{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "a8dtngcd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a8dtngcd/", "kind": "word", "headword": "சுத்த மாயை", "romanization": "cutta māyai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:17.641720+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்துகளில் ஒன்று. வேறுபெயர்கள் விந்து, குண்டலினி, மாமாயை. காரியம்; இதன் காரியங்கள் சொல்,பொருள் என இருவகை உயிரின் அளவில் சொல் நின்று தனக்குரிய பொருளின் கருத்துப் பிழம்பைத் தோற்றுவிக்கும். இப்பிழம்பு தோற்றுவிக்கும் 4 ஆற்றல்களாவன; 1) செப்பல்; மொழியானது தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும். சொல்பவனுக்கும் கேட்பானுக்கும் நினைத்த பொருளைச் சொல்லும். சிவி கற்ப உணர்வு தோன்றுவதற்கு ஏதுவாகும். இது உயிர்வளியால் உந்தப்பட்டு வெளிக் கிளம்புவது. பல், இதழ், நா, அண்ணங்கள் ஆகியவற்றில் பட்டுச் சிதறுவது. 2) உன்னல்; இது உயிர்வளியால் உந்தப்பட்டு வெளிச் சிதறாமல், பிறர் செவியில் கேளாமல் தன் உள் உணர்வுக்கு மட்டும் ஒசையாய் இருப்பது. 3) பொதுமை; மயில் முட்டையிலுள்ள நீர் மயிலின் நிறங்களைத் தனிதனியாகக் காட்டாமல், தன்னுன் அடக்கியுள்ளதைப்போல், எழுத்துகளை வேறு வேறாக்காமல் தன்னுள்ளே அடக்கி நிற்பது. 4) நுண்மை; நுண்மொழி. பர உடலில் ஒர்ஒளியாகப் பிற மொழிகளைப் போல் மதி ஒன்றி ஒடுங்காமல், மிகவும் நுட்பமான நிர்விகற்ப உணர்விற்கு ஏதுவாய் இருக்கும். இவ்வாறு மொழி அல்லது வாக்கு நான்கு வகையாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 134"}]}}