செலிபீஸ் கடல்
celipīs kaṭal
இது சுலாவெசிக் கடல் என்றும் கூறப் படும்.
இது சுலாவெசிக் கடல் என்றும் கூறப் படும். இது மேற்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ளது. இதன் வடக்கில், சுலூத் தீவுத் தொகுதிகளும், கிழக்கில் சாங்கித் தொடர்களும், தெற்கில் செலிபீஸ் தீவும், மேற்கில் போர்னியோவும் எல்லையாக உள்ளன. நீளம் 840 கி.மீ.; அகலம் 675 கி.மீ., பரப்பளவு 280,000 சதுர கி.மீ. தென் மேற்கில் ஜாவா கடலுடன் தொடர்பு கொண்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இதன் ஆழம் 4000 மீ. வரை இருப்பினும், ஒரு சில பகுதிகளில் இது 6500மீ. வரையிலும் இருக்கும். ஓரப் பகுதிகளில், ஆங்காங்கே பரவலாக எரிமலைக் கூம்புகளும், குன்றுகளும் தென்படுகின்றன. மீன் பிடித்தல் இங்கு மிக முக்கிய தொழில். பதப் படுத்தப் பட்ட மீன்கள், உலகின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 870)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zhmprb8/
தமிழ்“செலிபீஸ் கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9zhmprb8/APA
Oliyon Research. (2026). செலிபீஸ் கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9zhmprb8/MLA
"செலிபீஸ் கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9zhmprb8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment