சூல் கால இதய நுரையீரல் சிக்கல்கள்
cūl kāla itaya nuraiyīral cikkalkaḷ
சூல் காலத்தின் போது ஏற்படும் இதய நோய்கள் பெரும்பாலும் பிறவி இதய நோயாக இருக்கும் அல்லது பெறப்பட்ட முடக்கு வாத இதய நோயாக இருக்கும்.
சூல் காலத்தின் போது ஏற்படும் இதய நோய்கள் பெரும்பாலும் பிறவி இதய நோயாக இருக்கும் அல்லது பெறப்பட்ட முடக்கு வாத இதய நோயாக இருக்கும். அண்மைக் காலங்களில் ஏற்பட்ட மருத்துவ முன்னேற்றம் காரணமாக, பிறவி இதய நோய் கண்டவர்களும் வெற்றிகரமாகக் கருவுயிர்க்க முடியும். முடக்கு வாதக் காய்ச்சல் ஏற்பட்டு, அதன் விளைவாக ஏற்படும் இதய நோய்கள், பேறு காலத்தில் சிக்கல்களை உண்டாக்குகின்றன. பெருமளவில் ஈரிதழ்த் தடுக்கிதழ் பாதிக்கப்பட்டு, இதய இடக் கீழறைக்கான குருதி ஓட்டம் தடைப்படுகிறது. இதன் விளைவாகக் கடின மூச்சு, மிகையான நாடித் துடிப்பு ஆகியன உண்டாகின்றன. இறுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதே, கடின மூச்சு ஏற்பட்டு, நீலம் பூரித்தல் (cyanosis) உண்டாகிறது. இதயம் செயலிழக்கிறது; சூல் காலத்தில் மிகை எடையும், உதர விதானம் மேல் நோக்கித் தள்ளப் படுவதும், கருக் குடை குருதி ஓட்டம் பேணலும், சுழற்சியடையும் குருதியின் பரிமாண அதிகரிப்பும் இதயத் தசை மீது வினை புரிந்து, இதயப் பணியை முறிக்கலாம். மிகச் சிக்கலான காலம் 28–36 வாரம் வரையாகும். இதன் விளைவாக, தீவிர நுரையீரல் நீர்த் தேக்கமும், இதய முறிவும் உண்டாகும்.
எடையைக் குறைத்து, புரதம் அதிகமான மாவுப் பொருள் குறைந்த உணவு பரிந்துரைக்கப்பட்டு, இரும்புச் சத்தும், ஃபோலிக் அமிலமும் தர வேண்டும். தேவையிருந்தால், மருத்துவமனையில் சேர்த்து ஓய்வு, துயிலூட்டிகள், ஆக்சிஜன் டிஜிடாலிஸ், ஃபுரசமைடு, அமைனோஃபைலின் போன்றவை கொடுக்கப்படலாம். மைட்ரல் தடுக்கிதழ் மிகவும் குறுகி விட்டால், சூலுடைய பெண்ணின் பொது உடல் நிலை சீராக இருக்கும் போது, அறுவை செய்யலாம். குருதி உறை எதிர் மருந்துகளும் பயன்படுகின்றன.
மகப் பேறு தானாகவே நடக்கும். தேவையிருந்தால், சிண்டோசினான் மருந்து கொடுத்து, இதை விரிவு படுத்தலாம். பேறு கால இரண்டாம் கட்டத்தின் போது, இடுக்கியைப் பயன்படுத்தலாம். நுண்ணுயிர் எதிர் மருந்துகளும், துயிலூட்டிகளும் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த பின்பு, போதிய ஓய்வு, உரிய மருந்துகள். குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை தேவைப்படும்.
நுரையீரல் சிக்கல்களாகக் காச நோயைக் குறிப்பிடலாம். மிகச் சிறந்த காச நோய் எதிர் மருந்துகள் (ரிபோமைசீன்) கண்டு பிடிக்கப்பட்டுள்ளமையால், மருத்துவம் எளிதாகும். கருக் கலைப்பு அறுவை முறை பொதுவாகத் தேவைப்படாது. சூல் காலத்தின் முதல் மூன்று மாதங்களின் போது, காச நோய் எதிர் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. பேறு காலத்தில் சாமண இடுக்கியோ, குறைந்த அளவிலான உணர்வகற்றலோ கையாளப்படலாம். குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி தடுப்பு ஊசி தர வேண்டும். மற்றுமொரு நுரையீரல் நோயாக, ஆஸ்த்துமாவைக் குறிப்பிடலாம். பேறு காலத்தில், கார்டிசோல் மிகுதியாக சுரப்பதால், ஆஸ்த்துமா நோய் தணிகிறது. முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கலாம். மகப் பேற்றில், ஹைட்ரோகார்டிசோன் கொடுக்கலாம். தேவையிருந்தால், சாமண இடுக்கியைக் கையாளலாம். சில நுரையீரல் தோய்கள் எதிர் உயிர் மருந்துகளால் கட்டுப்படுத்தப்படும். —அ. கதிரேசன் நூலோதிL.Nisson et.al., A Child is born, Faber and Faber, London, 1977
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 655)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bg8634b/
தமிழ்“சூல் கால இதய நுரையீரல் சிக்கல்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bg8634b/APA
Oliyon Research. (2026). சூல் கால இதய நுரையீரல் சிக்கல்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7bg8634b/MLA
"சூல் கால இதய நுரையீரல் சிக்கல்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7bg8634b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment