அருவா நாடு என்பது தென்னார்க்காடு மாவட்டத்தில் பெண்ணையாற்றின் தென்பகுதி நாட்டினைக் குறிக்கும். செந்தமிழ் நாட்டைச் சார்ந்த பன்னிரண்டு நாடுகளுள் ஒன்று. இங்கு வாழ்ந்தவர்கள் அருவாளர் என்று கூறப்பட்டனர்.