(1775-1817) பிரபல ஆங்கில நாவலாசிரியைகளுள் ஒருவர். சாதாரண வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து நல்ல நாவல் எழுதும் முறையைத் தோற்றுவித்தார். ஸ்காட், கோல்ரிட்ஜ் முதலியவர்களால் புகழப்பெற்றவர். அவருடைய சிறந்த நாவல்களுள் சில ஆணவமும் தப்பெண்ணமும் (Pride and Prejudice) எம்மா, மான்ஸ்பீல்டு பார்க் என்பனவாம்.