தென் துருவத்திலுள்ள அண்டார்க்டிகா கண்டத்தில் உள்ள மலைகள். அக்கண்டத்தின் தெற்கே இராசு (Ross) கடலுக்கு வடமேற்கே இம்மலைகள் அமைந்துள்ளன. மேலும் இம்மலைத்தொடர் விக்டோரியாலாந்துவின் வட கடற்கரையையொட்டிப் பரந்துள்ளது. இதில் அமைந்துள்ள மிக உயர்ந்த மலையுச்சி சபைன் (Mt. Sabine) என்பதாகும், இதன் உயரம் 3,007 மீ. அட்மிரால்டி மலைகளை (Admiralty Mountains) சர் சேம்சு இராசு (Sir James Ross) என்பார் கி.பி. 1841–ஆம் ஆண்டில் தம் அண்டார்க்டிகா பயணத்தின்போது கண்டறிந்தார்.