முதலாம் இராசராச சோழரின் படைத்தலைவர். விக்கிரம சோழிய வரையனான அரையன் இராசராசன் எனவும் இவர் குறிக்கப் பெற்றுள்ளார். இவர் முதலாம் இராசேந்திரனின் காலத்திலும் படைத்தலைவராக இருந்தார்; சோழ மண்டலத்திலுள்ள திரைமூர் நாட்டிலுள்ள சாத்தமங்கலத்தில் பிறந்தவர்; மேலைச் சாளுக்கியரையும், கீழைச் சாளுக்கியரையும் கலிங்கரையும் வென்றவர். இவரது வெற்றிச் சிறப்பினை அனந்தபுரம் மாவட்டம், கொத்தசிவரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் கற்றூண் கல்வெட்டு (கன்னட சாசனம்) விரித்துரைக்கின்றது. இவர் மேலைச் சாளுக்கிய செயசிங்கனை வென்றவர். இவருக்கு எதிர்த்தவர் காலன், நால்மடி பீமன், சோழ சக்கரன், சாமந்தாபரணன், உபாரி நாராயணன், வீரபூடணம், வீரவீமன் முதலான சிறப்புப் பெயர்கள் உண்டு.ம.இரா.