பெயர் மறைப்பு
peyar maṟaippu
பொருள்கள் · Senses
1.
இணையத்தில் மின்னஞ்சல் அல்லது செய்திக் குழுவில் தகவல் அல்லது கட்டுரை அனுப்பும்போது, அனுப்பியவர் எவர் என்பதைப் பெறுபவர் தெரிந்து கொள்ள முடியாதவாறு அனுப்பி வைக்கும் முறை. இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தில் பொதுவாக அனுப்பு பவரின் மின்னஞ்சல் முகவரி தகவலின் தலைப்புப் பகுதியில் இடம்பெறும். தகவல் பரிமாற்றத்துக்கான கிளையன் அல்லது கேட்பன் (client) மென் பொருள்தான் இந்த முகவரியைத் தகவலின் தலைப்பில் இடும். பெயர் மறைப்புச் செய்ய, ஒரு பெயர் மறைப்பு மறு மடல் வழங்கன் மூலம் செய்தியை அனுப்பி வைக்க வேண்டும். செய்தியைப் பெறுபவர், பதில் அனுப்ப வசதியாக அனுப்பியவரின் முகவரி, வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். செய்தியைப் பெறுபவர் அனுப்பியவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாதே யொழிய பதில் அனுப்ப முடியும்.
— anonymity
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8jmqvh3x/
தமிழ்“பெயர் மறைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jmqvh3x/APA
Oliyon Research. (2026). பெயர் மறைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8jmqvh3x/MLA
"பெயர் மறைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jmqvh3x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment