{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7csg834t/", "data": {"id": "7csg834t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7csg834t/", "kind": "article", "headword": "அங்கோரா ஆடு", "romanization": "aṅkōrā āṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.616599+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கம்பளத்துக்குப் பேர் போன வெள்ளாடு.", "body_ta": "கம்பளத்துக்குப் பேர் போன வெள்ளாடு. இதன் தாய்நாடு ஆசியாமைனர். இதன் கொம்பு செம்மறிக் கொம்புபோல் முறுக்கிக்கொண்டிருக்கும். மயிர் பட்டுப்போல மிருதுவாகவும் வெண்மையாகவும், சுருள் சுருளாகவும் தொங்கும். ஆண்டு ஒன்றுக்கு 8-10 அங்குலம் நீளம் வளரும். இந்த மயிருக்கு அரபு மொழியில் முகய்யார் என்று பெயர். அது மொகேர் என வழங்குகிறது. மொகேர் மயிராடைகள் காச்மீர ஆடைகள்பாேல் மிக வுயர்ந்தவை. சாதாரணமாக ஓர் ஆடு 2 1/2 ராத்தல் மயிர் தரும். இதை மெக்சிகோவிலும், ஐக்கிய நாடுகளிலும், பசிபிக் கடற்கரையிலும் வளர்க்கிறார்கள். பார்க்க : ஆடு."}}