தில்லிக்கருகில் இருக்கும் ஒரு சிறு கோட்டை. இது துக்ளகாபாத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. இக்கோட்டை முகம்மது-பின்-துக்ளக்கு என்பவரால் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் துக்ளகாபாத்துக் கோட்டையின் சுவர்களுடன் இணைந்துள்ளன. இக்கோட்டை இருவாயில்களைக் கொண்டது, ஒரு நுழைவாயில், தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு காவல் அரண்களுக்கு இடையில் இருக்கும் புற அரணிலும், மற்றொன்று, தென் மேற்கிலும் அமைந்துள்ளன. இதன் இரு பிரிவுகளும் ஒரு வெளிச் சுவர் மூலம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் உள் அரண், சுவர்களுடனும் காவல் அரண்களுடனும் வாயில்களுடனும் காட்சி அளிக்கிறது. இதனுள் அரண்மனை உள்ளது. இவ்வரண் முகமதாபாத்து என்றும் அழைக்கப்படுகிறது.