அயான்தைனா
ayāṉtaiṉā
அயான்தைனா (Ianthina) கடலில் வாழும் நத்தைச் சாதிகளில் சாமானியமானதொன்று.
அயான்தைனா (Ianthina) கடலில் வாழும் நத்தைச் சாதிகளில் சாமானியமானதொன்று. இது கடலின் மேற்பாகங்களில் மிதந்து சஞ்சரிப்பதற்கேற்றவாறு அமைந்திருக்கிறது. இதன் காலிலிருந்து ஊன் தசைபோன்ற பிசின் உண்டாகிறது. இதில் காற்றுக் குமிழிகள் புகுந்து கொள்ளுவதனால் நுரைபோல் ஆகிறது. இது முழுவதும் ஒரு தெப்பம்போன்ற
மிதவையாகப் பயன்படுகிறது. இந்த இனம் பெருகுகின்ற பருவத்திலே பெண் அயான்தைனா தன் முட்டைப் பைகளை இதன் அடியில் ஒட்டித் தொங்கவைக்கும். இதன் கிளிஞ்சில் ஊதாநிறமாக இருக்கும். கடற்கரையிலே இந்தக் கிளிஞ்சில்கள் உள்ளிருக்கும் சதையோடும் மிதவையோடும் வந்து ஒதுங்குவதுண்டு. உதாரணம்: அயான்தைனா ரோசியோலோ. கே. வீ]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 179)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ezs8c5t/
தமிழ்“அயான்தைனா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ezs8c5t/APA
Oliyon Research. (2026). அயான்தைனா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ezs8c5t/MLA
"அயான்தைனா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ezs8c5t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment