அகண்டானந்த சுவாமி
akaṇṭāṉanta cuvāmi
இராமகிருட்டிண பரமஅம்சரின் மாணவர்களுள் ஒருவராய்த் துறவியாகி, இராமகிருட்டிணரின் அருட்பணியைச் செய்தவர்.
இராமகிருட்டிண பரமஅம்சரின் மாணவர்களுள் ஒருவராய்த் துறவியாகி, இராமகிருட்டிணரின் அருட்பணியைச் செய்தவர். அவர் கி.பி. 1864–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார்.
அகண்டானந்த சுவாமி
பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் கங்காதர கடக்கு (Gangadhar Ghadak) என்பதாகும். முதன் முதலாக அவர் கி.பி. 1884-இல் இராமகிருட்டிணரைச் சந்தித்தார். வறட்சித் துயர் துடைக்கும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர், கி.பி. 1898-ஆம் ஆண்டில் மகுலா (Mahula) என்னுமிடத்தில் அனாதைக் குழந்தைகள் பலரைக் காக்கும் பணியில் ஈடுபாடு கொண்டார். அமைதியாக ஆரவாரமின்றி ஆக்கப் பணி செய்வதையே அவர் பெரிதும் விரும்பினார், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், அவர் சாரகாச்சி (Saragachchi) என்னும் சிற்றூரில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவர் இராமகிருட்டிணர் தவமனை ஒன்றையும் அமைத்தார். கங்காதரர் என்னும் பெயருடனே அவர் சுவாமி விவேகானந்தருடன் இந்திய நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றார். காசுமீரத்தில் தங்கியிருந்தபோது, அவர் ஒற்றராக இருக்கக்கூடும் என்னும் ஐயத்தால், சிரீநகரில் (Srinagar) அரசு அவரைச் சிறையில் அடைத்தது. தீவிர ஆய்வுக்குப் பின்னர், அவர் உண்மையான துறவியே என அறிந்து, அரசு அவரை விடுவித்தது. கல்கத்தாவுக்குத் திரும்பிய கங்காதரர், பேலூர் மடத்தில் வச்சிர ஓமம் என்னும் வேள்வியைச் செய்தார். அதற்குப் பின்னரே அவருக்கு அகண்டானந்தர் என்னும் பெயர் வந்தது. சுவாமி அகண்டானந்தர் 1925-ஆம் ஆண்டில் இராமகிருட்டிணப் பணி மன்றத்தின் (Ramakrishna Mission) துணைத்தலைவரானார். சுவாமி சிவானந்தர் காலமான பின் 1934-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அவர் அம்மன்றத்தின் தலைவரும் ஆனார். சுவாமி அகண்டானந்தர் 1937-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 7-ஆம் நாள், தமது 71-ஆம் வயதில் பேலூர் மடத்தில் இறைவனடி சேர்ந்தார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 71)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8vz5etjh/
தமிழ்“அகண்டானந்த சுவாமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8vz5etjh/APA
Oliyon Research. (2026). அகண்டானந்த சுவாமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8vz5etjh/MLA
"அகண்டானந்த சுவாமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8vz5etjh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment