சிட்ரிக் அமிலம்
ciṭrik amilam
இது எலுமிச்சைக் காடி என்றும் குறிப்பிடப்படும்.
இது எலுமிச்சைக் காடி என்றும் குறிப்பிடப்படும். சிட்ரிக் அமிலத்தின் வேதிப் பெயர் 2-ஹைட்ராக்சி- புரோப்பேன் -1, 2, 3 டிரைகார்பாக்சலிக் அமிலமாகும். இதன் அமைப்பு: CHCOH
│
C(OH)COH
│
CHCOH சிட்ரஸ் வகைப் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் இவ்வமிலம் உள்ளது. எலுமிச்சையின் சாற்றில் 6—10% சிட்ரிக் அமிலம் உள்ளது. குளுக்கோஸ், சுக்ரோஸ் அல்லது தூய்மையாக்கப்பட்ட சர்க்கரைக் கழிவுப் பாகு ஆகியவை சில கனிம உப்புகள் உடனிருக்க நுண்ணுயிர்கள் அல்லது காளான்களால் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்டுப் பெருமளவில் சிட்ரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. எனினும், இது ஆய்வகத்தில் கிளிசராலில் இருந்து தொகுக்கப்படுகிறது.
சிட்ரிக் அமிலம் 1897 இல் வாரன்ஸ் என்பாரால் ரெஃபர்மேட்டஸ்கி (Reformatesky ) வினையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது. சிட்ரிக் அமிலக் கரைசலைக் குளிர்விப்பதால், ஒரு மூலக்கூறு நீரேற்றம் பெற்ற படிகம் கிடைக்கும். இதனையே 130°C சூடு செய்தால், படிக நீரை இழந்து, தூய சிட்ரிக் அமிலம் கிடைக்கும். இதன் உருகுநிலை 153°C. இது ஓர் ஆல்கஹால் போலவும், மூன்று காரத்துவமுடைய அமிலமாகவும் செயல்படும். சான்றாக, இது அசெட்டைல் வழிச் சேர்மத்தைத் தருவதுடன், மூன்று வகை உப்புகளையும் தருகிறது.
குடி நீர்கள் (beverages) தயாரிப்பில் இவ்வமிலம் பெரிதும் பயன்படுகிறது; சாயத் தொழிலில் நிலை நிறுத்தியாகப் (mordant) பயன்படுகிறது. ஃபெரிக் அம்மோனியம் சிட்ரேட், மக்னீசியம் சிட்ரேட், சோடியம் அல்லது பொட்டாசியம் சிட்ரேட் போன்றவை மருத்துவத்தில் பயன்படுகின்றன. டிரைபியூட்டைல் சிட்ரேட் போன்ற எஸ்ட்டர்கள் நெகிழ்வூட்டிகளாக மெருகு பூச்சுகளிலும் (lacquers) நெகிழிகளிலும் (plastics) பயன்படுகின்றன. —பி. ஈ. எம். லியாகத் அலிகான்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 210)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9t9bwhxu/
தமிழ்“சிட்ரிக் அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9t9bwhxu/APA
Oliyon Research. (2026). சிட்ரிக் அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9t9bwhxu/MLA
"சிட்ரிக் அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9t9bwhxu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment