இளம்பல் கோசர்
iḷampal kōcar
சங்கப் புலவர்களுள் ஒருவர்.
சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் அறியக் கூடவில்லை. இளம்புல்லூர் என்பது இவர்தம் ஊராகும். காவிதி என்னும் சொல்லுக்கு (1) வேளாளருக்குப் பாண்டியர் கொடுத்த ஒரு பட்டம் என்றும், (2) வைசியமாதர் பெறும் பட்டவகை என்றும், (3) அமைச்சர் என்றும், (4) கணக்கர் சாதி என்றும் (5) வரிதண்டும் அரசாங்கத் தலைவர் என்றும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி பொருள் தந்துள்ளது. நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இவர் உழுவித்துண்ணும் வேளாளராவார் என்று கூறியுள்ளார். காவிதி என்னும் பெயரொடு ‘ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்’ என்னும் மற்றொரு சங்கப்புலவரும் உள்ளார். இளம்புல்லூரர்க் காவிதியின் ஒரே பாடல் (89) நற்றிணையில் இடம் பெற்றுள்ளது. முல்லைத் திணையில் தோழி கூற்றாக அமைந்துள்ள இப்பாடல், பிரிந்து சென்ற தலைவன் பொருள் தேடி மீண்டான் எனக் கேள்வியுற்ற தோழி மகிழ்ந்து தலைவியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. காய்கள் நிரம்பிய உழுந்துச் செடியின் இலைகள் சிதையுமாறு வீசித் துன்புறுத்தும் வாடைக்காற்றின் வருகைக்கு உவமையாக, அயர்ந்த யானையின் பெருமூச்சினைக் காட்டி, ‘அல்கலும் அலைக்கும் நல்கா வாடை, பரும யானை அயா உயிர்த்தாங்கு, இன்னும் வரும்’ என்று கூறியிருப்பது நயமிக்கதாக உள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 486)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nwnugtr/
தமிழ்“இளம்பல் கோசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nwnugtr/APA
Oliyon Research. (2026). இளம்பல் கோசர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8nwnugtr/MLA
"இளம்பல் கோசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nwnugtr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment