தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். இந்நகர் தென் பெருவில் கடல் மட்டத்திற்கு மேல் 2470 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மையம் இது. அரேகீபாவைச் (Arequiba) கற்றிலும் பண்டைக்கால அழிவுச் சின்னங்களும் சிற்றூர்கள் பலவும் காணப்படுகின்றன. இந்நகரின் அருகில் மலைகள் பல உள்ளன. கி.பி. 1540–ஆம் ஆண்டு இசுபெயின் (Spain) நாட்டுக் குடியேற்றக்காரர்களால் இந்நகரம் அமைக்கப்பட்டது. மக்கள்தொகை 5,30,528 (1972).