கிரேக்கப் புராணங்களில் கூறப்படும் தலைவி. இவள் தந்தை எயிடோலியா (Aetolia) வின் அரசர் திசுடியசு (Thsetius), இலிடா (Leda) தைண்டாரியசு (Tyndareus) என்பவனை மணந்தாள். சியூசு (Zeus) என்ற கடவுள் ஒரு நாள் அன்னத்தின் வடிவம் கொண்டு இவள் முன் தோன்றி இவளோடு கூடியமையால் இவள் தியோசுகுரி, (Dioscuri) எலன் (Helen) என்ற இருவரை ஈன்றெடுத்தாள். இலிடாவிற்குப் போலக்சு (Pollux), எலன் ஆகிய இருவரும் சியசு மூலம் பிறந்தவர்கள் என்றும், கேசுடர், கிளைடெம்னசுட்ரா (Clytemnestra) என்ற இருவரும் தைண்டாரியசு மூலம் பிறந்தவர்கள் என்றும் ஒரு மரபுக்கதை வழங்கிவருகிறது.