அணு உலை

aṇu ulai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுக்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் பிளவுபடுமாறு செய்து வெப்பத்தை உண்டாக்குகிற அல்லது கதிரியக்கத்தில் அணுக்களைப் பிளக்குமாறு செய்கிற ஓர் எந்திரம். ஒரு வேகங்குறைந்த அணுஉலையில், காரீயம், நீர் போன்ற ஓர் இடையீட்டுப் பொருளின் மூலம் அணுக்களின் வேகம் குறைக்கப்படுகிறது. ஒரு வேகம் மிகுந்த அணு உலையில், நியூட்ரான்களின் வேகம் குறைக்கப்படுவதில்லை. ஓர் அணு உலையிலிருந்து, கார்பன்டையாக்சைடு, நீர், உருகிய சோடியம் போன்ற குளிர்விக்கும் பொருள்களின் மூலம் வெப்பம் அப்புறப்படுத்தப்படுகிறது. சில அணு உலைகளில், நியூட்ரான்களை உறிஞ்சிக் கொள்ளும் காட்மியம் அல்லது போரோன் போன்ற கட்டுப்பாட்டுச் சலாகைகள் மூலம் வெப்பம் நீக்கப்படுகிறது — reactor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 522)
2.
அணுக்கள் பிரிவுறும் உலை. இதில் மின்னணுக்களின் எண்ணிக்கை கூடாமலும் குறையாமலும் இருக்கத் தகுந்த அமைப்புள்ளது. எளிதில் பிளவுறக்கூடிய யுரேனியம் -235 அணு ஆற்றலைப் பெற இது பயன்படுகிறது. இதில் உள்ள கரிக் கோல்கள் தொடரியக்கத்தைக் கட்டுப்படுத்துபவை. இவற்றை வெளியே இழுக்கத் தொடரியக்கம் அதிகமாகும். உள்ளே தள்ளக் குறையும். இவ்வடிப்படையிலே அணுக் குண்டு செய்யப்படுகிறது — atomic reactor
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 38)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8gjyfa2d/

தமிழ்
“அணு உலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gjyfa2d/
APA
Oliyon Research. (2026). அணு உலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8gjyfa2d/
MLA
"அணு உலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gjyfa2d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment