அண்டார்க்டிக்கா வட்டம்
aṇṭārkṭikkā vaṭṭam
அண்டார்க்டிக்கா வட்டம் என்பது உலக உருண்டையையொட்டி இணையாக 66½ பாகையில் அமைந்துள்ள தென் குறுக்குக்கோட்டைக் குறிப்பதாகும்.
அண்டார்க்டிக்கா வட்டம் என்பது உலக உருண்டையையொட்டி இணையாக 66½ பாகையில் அமைந்துள்ள தென் குறுக்குக்கோட்டைக் குறிப்பதாகும். உலக உருண்டை அதன் அச்சில் சாய்ந்திருப்பதால் ஆண்டிற்கு ஒரு நாள், அதாவது திசம்பர் 22-ஆம் நாள் சூரியன் மறைவதில்லை. அவ்வாறே சூன் 21–ஆம் நாள் சூரியன் தோன்றுவதுமில்லை. தொடர்ந்து பகலாகவோ இரவாகவோ இருக்கும் நாட்களின் நீட்சி தெற்கே செல்கையில் மாறுபடுகிறது. அண்டார்க்டிக் வட்டத்தில் (Antarctic Circle) ஒரு நாளாக இருப்பது தென் துருவத்தில் ஆறு மாதமாக உயருகிறது. தென் துருவம், அண்டார்க்டிகா கண்டத்தின் பனிப்பாறைகள் நிறைந்த மேட்டு நிலத்தில் அமைகிறது. அண்டார்க்டிக் வட்டத்தை முதன் முதலாக கேப்டன் சேம்சு குக் (Capt. James Cook) என்பார் கி.பி. 1773–ஆம் ஆண்டு சனவரி மாதம் 17–ஆம் நாள் கடந்தார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 285)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7egcnmtq/
தமிழ்“அண்டார்க்டிக்கா வட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7egcnmtq/APA
Oliyon Research. (2026). அண்டார்க்டிக்கா வட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7egcnmtq/MLA
"அண்டார்க்டிக்கா வட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7egcnmtq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment