மத்திய பிரதேச மாநிலத்தில் பன்னா மாவட்டத்தில் உள்ளதோர் ஊர். மத்திய பிரதேசத்துடன் இணையும் முன்னர் இப்பகுதியை விந்தியப் பிரதேசம் என்றனர். இங்கு, கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற வரலாற்றுப் புகழ் மிக்க கோட்டை ஒன்றுள்ளது. இங்குள்ள சமணக் கோயில்களில் அழகு மிக்க சிற்பங்கள் உள்ளன. மக்கள் தொகை, 8366 (1981).