சூல் காலக் குருதிப் போக்கு
cūl kālak kurutip pōkku
இந்நிலை சூலடைந்த 28 வாரங்களுக்குப் பிறகு உண்டாகும் குருதிப் பெருக்கைக் குறிப்பிடுகிறது.
இந்நிலை சூலடைந்த 28 வாரங்களுக்குப் பிறகு உண்டாகும் குருதிப் பெருக்கைக் குறிப்பிடுகிறது. இது மிகவும் சிக்கலானது. இதனால், தாய், சேயின் மரணம் நேரிடலாம். கீழ் நிலைக் கருக் குடையின் குருதிப் போக்கு, இயல் நிலையில் உள்ள கருக் குடையின் குருதிப் போக்கு எனக் குருதிப் போக்கு இரு வகைப்படும். சில போது, கருக் குடையிலிருந்து இல்லாமல், வேறு ஏதாவது பகுதியிலிருந்து (கருப் பைக் கழுத்துத் தொங்கும் சதை) குருதி வெளிப்படலாம். கீழ் நிலைக் கருக் குடை நான்கு வகைப்படும். இந்நிலை பல மகவு ஈன்ற பெண்களிடமே காணப்படுகிறது.
முதல் வகை. கருக் குடை மேற்பகுதியில் இருந்தாலும், கருப்பையின் கீழ்ப் பகுதியை அடைகிறது.
இரண்டாம் வகை. கருக் குடை கீழ்ப் பகுதியில் காணப்பட்டாலும், கருப்பையின் உள் வாயை அடைப்பதில்லை.
3, 4 ஆம் வகைகளில் கருக் குடை முழுமையாக உள் வாயை அடைக்கிறது. கருப்பையின் திடீர்ச் சுருக்- கங்களால் குருதிப் போக்கு ஏற்படுகிறது. இது விட்டு விட்டு நடைபெறுகிறது. குருதி எளிதில் வெளிப்படுவதால் வலி இருப்பதில்லை. இந்நிலை கவனிக்கப்படா விடில், குருதிப் பெருக்கு மிகுதியாகி விடுகிறது. நோயாளி உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும். மல்லாந்து படுத்திருக்க வேண்டும். குருதிப் பெருக்கின் அளவைப் பொறுத்து, நோயாளியின் உடல் நிலை அமைகிறது. குருதி அழுத்தம், நாடித் துடிப்பு, உடல் வெப்பம் அனைத்துமே மாறுபடும் நிலையில், யோனி வழி ஆய்வு கூடாது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின், தேவையிருந்தால் குருதி கொடுக்க வேண்டும். கருக் குடையின் அமைப்பைப் பற்றி, கடஒலி வரைவி, ஐசோடோப், எக்ஸ் கதிர் ஆய்வு இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சில வேளை குருதிப் போக்கு தானாகவே நின்று விடும். அப்போது ஓய்வு எடுக்கலாம். குழந்தையின் உடல் நலத்தையும் கண்காணிக்க வேண்டும்.
நிலைமை சீரடையாவிடில் உணர்வகற்றி, தாயின் பனிக் குடத்தை உடைத்து, மகப் பேற்றை உண்டாக்கலாம். இல்லையெனில், கருப்பையைத் திறந்து குழந்தையை வெளியேற்றி, ஆவன செய்யலாம். இயல் நிலையில் அமைந்துள்ள கருக் குடையிலிருந்து குருதி வெளிப்பட்டால், வெளிப்படும் குருதியின் நிலையைப் பொறுத்து, மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். தேவையிருந்தால், தாயையும், சேயையும் காப்பாற்றிக் கருப்பைத் திறப்புச் செய்ய வேண்டும். குருதி அளிக்க வேண்டும். குருதி கிடைக்காவிடில், ஃபைப்ரினோஜன் மற்றும் III, V & VIII கூறுகள் கொண்ட உறைய வைக்கப்பட்ட பிளாஸ்மாவைக் கொடுக்கலாம்.
குருதி நாளத்தினுள்ளேயே குருதி உறைவு ஏற்பட்டால், ஹெப்பாரின் கொடுக்க வேண்டும். ஹெப்பாரின் அளவு மிகுதியாகி விட்டால், புரோமின் சல்ஃபேட் கொடுக்கலாம். —அ. கதிரேசன்
புறத் தோல் புற்று. இது முத்துப் பிள்ளை நிலை யைத் தொடர்ந்து உண்டாகலாம். இந்நிலை விரை வாகப் பரவி, மரணத்தில் முடிகிறது. ஆனால், மிகவும் அரிதாகவே தோன்றுகிறது. மருத்துவமாகக் கருப் பையையும், சூலகங்களையும், சூலக நாளங்களையும் அகற்றி விட வேண்டும். மெத்தோடிரக்சேட் போன்ற புற்று எதிர் மருந்துகளைப் பயன்படுத்தலாம். வேற்றிடச் சூலின் போது (எ-டு: கருக் குழல் கருத்தரிப்பு) அறுவை செய்தே குருதிப் பெருக்கை நிறுத்த முடியும். —மு.கி. ராஜா சுப்பிரமணியம் நூலோதிG. Dixon, Antenatal Care, Eleventh Edition, Churchill Livingstone, London, 1978.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 660)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9cv7fkad/
தமிழ்“சூல் காலக் குருதிப் போக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9cv7fkad/APA
Oliyon Research. (2026). சூல் காலக் குருதிப் போக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9cv7fkad/MLA
"சூல் காலக் குருதிப் போக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9cv7fkad/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment