அட்மிரால்டி மலைகள்
aṭmirālṭi malaikaḷ
தென் துருவத்திலுள்ள அண்டார்க்டிகா கண்டத்தில் உள்ள மலைகள்.
தென் துருவத்திலுள்ள அண்டார்க்டிகா கண்டத்தில் உள்ள மலைகள். அக்கண்டத்தின் தெற்கே இராசு (Ross) கடலுக்கு வடமேற்கே இம்மலைகள் அமைந்துள்ளன. மேலும் இம்மலைத்தொடர் விக்டோரியாலாந்துவின் வட கடற்கரையையொட்டிப் பரந்துள்ளது. இதில் அமைந்துள்ள மிக உயர்ந்த மலையுச்சி சபைன் (Mt. Sabine) என்பதாகும், இதன் உயரம் 3,007 மீ. அட்மிரால்டி மலைகளை (Admiralty Mountains) சர் சேம்சு இராசு (Sir James Ross) என்பார் கி.பி. 1841–ஆம் ஆண்டில் தம் அண்டார்க்டிகா பயணத்தின்போது கண்டறிந்தார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 220)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8ndka6q/
தமிழ்“அட்மிரால்டி மலைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a8ndka6q/APA
Oliyon Research. (2026). அட்மிரால்டி மலைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a8ndka6q/MLA
"அட்மிரால்டி மலைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a8ndka6q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment