இராசாவாலியா என்பது கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் குறிப்பேடு. இந்நூல் இலங்கைத் தீவின் தொடக்ககாலம் முதல் கி.பி. 1687–இல் மன்னர் இரண்டாம் விமலதர்மசூரியா முடிசூடிக் கொண்டது வரை உள்ள வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கி.பி. 1359–ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்தைப் பற்றி அறிய இந்நூல் பெரிதும் பயன்படுகிறது. இராசாவாலியா அரசியல் செய்திகளுக்கே முதலிடம் கொடுத்துள்ளது; சமயச் செய்திகளை விளக்கவில்லை. இந்நூல் பொதுமக்களைக் கவரும் வண்ணம் எளிய நடையில் அமைந்துள்ளது; இலக்கிய நடையைப் புறக்கணித்துள்ளது. இது பலரால் எழுதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.