சிகிச்சைக் கொள்கைகள்
cikiccaik koḷkaikaḷ
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கிளாட் பெர்னார்டு என்பார், மருத்துவ ஆய்வில் தேவைப்படும் இன்றியமையாத விவரங்களை எவ்வாறு கண்டறிந்து சேகரிக்க வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைத் தொகுத்தார்.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கிளாட் பெர்னார்டு என்பார், மருத்துவ ஆய்வில் தேவைப்படும் இன்றியமையாத விவரங்களை எவ்வாறு கண்டறிந்து சேகரிக்க வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைத் தொகுத்தார். ஆனால், அண்மைக் காலம் வரை அவர் கூறிய விதிமுறைகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டப்பட்டது. நோய் கண்டறிவதில் அறிவியல் முறையில் முன்னேற்றம் கண்டிருப்பினும், பல சமயங்களில் மருத்துவம் பற்றி எடுக்கும் முடிவுகள் வழக்கில் உள்ளவற்றைப் பொறுத்தே அமைகின்றன. இதற்கு முக்கிய காரணம், மனிதனை மருந்துகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இன்மையாகும். இந்நிலைக்கு மனிதனிடத்தில் மருந்துகளைச் செலுத்தி ஆய்வு செய்வதில் உள்ள தார்மீக (ethical) இடர்ப்பாடுகளே அடிப்படையாகும். மருத்துவம் கலையாகக் கருதப்படாமல், அறிவியல் முறையில் நோக்கப்படுவதால், மனிதர்களிடத்தில் மருந்துகளை ஆய்வு முறையில் பயன்படுத்துவது தார்மீக முறையில் சரியானதே என்று கருதப்படுகிறது. ஒரு புதிய மருந்தையோ, பழைய மருந்தைப் புதிய காரணத்திற்காகவோ (new indication) விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு முன்னால், சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளிடத்தில் மருத்துவ ஆய்வு (clinical trial) செய்யப்படும். இதை அடிப்படையாகக் கொண்டு, மக்களுக்குப் பயன்பட அம்மருந்தைப் பெருமளவு வெளியிடும் போது, பல இடர்ப்பாடுகள் இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், மருத்துவ ஆய்வில் பங்கு கொள்வோரில் ஒரு குறிப்பிட்ட நோயாளியின் நிலையில் முன்னேற்றம் அல்லது விளைவு காணப்படின், அது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறையால் மட்டுமே ஏற்பட்டது எனக் கருதி விட முடியாது. இயற்கையாகவே, அந்நோய் தானாகச் சீராகி விடவோ மேலும் கடுமையாகவோ வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஒரு மருத்துவர் தம்முடைய பட்டறிவை மட்டுமே வைத்து, ஒரு மருந்தின் மீதான முடிவை ஏற்க நேரிட்டால், அது அவர் மருத்துவம் செய்யும் நோயாளிகளைத் தேவையற்ற மருத்துவ முறைகளுக்கும் வேண்டாத விளைவுகளுக்கும் உட்படுத்துவதற்குக் காரணமாகி விடக் கூடும்.
சரியான மருத்துவம் என்பது சரியான ஆய்வுகளின் முடிவு மற்றும் கணிப்புகளைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளப்படுவதேயாகும்; எனவே, தனி நோயாளியை மருத்துவத்திற்கு உட்படுத்தும் போதும் அறிவியல் முறையில் நோக்குவதே சிறந்த மருத்துவக் கொள்கையாகும். —கு. சிவஞானம் நூலோதி.Gilman, A.F. Goodman et.al., The Pharmacologial Basis of Therapeutics, Seventh Edition, MacMillan Publishing Company, New York, 1985; D.R. Lawrence, Chemical Pharmacology, Fourth Edition, ELBS, Churchill Livingstone, 1973.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 191)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hqwdsbu/
தமிழ்“சிகிச்சைக் கொள்கைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7hqwdsbu/APA
Oliyon Research. (2026). சிகிச்சைக் கொள்கைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7hqwdsbu/MLA
"சிகிச்சைக் கொள்கைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7hqwdsbu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment