உயர் அளவுச் சோதனை
uyar aḷavuc cōtaṉai
ஒருவரின் தேர்ச்சியினை நன்கு வரையறுக்கப்பட்ட நடத்தைக் குறிக்கோள்கள்களின் அடிப்படையில் அளந்தறியப் பயன்படும் சோதனை உயரளவுச் சோதனை (Criterion Referenced Test) எனச் சொல்லப்படும்.
ஒருவரின் தேர்ச்சியினை நன்கு வரையறுக்கப்பட்ட நடத்தைக் குறிக்கோள்கள்களின் அடிப்படையில் அளந்தறியப் பயன்படும் சோதனை உயரளவுச் சோதனை (Criterion Referenced Test) எனச் சொல்லப்படும்.
கற்பித்தலின் குறிக்கோள்கள் எந்த அளவுக்கு மாணவர்களிடம் வெளிப்படுகின்றன என்பதை இச்சோதனை பொருத்திப் பார்க்கின்றது. ஒப்பளவுச் சோதனையில் (Norm–referenced Test) ஒரு மாணவரின் தேர்ச்சியானது அவர் இருக்கும் குழுவின் மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் தரப்படுத்தவும் (Ranking) பயன்படுத்தப்படுகிறது. உயரளவுச் சோதனை பெரும்பாலும் முழுதறி திறன் கற்றல், கற்பித்தல் மாதிரியில் பயன்படுத்தப்படுகிறது.
உயரளவுச் சோதனை மாணவர்கள் பாடத் திட்டம் வழியாக அடைய வேண்டிய அனைத்துக் குறிக்கோள்களையும் முழுதுமாக அடைந்து விட்டனரா அல்லது அரைகுறையாக அடைந்துள்ளனரா எனக் கண்டறிகிறது. இச்சோதனையில் வெற்றி பெற்றவர்கள் தரப்படுத்தப் படுவதில்லை; மாறாக, முழுதும் அறிந்தோர் (Master), முழுதும் அறியாதவர் (Non–Master) என வகைப்படுத்தவும், முழுதிறன் பெறாத மாணவர்களைத் தனியாள் கற்பித்தல் (Individualised Instruction) வழியே கற்பிக்கவும் உயரளவுச் சோதனை பயன்படுகிறது. மேலும், உயரளவுச் சோதனையில் பயன்படுத்தப்படும் கேள்விகள், ஒப்பளவுப் பொருத்தச் சோதனையில் பயன்படுத்தப்படும் கேள்விகளிலிருந்து மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒப்பளவுப் பொருத்தச் சோதனையில், கேள்விகள் கடினத்தன்மை (Difficulty Level), வேறுபடுத்தும் குணகம் (Discrimative Index) ஆகிய பண்பு- களின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படும். ஆனால் உயரளவுச் சோதனையில் கேள்விகள் கற்பித்தல் குறிக்கோளுக்கு உகந்தனவா உகந்தனவிலையா என்பதின் அடிப்படையில் சீர்தூக்கப்பட்டு, கற்பித்தல் குறிக்கோளை முழுதுமாக அடைய உகந்தவை மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும்.
ஒப்பளவுப் பொருத்தச் சோதனையில் எத்தனை கேள்விகள் இருக்க வேண்டும் என்பது அச்சோதனையின் நம்பகத்தன்மையை ஒட்டி முடிவு செய்யப்படுகிறது, ஆனால் உயரளவுச் சோதனையில் கேள்விகளின் எண்ணிக்கை சோதனை தயார் செய்வோரின் முடிவையொட்டியே அமைகின்றது. இன்று வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் ஒப்பளவுப் பொருத்தச் சோதனையைக் கைவிட்டு, உயரளவுச் சோதனையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகளில் விரும்பத்தகு மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பது கல்வியாளர்களின் கருத்து. காண்க: ஒப்பளவுப் பொருத்தச் சோதனை.
துணை நூல்கள்
Brown, S., What do They Know? A Review of Criterion Referenced Assessment, Scottish Education Department, Edinburgh, 1980.
Poham, W.J., Criterion–Referenced Measurement, Prentice-Hall, Englewood Cliffs, New Jersey, 1978.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 952)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/947dqk4w/
தமிழ்“உயர் அளவுச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/947dqk4w/APA
Oliyon Research. (2026). உயர் அளவுச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/947dqk4w/MLA
"உயர் அளவுச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/947dqk4w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment