும் பட்டியல். இதில் ஒவ்வொரு புதிய பதிவும் பட்டியலின் உச்சியில் இடம் பெறும். பட்டியலின் உச்சியிலுள்ள இனம் முதலில் செய்முறைப்படுத்தப்படும். pushdown stack : கீழ்த்தள்ளுஅடுக்கு : கணினியில் ஒரு கீழ்த் தள்ளுப்பட்டியலை நிறை வேற்றுகிற நினைவக அமைவிடங்களின் அல்லது பதிவேடுகளின் தொகுதி. push pop stack : விரைவுக் கீழ்த் தள்ளு அடுக்கு : ஒரு செயல் முறை முகப்பிலிருந்து தகவல்களைப் பெற்று, நிரல்களின் முகவரி அமைவிடங்களை "முதலில் கடைசி வெளிப்பாடு" அடிப்படையில் சேமித்து வைக்கிற பதிவேடு. இரு செயற்பாடுகளும் அடுக்குச் செய்முறைப்படுத்துதலில் அடங்கியவை. தள்ளுதல் என்பது பதிவேடுகளிலிருந்து அடுக்கினை நிரப்புவதைக் குறிக்கிறது. விரைவுத் தள்ளுதல் என்பது பதிவேடுகளிலிருந்து அடுக்கினை நிரப்புவதைக் குறிக்கிறது; விரைவுத் தள்ளுதல் என்பது பதிவேடுகளுக்கு மாற்றுவதற்காக அடுக்கினைக் காலி செய்வதைக் குறிக்கிறது. pushlpull tractor : தள்ளு/இழு டிராக்டர் : அச்சிடும் தாள் இழுவை காகிதத்தை பிளேட்டனுக்குத் தள்ளுமாறும் பிளேட்டனில் இருந்து அதை வெளியே எடுக்குமாறும் பொத்தானிடக் கூடியது. தனித் தாள் தொடர்படிவங்களைத் தள்ளலாம். பெரும்பாலான பல்பகுதி படிவங்களும் வில்லைகளும் மோதிக் கொள்வதைத் தடுக்க இழுக்கப்பட வேண்டும். pushup list : மேல் தள்ளுப்பட்டியல் : இனங்களின் பட்டியல். இதில் ஒவ்வொரு இனமும் பட்டியலின் இறுதியில் பதிவு செய்யப்படுகிறது. மற்ற இனங்கள் பட்டியலில் அவை இடம் பெற்றுள்ள இடத்தில் அப்படியே இருந்துவிடும். put : புட் : நிரலாக்கத் தொடரமைத்தலில் நடப்புப் பதிவேட்டை வெளியீட்டுக் கோப்பில் சேமிக்குமாறு கேட்கும் ஒரு வேண்டுகோள்.
— pull instruction
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ac5h8jc2/
தமிழ்“மீட்பு நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac5h8jc2/APA
Oliyon Research. (2026). மீட்பு நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ac5h8jc2/MLA
"மீட்பு நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac5h8jc2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment