அங்கோரா ஆடு
aṅkōrā āṭu
கம்பளத்துக்குப் பேர் போன வெள்ளாடு.
கம்பளத்துக்குப் பேர் போன வெள்ளாடு. இதன் தாய்நாடு ஆசியாமைனர். இதன் கொம்பு செம்மறிக் கொம்புபோல் முறுக்கிக்கொண்டிருக்கும். மயிர் பட்டுப்போல மிருதுவாகவும் வெண்மையாகவும், சுருள் சுருளாகவும் தொங்கும். ஆண்டு ஒன்றுக்கு 8-10 அங்குலம் நீளம் வளரும். இந்த மயிருக்கு அரபு மொழியில் முகய்யார் என்று பெயர். அது மொகேர் என வழங்குகிறது. மொகேர் மயிராடைகள் காச்மீர ஆடைகள்பாேல் மிக வுயர்ந்தவை. சாதாரணமாக ஓர் ஆடு 2 1/2 ராத்தல் மயிர் தரும். இதை மெக்சிகோவிலும், ஐக்கிய நாடுகளிலும், பசிபிக் கடற்கரையிலும் வளர்க்கிறார்கள். பார்க்க : ஆடு.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 59)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7csg834t/
தமிழ்“அங்கோரா ஆடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7csg834t/APA
Oliyon Research. (2026). அங்கோரா ஆடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7csg834t/MLA
"அங்கோரா ஆடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7csg834t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment