பொருளியல்

poruḷiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிதியியல் அல்லது செல்வம், வளமான வாழ்க்கை வழிமுறைகள் தொடர்பானவை — economic
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 248)
2.
ஒரு சமூக அறிவியல். பண்ட மாற்று. பகிர்மானம், நுகர்வு, உற்பத்தி முதலிய துறைகளின் நடத்தையை ஆராய்வது. இதன் முதன் மையான கருத்துப் புலங்கள் இரண்டு 1) தொன்மைக்கருத்துப்புலம்: இதனை நிறுவியவர் ஆதம் சிமித். பொருளாதார மதிப்புக் கருத்தையும் செல்வம் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கு மிடையே (வகுப்புகள்) பகிர்ந்துள்ளதையும் இவற்றை வற்புறுத்தினார். மார்க்ஸ் கருத்துப் புலம் இதன் கிளைப்புகளில் ஒன்றே. 2) புதுத் தொன்மைக் கருத்துப் புலம்: இதை நிறுவியவர்கள் ஜெவான்ஸ் (1835-82) வார் லாஸ் (1834-1910) ஆகிய |இருவருமாவர். இவர்கள் இறுதி நிலையாளர்கள் எனப்படுவர். மேற்கத்திய பொருளியல் கருத்தின் ஆணிவேர் இப்புலமாகும்.போட்டியிடும் இருமுனைகளுக்கிடையே அரிதான வளங்கள் ஒதுக்கப்படும் பொழுது, அவற்றின் பங்கை இது வற்புறுத்துவது. புதுத்தொன்மைப்பொருளியல். மெலும் இருவகைப்படும்: 1) சிறு பொருளியல்: தனிப் பொருளாதார அலகுகளுக் கிடையே (நுகர்வோர், நிறுவனம் முதலியன) தொடர்பை இது ஆராய்வது. 2) பெரும் பொருளியல்: பணம், பொருளாதாரத் திரட்சிகள், முழு வேலை வாய்ப்பு. அரசு ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை அது பகுத்துப் பார்ப்பது. இவ்விரு துறைகளும் வற்புறுத்துபவை தனியாள் அல்லது குடும்பமே பகுப்பின் அடிப்படை அலகு வகுப்புகள் அல்ல. — economics
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jevtnq8/

தமிழ்
“பொருளியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jevtnq8/
APA
Oliyon Research. (2026). பொருளியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jevtnq8/
MLA
"பொருளியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jevtnq8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment