நின்றொளிர்தல்

niṉṟoḷirtal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில தனிமங்களில் உள்ள மூலக்கூறுகள் படுகின்ற க்ங கதிர்களை உட்கவர்வதால் கிளர்ச்சி அடைகின்றன. இவை உடனடியாக தன்னுடைய பழைய நிலையை அடைவது இல்லை. மற்றும் கிளர்ச்சியடையச் செய்யும் கதிர்வீச்சினை நிறுத்திய பிறகும் கூட ஒளிர்தல் தொடர்கிறது. இவ்வாறு ஏற்படும் பின்தங்கி ஒளிர்தலை நின்றொளிர்தல் என்கிறோம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நின்றொளிர்தல்)
2.
கால்சியம் பேரியம் சல்பைடுகளின் மீது சிறிது நேரம் ஒளியூட்டிப் பின் அவற்றை இருட்டில் வைத்தால், அவை சிறிது நேரம் ஒளிரும். இந்நிகழ்ச்சி நின்றொளிர்தலாகும். இது சில வினாடிகளிலிருந்து சில மணி நேரம் வரை இருக்கும். ஒளிபடும் வரை ஒளிர்தல் நிகழும். படும் ஒளி நீக்கப்பட்ட பின்னரும் நின்றொளிர்தல் நிகழும். பெக்கரல் என்னும் அறிவியலறிஞர் காரவகை உலோக உப்புகளும் அலுமினியச் சேர்மங்களும் நின்றொளிர்கின்றன. யுரேனியம், பிளாட்டினம் தவிர ஏனைய கனலோக உப்புகள் நின்றொளிர்வதில்லை என்பதைக் கண்டறிந்தார். பொருள் சிறியதாக இருந்தால் அதில் முழுதும் நின்றொளிர்தல் நிகழும். ஒளிச்செறிவையும் அலைநீளத்தையும் பொறுத்து நின்றொளிர்தல் அமையும் புறச்சிவப்பு நிற ஒளி இதை அழிக்கும். இப்பண்பு புறச்சிவப்புநிற ஒளியை அறியப் பயன்படுகிறது — Phosphorescence
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 328)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/83ztdcrz/

தமிழ்
“நின்றொளிர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83ztdcrz/
APA
Oliyon Research. (2026). நின்றொளிர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/83ztdcrz/
MLA
"நின்றொளிர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83ztdcrz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment