என்பார் தலைசிறந்த தேசபக்தரும், புரட்சிவாதியுமாவார். கி.பி. 1887-ஆம் ஆண்டில் தில்லி மாநகரில் அர்தயாள் (Har Dayal) பிறந்தார். இவர் இலாகூரிலிருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்திலும், ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார். இவருடைய புரட்சிக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத ஆங்கில அரசு இவரைக் கி.பி. 1908–ஆம் ஆண்டில் சிறைப்படுத்த விரும்பியது. ஆனால் இவர் சிறைப்படாமல் தப்பியோடி, மேற்கிந்தியத் அர்தயாள் தீவுக்கூட்டத்திலிருந்த மார்ட்டிநிக் (Martinique) என்னும் தீவில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இவர் ‘புரட்சி’ (Ghadar–Revolution) என்னும் செய்தித்தாளை வெளியிட்டார். ஆங்கில வல்லாட்சிக்கெதிராக அமெரிக்க ஐக்கிய நாடு, செருமனி போன்ற நாடுகளின் உதவியைப் பெற இருமுறை அரும்பாடுபட்டார். ஆனால் இவர் இருமுறையும் தோல்வி கண்டார். 1938–ஆம் ஆண்டில் ஆங்கில அரசு இவரை இந்தியாவுக்குத் திரும்ப அனுமதித்தது. மீண்டும் இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு 1938–இல் இவர் காலமானார்.