சிறுநீர்ப் பை வரைபடம்
ciṟunīrp pai varaipaṭam
சிரை வழிச் சிறுநீரக வரைபடத்தில் சிறுநீர்ப் பையின் நிழலைப் பார்க்க முடிந்தாலும், படம் நிறைவாக அமைவதில்லை.
சிரை வழிச் சிறுநீரக வரைபடத்தில் சிறுநீர்ப் பையின் நிழலைப் பார்க்க முடிந்தாலும், படம் நிறைவாக அமைவதில்லை. ஏனெனில், சிறுநீரகத்தில் முதலில் வேறுபடுத்திக் காட்டும் ஊடகம் சென்று பின்னர், சிறுநீரகக் குழலையடைந்து, சிறுநீர்ப் பையை அடையும். ஆகவே அதன் செறிவு குறைந்து விடுகிறது. இதை வெளியேற்று வகை (excretory cystography) எனலாம்.
கீழேயிருந்து மேலே செலுத்தும் முறையில் (retrograde cystography) கிடைக்கும் படத்தைச் சிறுநீர் வரைபடம் (cystograph) எனலாம். இம்முறையில், சிறுநீர்ப் பையின் பக்க வளர்ச்சிப் பைகளையும், அவற்றின் அளவையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிறிய வடிகுழல் முதலில் செலுத்தப்பட்டுச் சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. பக்க வளர்ச்சிப் பை இருப்பதாக ஐயம் தோன்றினால், இப்பையிலிருந்து சிறுநீர் வெளிப்பட வசதியாக; நோயாளி குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் படம் எடுக்கப்பட்டால், பக்க வளர்ச்சிப் பையில் கற்கள் இருப்பது தெரிய வரும். பின்னர் வேறுபடுத்திக் காட்டும் ஊடக மருந்தைச் சிறுநீர்ப் பைக்குள் நிரப்ப வேண்டும். சிறுநீர்ப் பை வரைவிக்கு மிகச் சிறந்த ஊடகம் 25% அயோடாக்சைல் கரைசலாகும். குப்புறப்படுத்த நிலையிலும், சிறுநீர் கழித்த பின்பும் ஒரு படம் எடுக்க வேண்டும். இப்படத்தில், பக்க வளர்ச்சிப் பை தெரிந்தால், அதில் ஊடகம் நிறைந்திருக்கும். பெரிய புற்றுக் கட்டிகள் இருந்தால், சிறுநீர்ப் பை உள்நோக்கியில் தெரிவதை விடச் சிறுநீர்ப் பை வரைபடம் மூலம் நன்கு தெரியும். —சாரதா கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 359)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/75e3rdpb/
தமிழ்“சிறுநீர்ப் பை வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/75e3rdpb/APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப் பை வரைபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/75e3rdpb/MLA
"சிறுநீர்ப் பை வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/75e3rdpb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment