என்பார் 1959 முதல் 1969 வரை சீன அரசின் தலைவராயிருந்தவர். இவர் ஊனான் (Hunan) என்னும் நகரில் கி.பி. 1898–ஆம் ஆண்டு பிறந்தார். மாசுகோவில் 1920–21-ஆம் ஆண்டுகளில் சுல்வி கற்ற இவர், சாங்கையிலும் (Shanghai) காண்டனிலும் (Canton) பொதுவுடைமைக் கட்சி அமைப்பாளராகப் பொறுப்பேற்றாார். பின்னர் 1927 ஆம் அண்டில் இவர் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மையக் குழு உறுப்பினரானார். இலியூ சாவ்–சி (Liu Shau–chi) 1935–ஆம் ஆண்டளவில் சீனாவில் பொதுவுடைமைக் கோட்பாட்டில் தலைசிறந்த சிந்தனையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அக்காலத்தில் மாசேதுங்கின் கருத்துகளைவிட இவருடைய கருத்துகளையே மக்கள் மிகுதியாக அறிந்திருந்தார்கள். மக்கள் குடியரசு நாடாகச் சீனா 1949–ஆம் ஆண்டு அக்டோபரில் நிலைநாட்டப்பட்டபோது, இவர் கட்சியின் முதன்மைத் துணைத் தலைவரானார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் இவர் சீனக்குடியரசின் தலைவராக அமர்த்தப்பட்டார். எனினும், மையக் குழுவின் தலைவரான மாசேதுங்கிற்கு அடுத்தபடியாகவே இவருடைய பதவி கருதப்பட்டது. பண்பாட்டுப் புரட்சியின்போது (Cultural Revolution) 1966–இல் இவர் கடுமையாகக் குறை கூறப்பட்டார், அதற்குக் காரணம், தொழிற்சாலை ஊழியர்களே சமூக அமைப்பில் முதலிடம் பெறவேண்டும் என்னும் கருத்தினை இவர் ஆதரித்தார் என்பதேயாகும். ஆசியாவில் குடியானவர்களே முதலிடம் பெறத் தருதி வாய்ந்தவர்கள் என்பது மாசேதுங்கின் கருத்தாகும். ஐரோப்பாவில் இது நேர்மாறாக இருந்தது. அங்கு ஆலைத் தொழிளாலா்கள் முதன்மையிடம் பெற்றிருந்தார்கள். மையக் குழுவின் கூட்டம் 1968–ஆம் ஆண்டு அக்டோபரில் கூடியபோது, இலியூவைச் கருங்காலி, கட்சி மாறி, துரோகி என்று தூற்றினார்கள். இதன் விளைவாக இவர் அரசுப் பணிசள் பெறத் தகுதியற்றவர் என்று கருதப்பட்டார். எனினும், அரசியலமைப்பின் அடிப்படையில் இவருடைய தலைவர் பதவியைப் பறிப்பது அவ்வளவு எளிதான செயலன்று என்பது தெளிவாயிற்று. எனவே, இவரைக் தூற்ற மேற்கொண்ட முயற்சி பயனற்றதாகிவிட்டது. இவர் 1974–ஆம் ஆண்டில் காலமானார்.