செலுத்தும் பொருள்
celuttum poruḷ
பொதுவாக ஏவூர்திப் பொறியில் பயன் படுத்தக் கூடிய எரி பொருளே செலுத்தும் பொருள் (propellent) எனப் படும்.
பொதுவாக ஏவூர்திப் பொறியில் பயன் படுத்தக் கூடிய எரி பொருளே செலுத்தும் பொருள் (propellent) எனப் படும். இது ஆற்றலுக்கு மூலப் பொருளாகவும் பயன் படு பொருளாகவும் உள்ளது. வேதிப் பொருள் மற்றும் பிற பொருள்களைக் கொண்டு, வான வெளியில் உந்து விசையால் ஏவூர்திப் பொறியைச் செலுத்துவதற்குப் பயன் படுவதால், இது செலுத்தும் பொருள் எனக் குறிப்பிடப் படுகிறது.
இது நீர்ம வகை, திண்ம வகை எனப் பகுக்கப் படும். வளிம வடிவில் எரிக்கப் பட்டாலும், இட வசதிக்காக (விண் கலங்களில் இடங் கவர்தலைக் குறைக்க வேண்டும்) அழுத்தப் பட்ட நிலையில் எரி பொருள் கொண்டு செல்லப் படும். காட்டாக நீர்ம ஆக்சிஜன், நீர்ம ஹைட்ரஜன் முதலியவை குறிப்பிடத் தக்க உயர் ஆற்றலை அளிக்க வல்ல செலுத்தும் துணைப் பொருள் ஆகும். நீர்மச் செலுத்தும் பொருள் கனற்சிப் பகுதியிலிருந்து தனித்துத் தனிப் பெட்டகங்களில் எடுத்துச் செல்லப் படுகிறது. திண்மச் செலுத்தும் பொருள் கனற்சிப் பகுதியிலேயே எடுத்துச் செல்லப் படுகிறது. எடுத்துச் செல்ல இவ்விதம் பயன் படுவதால், பொறியின் வடிவம், உள்ளமைப்பு யாவும் நீர்மச் செலுத்தும் பொருள், திண்மச் செலுத்தும் பொருள் பயன்படும் பொறிகளுக்கு ஏற்றவாறு வேறுபடுகின்றன.
நீர்மச் செலுத்தும் பொருள் வேதியியல் முறையில் எரிந்து ஆற்றலை வெளியிடுகிறது. இது மூன்று வகையாகப் பயன் படுகிறது. அவை: தனி, இரட்டை, கலந்த வகை என்பன, தனி வகை என்பது கலவையான அல்லது கரைசலான தனி எரி பொருளாகவும் இரட்டை வகை என்பது எரி பொருளும், ஆக்சிஜனேற்றியும் பொறியில் ஒன்றாகக் கலக்கப் பட்டுப் பயன் படும் பொருளாகவும் கருதப் படும். கலந்த வகைச் செலுத்தும் பொருள் என்பது நீர்ம மற்றும் திண்மச் செலுத்தும் பொருள்களைப் பயன்படுத்தும் முறையாகும்.
திண்மச் செலுத்தும் பொருள். இது ஆக்சிஜனேற்றம் செய்ய வல்ல குறைப்பான்களும் திண்ம நிலையிலேயே ஒரே வெப்ப நிலையில் நிலைத்திருக்கச் செய்ய உதவும் வகையாகும். எரிக்கும் போது, செலுத்தும் பொருள் நன்கு எரிந்து, சூடான வளிமத்தை வெளியிடும். வெடி மருந்துப் பொருள்கள், திண்மச் செலுத்தும் பொருள் வகையைச் சார்ந்தவை. இருப்பினும், திண்மச் செலுத்தும் பொருள் என்பது ஏவூர்திச் செலுத்துதலுக்குப் பயன் படும் எரி பொருளையே குறிக்கும்.
<!---- இப்பத்தியில் உள்ள சில பகுதிகள் அழிந்த நிலையில் இருந்தாலும், இப்பக்கத்தில் பிற இடங்களில் பயின்று வரும் சொற்களைக் கொண்டு அழிந்த வார்த்தைகளை ஊகிக்க முடிகிறது.உதாரணமாக பெர்குளோரேட் என்ற வார்த்தை. எனவேதான், Reconstruct குறியீடு பயன் படுத்தப் பட்டுள்ளது.---->
எரி பொருள்கள். ஹைட்ரோகார்பன்கள் அல்லது அவற்றிலிருந்து உருவான வினைப்படு பொருள்கள் அதாவது, செயற்கை இழுவை, செயற்கை ரெசின், செல்லுலோஸ், செல்லுலோஸ் வினைப்படு பொருள்கள் முதலியன எரி பொருள்களாகப் பயன் படுகின்றன. சிறிய அளவில், பல்வேறு விதமான செயல்களுக்காக வினையூக்கிகளும் பயன் படுகின்றன.
திண்மச் செலுத்தும் பொருளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை: ஒற்றைக் கலந்த வகை அல்லது இரு வகைப் பரிமாண வகை என்பவை. ஒன்று கலந்த வ்கையில், ஆக்சிஜனேற்றம் செய்ய வல்ல செயற்கை இழுவையிலுள்ள அம்மோனியம் பெர்குளோரேட் போன்ற கனிம உப்பு அடங்கிய கரிம எரி பொருள் அடங்கும். இரு பரிமாண வகையே பொதுவாக உயர் வலிமை கொண்டிருக்கும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. P. L. Ballaney, Theory of Machines, Fifteenth Edition, Khanna Publishers, New Delhi, 1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 899)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/98gq9jh6/
தமிழ்“செலுத்தும் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/98gq9jh6/APA
Oliyon Research. (2026). செலுத்தும் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/98gq9jh6/MLA
"செலுத்தும் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/98gq9jh6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment