இந்திய ஆட்சிப் பணியில் (ICS) அதிகாரியாய் இருந்தவர். கீழ்நாட்டு மொழி, வரலாறு ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்; புகழ்பெற்ற வரலாற்று வல்லுநர். கி.பி. 1843–ஆம் ஆண்டு சூலை மாதம் 15–ஆம் நாள் பிறந்தவர். இவர் பல நூல்களை வெளியிட்டுள்ளார். “வங்காள கிராமப்புற வரலாறு” (1868). “மேல் ஆசியா மற்றும் இந்திய–ஆரியமல்லாத மொழிகளின் ஒப்பியல் அகராதி” (1868), “மேயோ பிரபுவின் வாழ்க்கை” (1875), “வங்காளம் பற்றிய புள்ளிவிவரத் தொகுப்பு” (20 தொகுதிகள்), “இம்பீரியல் இந்திய விவரச் சுவடி” (9 தொகுதிகள்), “இந்திய மக்களின் வரலாற்றுச் சுருக்கம்” (1883), “இந்தியப் பேரரசும் அதன் மக்களும் வரலாறும் உற்பத்திப் பொருள்களும்” போன்றவை இவரால் எழுதப்பெற்ற நூல்களாம், இந்தியர்களின் பெயர்களையும் சொற்களையும் ஒலிபெயர்க்கும் (Transliteration) முறையை இவர் ஏற்றுக் கொண்டார். அண்டர், சர்வில்லியம் வில்சன் (Hunter, Sir William Wilson) எழுத்தாற்றலும், செம்பாகமான நடையும் வாய்க்கப்பெற்றவர். இவர் 1900–ஆம் ஆண்டு பிப்ரவரி 7–ஆம் நாள் காலமானார்.