சாக்கரின்
cākkariṉ
இது ஆர்த்தோ சலஃபோபென்சாயிக் இமைடு ஆகும்.
இது ஆர்த்தோ சலஃபோபென்சாயிக் இமைடு ஆகும். இதன் வாய்ப்பாடு:
டொலுயீனை, குளோரோசல்ஃபோனிக் அமிலம் கொண்டு சல்ஃபோனேட் ஏற்றம் செய்தால் o, p-டொலூயீன் சல்ஃபோனைல் குளோரைடுகள் கிடைக்கும். இதில் ஆர்த்தோ மாற்றியத்தை வடிகட்டிப் பிரித்து அம்மோனியாவுடன் வினைப்படுத்திக் கிடைக்கும் பொருளைப் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு ஆக்சிஜனேற்றமடையச் செய்தால் ஆர்த்தோ சல்ஃபோமிடோ பென்சாயிக் அமிலம் கிடைக்கும். இதைச் சூடு செய்தால் சாக்கரின் உண்டாகிறது.
இது வெண்மையான படிகம்; சர்க்கரையை விட 550 மடங்கு மிகு இனிப்புத் தன்மை உடையது. ஏறத்தாழ நீரில் கரையாது; ஆனால், இதன் சோடியம் உப்பு, நீரில் நன்கு கரையும். எனவே கடைகளில் சோடியம் உப்பாகவே இது விற்கப்படுகிறது. இதன் நீர்த்த கரைசல் இனிப்புச் சுவையுடையது. ஆனால், அடர்கரைசல் கசப்புத் தன்மையைப் பெற்றிருக்கும். இது ஆற்றல் தரும் உணவுப் பொருள் அன்று. எவ்வித மாற்றமும் அடையாமல் சிறுநீரில் வெளியேறி விடும்.
மலிவான பானங்களில் இனிப்புப் பொருளாகப் பயன்படுகிறது. கொழுப்புச் சத்து மிகுந்தவர்களும், நீரிழிவு நோய் உள்ளோரும் சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புப் பொருளாக இதைப் பயன்படுத்தலாம். —பி.ஈ.எம். லியாகத் அலிகான்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 26)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9b9ww4fu/
தமிழ்“சாக்கரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9b9ww4fu/APA
Oliyon Research. (2026). சாக்கரின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9b9ww4fu/MLA
"சாக்கரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9b9ww4fu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment