வேகவரிசையாக்கம்

vēkavaricaiyākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1962-ல் சி.ஏ.ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்கமுறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த்தந்திர முறையை அடிப்படையாகக் கொண்டது. இம்முறைப்படி முதலில் வரிசையாக்கப்பட வேண்டிய பட்டியலில் மைய மதிப்பு தேடிக் கண்டறியப்படும். அச்சாணி (pivot) மதிப்பென இது அழைக்கப்படுகிறது. இவ்வுறுப்பை சிறிது சிறிதாக நகர்த்தி அதன் இயல்பான இடத்தில் இருத்த வேண்டும். அதன் பிறகு அச்சாணி மதிப்பைவிடக் குறைவான மதிப்புள்ள உறுப்புகள் ஒருபுறமாகவும், அதிக மதிப்புள்ள உறுப்புகள் மறுபுறத்திற்கும் தள்ளப்படுகின்றன. இப்போது இருபட்டியல்கள் பெறப்படுகின்றன. அடுத்த கட்டமாக, இரு பட்டியல்களிலும் தனித் தனியாக மேற்கண்ட முறை செயல் படுத்தப்படும். முழுப்பட்டியலும் வரிசையாக்கப்படும் வரை தொடர்ந்து பட்டியல் பிரிப்பு நடைபெறும். — quicksort
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/92mrxfvm/

தமிழ்
“வேகவரிசையாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/92mrxfvm/
APA
Oliyon Research. (2026). வேகவரிசையாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/92mrxfvm/
MLA
"வேகவரிசையாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/92mrxfvm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment