நோய்க்கிருமி
nōykkirumi
பொருள்கள் · Senses
1.
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனித்தனி உயிரணுக்கள், கோளவடிவில், நீண்ட வடிவில் சுருள் வடிலில் அல்லது வளைவுகளாக அமைந்து இருக்கும். இவை சங்கிலித் தொடர்களாக அல்லது திரள்களாக இருக்கும். சில வகைக் கிருமிகள் பூசனவலை வடிவில் அமைந்து இருக்கும். இவை, பச்சையம் உட்பட பல நிறமிகளை உற்பத்தி செய்யக் கூடியவை. சில உயிர்மக் கருக்களாக அமைந்து உள்ளன. சில சுதந்திரமாக வாழ்கின்றன, வேறு சில அழுகிய கரிமப் பொருள்களில் வாழ்கின்றன. இன்னும் சில ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. இவற்றுள் சில வகை மனிதருக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் நோய் உண்டாக்குகின்றன.
— bacteria
2.
மிக மிகச் சிறியதான, பாக்டீரியா வைவிடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் கிருமி உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண்டாக்க லாம். ஆனால் உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்டையின் உள்ளிருக்கும் சவ்வு) மட்டுமே நோய்க் கிருமி உண்டாக்கும். சன்னிக் காய்ச் சல், அம்மை, நாவெறி நோய், இளம்பிள்ளை வாதம், நச்சுக் காய்ச்சல் (இன்ஃபுளுயென்சா) போன்ற நோய்கள் நோய்க் கிருமிகளினால் உண்டாகின்றன
— virus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jybg9mh/
தமிழ்“நோய்க்கிருமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jybg9mh/APA
Oliyon Research. (2026). நோய்க்கிருமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jybg9mh/MLA
"நோய்க்கிருமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jybg9mh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment