சுத்த மாயை

cutta māyai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்துகளில் ஒன்று. வேறுபெயர்கள் விந்து, குண்டலினி, மாமாயை. காரியம்; இதன் காரியங்கள் சொல்,பொருள் என இருவகை உயிரின் அளவில் சொல் நின்று தனக்குரிய பொருளின் கருத்துப் பிழம்பைத் தோற்றுவிக்கும். இப்பிழம்பு தோற்றுவிக்கும் 4 ஆற்றல்களாவன; 1) செப்பல்; மொழியானது தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும். சொல்பவனுக்கும் கேட்பானுக்கும் நினைத்த பொருளைச் சொல்லும். சிவி கற்ப உணர்வு தோன்றுவதற்கு ஏதுவாகும். இது உயிர்வளியால் உந்தப்பட்டு வெளிக் கிளம்புவது. பல், இதழ், நா, அண்ணங்கள் ஆகியவற்றில் பட்டுச் சிதறுவது. 2) உன்னல்; இது உயிர்வளியால் உந்தப்பட்டு வெளிச் சிதறாமல், பிறர் செவியில் கேளாமல் தன் உள் உணர்வுக்கு மட்டும் ஒசையாய் இருப்பது. 3) பொதுமை; மயில் முட்டையிலுள்ள நீர் மயிலின் நிறங்களைத் தனிதனியாகக் காட்டாமல், தன்னுன் அடக்கியுள்ளதைப்போல், எழுத்துகளை வேறு வேறாக்காமல் தன்னுள்ளே அடக்கி நிற்பது. 4) நுண்மை; நுண்மொழி. பர உடலில் ஒர்ஒளியாகப் பிற மொழிகளைப் போல் மதி ஒன்றி ஒடுங்காமல், மிகவும் நுட்பமான நிர்விகற்ப உணர்விற்கு ஏதுவாய் இருக்கும். இவ்வாறு மொழி அல்லது வாக்கு நான்கு வகையாகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 134)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8dtngcd/

தமிழ்
“சுத்த மாயை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8dtngcd/
APA
Oliyon Research. (2026). சுத்த மாயை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a8dtngcd/
MLA
"சுத்த மாயை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8dtngcd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment